தடம் பதித்த மாமனிதன் ரசிகமணி டி.கே.சி.

தடம் பதித்த மாமனிதன் ரசிகமணி டி.கே.சி., தி. சுபாஷிணி, மித்ரஸ் பதிப்பகம், ஸ்ரீனிவாசன் என்க்ளேவ்,10/18, வாசன் தெரு, தி.நகர், சென்னை 600017, பக். 400, விலை 250ரூ. ராமன் கம்பனுக்குள் வந்தார், கம்பன் டி.கே.சி.க்குள் வந்தார் என்றும், தமிழ் உரைநடை உயிரோட்டமுள்ளதாயும், உணர்ச்சியை வெளிப்படுத்துவதுமாக அமைவதற்கு டி.கே.சி. தான் வழிகாட்டி என்று, மூதறிஞர் ராஜாஜியால் பாராட்டப்பெற்றவர். என்னருமை நண்பா, இனிய கலை ரசிகா, தென்னர் தமிழ் வளர்க்கும் தேசிகா, என்றெல்லாம் நாமக்கல் கவிஞரால் பாராட்டப் பெற்றவர். குற்றாலம் என்றாலே, ரசிகமணியும் அவர் கண்ட வட்டத் […]

Read more

அபிராமி

அபிராமி, குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், 132/107, சிங்கண்ண தெரு, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை 2, விலை 17ரூ. கிருபானந்தவாரியார் எழுதிய நாவல் பக்தி இலக்கியங்களை ஏராளமாக எழுதிக் குவித்துள்ள கிருபானந்த வாரியார் நாவலும் எழுதியிருக்கிறார் என்பது பலரும் அறிந்திராத செய்தி. பல ஆண்டுகளுக்கு முன் அவர் எழுதிய நாவல் அபிராமி. புராணத்தில் இடம் பெற்றுள்ள சாரங்கதரா கதையை நவீனப்படுத்தி இந்த நாவலை படைத்துள்ளார் வாரியார். அவருக்கே உரித்தான தூய தமிழ்நடை. 60 பக்கங்களே கொண்ட இந்த சிறு நாவலை ஒரே மூச்சில் படித்து முடித்துவிடலாம். அவ்வளவு […]

Read more

இணைவோம்

இணைவோம், மு. காலங்கரையன், எல்கேஎம் பப்ளிகேஷன், பக். 264, விலை 100ரூ. நூலாசிரியர் மாற்றுத் திறனாளிகளின் துயரங்களைக்கூட இருந்து அனுபவித்துள்ளதால், அவர்களின் முன்னேற்றத்திற்காக, இந்நூலை சுவை குன்றாமல் ஓர் நாவலாக எழுதியுள்ளார். இந்நூலில் காணும் மூதுரைகள், முன்னோரின் கவிதை வரிகள், சிந்தனைச் சிதறல்கள், நூலாசிரியரின் ஆழ்ந்து, அகன்ற அறிவின் திறத்திற்கு எடுத்துக்காட்டுகளாகும். சான்றாக, சேர்ந்து வாழுகிறது மட்டும்தான், காதலுக்கு வெற்றின்னு இல்லை. நம்மள நேசிச்சவங்க நமக்குக் கிடைக்காவிட்டாலும், அவங்க சந்தோஷமா இருக்கிறதப பார்த்து சந்தோஷப்படுகிறதும், உண்மையான காதல்தான் என்ற வைர வரிகளைக் கூறலாம். நூலின் […]

Read more

சைவ சமயக் கலைக் களஞ்சியம் தொகுதி 3

சைவ சமயக் கலைக் களஞ்சியம் தொகுதி 3, முனைவர் ரா. செல்வக்கணபதி, தெய்வச் சேக்கிழார் மனிதவள மேம்பாட்டு அறக்கட்டளை, விலை 10 தொகுதிகளும் சேர்ந்து 150000ரூ தமிழ்ச் சைவப் பெருமக்களின் வேதங்களாகப் போற்றப் பெறுவன சைவத் திருமுறைகள். அவை 27 ஆசிரியர்களால், பாடப்பெற்ற 18 280 பனுவல்களால் அமைந்த செந்தமிழ்க் கருவூலம். இத்தொகுதிக்கு அருளாசியுரை வழங்கியுள்ள திருப்பனந்தான், காசித் திருமடத்து அதிபர், முனைவர் ஆர். செல்வக் கணபதியின் முயற்சி துணிச்சலானது. இவரின் வெற்றி சாதனையானது எனப் பாராட்டியிருப்பது, நூற்றுக்கு நூறு உண்மை என்பதை இத்தொகுதி […]

Read more

ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி

மங்களேஸ்வரியம், ஜோதிடர் அல்லூர் வெங்கட்ராமன், ஸ்ரீ ஆனந்த நிலையம், சென்னை – 600 083, பக்கம்: 676, விலை: ரூ. 360. வராகமிஹிரர், வடமொழியில் எழுதிய பிரஹத் ஜாதகம் என்ற பிரபல நூலை, தமிழில் செய்யுளாக பாடிய புலவர்கள் இருவர். இலிங்கன் என்பவரும், வைத்திலிங்கம் என்ற ஜோதிடரும் தமிழில் மங்களேஸ்வரியம் என்னும் பெயரில், மொழி பெயர்த்தும் பாடியுள்ளனர். அதற்கு, விளக்க உரை தந்திருக்கிறார் நூலாசிரியர். ஓரளவு, ஜோதிட ஞானம் உள்ளவர்கள், எளிதில் இதைப் புரிந்து கொள்ளலாம். ஆங்காங்கு காணப்படும், அச்சுப் பிழைகள் கவனத்துடன், அடுத்த […]

Read more
1 2 3