மகாகவி பாரதியும் சங்க இலக்கியமும்

மகாகவி பாரதியும் சங்க இலக்கியமும், ய. மணிகண்டன், பாரதி புத்தகாலயம், சென்னை 15, பக். 112, விலை 60ரூ. To buy This Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-486-2.html மகாகவி பாரதியார் திருக்குறள், நாலடியார், சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம், ஔவை நூல்கள், சித்தர் பாடல்கள், வள்ளலார், தாயுமானவர் போன்றோரது பாடல்களைத் தனது எழுத்தில் பதிவு செய்துள்ளதை நாம் அறிவோம். ஆனால் அவர் சங்க இலக்கியங்க்ளையும், பழந்தமிழ் இலக்கியங்களையும் எந்த அளவுக்கு அறிந்திருந்தார். எந்த அளவுக்கு அவற்றைத் தனது எழுத்துக்களில் பதிவு செய்திருக்கிறார் என்பதை இந்நூல் […]

Read more

பூர்வீக பூமி

பூர்வீக பூமி, சூர்யகாந்தன், பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானிஜான்கான் சாலை, இராயப்பேட்டை, சென்னை 14, பக். 154, விலை 80ரூ. வானம் பார்த்த பூமியில் குடியானவர்களுக்கும், ஆடுமாடுகளும் படும்பாட்டை மானாவாரி மனிதர்கள் என்ற படைப்பாக தந்தவரின் அடுத்த அனுபவம்தான் பூர்வீகபூமி. உழைக்க சளைக்காத சிறுசிறு விவசாயிகள், தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்கள் தங்கள் விவசாயத்தையும் தொழிலையும் விட்டுவிட்டு, அண்டை மாநிலமான கர்நாடகாவில் வீணாய்ப்போகும் நிலங்களை விளைநிலமாக மாற்றும் பொருட்டு அங்கே குடிபோகிறார்கள். பாடுபட்டவர்கள் பலனை அனுபவிக்கும் முன்பே காவிரிப் பிரச்னை பூதாகரமாகி, தமிழர்களுக்கு எதிரான தாக்குதல் […]

Read more

மரத்தின் அழைப்பு

மரத்தின் அழைப்பு, மலையாள சிறார் கதைகள், தமிழில்-யூமா வாசுகி, பாரதி புத்தகாலயம், 421, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, விலை 90ரூ. நகர்மயமாதலின் மௌனமான விளைவுகளில் ஒன்று குழந்தைப்பருவம் இழக்கும் உலகம். பெரும்பாலான முந்தைய தலைமுறை கிராமங்களில் வசித்தது. காடுகரைகள் எல்லாம் ஓடித்திரிந்து சிறுவர்கள் மாலைதான் வீட்டுக்கு வருவார்கள். சாப்பாட்டுக்குப் பையனைத் தேடி தாய்மார்கள் தெருக்களில் அலைவார்கள். கிளி பிடித்து, பொன்வண்டு தேடி, தேனடை தேடி, மீன்களைத் துழாவி அலைந்த அந்த சிறுவர்கள் எல்லாம் எங்கே போய்விட்டார்கள்? முந்தைய தலைமுறை அனுபவித்த கட்டற்ற […]

Read more

காவிரி பிரச்சனையின் வேர்கள்

காவிரி பிரச்சனையின் வேர்கள், வே. ஜீவகுமார், பாரதி புத்தகாலயம், 421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, பக். 48, விலை 30ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-013-4.html காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி உத்தரவை அரசிதழில் வெளியிட்டு விட்டார்கள். இனி தமிழகத்திற்கு காவிரி நீர் வருவதில் பிரச்னை இருக்காது என்றே அத்தனை கோடி தமிழர்களும் நம்பியிருந்தனர். ஆனால் கடிகாரம் பின்னோக்கி சுற்ற ஆரம்பித்துவிட்டது. மாநில எல்லைக் கோடுகள் நதிகளுக்குக் கிடையாது என்கிற நிலையில், ஒரு நதி பாயும் அத்தனை நிலப்பரப்புக்கும் […]

Read more

காவிரி பிரச்சனையின் வேர்கள்

காவிரி பிரச்சனையின் வேர்கள், வெ. ஜீவக்குமார், பாரதி புத்தகாலயம், 421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை – 18, விலை: ரூ. 30. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-013-4.html தண்ணீர்ப் பிரச்சனையாகவும் கண்ணீர் விவகாரமாகவும் இருப்பது காவிரி. இது தொடர்பாக தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டி காவிரி ஆணையம் இறுதித் தீர்ப்பை வழங்கி, அதுவும் மத்திய அரசிதழில் வெளிவந்தாலும், உரிய தண்ணீர் அளவை கர்நாடகம் வழங்க மறுத்து வருகிறது. உச்ச நீதிமன்றம், காவிரி ஆணையம் ஆகியவற்றின் உத்தரவுகளை மீறும் வகையில் கர்நாடக […]

Read more

புரட்சியில் பகுத்தறிவு மார்க்சிய தத்துவமும் நவீன அறிவியலும்,

புரட்சியில் பகுத்தறிவு மார்க்சிய தத்துவமும் நவீன அறிவியலும், ப.கு.ராஜன், பாரதி புத்தகாலயம், 421, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, விலை 545. அறிவியலை எந்த அளவுக்கு எளிமையாகக் கூற முடியுமோ அந்த அளவுக்கு எளிமையாகக் கூற வேண்டும். ஆனால் அதற்கு மேலாக எளிமைப்படுத்த முயற்சி செய்யக்கூடாது என்று எழுதினார் ஐன்ஸ்டீன். புரட்சியில் பகுத்தறிவு என்ற புத்தகத்தில் ப.கு.ராஜன் அதைச் சரியாகச் செய்துள்ளார். அறிவியல் அதிலும் இயற்பியல்… சிக்கலானது. தத்துவம், அதனினும் சிக்கலானது. தத்துவ விசாரணைகளும் அறிவியல் வளர்ச்சியும் ஒன்றுக்கொன்று சமமாகவும் முரண்பட்டும் வளர்ந்ததை […]

Read more

விழுங்கப்பட்ட விதைகள்

விழுங்கப்பட்ட விதைகள், தி. திருக்குமரன், 9, முதல் தளம், தீபம் வணிக வளாகம், கருமண்டபம், திருச்சி 1,  இலங்கையில் இறுதிகட்ட யுத்தத்தின்போது புலம்பெயர்ந்த தமிழர் தி. திருக்குமரன். ஐரோப்பிய நாடு ஒன்றில் வசிக்கும் இவர் எழுதிய கவிதைகளின் தொகுப்பு இது. போரினால் சிதையுண்ட சமூகத்தின் தனிமனித, மனநல, காதல், காம வாழ்வின் அவலங்களை இவர் கவிதை ஆக்கியுள்ளார். ஒரு மண்ணும் மிஞ்சாத உயிர்வாழ்க்கை பூமியில் நமக்குத்தான் மட்டுமல்ல நதிக்கும்தான் எம் பயணக்குறிப்புகள் கடற்கரைகளிலும் காடுகளிலும் இறகுகளாயும் இறந்துபோய்விட்ட எம் தோழர்களின் என்புக்கூடுகளாயும் எம் நெடுவெளிப்பயணத்தின் […]

Read more

வால்மார்ட்டை விரட்டி அடிப்போம்

வால்மார்ட்டை விரட்டி அடிப்போம், ஆல் நார்மன், தமிழில் ச. சுப்பாராவ், பாரதி புத்தகாலயம், 421, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, விலை 75ரூ. ஆன்லைனில் இந்தப் புத்தகத்தை வாங்க: https://www.nhm.in/shop/100-00-0000-811-1.html வால்மார்ட் எப்படி உலகளாவியதோ அதேபோல வால்மார்ட்டிற்கு எதிரான யுத்தமும் உலகளாவியது. வால்மார்ட் இந்தியாவிற்கு வந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்று யூகங்கள் அடிப்படையில் இங்கே விவாதங்களும் அவற்றை மறுக்கும் கற்பனை நம்பிக்கைகளும் அளிக்கப்படும் சூழலில் இந்த நூல் அமெரிக்காவில் வால்மார்ட்டிற்கு எதிராக நடந்த மாபெரும் போராட்டங்களைச் சித்தரிக்கிறது. ஆல் நார்மன் என்பவர் வால்மார்ட்டுக்கு […]

Read more

கனவு ஆசிரியர்

கனவு ஆசிரியர், தொகுப்பாசிரியர்: க. துளசிதாசன், புக்ஸ் ஃபார் சில்ட்ரன், பாரதி புத்தகாலயம், 421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை – 18, விலை ரூ. 90. ‘உங்கள் வாழ்க்கையில் யார் மிக முக்கியமான வழிகாட்டி என நினைக்கிறீர்கள்?’ என்று, வர்த்தக இதழ் ஒன்று பெரிய தொழில் அதிபர்கள் எட்டுப் பேரிடம் கேட்டது. அதில் ஆறு பேர், தங்களது பள்ளிக்கூட ஆசிரியர்கள் என்று சொன்னார்கள். எல்லாக் குழந்தைகளுக்கும் முதல் ஹீரோ, அவர்களது ஆசிரியர்கள்தான். நல்லதும் கெட்டதுமான பல நடவடிக்கைகள் பள்ளியில் இருந்துதான் தொடங்குகின்றன என்பதால், அதற்குக் […]

Read more

பீமாயணம் தீண்டாமையின் அனுபவங்கள்

பெண்ணெழுத்து களமும் அரசியலும், ச. விசயலட்சுமி, பாரதி புத்தகாலயம், 421, அண்ணாசாலை, சென்னை 18, விலை 70 ரூ.   தொண்ணூறுகளின் இறுதியில் பெண் கவிதை எழுத்தில் மிகப்பெரிய உடைப்பு ஏற்பட்டது. சொல்லும் பொருளும் புதிதாக, பல்வேறு வகைமைகளில் பெண் கவிஞர்கள் எழுதத் தொடங்கினார்கள். ஆனால் பெண்களின் கவிமொழியை முழுவதும் ஆராயும் விமர்சன நூல்கள் அதிகம் உருவாகாதது பெரும் குறையே. இச்சூழ்நிலையில் சமகாலப் பெண் கவிஞர்கள் குறித்து குட்டி ரேவதி எழுதியதைத் தொடர்ந்து வரும் புத்தகம் பெண்ணெழுத்து முக்கியமான வரவாகும். கவிஞர் ச. விசயலட்சுமி தனக்கேயுரிய […]

Read more
1 6 7 8 9