குற்றப் பரம்பரை அரசியல்

குற்றப் பரம்பரை அரசியல், பெருங்காமநல்லுரை முன்வைத்து, தொகுப்பாசிரியர் முகில்நிலவன், தமிழாக்கம் சா. தேவதாஸ், பாலை வெளியீடு, மதுரை, விலை 300ரூ. ஆளும் வர்க்கத்தினர் சார்ந்தே எழுதப்பட்ட வரலாறுகள் இன்று கேள்விக்குறியாகியுள்ளன. மக்களின் நினைவுகளிலிருந்தும், வாய்மொழிக் கதைகளிலிருந்தும் எழுதப்பட்டவையும் வரலாறுதான் என்ற நம்பிக்கை இன்றைய காலகட்டத்தில் உறுதிப்பட்டுள்ளது. தமிழகத்தின் தென்பகுதியில் ஒரு சமூகத்தையே குற்றப் பரம்பரையினர் என்று மத்திரை குத்தி, அவர்கள் வாழ்ந்த ஊரையே பிரிட்டிஷ் அரசாங்கம் சிறையாக்கிய கொடூரங்கள் பெரும்பாலும் பதிவு செய்யப்படவேயில்லை. 1930களில் ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர் கைரேகைகள் பதியப்பட்டு, […]

Read more

அடைமழை

அடைமழை, ராமலக்ஷ்மி, அகநாழிகை பதிப்பகம், மதுராந்தகம், விலை 100ரூ. நடுத்தர வர்க்கத்திற்கு மிக அருகில் இருக்கக்கூடிய எழுத்து சமீப காலங்களில் அருகிவிட்டது. நடுத்தர வர்க்கமும் அவர்களுக்கான எழுத்தாளர்களும் காட்சி ஊடகங்களுக்கு மாறிவிட்டார்கள் என்று நினைத்த தருணத்தில் காட்சி தருகிறார்கள் ராமலக்ஷ்மி போன்ற எழுத்தாளர்கள். மிக சுவாரஸியமான நடையில், சிறந்த சிறுகதைகளை வழங்கியிருக்கிறார் ராமலக்ஷ்மி. வாழ்வின் அபத்தங்கள் முரண்பாடுகள், உறவுச் சிக்கல்களை மிக நயமாக தனது கதையில் எடுத்துக்காட்டிச் செல்கிறார் ராமலக்ஷ்மி. ஒவ்வொரு கதையிலும் முதல் வரியிலேயே கதை ஜிவ்வென பயணிக்கத் துவங்குகிறது. அதனால் முதல் […]

Read more

முப்பத்தி நாலாவது கதவு

முப்பத்தி நாலாவது கதவு, தமிழில் புல்வெளி காமராசன், அகநாழிகை பதிப்பகம், மதுராந்தகம், பக். 140, விலை 120ரூ. இந்நூலின் மொழிபெயர்ப்பு ஆசிரியர், தமிழ் இலக்கியப் படைப்புப் பணிகளிலும், இலக்கிய வட்டப் பணிகளிலும் ஈடுபாடு கொண்டவர். இந்நூலிலுள்ள சிறுகதைகள் அனைத்துமே உருது, கொங்கணி, பஞ்சாபி, ஆங்கிலம், ஒரியா, ஜாவா, அஸ்ஸாமி, மலையாளம், தெலுங்கு என்று பிற மொழிகளிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டவை. குறிப்பாக ஒடுக்கப்பட்டவர்கள், புறக்கணிக்கப்பட்டவர்கள், விளிம்பு நிலையிலுள்ளவர்கள் பலர், வாழ்க்கை தரும் நெருக்கடிகளுக்கும், உறவுகள் தரும் ஏமாற்றங்களுக்கும் இடையில் சிக்கித் தவிப்பவர்கள். இவர்களின் கதைகளே இந்நூலில் […]

Read more

கவிதைகளின் கால்தடங்கள்

கவிதைகளின் கால்தடங்கள், அகநாழிகை பதிப்பகம், சென்னை. தமிழின் முக்கியமான 50 கவிஞர்களின் 400 கவிதைகளை ஒரே நூலில் காணும் வாய்ப்பை வழங்கி இருக்கிறார் கவிஞர் செல்வராஜ் ஜெகதீசன். அந்திமழை இணையதளத்தில் வாரந்தோறும் வெளியான தொடர் இப்போது அகநாழிகை பதிப்பகம் மூலமாக நூல் வடிவம் பெற்றுள்ளது. நீண்டகால கவிதை வாசகர் ஒருவரின் நோக்கில் இந்த கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகளில் பாடத்திட்டத்தில் படித்த கவிதைகளைத் தாண்டி சுதந்திரமாக எழுதப்படும் நவீன புதுக்கவிதை உலகுக்கு ஓர் இளைஞன் வருவது தற்செயலாக நிகழ்வது என்பதைவிட ஒரு வழிகாட்டியின் மூலமாகவே […]

Read more

அடை மழை

அடை மழை, ராமலக்ஷ்மி, அகநாழிகை பதிப்பகம், மதுராந்தகம், விலை 100ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-197-4.html எழுத்தாளர் ராமலக்ஷ்மி பன்முகத் திறன் கொண்டவர் என்பதைத் தமது முதல் சிறுகதைத் தொகுப்பிலேயே அடையாளப்படுத்தியிருக்கிறார். அழகியலோடு இவர் எடுத்த புகைப்படமே இவரது முதல் சிறுகதைத் தொகுப்பான அடைமழை புத்தகத்தின் அட்டைப் படமாகி அலங்கரிக்கின்றது. அடை மழையில் 13 சிறுகதைகள் நனைந்திருக்கின்றன. மேல்தட்டு, கீழ்தட்டு உழைக்கும் மக்கள் தங்கள் வாழ்க்கையில் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்னைகளை, சவால்களை மிக மிக யதார்த்தமாய், எளிய நடையில் கிராமிய […]

Read more
1 2