தி டிவைன் சைவ நாயன்மார்ஸ்

தி டிவைன் சைவ நாயன்மார்ஸ், துர்காதாஸ் என்.கே.சுவாமி, பிரேமா பிரசுரம், விலை 300ரூ. தமிழில் அறுபத்து மூவர் கதைகள் என்னும் பெயரில் எழுதப்பட்டு, 1967ல் வெளிவந்துள்ளது. ஐம்பத்தொரு ஆண்டுகளுக்குப் பின் இந்த நுால் எளிய ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது. பெரியபுராணத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டு இந்த அறுபத்து மூவர் வரலாற்றை எழுதுவதற்கு முன், திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணத்தைப் படைத்த சேக்கிழார் வரலாற்றை இந்த நுால் விரிவாக எடுத்துக் கூறுகிறது. இந்த நாயன்மார் வரலாற்றை விளக்கும் வகையில் பக்கத்துக்குப் பக்கம் அழகிய கறுப்பு […]

Read more

கொல்லிமலை மகிமை

கொல்லிமலை மகிமை, மதியுகி சிவகுரு, பிரேமா பிரசுரம், பக். 104, 60ரூ. எந்த இடத்துக்கு சென்றாலும், அந்த இடம் பற்றிய விபரங்களை நாம் அறிந்திருந்தால் மட்டுமே, நன்கு சுற்றி பார்க்க முடியும். நாமக்கல் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமாக உள்ள கொல்லிமலை பற்றி பலரும் தெரிந்திருப்போம். ஆனால், அங்கு பார்க்க வேண்டியவை பற்றி கேட்டால், சரியாகத் தெரியாது. இந்தக் குறையைப் போக்கும் வகையில், கொல்லிமலை பற்றி முழு தகவல்களுடன், இந்நுால் வெளிவந்துள்ளது. நன்றி: தினமலர், 26/8/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more

மறக்கவே நினைக்கிறேன்

மறக்கவே நினைக்கிறேன், மாரி செல்வராஜ், விகடன் பிரசுரம், பக். 286, விலை 150ரூ. To buy this Tamil book online:https://www.nhm.in/shop/100-00-0002-229-5.html ஆனந்தவிகடன் வார இதழில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு. தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் என்ற சிறுகதை தொகுப்பு மூலம், எழுத்துலகில் அறிமுகமானவர், மாரி செல்வராஜ். தான் செய்தவற்றை, நியாயப்படுத்தியோ அல்லது ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்கும் தோரணையோ எதுவும் இல்லை. இதுதான் நடந்தது. இதை தான் செய்தேன் என்ற நிர்வாண அழகில், தனி கவனம் ஈர்த்துள்ளார். மரணத்தின் நாட்குறிப்பு கட்டுரையில், டைரிகளோடு, தான் சந்தித்த […]

Read more

சிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்கள்

சிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்கள், க. முருகானந்தம், பிரேமா பிரசுரம், சென்னை, விலை 150ரூ. விரதங்கள் என்பது இறைவனை நினைப்பதற்காகவே தோன்றியது என்பதும், ஒரு காரணமாகும். அந்த விரதங்கள் எதற்காக இருக்கிறோம் என்பதுகூட தெரியாதவர்களாகவே பலர் இருக்கின்றனர். இந்த நூலில் சிவபெருமானுக்குரிய எட்டு விரதங்களைப்பற்றி, ஆசிரியர் கூறியிருக்கிறார். விரதங்களின் மகிமை, விரதம் தோன்றிய விதம், இந்த விரத நாட்களில் கோவில்களில் நடைபெறும் விழாக்கள் என்று ஆசிரியரின் பார்வை பரவியிருக்கிறது. நன்றி: தினத்தந்தி.   —- மனோரமா இயர்புக் 2014, மலையாள மனோரமா, சென்னை, விலை […]

Read more

அனுபவச் சுருள்

அனுபவச் சுருள், டாக்டர் கே.எஸ். சுப்பிரமணியன், கவிதா பப்ளிகேஷன்ஸ், தி.நகர், சென்னை, பக். 192, விலை 125ரூ. ஒரு வங்கி அதிகாரியின் அரசியல் அனுபவங்கள், இலக்கிய ரசனை, நனவோட்ட முறையிலான நிகழ்ச்சித் தொகுப்புகள். பிலிப்பைன்ஸ் நாட்டு மக்கள் எழுச்சி, மொழி பெயர்ப்பு அனுபவம், ஜெயகாந்தன், சி. சுப்ரமணியன், ராஜாஜி போன்றோர்களுடனான நேர்காணல், ஆங்காங்கே தலை தூக்கும் பாரதியின் கவிதை வரிகள் இப்படியே சுவாரஸ்யமாக 192 பக்கங்கள். எந்தத் தலைப்பை எடுத்துப் படித்தாலும் அதில் ஒரு ஆழ்ந்த கருத்தும், யதார்த்தமும் இழையோட அமைந்த அனுபவம். என்னைக் […]

Read more

தமிழ் இலக்கியங்களில் மனமும் மருந்தும்

தமிழ் இலக்கியங்களில் மனமும் மருந்தும், ப. குப்புசாமி, மணி வாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 108, விலை 125ரூ. மனம் பற்றி தொல்காப்பியம், திருக்குறள் உள்ளிட்ட பல்வேறு இலக்கியங்கள் கூறிய கருத்துக்கள் தொகுத்து தரப்பட்டுள்ளன. இக்காலத்தில் அதிகமாக பேசப்படும் மன உளைச்சல் பற்றி தமிழ் இலக்கியங்களில் எவ்வாறு பேசப்பட்டுள்ளது என்பது விளக்கமாகவும், விரிவாகவும் கூறப்பட்டுள்ளன. தமிழ் இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள மருத்துவ குறிப்புகளையும் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். நன்றி: தினத்தந்தி, 8/1/2014.   —-   சிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்கள், சு. […]

Read more

மௌனியின் கதைகள்

மௌனியின் கதைகள், தொகுப்பாசிரியர்-கி.அ.சச்சிதானந்தம், சாகித்ய அகாடமி, குணா பில்டிங்ஸ், 443, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, விலை 110ரூ. உலகத் தரத்துக்கு தமிழில் சிறுகதைகள் எழுதியவர் மௌனி. 1907ல் பிறந்து 1985ல் மறைந்த அவர் எழுதியவை 24 சிறுகதைகள்தான். ஆயினும் அவை சிகரம் தொட்டவை. அதனால்தான் சிறுகதை மன்னர் புதுமைபித்தன் தமிழ் சிறுகதை உலகின் திருமூலர் என்ற மௌனியைப் பாராட்டி இருக்கிறார்.அவருடைய மிகச்சிறந்த 13 கதைகளை தேர்ந்தெடுத்து சாகித்ய அகாடமி வெளியிட்டு உள்ளது. இக்கதைகள், எல்லோருக்கும் எளிதில் புரிந்து விடாது. நிதானமாகவும், பொறுமையாகவும், […]

Read more