ஜிப்ஸியின் துயர நடனம்

ஜிப்ஸியின் துயர நடனம், யமுனா ராஜேந்திரன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 325ரூ. சென்ற நூற்றாண்டின் மகத்தான மார்க்சிய கலை ஆளுமைகள் குறித்த ஒரு நினைவுகூரலாகவே யமுனா ராஜேந்திரனின் இந்நூல் உள்ளது. ஆளுமைகள், பண்பாட்டு வரலாறு, அரசியல், பயணக் கட்டுரைகள் என்னும் நான்கு பகுதிகளைக் கொண்டது இந்தப் புத்தகம். ஆளுமைகள் பகுதி யில் ரோஸா லக்ஸம் பர்க் பற்றிய கட்டுரை சிறப்பானது. போலந்திலிருந்து வந்த யூதப் பெண்மணி இவள். ஜெர்மானிய ஒடுக்குமுறையாளர்களின் கட்டளையின்படி படுகொலை செய்யப்பட்ட ஜெர்மானிய தொழிலாளர்களுக்காகப் போராடி ய வீரப் […]

Read more

பேசுவதை நிறுத்திக்கொண்ட சிறுவன்

பேசுவதை நிறுத்திக்கொண்ட சிறுவன், யமுனா ராஜேந்திரன், பிரக்ஞை பதிப்பகம், பக்.168, விலை 130ரூ. உலக அளவில் வெளியான குழந்தைகள் பற்றிய திரைப்படங்களைப் பற்றிப் பேசும் நூல். வெறுமனே திரைப்படங்கள் குறித்தும், கதைச்சுருக்கம், நடிகர், நடிகையர் பற்றியும் மட்டுமே சொல்லிக்கொண்டிருக்காமல், படம் உருவானதன் பின்னணி, கேமரா கோணங்களின் சிறப்பு, காட்சிகளின் முக்கியத்துவம் என்று பலவகையிலும் சிறப்பான திரைப்படங்களைப் பலமுறை பார்த்து, ஆராய்ந்து விரிவாக எழுதியிருப்பது இந்நூலின் சிறப்பு. நெதர்லாந்து திரைப்படமான “பேசுவதை நிறுத்திக் கொண்ட சிறுவன்’‘ (1996) படத்தில், சொந்த மண்ணைப் பிரிவதனால் சமூகத்தின் மீது […]

Read more

ஈழம் எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம்

ஈழம் எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம், யமுனா ராஜேந்திரன், அடையாளம், 1205/1, கருப்பூர் சாலை, புத்தாநத்தம், திருச்சி மாவட்டம், விலை 550ரூ. விடுதலைப் புலிகளை ஆராதிக்கும் புத்தகங்கள் அதிகம். விடுதலைப் புலிகள் என்றாலே பாசிஸ்ட்டுகள் என்று பாய்ந்து பறாண்டும் புத்தகங்களும் அதைவிட அதிகம். ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பை அதற்கான பலம், பலவீனங்களுடன் நடுநிலைமை தவறாமல் எழுதப்பட்டுள்ள புத்தகங்கள் குறைவு. அதில் ஒன்று யமுனா ராஜேந்திரனின் இந்தப் புத்தகம். எதைப் பற்றி எழுதினாலும் அதனுடைய நுண்மையான அரசியலுக்குள் நுழைந்து, சகல தரப்பையும் அலசி ஆராய்ந்து எழுதக் […]

Read more

அரபுப்புரட்சி மக்கள் திரள் அரசியல்

அரபுப்புரட்சி மக்கள் திரள் அரசியல், யமுனா ராஜேந்திரன், அடையாளம், 1205/1, கருப்பூர் சாலை, புத்தாநத்தம், 621310, திருச்சி மாவட்டம், விலை 210ரூ. அரபுப் புரட்சிக்கு அடிப்படைக் காரணம், தகவல் தொழில்நுட்பப் புரட்சி. அரை நூற்றாண்டு காலமாக அசைக்க முடியாத மன்னர்களாக இரந்தவர்களை ஃபேஸ்புக், ட்விட்டர், இணையதளம், இமெயில் மூலமாக அசைத்துப் பார்த்தது அரபுப் புரட்சி. லிபியாவில் கடாபியும், எகிப்தில் முபாரக்கும், துனீசியாவில் பென் அலியும் இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போகக்காரணமான இளைஞர்களும் இளம் பெண்களும் எப்படித் திரண்டனர், ஏன் திரண்டனர், அவர்களை இயக்கிய […]

Read more