திராவிட இயக்க இதழ்கள் ஓர் ஆய்வு

திராவிட இயக்க இதழ்கள் ஓர் ஆய்வு, நவமணி பதிப்பகம், விலை 150ரூ. திராவிட இயக்கம் தோன்றி 100 ஆண்டுகள் ஆகிவிட்டன. திராவிட இயக்கத்திற்காக, நூற்றுக்கணக்கில் பத்திரிகைகள் வெளிவந்துள்ளன. அதுபற்றிய முழு விவரங்களையும் இந்த நூலில் கூறுகிறார் முனைவர் அ.மா.சாமி. வெறும் புள்ளி விவரங்களோடு நின்றுவிடவில்லை. பல சுவையான வியப்புக்குரிய செய்திகளையும் இந்த நூல் விவரிக்கிறது. மாதிரிக்கு ஒன்று. திராவிடன் தினசரிப் பத்திரிகை நடத்தி வந்த வகையில், ரூ.1000 கடனுக்காக, 2.6.2993ல் பெரியாரை கைது செய்து, சிறையில் அடைத்துவிடுகிறார்கள். அக்கடனைக் கட்டிவிட, பெரியாரின் நண்பர்கள் முன்வருகிறார்கள். […]

Read more

அன்புக்கு பஞ்சமில்லை

அன்புக்கு பஞ்சமில்லை, ம. வான்மதி, பாவை மதி வெளியீடு, பக். 144, விலை 120ரூ. சண்டைகள் ஆயிரம் இருந்தாலும், சங்கடங்கள் ஆயிரம் குடைந்தாலும், அனைத்திற்கும் அருமருந்தாக அமைவது அன்புதான் என்பதை, தன் உணர்வுப் பூர்வமான எழுத்தால் உணர வைத்துள்ளார் வான்மதி. எத்தனை நகை அணிந்தாலும், புன்னகைக்கான ஆத்மார்த்தமான ஆர்ப்பையும் ஆசியையும், காமாட்சி என்ற கதாபாத்திரத்தின் ஊடே விவரித்திருக்கிறார். மாமியார் – மருமகள் சண்டையை எப்படி கையாள்வது என்பதை, லதா என்ற தன் தோழியின் கதையை வைத்து உணர்த்தி இருக்கிறார். அதை விவரிக்க அவர் பிரயோகிக்கும் […]

Read more

12 பாவ பலன்கள்

12 பாவ பலன்கள், சுப. சுப்பிரமணியன், நர்மதா பதிப்பகம், சென்னை, விலை 120ரூ. ஜாதகங்களை துல்லியமாக கணிக்கவும், பலன் சொல்லவும் உதவும் ஆராய்ச்சி நூல். இதில் 200க்கும் அதிகமான வாழ்வு நிலைகளுக்கான கிரக அமைப்புகளை பல உதாரண ஜாகங்களுடன் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஜோதிடர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இந்த நூல் அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 11/3/2015.   —- சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள், சாயிபிரியா, ஸ்ரீ அலமு புத்தக நிலையம், சென்னை, விலை 50ரூ. ஸ்ரீசீரடி சாய்பாபாவின் அருள்மொழிகளை அனைவரும் உணர்ந்து பயனடைய வேண்டும் என்ற […]

Read more