உலக அரசியல்

உலக அரசியல், சுப்பிரமணியன் சந்திரன், பாரதி புத்தகாலயம். தன்னலம், சமுதாய நலம், தேசிய நலன் ஆகியவற்றை கடந்து, ஓர் உலக அரசியலுக்கு இலக்கணம் தேடும்வகையில், தத்துவ அறிஞர்கள் சிந்தித்தனர். ஆனால், நடைமுறையில் இந்த நலன்களை பலப்படுத்தும் திட்டமிட்ட நிகழ்ச்சியே உலக அரசியலாக மாறியுள்ளது. தேசிய நலனையும், தேசிய நலனுக்காக சமுதாய நலனையும், சமுதாய நலனுக்காக தன்னலத்தையும் துறந்துவிட முடியுமா என்ற கேள்வி, முக்கியத்துவம் வாய்ந்ததாக நம்மிடத்தில் முன்வைக்கப்படுகிறது. இந்த நூலில், இந்திய விடுதலை, முதல் உலகப்போர், இரண்டாம் உலக போர், அமெரிக்க விடுதலை, இங்கிலாந்து […]

Read more

கர்ணா நீ மஹத்தானவன்

கர்ணா நீ மஹத்தானவன், ஆர்.பி.வி.எஸ்.மணியன், வர்ஷன் பிரசுரம், பக். 160, விலை 80ரூ. தானம் செய்கிறவர்களை கர்ண பிரபு என்று அழைப்பது நடைமுறையில் நாம் பார்ப்பதுதான். தான வீரன் கர்ணன் என்றும்கூட நாம் நினைத்திருக்கிறோம். ஆனால் வியாச பாரதத்தில் ஒரு இடத்தில்கூட வறியவர்களுக்கு தானம் அளித்தான் என்ற வரலாறு இல்லை. ஆனால் எப்படி அவன், தான வீரன் என்று பெயர் பெற்றான் என்பதை இந்த புத்தகம் சுவையாக தெளிவுபடுத்துகிறது. கர்ணன் வெறும் கொடையாளி மட்டுமல்ல, மிகச்சிறந்த நட்புக்கும் இலக்கணமானவன். பாண்டவர்களே வியந்து அஞ்சும் அளவுக்கு […]

Read more

அடிப்படை வாதங்களின் மோதல்

அடிப்படை வாதங்களின் மோதல், தாரிக் அலி, தமிழில் கி. ரமேஷ், பாரதி புத்தகாலயம், விலை 350ரூ. சிலுவைப்போர், ஜி.காத், நவீனத்துவம். மத அடிப்படைவாதத்துக்கும் உலக போலீஸ்காரனாக தன்னை நினைத்துக்கொண்டிருக்கும் ஓர் ஏகாதிபத்திய அடிப்படைவாதத்துக்குமான மோதல்தான், கடந்த பல ஆண்டுகளாக உலகக் கொந்தளிப்பாக மாறிக்கொண்டு இருக்கிறது. எந்த ஒன்றின் பக்கம் நின்றும் ஆதரிக்க இயலாதவாறு இரண்டுமே கொடூரத்திலும் கொடூரமாக தங்களை அடையாளப்படுத்தி வரும் சூழலில் இரண்டையுமே எதிர்க்கவேண்டும் என்று வலுவான வாதங்களை வைக்கிறார் தாரிக் அலி. பிறப்பால் அவர் பாகிஸ்தானி. முஸ்லிம் அல்லாத முஸ்லிம் என்று […]

Read more

அவமானம்

அவமானம், மண்ட்டோ படைப்புகளின் தொகுப்பு, தமிழக்கம்-ராமாநுஜம், பாரதி புத்தகாலயம், பக். 96, விலை 60ரூ. மண்ட்டோ நூற்றாண்டை ஒட்டி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தென் சென்னை மாவட்டக் குழுவுடன் இணைந்து பாரதி புத்தகாலயம் வெளியிட்டிருக்கும் தொகுப்பு. இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக் காலத்தின் அவலங்களை, துயரங்களை, கொடுமைகளை நேரில் கண்டு வெம்பியவர் மண்ட்டோ. அவரது சிறுகதைகளில் மிகுந்த துயரம் குடி கொண்டிருக்கும். பெண்கள் எந்த அளவுக்குக் கொடுமைக்குள்ளானார்கள் என்பது வெளிப்படும். மனிதாபிமானம் வெளிப்படும். அவர் அவற்றை வெளிப்படுத்தியவிதம் ஆபாசமானது என்று நீதிமன்றம் வரை […]

Read more

பகத்சிங் சிறைக் குறிப்புகள்

பகத்சிங் சிறைக் குறிப்புகள், தொகுப்பு பூபேந்திர ஹுஜா, தமிழில் சா. தேவதாஸ், அசோகன் முத்துசாமி, பாரதி புத்தகாலயம், 421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, விலை 110ரூ. கால் நூற்றாண்டுகள் மட்டுமே உடலால் வாழ்ந்த பகத்சிங், ஒரு நூற்றாண்டு கடந்தும் உணர்வால் வாழ்ந்துகொண்டு இருக்கிறார். உயிருள்ள பகத்சிங்கைவிட, உயிரற்ற பகத்சிங் பிரிட்டிஷ் ஆதிக்கவாதிகளுக்கு ஆபத்தானவன். நான் தூக்கிலிடப்பட்ட பின்னர் என்னுடைய புரட்சிகரக் கருத்துக்களின் நறுமணம் நம்முடைய இந்த அழகான தேசமெங்கும் பரவும். இளைஞர்களுக்கு வெறியூட்டி சுதந்திரம் மற்றும் புரட்சி ஆகியவற்றின் மீது அவர்களைப் பித்துகொள்ளச் […]

Read more

அனைத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு

அனைத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு, பில் பிரைசன், தமிழில் ப்ரவாஹன், பாரதி புத்தகாலயம், 421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, விலை 400ரூ. அறிவியல் அது கசப்பான பாடங்களில் ஒன்று. ஆனால் அறிவியல் சாதனைகள் கசப்பானவையா? இல்லையே. அப்புறம் எப்படி பாடங்கள் மட்டும் கசப்பானவையாக இருக்கிறது என்றால், அதனைக் கற்பிக்கும் முறைதான் அதற்குக் காரணம். அறிவியலை எளிமையாகச் சொன்னால், அதைவிட த்ரில் வேறு எதிலும் இல்லை. அப்படி எழுதப்பட்ட புத்தகங்களில் முதன்மையானது இது. அதனால்தான் பில்பிரைசனின் இந்தப் புத்தகம் உலகிலேயே அதிகமாக விற்பனை ஆன […]

Read more

அயோத்தி இருண்ட இரவு

அயோத்தி இருண்ட இரவு, கிருஷ்ஜா, தீரேந்திரஜா, விடியல். ராமன் மசூதிக்குள் நுழைந்த கதை அயோத்தி கடந்த இருபதாண்டுகளாக நீறுபூத்த நெருப்பாகவும், அவ்வப்போது கனன்று எழுந்தும் அரசியலில் மாற்றங்களைக் கொண்டு வரும் வாக்குவங்கி ஈர்க்கும் காந்தமாகவும் இருக்கிறது. இதற்காக எவ்வாறு திட்டமிடப்பட்டு பாபர் மசூதியில் ராமன் என்கிற கடவுளைக் கொண்டு வந்து மசூதியுடன் தொடர்புப்படுத்தினர் என்கிற வரலாற்றை விளக்கும் இந்நூல் இன்றைய காலகட்டத்தின் மிகத் தேவையான அரசியல் நூல் என்கின்றனர் விடியல் பதிப்பகத்தார்.   —-   அடிப்படைவாதத்தின் வேர்கள், தாரிக் அலி, பாரதி புத்தகாலயம் […]

Read more

செள்ளு

செள்ளு,செல்வராஜ், பாரதி புத்தகாலயம்.(சிறந்த சிறுகதைத்தொகுப்பு). தமிழ்ச்சூழலில் அதிகம் அறியப்படாத கடலோர மக்களின் ரத்தமும் சதையுமான வாழ்வை, அதன் அசலான மொழியில் முன்வைக்கிறார் செல்வராஜ். கன்னியாகுமரி மாவட்டக் கடலோரக் கிராமமான சைமன் காலனியில் பிறந்த இவர், பாரம்பரிய மீன்பிடிச் சமூகமான முக்குவர்களின் வாழ்வையும், அவர்களின் பாடுகளையும் மிகவும் நெருக்கமாக, உள்ளிருந்து பேசுகிறார். தமிழ் இலக்கியப் பரப்புக்குப் புத்தம் புதியதான இந்த மொழி, உள்ளே நுழையும்போது சற்றே மிரளவைக்கலாம். அம்பேத்கர் நூற்றாண்டை ஒட்டி, 1990களில் வீச்சுடன் வெளிப்பட்ட தலித் இலக்கிய எழுத்துகளை உள்வாங்க, அப்போது வாசக மனம் […]

Read more

எழுதித் திரிந்த காலம்

எழுதித் திரிந்த காலம், புதுவை ரா. ரஜினி, புதுவை ரா.ராஜினி, புதுச்சேரி, பக். 128, விலை 150ரூ. பல்வேறு இதழ்களில் எழுதிய 22 கட்டுரைகள், நூலாசிரியரின் 2 நேர்காணல்கள் தொகுக்கப்பட்டு இந்நூலில் சுவையாகப் பரிமாறப்பட்டுள்ளன. நமது வாழ்க்கையில் அன்றாடம் சந்திக்கும் நபர்கள், நிகழ்வுகள் இந்தக் கட்டுரைகளில் பதிவாகியிருக்கிறன்றன. எல்லாருடைய வாழ்க்கையிலும் இந்த கட்டுரைகளில் விவரிக்கப்பட்டிருக்கும் அனுபவங்கள் இருந்திருக்கும் என்றாலும், இக்கட்டுரைகளைப் படிக்கும்போது இனம்புரியாத வாசிப்பின்பம் ஏற்படுகிறது என்பது என்னவோ உண்மை. எழுத்தாளர் கி. ராஜநாராயணனுடன் நூலாசிரியர் பழகிய அனுபவம் சல்யூட் என்ற கட்டுரையில் நமது […]

Read more

செள்ளு

செள்ளு, செல்வராஜ், பாரதி புத்தகாலயம், 421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, பக். 96, விலை 60ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-712-7.html கடல் பற்றி நமக்குத் தெரிந்த அளவுக்குக்கூட கடலோர மக்களின் வாழ்வு பற்றி தெரிவதில்லை. இந்த நிலையில், கடலோர மக்களின் வாழ்வைத் தழுவி நெய்தல் நிலத்து இலக்கியமாக வந்திருப்பதுதான் செல்வராஜின் செள்ளு சிறுகதைத் தொகுப்பு. தென்தமிழகத்தில் குமரி மாவட்டத்தின் அரபிக் கடலோரத்தில் வாழும் பாரம்பரிய மீனவச் சமூகமாக முக்குவர்களின் வாழ்வை, அவர்களின் காதலை, துன்பத்தை, நொய்மையை, தேடலை, […]

Read more
1 5 6 7 8 9