மத்திய கால இந்திய வரலாறு

மத்திய கால இந்திய வரலாறு, சதீஷ் சந்திரா, வேட்டை எஸ். கண்ணன், பாரதி புத்தகாலயம், விலை 390ரூ. பொதுவாக நாம் வரலாறுகளை பின் தொடர்வதே இல்லை. ஆனால், அதுதான் நமக்கு மிகவும் அவசியமானது. இந்தப் புத்தகத்தில் இந்தியாவின் மத்திய கால வரலாறு விலாவாரியாக விவரிக்கப்படுகிறது. அவர்களின் கட்டிடக்கலை, வளர்ச்சி, வீழ்ச்சி எல்லாமே தெளிவாக எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது. சதீஷ் சந்திராவின் பணி அவ்வளவு சிறப்பானது. மக்களுக்கு அணுக்கமாகவும், நெருக்கமாகவும் வாழ்ந்தவர்களின் இடம் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. தெளிவாக வரலாற்றை பின் தொடர்வதில் சதீஷ் சந்திரா முன்னணியில் நிற்கிறார். தவிக்க விடாமல் […]

Read more

மனித இயல்பின் புதிரை நீக்குதல் வழி கூறும் மூளை

மனித இயல்பின் புதிரை நீக்குதல் வழி கூறும் மூளை, டாக்டர் வி.எஸ்.ராமச்சந்திரன், தமிழில் பேரா.கு.வி. கிருஷ்ணமூர்த்தி, பாரதி புத்தகாலயம், விலை 450ரூ. மனித மனத்தை அல்லது இயல்பை புரிந்துகொள்வது மிகவும் கடினமானது. யாருடைய நடத்தையும், மனப்பாங்கும் அறுதியிட்டு உறுதியாக சொல்லப்படுவதற்கில்லை. புரிந்தும், அறிந்தும் கொள்ளப்படாத விஷயங்களில் மனித இயல்பு பிரதானமாகிவிட்டது. அதற்கான காரண காரியங்களை ஆராயப்புகுந்திருக்கிறார் டாக்டர் ராமச்சந்திரன். அறிவியல் நூல்தான். ஆனால் அனைவராலும் புரிந்துகொள்ளக்கூடியதாகவும், உணரக்கூடிய விதத்திலும் இருக்கிறது. இதை மொழிபெயர்ப்பது மலையைப் பிளக்கிற காரியம். மனமுவந்து செய்த அக்கறையில் கிருஷ்ணமூர்த்தியின் பணி […]

Read more

வாசிப்பு வசப்படும்

வாசிப்பு வசப்படும், ச. சுப்பாராவ், பாரதி புத்தகாலயம், பக். 16, விலை 10ரூ. எந்த ஒரு கலையையும் கற்க, அறிந்து கொள்ள, நாம் செலவிட வேண்டிய மூன்று அடிப்படை விஷயங்கள், நேரம், உடல் நலன், மனரீதியான முயற்சி. புத்தக வாசிப்பிற்கு, ஆழமான மனவிருப்பம் முக்கியம். இன்னும் கொஞ்சம் கூடுதலாக வாசிப்போம் என்ற ஆசையை தூண்டும் புத்தகம் இது. நன்றி: தினமலர், 13/1/2017.

Read more

பார்வை தொலைத்தவர்கள்

பார்வை தொலைத்தவர்கள், யோசே சரமாகோ, தமிழில் எஸ். சங்கரநாராயணன், பாரதி புத்தகாலயம், பக். 383, விலை 295ரூ. கடந்த, 1998ம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு வென்ற போர்த்துக்கீசிய நாவல் இது. யோசே சரமாகோ (1922 – 2010) ஒரு போர்த்துக்கீசியர். கவிஞர், நாவலாசிரியர், நாடகாசிரியர், பத்திரிகையாளர். இந்த உலகத்தை, ‘மொத்தமுமே பார்வையற்ற குருடர்களின் உலகம்’ என்று சொல்கிறார் ஆசிரியர். ஒரு தனி மனிதன் (38 வயதினன்) கார் ஓட்டிச் செல்கையில் திடீரென்று பார்வையை இழக்கிறான். அவன் காரைத் திருடிச் செல்லும் திருடனும் குருடாகிறான். […]

Read more

வருகிறார்கள்

வருகிறார்கள், கரன் கார்க்கி, பாரதி புத்தகாலயம், பக். 392, விலை 295ரூ. ‘‘தண்ணீர் வியாபாரமாக்கப்படுவதை எதிர்த்தும், சுத்தமான பாதுகாக்கப்பட்ட குடிநீரை, ஒவ்வொரு குடிமகனுக்கும் தருவது அரசின் கடமை என வலியுறுத்தி, பூமி எங்கும் போராடும், போராடுகின்ற போராடத் துணிகிற இளைஞர்களுக்கு இந்நூல் என்ற சமர்ப்பணத்துடன் துவங்குகிறது இந்த நாவல். மதங்கள், ஜாதிகள் பெயரால் நாளும் நடந்தேறும் கவுரவக் கொலைகள், தண்ணீரை அநியாய விலைக்கு விற்று மக்கள் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளும் தனியார் நிறுவனங்கள், எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகள், யார் […]

Read more

புதிய கல்விக் கொள்கை – மாணவர்களும் ஆசிரியர்களும் குற்றவாளிக் கூண்டிலா?

புதிய கல்விக் கொள்கை – மாணவர்களும் ஆசிரியர்களும் குற்றவாளிக் கூண்டிலா?, நா. மணி, பாரதி புத்தகாலயம், பக். 48, விலை 20ரூ. 1986 ஆம் ஆண்டிலேயே இன்றைய புதிய கல்விக் கொள்கைக்கான அடித்தளம் போடப்பட்டுவிட்டது. அதன் தொடர்ச்சியாக, தற்போது கல்வியை விற்பனைச் சரக்காக்க முயற்சிக்கப்படுகிறது என்று கூறுகிறது இந்நூல். “பொதுப்பள்ளி முறை தூர்ந்து கிடப்பதை எவ்வாறு சரி செய்வது? மிகப் பெரும் மக்கள் திறன் உள்ள இந்திய நாட்டில் வேலை வாய்ப்புகளை எத்தகைய கல்விமுறை உருவாக்கும்? வேலைவாய்ப்பு அற்ற இன்றையப் பொருளாதார வளர்ச்சி சிக்கல்களை […]

Read more

மேக்நாட் சாகா ஒரு புரட்சிகர விஞ்ஞானியின் கதை

மேக்நாட் சாகா ஒரு புரட்சிகர விஞ்ஞானியின் கதை, தேவிகாபுரம் சிவா, பாரதி புத்தகாலயம், பக்.288, விலை ரூ.230. தேவிகாபுரம் சிவா எழுதிய, ‘மேக்நாட் சாகா’ என்ற வாழ்க்கை வரலாற்று நூலை சமீபத்தில் படித்தேன். பாரதி புத்தகாலயம் வெளியிட்டு உள்ளது. புறக்கணிக்கப்பட்ட இந்திய விஞ்ஞானியின் வரலாற்றை விவரிக்கும் நூல் இது. வங்கதேசம் பிரிக்கப்படாத போது அங்கு பிறந்தவர். பெட்டிக் கடைக்காரரின் எட்டு குழந்தைகளில், ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தார். வறுமையின் காரணமாக, துவக்கப் பள்ளிக்குப் பின், வீட்டுவேலை செய்து படித்தார். வங்கப் பிரிவினையின் போது, ஆங்கிலேயர்களை எதிர்த்துப் […]

Read more

மேக்நாட் சாகா ஒரு புரட்சிகர விஞ்ஞானியின் கதை

மேக்நாட் சாகா ஒரு புரட்சிகர விஞ்ஞானியின் கதை, தேவிகாபுரம் சிவா, பாரதி புத்தகாலயம், பக்.288, விலை ரூ.230. இந்தப் பேரண்டம் தோன்றிய சில விநாடிகளில் நிகழ்ந்தது என்ன? அது எப்படி இருந்தது? என்பதை அறிய நமதுநாட்டில் தோன்றிய விஞ்ஞானி மேகநாட் சாகாவின் வெப்ப அயனியாக்கக் கோட்பாடு பயன்பட்டிருக்கிறது. வளி மண்டல அடுக்கான அயனி மண்டல ஆய்விலும் சாதனை நிகழ்த்தியவர் சாகா. அவருடைய வாழ்க்கை வரலாறு இந்நூல். இந்திய அணு ஆராய்ச்சியின் முன்னோடியாக சாகா இருந்தார். “அறிவியல் ஆராய்ச்சி மக்களுக்கானது; அது வெளிப்படைத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்’ […]

Read more

சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்

சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம், ஆர். பாலகிருஷ்ணன், பாரதி புத்தகாலயம், பக். 178, விலை 150ரூ. திராவிடர்களின் பூர்வீகம் சிந்துசமவெளி! நவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு, தான் சேகரித்த தரவுகளைக் கொண்டு, அறிவியல்பூர்வ ஆய்வு முறையை கைக்கொண்டு, சிந்துவெளி பண்பாட்டின் திராவிட அடித்தளத்தை இந்த நூலில் நிறுவ முயன்றுள்ளார், நுாலாசிரியர். இந்திய ஆட்சிப் பணியின் (ஐ.ஏ.எஸ்.,) மூத்த அலுவலரான இவர், தன் கடும் அலுவல்களுக்கிடையில் கடந்த, 25 ஆண்டு கால உழைப்பில் கண்ட உண்மைகளை நுாலாக்கி தந்துள்ளார். இவரது ‘மாற்றி யோசிக்கும்’ ஆய்வுமுறை, சிந்துவெளி பண்பாடு […]

Read more

இடது திருப்பம் எளிதல்ல

கவனிக்க வைத்த புத்தகங்கள் 2015 இடது திருப்பம் எளிதல்ல, விஜயபிரசாத், தமிழில் சுப்பாராவ், பாரதி புத்தகாலயம். கம்யூனிஸ்ட் இயக்கங்களின் வரலாற்றின் பின்னணியில் சுதந்திர இந்தியாவின் வரலாற்றையும் கம்யூனிஸ்ட்கள் பின்தங்க, இந்தியச் சூழலில் எவையெல்லாம் முக்கியக் காரணங்கள் என்பதையும் ஆய்வுநோக்கில் எழுதப்பட்டிருக்கும் நூல். நன்றி: தி இந்து, 2/1/2016. (கவனிக்க வைத்த புத்தகங்கள் 2015)

Read more
1 3 4 5 6 7 9