பரிசு

பரிசு, உங்கள் வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கான 12 பாடங்கள், ஈடித் எகர், தமிழில் – பிஎஸ்வி குமாரசாமி, மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், பக். 226,  விலை ரூ. 299. ‘தி கிப்ட்’ என்ற தலைப்பில், சிறுமியாக இருந்த காலம் ஆஷ்விட்ஸ் வதை முகாமில் யூதர்களான தந்தையையும் தாயையும் பறிகொடுத்த பெண்மணியான ஈடித் ஈவா எகர் எழுதிய நூலின் தமிழாக்கமே இந்தப் “பரிசு’. உங்கள் வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கான 12 பாடங்கள் என்ற தலைப்பில் 12 இயல்களில் 12 விதமான மனச் சிறைகளை விவரித்துத் திறந்துவிடுகிறார் எகர். பலிகடா […]

Read more

பெண்களை உயர்த்துவோம் சமுதாயத்தை உயர்த்துவோம்

பெண்களை உயர்த்துவோம் சமுதாயத்தை உயர்த்துவோம், மெலின்டா கேட்ஸ்; தமிழில்: நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், பக்.344, விலை ரூ.399. மைக்ரோசாஃப்ட் நிறுவனரான பில் கேட்ஸின் மனைவி மெலின்டா கேட்ஸ், தனது கணவருடன் சேர்ந்து 2000 ஆம் ஆண்டில் பில் மெலின்டா கேட்ஸ் அறக்கட்டளையைத் தொடங்கினார். உலகெங்கும் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளை ஆய்வு செய்து அவர்களை அதிலிருந்து விடுவிப்பதே இந்த அறக்கட்டளையின் நோக்கம். இந்த அறக்கட்டளைப் பணிக்காக மெலின்டா கேஸ் உலகில் பல நாடுகளுக்குச் சென்று அங்குள்ள பெண்களைச் சந்தித்து, அவர்களின் பிரச்னைகளைக் கேட்டறிந்த அனுபவங்களை […]

Read more

ரசவாதி

ரசவாதி, பாலோ கொயலோ, தமிழில் – நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், பக்.248, விலை ரூ.225; உலகம் முழுவதும் 8.5 கோடி பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்த தி ஆல்கெமிஸ்ட் நூலின் தமிழாக்கம் இது. ஏறத்தாழ 40-க்கும் மேற்பட்ட மொழிகளில் இந்நூல் மொழியாக்கம் செய்யப்பட்டிருப்பதில் இருந்தே இதன் முக்கியத்துவத்தை நாம் உணர முடியும். சான்டியாகோ என்ற ஆடு மேய்க்கும் சிறுவன், யாருமே கண்டடைய முடியாத பொக்கிஷத்தைத் தேடி அலைகிறான். காடு, மலை, பாலைவனம் என பயணிக்கும் அவன், அவனுடைய வழியில் கண்ட காட்சிகளையும், அனுபவங்களையும் […]

Read more

சேப்பியன்ஸ் மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு

சேப்பியன்ஸ் மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு, யுவால்நோவா ஹராரி, தமிழில் நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், விலை 499ரூ. பரிணாமத்தின் வரலாறு யுவால் நோவா ஹராரியின் ‘சேப்பியன்ஸ்’, மனித இனத்தின் சமூக, அரசியல், பொருளாதார பரிணாம வரலாற்றைப் பேசும் புத்தகம். பத்து லட்சம் பிரதிகள், முப்பது மொழிகளில் மொழியாக்கம் என்று உலகளவில் அதிகம் விற்பனையான நூல். நெருப்பு, மொழி, வேளாண்மை என்று தொடர்ந்துவந்த மனித அறிவின் பரிணாமத்தில் அடுத்தடுத்து வந்த பணமும் முதலாளித்துவமும் அறிவியலும் இன்றைக்கு மனிதர்களை எப்படி ஆட்டிப்படைக்கின்றன என்பதை வரலாற்று […]

Read more

சேப்பியன்ஸ் – மனித குலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு

சேப்பியன்ஸ் – மனித குலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு, யுவால் நோவா ஹராரி, தமிழில் நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், விலை 499ரூ. 1350கோடி ஆண்டுகளுக்கு முன் ‘பெருவெடிப்பு’ காரணமாக இந்த உலகம் உருவானதாகக் கருதப்படுகிறது. பின்னர் படிப்படியாக உயிரினம் தோன்றி, அதில் இருந்து ஆதிமனிதன் உருவாகி, 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன் சேப்பியன்ஸ் என்ற ஆதி மனித இனம் தோன்றியதாக ஆசிரியர் தெரிவிக்கிறார். அந்த மனித இனத்தின் பரிணாம வளர்ச்சி ருசிகரமாக பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. மனித வாழ்வில் ஏற்பட்ட மதம், […]

Read more

ஏ.பி.ஜே. அப்துல்கலாம்(ஒரு வாழ்க்கை வரலாறு)

ஏ.பி.ஜே. அப்துல்கலாம்(ஒரு வாழ்க்கை வரலாறு), அருண் திவாரி, தமிழில் நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், விலை 495ரூ. இந்திய வரலாற்றில் மகாத்மாவுக்குப் பிறகு மகத்தான மனிதராகப் போற்றப்பட்ட அப்துல்கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு. படிப்படியாக உருப்பெற்று விண்தொட்ட ஏவுகணைப்போல் வாழ்வில் படிப்படியாக உயர்ந்து அவர் சாதித்ததைச் சொல்லி இளைஞர்களுக்கு உத்வேகம் ஊட்டும் அற்புத வரலாறு. கலாமின் சீடரும் நெருங்கிய நண்பரும் அவரது நூல்கள் பலவற்றுக்கு இணை ஆசிரியருமான பேராசிரியர் அருண்திவாரி எழுதிய ஆங்கில நூலின் செம்மை குறையாத தமிழ் வடிவம். நன்றி: குமுதம், […]

Read more

ஏ.பி.ஜே.அப்துல் கலாம் ஒரு வாழ்க்கை வரலாறு

ஏ.பி.ஜே.அப்துல் கலாம் ஒரு வாழ்க்கை வரலாறு. அருண் திவாரி. தமிழில்: நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், பக்.548, விலை ரூ.495. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு. அவரோடு நெருங்கிப் பழகிய நூலாசிரியர், அப்துல் கலாமின் வாழ்க்கையை வெறும் நிகழ்வுகளின் தொகுப்பாகப் பார்க்காமல், அந்த நிகழ்வுகளின் ஊடே அப்துல்கலாம் விட்டுச் சென்ற வாழ்க்கைப் பார்வையை நூல் முழுவதும் இழையோட விட்டிருக்கிறார். அப்துல்கலாமின் இளமைப் பருவம், ஒரு விமானியாக வேண்டும் என்று அவர் கண்ட கனவு நிறைவேறாமல் போனது, ஆனால் அதற்கும் […]

Read more

ராமாயணம்

ராமாயணம், தேவி வனமாலி, தமிழில்: நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ் , பக்.320, விலை ரூ.275. பெண் துறவியும், எழுத்தாளருமான தேவி வனமாலி, ஸ்ரீ ராம்லீலா என்ற தலைப்பில் எழுதிய ஆங்கில நூலின் தமிழாக்கம் இது. மொழிபெயர்ப்பு என்றாலும் மூலத்தைப் படிப்பதைப் போன்ற விறுவிறுப்புடன் தமிழாக்கம் செய்திருக்கிறார் நாகலட்சுமி சண்முகம். எல்லாருக்கும் தெரிந்த வால்மீகி ராமாயணத்தின் சுருக்கமான வடிவம்தான் இந்நூல். அதனை நூலாசிரியர் கொடுத்திருக்கும் விதம் சிறப்பு என்றால், அவர் எழுதியிருக்கும் முன்னுரை மிகச் சிறப்பு. ராமபிரானின் குணாதிசயங்கள் குறித்து எழுந்துள்ள சில சர்ச்சைகளுக்குத் தீர்வு காணும் […]

Read more

ராமாயணம்

ராமாயணம், தமிழில் நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், விலை 275ரூ. சமஸ்கிருத மொழியில் வால்மீகி எழுதிய ராமாயணத்துக்கும், தமிழில் கம்பர் எழுதிய ராமாயணத்துக்கும் சில வித்தியாசங்கள் உண்டு. இதுபோல், மாறுபட்ட தகவல்களுடன் வேறு சில ராமாயணங்களும் இருக்கின்றன. பல்வேறு ராமாயணங்களையும் படித்து ஆராய்ந்த தேவி வனமாலி, கேரளாவை சேர்ந்தவர். சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். கங்கை நதிக்கரையில் ஆசிரமம் அமைத்து, அங்கேயே வசித்து வருகிறார். அவர் ராமாயணத்தை ஆங்கிலத்தில் எழுதினார். பலராலும் பாராட்டப்பட்ட அந்த நூலை நாகலட்சுமி சண்முகம் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். […]

Read more

என் வழி தனி வழி சச்சின் டெண்டுல்கர் சுயசரிதை

என் வழி தனி வழி சச்சின் டெண்டுகல் சுயசரிதை, தமிழில் நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், பக். 545, விலை 495ரூ. உலகின் பல்வேறு கிரிக்கெட் மைதானங்களில் 22 கெஜ நீள ஆடுகளத்தில் 24 ஆண்டுகளாக கோலோச்சிய சச்சினைப் பற்றி, ரசிகர்களுக்கு என்னவெல்லாம் தெரியுமோ அவை எல்லாம் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. இருந்தாலும் சின்னப் பயலே வீட்டிற்குச் சென்று பால் குடித்து விட்டு வா என்று சியால்கோட் மைதானத்தில் பாகிஸ்தான் ரசிகர்கள் ஏந்தியிருந்த வாசகம் உண்டாக்கிய அசௌகரியம், ஆரம்பத்தில் வாசிம் அக்ரம், வக்கார் […]

Read more
1 2