நண்பர்களின் பார்வையில் மார்க்ஸ்

நண்பர்களின் பார்வையில் மார்க்ஸ், தமிழில் ச.சுப்பாராவ், பாரதி புத்தகாலயம், விலை 70ரூ. மார்க்ஸ் பிறந்த 200வது ஆண்டை முன்னிட்டு, தமிழில் அவருடைய வாழ்க்கையை மையப்படுத்திய சில புத்தகங்கள் வெளியாகியுள்ளன. மார்க்ஸின் வாழ்க்கை பற்றி நண்பர் வில்ஹெம் லீப்னெஹ்ட், மார்க்ஸின் மருமகன் பால் லஃபார்க் ஆகிய இருவரும் எழுதியது “நண்பர்களின் பார்வையில் மார்க்ஸ்” என்ற நூலாக வெளியாகியுள்ளது. மார்க்ஸின் வாழ்க்கை பற்றி லீப்னெஹ்ட்டின் நினைவலைகள் புதியதொரு சித்திரத்தைத் தருகின்றன. மார்க்ஸ் எனும் மனிதரை அவை மையம்கொண்டுள்ளன. மார்க்ஸின் வாழ்க்கையில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களைக் கதை போன்ற […]

Read more

கல்வி ஓர் அரசியல்

கல்வி ஓர் அரசியல்,வே. வசந்திதேவி, பாரதி புத்தகாலயம், விலை 180ரூ. எவ்வகையான கல்வி தேவை? மானுட விடுதலைக்கான சக்தியாக இயங்குவதைவிடச் சாதாரணர்களை அடிமைப்படுத்தும் வழிமுறையாகக் கல்வி இந்தியச் சூழலில் மாற்றப்பட்டிருப்பதை ஆழமாக பேராசிரியர் வசந்திதேவியின் இப்புத்தகம் விளக்குகிறது. ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் எவ்வகையான கல்வி தேவை, அதில் தொழிற்கல்வியின் பங்கு என்ன, உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த குழந்தைகளின் திறமைகளுக்கும் ஆற்றலுக்கும் நம்முடைய வகுப்பறைகளும் பாடத்திட்டங்களும் கற்பித்தல் முறைகளும் எம்மாதிரியான முன்னுரிமை அளிக்க வேண்டும், தமிழ்நாட்டில் பயிற்றுமொழி ஏன் தமிழாக இருக்க வேண்டும், மாணவப் பேரவைகள் மூலம் […]

Read more

புதிய கல்விக் கொள்கை அபத்தங்களும் ஆபத்துகளும்

புதிய கல்விக் கொள்கை அபத்தங்களும் ஆபத்துகளும், அ.மார்க்ஸ், பாரதி புத்தகாலயம், விலை 50ரூ. தோலுரிக்கும் முயற்சி! இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதிசெய்திருக்கும் மதச்சார்பின்மை, ஜனநாயக மாண்புகள் ஆகியவற்றை முற்றிலுமாக இந்திய கல்வித் திட்டத்திலிருந்து அப்புறப்படுத்த நடைபெறும் சதிகளை தோலுரித்து இப்புத்தகத்தில் காட்டியிருக்கிறார் எழுத்தாளர் அ. மார்க்ஸ். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை 2016-ன் மீது கடுமையான விமர்சனத்தை அவர் இப்புத்தகத்தின் வழியாக முன்வைத்திருக்கிறார். உலகமயம், வகுப்பு வாதம் இரண்டையும் மறைபொருளாக கொண்டு புதிய கல்வித் திட்டம் செதுக்கப்படுவதால் அது குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடமும் […]

Read more

வாழ்க்கைப் பாதை ஒரு கல்விக் காவியம்

வாழ்க்கைப் பாதை ஒரு கல்விக் காவியம், ஏ.எஸ்.மகரெங்கோ, தமிழில் பொன்னீலன், பாரதி புத்தகாலயம், விலை பாகம் ஒன்று 300ரூ, பாகம் இரண்டு 500ரூ. கல்வி என்னும் வெளிச்சம் ரஷ்யக் கல்வியாளரும் நாவலாசிரியருமான ஏ.எஸ்.மகரெங்கோ எழுதிய இந்நூல் சோவியத் கல்வி முறைக்குப் பெரும் பங்களிப்பு செய்த படைப்பாகக் கருதப்படுகிறது. உள்நாட்டுச் சண்டைகள், பஞ்சம், தொற்றுநோய் சூழலில் அகதிக் குழந்தைகளுக்குக் கல்வியளித்து அவர்களது மோசமான வாழ்க்கையில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்த மகரெங்கோ தனது அனுபவங்களைப் பின்னணியாக வைத்து எழுதிய இந்நூல் நாவலாசிரியர் பொன்னீலனால் மொழிபெயர்க்கப்பட்டது. எழுத்தாளர் […]

Read more

பெண்களும் சோஷலிஸமும்

பெண்களும் சோஷலிஸமும், ஆகஸ்டு பேபல், தமிழில் பேரா.ஹேமா, பாரதி புத்தகாலயம், விலை 380ரூ. நம் சமுதாயத்தில் பல்வேறு பிரச்சினைகள் நடந்தபடி இருக்கின்றன. இத்தகைய பிரச்சினைகளில் மிக முக்கியமாகப் பார்க்கப்படுவது, பெண்கள் குறித்த விவாதம். பாலினச் சமத்துவம் இல்லாமல் மனித குலத்துககான விடுதலை சாத்தியமில்லை என இந்தப் புத்தகம் உரக்கச் சொல்கிறது. நன்றி: தி இந்து, 7/1/2018.

Read more

கையளவு கடல்

கையளவு கடல், மதுக்கூர் ராமலிங்கம், பாரதி புத்தகாலயம், பக். 120, விலை 130ரூ. எள்ளலும் துள்ளலும் துள்ளல் நடையில் அமைந்த கட்டுரைத் தொகுப்பு இது. நாடறிந்த பேச்சாளர், பத்திரிகையாளரான மதுக்கூர் ராமலிங்கத்தின் சமூக அக்கறை எல்லா கட்டுரைகளிலும் வெளிப்படுகிறது. கூடவே, எள்ளலும், நகைச்சுவையும் கைக்கொடுக்கிறது. ‘நார்ச் சத்து மிகுந்த உணவைச் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். தேங்காய் நார் சாப்பிடச்சொல்லாதது ஒன்றுதான் பாக்கி’ என்று தனக்கு சர்க்கரை குறைபாடு வந்திருப்பதைக் கூட எளிதாகக் கடந்துசெல்ல முடிகிறது அவரால்! -மானா பாஸ்கரன், நன்றி: தி […]

Read more

கையா உலகே ஒரு உயிர்

கையா உலகே ஒரு உயிர், ஜேம்ஸ் லவ்வாக், தமிழில் சா.சுரேஷ், பாரதி புத்தகாலயம், விலை 160ரூ. இன்றைக்கு அனைத்து நாட்டுத் தலைவர்களும் விவாதிக்கும் பொருளாக புவி வெப்பமயமாதல் மாறியுள்ளது. இந்தப் பூவுலகு ஒற்றை உயிர் போலவே இயங்குகிறது என்கிற கோட்பாட்டை முன்மொழிந்து அதைப் பரவலாக ஏற்கச் செய்தவர்களில் முக்கியமானவர், இந்நூலின் ஆசிரியர். பருவநிலை மாற்றத்தை மாறுபட்ட கோணத்தில் புரிந்துகொள்ள உதவும் இன்னுமொரு புத்தகம் இது. நன்றி: தி இந்து, 6/1/2018.

Read more

வகாபிசம் எதிர் உரையாடல்

வகாபிசம் எதிர் உரையாடல், ஹெச்.ஜி.ரசூல், பாரதி புத்தகாலயம், பக். 160, விலை 140ரூ. மார்க்ஸியவாதியான இந்நூலாசிரியர் இப்படியொரு நூலை எழுதியுள்ளது ஆச்சரியப்படத்தக்கது. ‘இஸ்லாம்’ மூடநம்பிக்கைகளை அகற்ற மட்டுமின்றி, உலகில் அமைதியை நிலைநாட்டவும் தோன்றிய மார்க்கம். ஆனால், இன்று அம்மார்க்கம், அப்படிப்பட்டதா, இல்லையா என்ற விவாதத்திற்கு ஆளாகியுள்ளது. காரணம், இஸ்லாம் என்ற பெயரில் இஸ்லாமிய நாடுகளிலேயே நடக்கும் தீவிரவாதச் செயல்களால், இஸ்லாமிய மக்களே கணிசமான அளவில் பலியாகிக் கொண்டு இருக்கிறார்கள். ஓர் இறை நம்பிக்கைகயையும், அழகிய வாழ்வியலையும் முழுமையான முறையில் போதித்த இம்மார்க்கத்தின் ‘ஈமான்’ என்ற […]

Read more

கொஞ்சம் சமூக சேவை மிஞ்சும் அனுபவங்கள்

கொஞ்சம் சமூக சேவை மிஞ்சும் அனுபவங்கள், ம. சுரேந்திரன், பாரதி புத்தகாலயம், விலை 160ரூ. தான் செய்யும் பணிகளுக்கு இடையே அக்கறையுடன் செய்யும் சமூக சேவை உன்னதமானது. ம. சுரேந்திரன் தனது சமூக சேவை அனுபவங்களை சுவாரஸ்யமாக இந்த நூலில் பதிவு செய்துள்ளார். ஒவ்வொரு அனுபவங்களையும் அழகிய நடையால் நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார். நன்றி : தினத்தந்தி,23/8/2017.

Read more

வந்தே மாதரம்

வந்தே மாதரம், ஆயிஷா இரா. நடராசன், பாரதி புத்தகாலயம், விலை 60ரூ. சிறுவர்களுக்கான படைப்புகளைத் தொடர்ந்து எளிய மொழியில் தரும் ஆயிஷா இரா. நடராசனின் எழுத்தில் வெளிவந்துள்ள அறிவியல் நெடுங்கதை இது. நம் தேசத்தை முன்பு ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள், சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நம்மையாளும் வெறியோடு வருகிறார்கள். அவ்வாறு நுழையும் அந்நிய சக்திகளை, அறிவியல் ஆற்றலின் சக்தியோடு குழந்தைகள் ஒன்றுசேர்ந்து எதிர்க்கும் போராட்டமே இந்தக் கதை. குழந்தைகளின் அறிவியல் சிந்தனைக்கும் தேசபக்திக்கும் ஒரு ‘சலாம்’ போட வைத்துள்ளார் நூலாசிரியர். நன்றி: தி […]

Read more
1 2 3 4 5 6 9