களப்பணியில் கம்யூனிஸ்டுகள்

கவனிக்க வைத்த புத்தகங்கள் 2015 களப்பணியில் கம்யூனிஸ்டுகள், ஜி.ராமகிருஷ்ணன், பாரதி புத்தகாலயம், விலை 20ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024324.html தலைவர்கள் குறித்து தொண்டர்கள் எழுதிய ஆயிரமாயிரம் புத்தகங்கள் உண்டு. ஆனால், சித்ரவதைகள், இழப்புகள், தியாயகங்களினூடே ஓர் இயக்கத்தைத் தாங்கிப் பிடித்திருக்கும் எளிய தொண்டர்களின் வாழ்க்கை வரலாற்றுப் பதிவுகளை ஒரு கட்சியின் தலைவர் எழுதியிருக்கும் முன்னோடி நூல் இது. நன்றி: தி இந்து, 2/1/2016. (கவனிக்க வைத்த புத்தகங்கள் 2015)

Read more

செல்வச் செழிப்பும் மக்கள் நல ஒழிப்பும்

செல்வச் செழிப்பும் மக்கள் நல ஒழிப்பும், நிஜவாழ்வின் பொருளியலுக்குள் ஒரு பயணம், சி.டி. குரியன், தமிழில் ச. சுப்பாராவ், பாரதி புத்தகாலயம், பக். 272, விலை 170ரூ. பொருளாதாரம் என்பது பொருட்கள், பணம் பற்றியதல்ல. அடிப்படையில் மனிதர்கள், அவர்களது சமூக உறவுகள் பற்றியது. யாருக்கு எது சொந்தம்? யார் என்ன செய்கிறார்? யார் எதைப் பெறுகிறார்? என்ற மூன்று முக்கியமான கேள்விகள்தான் எந்தவொரு பொருளாதாரத்தையும் ஆய்வு செய்ய உதவும் என்ற அடிப்படையில் எழுதப்பட்டுள்ள நூல். இந்த அடிப்படையில் பொருளியலின் பல்வேறு தன்மைகளை விரிவாக விளக்குகிறது. […]

Read more

இடையில்தான் எத்தனை ஞாயிற்றுக்கிழமைகள்

இடையில்தான் எத்தனை ஞாயிற்றுக்கிழமைகள், ச. சுப்பராவ், பாரதி புத்தகாலயம், பக். 95, விலை 70ரூ. ஆங்கில நாவல்கள் குறித்து, புத்தகம் பேசுது இதழில், நூலாசிரியர் எழுதிய கட்டுரைகள், தொகுப்பாக வெளிவந்துள்ளன. திரில்லர் நாவல்களில் தனக்கென்று தனி இடம் பிடித்த, அமெரிக்க எழுத்தாளரான, ராபின் குக் எழுதிய முதல் நாவலே, சிறுநீரகத் திருட்டைப் பற்றிய கோமா. அடுத்து, மருத்துவத் துறையின் மோசடி குறித்து எழுதிய, டெத் பெனிபிட் நாவல். கிரைட்டனின் கதைகளை விவரித்து, தமிழில் விஞ்ஞானக் கதைகள் ஏன் அதிகளவில் வரவில்லை என்ற தன் ஆதங்கத்தையும் […]

Read more

நினைவில் நின்றவை

நினைவில் நின்றவை, டி.வி. சந்திரசேகரன், பாரதி புத்தகாலயம், சென்னை, பக். 263, விலை 180ரூ. வங்கிகளில் வளர்ந்த தொழிற்சங்கங்கள் பற்றிய ஓர் கண்ணோட்டம் இந்நூல். காலந்தோறும் தொழிற்சங்க இயக்கங்கள் பல மாற்றங்களுக்கு உள்ளாவது இயல்பு. ஆனால் அந்த மாற்றங்கள் தொழிலாளர்களின் முன்னேற்றத்தில் நிலையான மகிழ்ச்சியைத் தந்தனவா என்பது கேள்விக்குறியே. இந்தப் பின்னணியில் நின்று, தமது 33 ஆண்டுகால தொழிற்சங்க இயக்கத்தின் ஈடுபாட்டு அனுபவத்தை, தன்னுணர்வு தலைதூக்காது, நடுநிலையோடு எழுதியுள்ளார் நூலாசிரியர். தொழிற்சங்க இயக்கத்தின் வரலாற்றை ஸ்டேட் வங்கி இயக்கத்தின் வரலாற்றோடு பகிர்ந்தளிப்பது சிறப்பு. ஸ்டேட் […]

Read more

தமிழர் வளர்த்த தத்துவங்கள்

தமிழர் வளர்த்த தத்துவங்கள், தேவ. பேரின்பன், பாரதி புத்தகாலயம், பக். 216, விலை 140ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024291.html வேதம் மனிதரால் செய்யப்பட்டதா? பொருள் தான் மூல முதல் : அதிலிருந்தே உணர்வு தோன்றியது எனும் பொருள்முதல் வாதிகளுக்கும், உணர்வு தான் (கருத்து அல்லது ஆன்மா) மூலமுதல். அதிலிருந்து தான் எல்லாம் தோன்றின எனும் ஆன்மிகவாதிகளுக்கும் இடையிலான தத்துவப் போராட்டங்களை, வரலாற்றுப் பின்னணியில் ஆய்வு செய்து, கி.பி. 18ம் நூற்றாண்டு வரையிலான, வடமாநில பகுதி இயக்கம், தமிழக பக்தி […]

Read more

நிராசைகள்

நிராசைகள், லிங்கராஜா, மாலவன் பதிப்பகம், சென்னை, விலை 80ரூ. இந்நூல் ஒரு முக்கோண காதல் கதையைக் கொண்டது. கதையின் முடிவாக இருந்தாலும் விதியின் போக்கை நம்மால் முடிவு செய்ய இயலாது என்பதை உறுதி செய்வதுபோல் அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 13/5/2015.   —- கன்னியாகுமரி மாவட்டம், பாரி நிலையம், சென்னை, விலை 70ரூ. கன்னியாகுமரி மாவட்டம் பற்றி அனைத்து தகவல்களையும் இந்த நூலில் எழுத்தாளர் சோமலெ எடுத்துரைக்கிறார். நன்றி: தினத்தந்தி, 13/5/2015.   —-   பிணங்களின் கதை, பாரதி புத்தகாலயம், சென்னை, விலை […]

Read more

களப்பணியில் கம்யூனிஸ்டுகள்

களப்பணியில் கம்யூனிஸ்டுகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், பாரதி புத்தகாலயம், சென்னை, விலை 200ரூ. எந்த ஒரு அரசியல் கட்சியும், தொண்டர்கள் சிந்திய வியர்வை அந்த தலைவர் மீது விழுந்த பன்னீர் என்ற முறையில் கட்சியை பெரிதும் வளர்க்கும்.ஆனால் தலைவர்களை போற்றி வணங்கும் அரசியல் உலகம் தொண்டர்களை பற்றி நினைப்பதில்லை. அதற்கு நேர்மாறாக தொண்டர்களின் ரத்த வியர்வையால் வளர்ந்ததுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி என்பதை மறக்காத கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் தமிழ்நாடு முழுவதிலும் கட்சிக்காக பல போராட்டங்களில் […]

Read more

பிணங்களின் கதை

பிணங்களின் கதை, கவிப்பித்தன், பாரதி புத்தகாலயம், சென்னை, பக். 160, விலை 120ரூ. நாம் வாழும் சமூகத்தின் பாரம்பரியத்தின் மீது அக்கறை கொண்டு, அதன் விழுமியங்கள் நவீனம் என்ற பெயரில் இப்போது மெதுவாகச் சிதைக்கப்படுவது நம்மில் எத்தனை பேர்? ஆனால், தொண்டை மண்டலத்தில் பிறந்த நூலாசிரியர், தனது இந்தச் சிறுகதை நூலின் மூலம் தாம் பிறந்த மண் பாரம்பரியத்தை இழந்து வருவது குறித்து கனத்த இதயத்துடன் ஆதங்கப்பட்டுள்ளார். புதுமை என்ற பெயரில் எப்படி எல்லாம் நம் முன்னோர்களின் பழக்க வழக்கங்களை நாம் உதாசீனப்படுத்துகிறோம்? இதனால், […]

Read more

நிகழ்ந்தபோதே எழுதப்பட்ட வரலாறு

நிகழ்ந்தபோதே எழுதப்பட்ட வரலாறு, தமிழில் ச. சுப்பாராவ், பாரதி புத்தகாலயம், சென்னை, விலை 150ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-279-1.html மன்த்லி ரெவ்யூ கட்டுரைகள் (1949 – 1998) அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன் முதல், போராளி சேகுவேரா வரை எழுதிய பத்திரிகை என்ற பெருமை மன்த்லி ரெவ்யூ இதழுக்கு உண்டு. இதன் ஆசிரியர்களாக இருந்த பால் ஸ்வீசியும் லியோ ஹீயுபர்மேனும் கம்யூனிஸ்ட்கள் என்று முத்திரை குத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்கள். (இதே விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டவர்தான் சார்லி சாப்ளின்) இவர்கள் இருவரும் அமெரிக்காவில் […]

Read more

நிகழ்ந்தபோதே எழுதப்பட்ட வரலாறு

நிகழ்ந்தபோதே எழுதப்பட்ட வரலாறு, தமிழில் ச. சுப்பாராவ், பாரதி புத்தகாலயம், சென்னை, விலை 150ரூ. தேவை ஒரு சுயமதிப்பீடு அமெரிக்காவிலிருந்து வெளிவரும் இடதுசாரி மாத இதழான மன்த்லி ரெவ்யூ தனது முதல் ஐம்பதாண்டு காலத்தில் வெளியிட்ட கட்டுரைகளிலிருந்து தேர்ந்தெடுத்த சிலவற்றை தொகுப்பாக வெளியிட்டிருந்தது. ஆல்பர்ட் ஐன்ஸ்டின், சே. குவேரா, நோம் சாம்ஸ்கி என்று நன்கறியப்பட்ட ஆளுமைகளும் அமெரிக்காவின் முன்னணி இடதுசாரி அறிஞர்களும் எழுதிய கட்டுரைகளைக் கொண்ட இத்தொகுப்பை ச. சுப்பாராவ் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். சோஷலிசம் எதற்கு என்ற தலைப்பில் ஐன்ஸ்டின் எழுதிய கட்டுரை, கட்டற்ற […]

Read more
1 4 5 6 7 8 9