நன்மைகளின் கருவூலம்

நன்மைகளின் கருவூலம், பிரியசகி, ஜோசப் ஜெயராஜ், பாரதி புத்தகாலயம், விலை 150ரூ. வாழ்வில் வெற்றி பெறும் வகையில் குழந்தைகளை எவ்வாறு வளர்ப்பது? பதின்பருவத்தினர் சமுதாயத்தில் சந்திக்கும் பிரச்சினைகளை அவர்கள் எப்படி மேற்கொள்வது? அந்தப் பருவத்தில் அவர்களுடன் பெற்றோர் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? என்பது உள்பட பயனுள்ள பல தகவல்களை இந்த நூல் தருகிறது. வாழ்வியலுக்குத் தேவையான ஆலோசனைகளை அறிவுரை போல அல்லாமல் கதையைச் சொல்லும் வித்தில் அவற்றைத் தந்து இருக்கிறார்கள். ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்திலும் அதில் உள்ள கருத்துகள் சார்ந்த நல்ல கவிதையைத் தேர்ந்தெடுத்துக் […]

Read more

பாஸ்ராவின் நூலகர்

பாஸ்ராவின் நூலகர், ஜேனெட் வின்டர், அன்பு வாகினி, பாரதி புத்தகாலயம், பக். 32, விலை 30ரூ. ஈராக் நாட்டில் போர் மூண்ட போது அந்த நாட்டின் பாஸ்ரா நகரில், தலைமை நூலகத்தின் தலைமை நூலகராக இருந்தவர் ஆலியா முகமது பேக்கர். நாடே குண்டு மழைக்கிடையில் கருகியது. அந்த நிலையிலும், தானும், தன் நண்பர்களும் இணைந்து, முக்கிய நூல்களை சுமந்து காத்தவர் ஆலியா. குழந்தைகளுக்குள் புத்தக நேசத்தை வளர்க்க, இந்த படக்கதை நூல் உதவும். நன்றி: தினமலர், 17/1/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

உதிர்ந்தும் உதிராத

உதிர்ந்தும் உதிராத, எஸ்.வி.வேணுகோபாலன், பாரதி புத்தகாலயம், பக். 135, விலை 135ரூ. மனதிற்கு நெருக்கமானவர்களை, மரணம் பிரிக்கும் போது, பெரும் துயரத்திற்கு ஆளாகிறோம். அழுகையால் துயரத்தை கடக்கிறோம். பிரபலங்களின் மறைவு செய்தி, அவர்கள் வாழ்க்கையை தெரிந்துகொள்ள தூண்டும். அதற்கு விடைகாணும் வகையில் இந்நூல் உள்ளது. மறைந்த அப்துல்கலாம், கிரேஸி மோகன், வாலி, எம்.எஸ்.விஸ்வநாதன், மனோரமா, தென்கச்சி கோ.சுவாமிநாதன், நா.முத்துக்குமார், ஓவியர் கோபுலு போன்ற, 24 ஆளுமைகளின் வாழ்க்கையை தொகுத்து வழங்கி உள்ளார் நூல் ஆசிரியர். தன்னம்பிக்கையின் அடையாளமாக இந்நூல் உள்ளது. நன்றி: தினமலர், 19/1/20 […]

Read more

பெண் எனும் பேராளுமைகள்

பெண் எனும் பேராளுமைகள், தொகுப்பும் மொழிபெயர்ப்பும்: கிருஷாங்கினி, பாரதி புத்தகாலயம், பக்.128, விலை ரூ.120. நூலில் உள்ள 7 கட்டுரைகளில் “அம்பேத்கரின் பெண் விடுதலை ஒரு பார்வை” என்ற கட்டுரையும், பரதநாட்டியம் பற்றி என்ற கட்டுரையும் தவிர, பிற கட்டுரைகள் பெண் ஆளுமைகளைப் பற்றிய கட்டுரைகளாக அமைந்துள்ளன. “அம்பேத்கரின் பெண் விடுதலை ஒரு பார்வை” கட்டுரை பெண் விடுதலை தொடர்பான அம்பேத்கரின் பார்வையையும், பணிகளையும் விளக்குகிறது. பெண் விடுதலைக்கு அதையும் தாண்டி செய்ய வேண்டியவற்றைச் சுட்டிக்காட்டுகிறது. “பரதநாட்டியம் பற்றி“ கட்டுரை பரதநாட்டியம் தொடர்பான அனைத்து […]

Read more

சென்னப்பட்டணம்

சென்னப்பட்டணம், ராமச்சந்திர வைத்தியநாத்,பாரதி புத்தகாலயம்   ஆங்கிலேயர் வருகைக்குப்பின் தமிழகத்தின் வடகிழக்கு முனையில் உள்ள கடலோர நகரமான சென்னை, முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. அதன் தொடக்க காலம் தொட்டு சென்னையை வளர்த்தெடுத்தவர்கள், உழைக்கும் ஏழை, எளிய மக்கள். இந்தப் பின்னணியில் சென்னை நகரின் வளர்ச்சியை பின்தொடர்கிறது இந்த நூல்.   நன்றி: தமிழ் இந்து, 18/12/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818  

Read more

நீலத்தங்கம்

நீலத்தங்கம்: தனியார்மயமும், நீர் வணிகமும், இரா.முருகவேள், பாரதி புத்தகாலயம், விலை: ரூ.70 மனிதர்களின் அடிப்படைத் தேவைகளுள் ஒன்றான தண்ணீர் எப்படி உலகம் முழுக்கச் சந்தைப் பொருளானது என்பதை இரா.முருகவேளின் ‘நீலத்தங்கம்: தனியார்மயமும் நீர் வணிகமும்’ நுட்பமாக விவரிக்கிறது. டெல்லியில் தனியார்மயத்திடமிருந்து குடிநீரைக் கைப்பற்றிய ஆம் ஆத்மியின் அரசியலை மெச்சும் அதேவேளையில், அதற்குப் பின்னிருக்கும் சித்தாந்தச் சிக்கல்களையும் விவரிக்கிறது. நகரங்களிலிருந்து அப்புறப்படுத்தப்படும் பொருளாதாரரீதியில் பின்தங்கிய மக்களின் நிலையையும் விவரிக்கிறார். குடிநகர்த்துதலுக்குப் பின் இருக்கும் பல்வேறு காரணங்களில் நீர் எத்தகைய இடங்களை வகிக்கிறது என்று பேசப்படும் பகுதிகள் நமக்கு அச்சத்தை ஏற்படுத்துகின்றன. […]

Read more

காளி

 காளி, ச.விசயலட்சுமி, பாரதி புத்தகாலயம், விலை: ரூ.130 அடித்தட்டு மக்களின் வாழ்க்கைப்பாடுகள் நான்கு கவிதைத் தொகுப்புகளும், இரண்டு கட்டுரைத் தொகுப்புகளும் தந்த ச.விசயலட்சுமி ‘காளி’ சிறுகதைத் தொகுப்பின் மூலம் புனைவுலகில் களம் இறங்கியிருக்கிறார். ஆப்கன் பெண்களின் வாய்மொழிப் பாடலான லண்டாய் கவிதைகளை முதன்முதலில் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் இவர். இவரது பெரும்பாலான கதைகளில் விளிம்புநிலை மாந்தர்களே மையமாக இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக, பெண்கள். சென்னை கூவம் சார்ந்த மக்களின் வாழ்க்கையானது யதார்த்தமாகவும் அழுத்தமாகவும் இந்தத் தொகுப்பிலுள்ள பல கதைகளில் பதிவாகியிருக்கின்றன. இக்கட்டான சூழ்நிலைகளை இவரது பெண் […]

Read more

இந்தியக் கல்வியின் இருண்டகாலம்

இந்தியக் கல்வியின் இருண்டகாலம், தொகுப்பு ஆசிரியர் நா.மணி, பாரதி புத்தகாலயம், விலை 80ரூ. தேசியக் கல்விக்கொள்கை (வரைவு) 2019 வெளியாகி, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த நேரத்தில், அவசிய தேவையாக இந்த நூல் வெளியாகி இருக்கிறது. புதிய தேசியக் கல்விக் கொள்கை குறித்து கல்வியாளர்கள் பலர் தெரிவித்து இருக்கும் ஆணித்தரமான கருத்துக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியவை ஆகும். நன்றி: தினத்தந்தி, 14/8/19 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000029654.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more

மார்க்சியம் என்றால் என்ன

மார்க்சியம் என்றால் என்ன, சு.பொ.அகத்தியலிங்கம், பாரதி புத்தகாலயம், விலை 120ரூ. திரைப்பாடல்கள் வழியே மார்க்ஸியம் மார்க்ஸின் வாழ்க்கை வரலாற்றுடன் தொடங்கும் அறிமுகம், சித்தாந்தங்களைப் பயில வேண்டியதன் அவசியத்தைத் திரைப்படப் பாடல் வரிகளை எடுத்துக்காட்டி எளிமையாக விளக்குகிறது. இயக்கவியல் பொருள்முதல்வாதத்தையும் வர்க்கப் போராட்டத்தையும் சங்கப் பாடல்கள், பாரதியார் பாடல்களின் துணையோடு விளக்குகிறது. இந்திய தத்துவ ஞானத்தை மேற்கத்திய தத்துவ முறைமைகளுடன் ஒப்பிட்டுப் பேசுகிறது. மனித வரலாறு என்பது உற்பத்தி முறையோடு நெருங்கிப் பிணைந்தது. ஆதிப் பொதுவுடைமைச் சமூகத்திலிருந்து காலம்தோறுமான உற்பத்தி அமைப்புகளை விவரித்து மனித சமுதாயம் […]

Read more

சிவப்புக் கிளி

சிவப்புக் கிளி, வசுதேந்திரா,  தமிழில் யூமா வாசுகி, பாரதி புத்தகாலயம், சுற்றுச்சூழல் பிரச்சினைகள் நம் அனைவரது வாழ்வையும் நேரடியாகத் தீண்டத் தொடங்கிவிட்ட நிலையிலும், அவற்றைக் குறித்த அடிப்படை உணர்வு அற்றவர்களாகவே பெரும்பாலோர் இருக்கிறோம். இயற்கையையும் நம் வாழ்க்கையையும் எப்படிப்பட்ட அவலமான வகையில் பறிகொடுத்துக்கொண்டிருக்கிறோம் என்பதை அழுத்திச் சொல்லும் கதைகளில் ஒன்று ‘சிவப்புக் கிளி’. நன்றி: தமிழ் இந்து, 5/1/119. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818  

Read more
1 2 3 4 9