அச்சுவெல்லம்

அச்சுவெல்லம், பா. முருகானந்தம், பழனியப்பா பிரதர்ஸ், பக். 145, விலை 176ரூ. சூழ்நிலைகளால் உருவாகும் சம்பவங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் அன்றாடம் நடக்கின்றன. அவை அவ்வப்போது சிறுகதைகளாக உருப்பெறுகின்றன. அந்த வகையில் பா. முருகானந்தம், 15 சிறுகதைகளை, அச்சுவெல்லம் எனும் தலைப்பில் சிறுகதைகளாக தொகுத்து அளித்துள்ளார். தலைப்பு கதையான, ‘அச்சுவெல்ல’த்தில் பண்ணையார் வீட்டிற்கு போகும் ஒவ்வொரு அச்சுவெல்லத்திலும், கரிகாலன் கலக்கும் ‘பதம்’, அடிமைத்தனத்திற்கு எதிராகவும், இயலாமையின் வெளிப்பாடாகவும் மிக அழுத்தமாக படைக்கப்பட்டுள்ளது. ‘முதுகு வலி’ கதையில், ‘உடம்பில் இயல்வு நிலையிலேர்ந்து மாறுபட்டா அதைப் புரிஞ்சுக்கிட்டு மீண்டும் […]

Read more

அமெரிக்காவின் சிம்ம சொப்பனம் அசாஞ்சே

அமெரிக்காவின் சிம்ம சொப்பனம் அசாஞ்சே, பா. முருகானந்தம், விகடன் பிரசுரம், பக். 143, விலை 75ரூ. கடவுளுக்குத் தெரியாமல் உலகத்தில் எதுவும் நடக்க முடியாது. அதுபோல இணையத்தில் உள்ள ரகசியங்களும் தெரியாமல் இருக்க முடியாது. எனவேதான், வாழ்வின் அந்தரங்க உறவுகள் இணையத்தில் பகிரங்கம் ஆகிவிட்டன. இணையத்தில் புகுந்து ரகசியங்களைத் தெரிந்து கொள்வதில் இணையற்ற துப்பறியும் மேதை ஆஸ்திரேலியர் ஜுலியன் அசாஞ்சே. இவர் தன் விக்கிலீக்ஸ் மூலம் பல நாட்டு ராணுவ ரகசியங்களை அம்பலப்படுத்தி அசரவைத்தார். கம்ப்யூட்டர் மூலம் சமூக அவலங்களை, லஞ்ச ஊழல்களை, அடக்குமுறைகளை […]

Read more

தொடர்ச்சியான, முழுமையான மதிப்பீடு (சிசிஇ)-ஓர் அறிமுகம்

தொடர்ச்சியான, முழுமையான மதிப்பீடு (சிசிஇ)-ஓர் அறிமுகம், பத்மா ஸ்ரீநாத், வேதா டி.ஸ்ரீதரன், வேத ப்ரசகாசனம் வெளியீடு, சென்னை 28, பக். 220, விலை 250ரூ. மாணவர்களுக்கு ஆசிரியர் கற்பிக்கும் வழக்கமான பாணியை வேறுவகையில் மாற்றி, அமைத்துள்ளது சி.சி.இ. என்ற தொடர்ச்சியான, முழுமையான மதிப்பீட்டுமுறை. மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் சி.பி.எஸ்.இ. இந்தத் திட்டத்தை தமிழக அரசும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் புதிய மதிப்பீட்டு முறையில் தமிழக ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு வினாக்களுக்கு விளக்கமாக விடை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பெற்றோருக்கும் தனது குழந்தை கற்கும் […]

Read more

ஜெருசலேம் அழியா நகரத்தின் கதை

ஜெருசலேம் அழியா நகரத்தின் கதை, பா. முருகானந்தம், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை 14, பக். 267, விலை 210ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-033-9.html இன்றைய இஸ்ரேல் நாட்டின் தலைநகரமான ஜெருசலேம் நகரத்தின் ஏழாயிரம் ஆண்டு காலவரலாற்றுப் பின்னணியைப் பேசும் நூல் இது. கிறிஸ்தவர்களின் புண்ணிய பூமி ஜெருசலேம் என்ற பொதுவான நம்பிக்கையை தகர்த்து முஸ்லீம்களுக்கும் ஜெருசலேம் ஒரு புண்ணிய பூமி என்பதை நூல் விளக்குகிறது. இயேசு கிறிஸ்து இந்த நகரத்தில்தான் சிலுவையில் அறையப்பட்டார் என்பதால் கிறிஸ்துவர்களுக்கு ஜெருசலேம் புண்ணிய […]

Read more