நீங்களும் கிடைப்பீர்கள்

நீங்களும் கிடைப்பீர்கள், ம. சக்தி வேலாயுதம், விஜயா பதிப்பகம், பக்.144, விலை 75ரூ. “பத்தே அடியில் தண்ணீர் கிடைக்கிறதாம்… விளைநிலம்… விலை நிலம் ஆனபின்பு” இப்படி சமூகத்தில் புரையோடிப்போன ஏமாற்றுக்களை எளிய தமிழில் ஆழமாகப் பதியவிட்டு, வாசகனை விழித்து எழச் செய்யும் உத்தி கவிதைகள் தோறும் காண முடிகிறது. கவியின் உள்ளமும் சொல்லாட்சியும் படிப்போரைக் கவரும். நன்றி: குமுதம், 21/6/2017.

Read more

வானதியின் எண்ணச் சிறகுகள்

வானதியின் எண்ணச் சிறகுகள், வானதி சந்திரசேகரன், விஜயா பதிப்பகம். கல்லூரி காலத்தில், கவிதாயினியாக மலர்ந்தவர்; பின், குடும்பத்திற்காக, 24 ஆண்டுகளை ஒதுக்கி, கவிதையை ஒதுங்கியிருந்தவர், குடும்பத்தார் தந்த உற்சாகம் காரணமாக, தற்போது, நிறைய கவிதைகள் எழுதி வருகிறார். இடைப்பட்ட, 24 ஆண்டுகளில் நீர்த்துப் போகாதிருக்கும் இவரது வளமான தமிழால், பல விஷயங்களை பாடியிருக்கிறார். அதிலும், கரிசல் காடு, களிறுகளும், கயவர்களும் உள்ளிட்ட, பல கவிதைகள் அருமை! கவிதையை, வெறும் அலங்காரத்திற்கு பயன்படுத்தாமல், சுற்றுப்புறச்சூழல், மதுவின் பாதிப்பு, தவறான உணவு வகை, வனங்கள் அழிப்பின் அவலங்கள் […]

Read more

கதைகளின் கதை

கதைகளின் கதை, ம. மணிமாறன், விஜயா பதிப்பகம், பக். 224, விலை 160ரூ. முப்பத்தியிரண்டு தமிழ் முன்னணி எழுத்தாளர்கள் பற்றிய விமர்சனப் பார்வையை நம் முன் வைக்கிறார், ம.மணிமாறன். சிறுகதை மன்னன் புதுமைப்பித்தன் – மனிதர்களின் உணர்ச்சி பெருக்கை கதைகளமாக்கிய மவுனி – அகத்தின் கேள்வியை புறத்தே கண்டெழுதிய, ந.பிச்சமூர்த்தி – பெண் உலகின் மாயங்களை கண்டெழுதிய, கு.ப.நா., – தஞ்சை பெருவெளியின் அதீத கணங்களை, கதை ஆக்கிய, தி.ஜானகிராமன். மனிதகுலம் சுமக்கிற புறக்கணிப்பின் சொற்களை கதை ஆக்கிய, கிருஷ்ணன் நம்பி – அழகின் […]

Read more

மனம் ஒரு மகாத்மா

மனம் ஒரு மகாத்மா, முனைவர் பா. மஞ்சுளா, விஜயா பதிப்பகம், விலை 70ரூ. வள்ளலாரின் வழியை பின்பற்றி வரும் நூலாசிரியரான தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் பா. மஞ்சுளா, வள்ளலாரின் 43 அமுதுமொழிகளை தேர்வு செய்து, அதனை அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் நூலாக தொகுத்துள்ளார். அதில் ‘துணையினை தூயமனதோடு நேசியுங்கள்’, ‘மனிதரை நேசித்தால் இறைவன் உங்களை நேசிப்பான்’, ‘எல்லோரும் ஜெயிக்க நினைப்பவன், ஒருபோதும் தோற்பதில்லை’ போன்ற வரிகளுக்கு விளக்கம் தந்திருப்பது மனதை தொடுகிறது. தற்போதைய தண்ணீர் பஞ்சத்தை நினைவூட்டும் வகையில் ‘குடிக்கின்ற நீர்ள்ளக் […]

Read more

மகரந்த சுவடுகள்

மகரந்த சுவடுகள், சுமதிஸ்ரீ, விஜயா பதிப்பகம், பக்.112, விலைரூ.70. தன் வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத சம்பவங்களை மகரந்த சுவடுகளாகப் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர். கல்லூரிக் கட்டணம், தேர்வுக் கட்டணம், விடுதிக் கட்டணம் என எல்லாவற்றுக்கும் ஸ்பான்சர் வாங்கிப் படிக்கும் ஒரு மாணவியின் கஷ்டங்களை முதல் கட்டுரையில் அறிய முடிகிறது. ‘விடுதிக்குப் பணம் கட்ட முடியாததால் மதிய உணவு நேரத்தில் பட்டினியாக நூலகத்தில் நேரத்தைக் கழிக்கும் சுமதிக்கும் சேர்த்து, இரண்டு டிபன் பாக்ஸ்களில் சாப்பாடு கொண்டு வரும் கிறிஸ்டி என்னும் தோழியை 39’. ‘கடந்த […]

Read more

நோட்டு மாற்றம் நாட்டை மாற்றுமா?

நோட்டு மாற்றம் நாட்டை மாற்றுமா?, நலந்தா செம்புலிங்கம், விஜயா பதிப்பகம், விலை 50ரூ. 500ரூபாய், 1000ரூபாய் நோட்டுகளை ஒழித்துவிட்டு, 2000 ரூபாய் நோட்டை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தியது பற்றி அலசி ஆராய்கிறார், நலந்தா செம்புலிங்கம். நன்றி: தினத்தந்தி, 29/3/2017.   —- கும்மியாணம் முதல் குலுக்கு ரொட்டி வரை, தொகுப்பு சீட் அறக்கட்டளை, விகடன் வெளியீடு, விலை 185ரூ. புத்துணர்ச்சி பெறவும், ஆராக்கியமாகவும் வாழவும் நமது பாரம்பரிய உணவுகள் உதவுகின்றன. அத்தகைய கேப்பை முறுக்கு, சிறுதானிய சத்து உருண்டை, கேழ்வரகு இனிப்பு பணியாரம், […]

Read more

விசும்பின் துளி

விசும்பின் துளி,  நாஞ்சில் நாடன், விஜயா பதிப்பகம்,  பக்.344, விலை ரூ.220. இலக்கியம், மொழி, மனித உறவுகள் என பல திசைகளிலும் பயணிக்கும் 40 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். அனைத்துக் கட்டுரைகளிலும் வெளிப்படும் நூலாசிரியரின் தனித்துவமான பார்வை நம்மை வியக்க வைக்கிறது. படைப்பிலக்கியவாதியான நூலாசிரியரின் தமிழ் மொழியறிவைப் பறைசாற்றும் கட்டுரைகளும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. பல நூல்களுக்கு நூலாசிரியர் எழுதிய முன்னுரைகளும் உள்ளன. படைப்புகளைப் பற்றியும், படைப்பாளிகளைப் பற்றியும் அவரின் கருத்துகளைத் தெரிந்து கொள்ள முடிகிறது. எழுத்தாளர் ஜெயமோகன், கி.ராஜநாராயணன் உள்ளிட்ட பல படைப்பாளிகளுடனான நூலாசிரியரின் […]

Read more

எனது அமெரிக்கப் பயணம்

எனது அமெரிக்கப் பயணம், பேரா. கே. ஜெகதீசன், விஜயா பதிப்பகம், பக். 152, விலை 80ரூ. அமெரிக்கா போய் வருவது இன்று பெரிய விஷயமே இல்லை. ஆனால் அந்த அனுபவங்களை சுவைபடச் சொல்லி, படிப்போரை சொல்லப்படும் இடத்திற்கே அழைத்துச் சென்று அனுபவிக்க வைக்கும் கலை சிலருக்கு மட்டுமே வாய்க்கும். அது பேரா. கே.ஜெ.வுக்கு கைகூடியிருக்கிறது. அமெரிக்கா செல்லாதவர்களுக்கு வியப்பு. அமெரிக்கா சென்றவர்களுக்கு புது அனுபவம். நன்றி: குமுதம், 28/12/2016.   —-   அகிலமே என் அப்பாதான், மணிமேகலைப் பிரசுரம், விலை 80ரூ. இன்றைய […]

Read more

மெக்காலே கல்வியிலிருந்து மீள திருக்குறளே வழி

மெக்காலே கல்வியிலிருந்து மீள திருக்குறளே வழி, நலந்தா செம்புலிங்கம், விஜயா பதிப்பகம், பக். 80, விலை 50ரூ. பள்ளிப் பாடத்தில் திருக்குறள் முழுவதையும் சேர்க்க வேண்டும் என்று மதுரை கிளை, உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட பொது நல வழக்கு எண் WP(MD)11999/2015க்கு, நீதிபதி மகாதேவன், பள்ளிப் பாடத்தில், 6 முதல், பிளஸ் 2 வகுப்புக்குள் திருக்குறள் அறத்துப் பாலையும், பொருட்பாலையும் முழுமையாகச் சேர்க்க தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். இத்தீர்ப்பில் மெக்காலே கல்வி முறையும், அதனால் பண்பாடு உருவாகவில்லை, நீதிநெறி முறைகள் […]

Read more

மனம் ஒரு மகாத்மா

மனம் ஒரு மகாத்மா, முனைவர் பா. மஞ்சுளா, விஜயா பதிப்பகம், பக். 104, விலை 70ரூ. வள்ளலார் மீதான ஈடுபாடு நூலில் நிரூபணமாகியுள்ளது. பெற்றோர் போற்றுதல், தெய்வத் துணை, சான்றோரை மதித்தல், துணையை நேசித்தல், மரங்களைக் காத்தல், நட்பு போற்றுதல், நல்லோர் சேர்க்கை, தானம் கொடுத்தல், நல்லோர் மனத்தை நலம் பெறச் செய்தல் என்று வள்ளலார் வழி நின்று விளக்கியுள்ளது பயன்தரத்தக்கது. நன்றி: குமுதம், 16/11/2016.

Read more
1 3 4 5 6 7 10