தடம் மாறும் வயது

தடம் மாறும் வயது, ரவி பார்கவன், ஸ்ரீ ஆனந்த நிலையம், விலைரூ.120. பெண் – ஆண் உறவு நிலை ஒழுக்கநெறிகளை 30 அத்தியாயங்களில் வலியுறுத்தும் நுால். ஆண்கள் மத்தியில் பெண்கள் சமமாக இருக்கும் நிலையில், இரு பாலினத்தாரும் அடக்கி ஆள முற்படுவர். இந்நிலையில், ‘ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்’ என்பது பெண்களுக்கு மட்டும் அல்ல, இருவரும் படைப்பில் சமம் என்றாகிறது. அன்பு, பொறுமை, பக்குவம், கவனம், நிதானம், விவேகம், நேர்மை இவற்றின் மொத்த வடிவம் தான் ஒழுக்கம். அதை முழுமையாக வசப்படுத்தி வாழ்வதை வாழ்க்கை என்றும், […]

Read more

மகரிஷிகள்

மகரிஷிகள், ஆர்.கல்யாணி மல்லி, ஸ்ரீ ஆனந்த நிலையம், விலைரூ.200. அகத்திய முனிவர் துவங்கி, ஜகத்குரு சங்கராச்சாரியார் மஹா பெரியவர் வரை, 41 கட்டுரைகள் மகரிஷிகளின் வரலாற்றைக் கூறுகின்றன. ஆற்றல் அற்புதங்களை விரிவாகப் பேசுகிறது. சிவபெருமானின் திருமணத்தின் போது இறைவன் அருளாணையின் வழி, அகத்தியர் தெற்கே வந்து பூமியை சமநிலைப்படுத்திய விந்திய மலை பூமியை ஒட்டியவாறு இருப்பது, கடல் நீர் முழுவதும் வற்றச் செய்து பருகியது போன்ற ஆற்றல்களை எளிய நடையில் விளக்குகிறது. துர்வாசர் யார்? அவர் எப்படி வந்தார். அவர் செய்த வீர தீரச் […]

Read more

சித்ரவதை முகாம்

சித்ரவதை முகாம், ரவி பார்கவன், ஸ்ரீ ஆனந்த நிலையம், விலைரூ.140. குழந்தைகளுக்கு புத்தி கூற வேண்டியதில்லை; அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு, எரிச்சல் அடையாமல் பதில் கூறினாலே போதும் என்பதை உணர்த்தும் நுால். குழந்தைகளுக்கு…* இரண்டு வயதில், கல்வி சுமை ஏற்றுவது சரியா* பக்கத்து வீடு, உறவினர்களிடம் ஒப்படைத்து விட்டு, கணவனும் மனைவியும் பணிக்கு செல்வது நியாயமா.இதுபோன்ற கேள்விகளை எழுப்புகிறது. குழந்தையை சரியாக வளர்க்கிறேனா என நெருடல் ஏற்படுத்தும் உரையாடல்கள் ஏராளம். இளம் குற்றவாளிகள் அதிகரிக்க, வரம்பு மீறிய செல்லம், நடத்தை மீறும் பெற்றோர் என […]

Read more

ஸ்ரீ வைஷ்ணவ ஸ்தோத்திரமாலை

ஸ்ரீ வைஷ்ணவ ஸ்தோத்திரமாலை, மணிமேகலை சிதம்பரம், ஸ்ரீ ஆனந்த நிலையம், விலைரூ.200. இறைவனை கோவில்களில் சென்று வழிபடுவது போன்று, இல்லங்களிலும் அவனது ஸ்தோத்திரங்களைக் கூறிப் பலரும் வழிபடுவர். இறைவனை விட அவன் நாமம் பெரியது என்று வைணவம் கூறுகிறது. இறைவனை வழிபட 55 விதமான ஸ்தோத்திரங்கள் உள்ளன. ஸ்ரீலஷ்மி நரசிம்ம ஸ்தோத்திரம், பஜ கோவிந்தம், ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம், ஸ்ரீ விஷ்ணு ஸகஸ்ரநாம ஸ்தோத்திரம், ஸ்ரீ ஸுதர்ச நாஷ்டகம், ஸ்ரீ கிருஷ்ணாஷ்டகம், ஸ்ரீ லஷ்மி ஸ்தோத்திரம், ஸ்ரீஸ்துதி, ஸ்ரீ ராம அஷ்டோத்திர சத நாமாவளி, […]

Read more

சிவபுராணம்

சிவபுராணம், அவ்வை மு.ரவிக்குமார், ஸ்ரீ ஆனந்த நிலையம், விலைரூ.220. சைவர்களின் வழிபடு தெய்வ மாக விளங்குபவர் சிவபெருமான். அவர் பெருமைகள், ஆற்றல் அளவிடற்கரியவை. பிரும்மம் என்ற பரமாத்மா, பிரம்மாவைத் தோற்றுவித்து, அவர் மூலம் இவ்வுலகம் உண்டாக்கப்பட்டது என்பர். இந்த நுாலில், ருத்ர பகவான் வரத்தால், பிரம்ம தேவர் உலகில் உயிரினங்களைத் தோற்றுவித்தார் என்று கூறப்பட்டுள்ளது. சிவனுடன் சேர்வதற்குப் பார்வதி தேவி விரதமிருந்த இடம் ‘கவுரி சிகரம்’ என்றும், சிவனின் யோகத்தைக் கலைத்த மன்மதன் எரிந்து சாம்பலானதும், மன்மதனே கிருஷ்ணனின் மகனாக பிரத்தியும்னன் என்ற பெயரில் […]

Read more

தேசத் தந்தை மகாத்மா காந்தி

தேசத் தந்தை மகாத்மா காந்தி,  இராம.மெய்யழகன்,  ஸ்ரீ ஆனந்த நிலையம், விலை 200ரூ. இன்றைய உலகிற்கு ஏற்ற விதை புத்தகங்கள். அந்த வகையில், ‘தேசத் தந்தை மகாத்மா காந்தி’ என்ற புத்தகம், இன்று மற்றும் நாளைய எதிர்கால மாணவர்களுக்கு பயன் தரக்கூடிய வகையில் இருக்கும்.இப்புத்தகம் காந்தியடிகளின் பிறப்பு முதல், இறப்பு வரையில் உள்ள வாழ்க்கை வரலாறு, காந்தியடிகள் பெற்றோரின் நன்னடத்தையைப் பார்த்து, அதைப் போலவே தன்னுடைய வாழ்க்கை நெறிமுறைகளையும் அமைத்துக் கொண்டார். மகான் அவருடைய மனைவியை மதிப்பும், மரியாதையுடனும் நடத்தினார். அஹிம்சையின் மூலம் தன் […]

Read more

அகக்காட்சி

அகக்காட்சி,(அஞ்சனம்), கிளார் வோயான்ட் சுந்தரராஜன், ஸ்ரீ ஆனந்த நிலையம், பக். 200, விலை 200ரூ. உள்ளத்தின் இயல்புகளை, ஏழு இயல்களாக பகுத்து ஆராய்ந்துள்ள நூல். அகக்கண் பெற்ற அதிசயப் பிறவிகளான, ஹெலானா ப்ளாவாட்ஸ்கி, சார்லஸ் லெட்பீட்டர், க்ராய்செட், ஹெர்கோஸ், பால் கோல்டின் ஆகியோரையும், நெற்றிக்கண் பெற்றவராக நம்மாழ்வாரையும் அறிமுகம் செய்துள்ளார். மனம், உள் மனம் பற்றி விளக்கும் நூல். நன்றி: தினமலர், 24/5/2020. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – […]

Read more

மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், அவ்வை மு.ரவிக்குமார், ஸ்ரீ ஆனந்த நிலையம், விலை 150ரூ. தன்னந்தனி மனிதராக இருந்து ஆங்கிலேயருக்கு எதிராக, உலகமே வியக்கும் அளவிற்கு ஒரு அரசாங்கத்தையே உருவாக்கி நடத்தி, மகத்தான சாதனை புரிந்தவர் வீர மிகு நேதாஜி! சுதந்திரம் பெற ஒரு லட்சம் வீரர்களைத் திரட்டி பிரிட்டிஷாருடன் போரிட்டு, மணிப்பூர் வழியாக வந்து இரண்டு நகரங்களைப் பிடித்து, பிரிட்டிஷாருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் சுபாஷ் போஸ்! இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில், இந்திய தேசிய ராணுவம் எந்த வகையிலும் ஜப்பானையோ, வேறு நாடுகளையோ […]

Read more

அக்பர் பீர்பல் கதைகள்

அக்பர் பீர்பல் கதைகள், அவ்வை மு.ரவிக்குமார், ஸ்ரீ ஆனந்த நிலையம், ஒவ்வொரு நூலும் விலை 160ரூ மன்னர் அக்பரின் அரசையில் இருந்த பீர்பல், தனது சமயோஜித புத்தியால் தீர்வு கண்ட பல சம்பவங்கள், கதைகள் ரூபமாக பல ஆண்டுகளாக வழங்கி வருகின்றன. அந்தக் கதைகளில் 53 கதைகளைத் தேர்ந்தெடுத்து, சிறுவர்கள் முதல் அனைவரும் ரசித்துப் படிக்கும் வகையில் ஆசிரியர் தந்து இருக்கிறார். இந்த நூலின் ஆகிரியர், முல்லாவின் குறும்புக் கதைகள், ஈசாப் நீதிக்கதைகள், நகைச்சுவைமன்னன் தெனாலிராமன் கதைகள், பரமார்த்த குரு கதைகள் ஆகிய நூல்களையும் […]

Read more

வீட்டில் ஒரு மூலிகைத்தோட்டம்

வீட்டில் ஒரு மூலிகைத்தோட்டம், வை.கண்ணன், ஸ்ரீ ஆனந்த நிலையம், பக். 140, விலை 120ரூ. வீட்டில் ஒரு மூலிகை தோட்டம்’ நுாலில், பப்பாளி, முருங்கை உள்ளிட்ட, 17 மூலிகைகளின் சிறப்புகள் இடம்பெற்றுள்ளன. குடியிருக்கும் வீட்டில் எந்த பகுதியில் எந்த மூலிகையை பயிர் செய்து பயன் பெறலாம்? எப்படி பயிரிட வேண்டும் என்னும் செய்திகளை எளிமையாக விளக்குகிறது இந்நுால். ஒவ்வொரு வீட்டிலும் மூலிகை தோட்டம் அமைப்பதால், சிறு சிறு உபாதைகளுக்காக மருத்துவரை நாடவேண்டிய அவசியமிருக்காது என்ற விழிப்புணர்வை உணர்த்துகிறார் நுாலாசிரியர் கண்ணன். நன்றி: தினமலர், 8/12/19 […]

Read more
1 2 3