மெல்லத் திறந்தது கதவு

மெல்லத் திறந்தது கதவு, தமிழில்: எஸ்.விஜயன், முத்து காமிக்ஸ் வெளியீடு, விலை ரூ.100 இருண்மை மண்டிய கானகத்தின் கதைகள் காமிக்ஸ் புத்தகங்களில் சாகசம், கேளிக்கை போன்ற அம்சங்களுக்கு மட்டுமல்லாமல் மர்மத்துக்கும் தனி இடம் உண்டு. மங்கலான துர்க்கனவுகளையொத்த கதைப் பின்னல் கொண்ட கதைகள் காமிக்ஸ் உலகில் ஏராளம். பரவலாக அறியப்பட்ட எல்லா காமிக்ஸ் நாயகர்களும் இதுபோன்ற ஏதேனும் ஒரு கதையிலேனும் தோன்றியிருப்பார்கள். ‘மர்ம மனிதன்’ என்று அழைக்கப்படும் மார்ட்டின் இதற்கெனவே உருவாக்கப்பட்ட கதாபாத்திரம். அவர் தோன்றும் ‘மெல்லத் திறந்தது கதவு’ திகிலூட்டும் ஓர் அறிவியல் […]

Read more

இந்திர நீலம்

இந்திர நீலம், அ.வெண்ணிலா, அகநி வெளியீடு, விலை: ரூ.150 இன்று பிறக்கும் சங்க காலப் பெண்கள். சங்க காலத்துக்குப் பிறகு இருபதாம் நூற்றாண்டில்தான் பெண்களின் இலக்கியப் பங்களிப்பு பரவலாகக் காணக்கிடைக்கிறது. இதற்கு இடைப்பட்ட நெடிய பரப்பில் ஆண்டாள், காரைக்காலம்மையார் போன்றோரின் பக்திநெறிப் பனுவல்கள் மட்டுமே இலக்கிய வரலாற்றில் இடம்பெற்றுள்ளன. இந்த இடைவெளியை நேர்செய்யும் விதமாக இன்று கவிதை எழுதும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இது முக்கியமான விஷயம். அவ்வகையில் கவிஞராகக் கவனம்பெற்று தற்போது புனைவுகளிலும் கவனம் செலுத்திவருபவர் அ.வெண்ணிலா. இவரது மூன்றாவது சிறுகதைத் […]

Read more

உயர்திணைப் பறவை

உயர்திணைப் பறவை, கதிர்பாரதி, இன்சொல் வெளியீடு, விலை: ரூ.260 கச்சிதங்களின் அழகு உபகரணங்கள் எளிதில் கிட்டுவதால், எல்லோருக்கும் எல்லாவற்றையும் செய்யும் சாத்தியம் உண்டு. எல்லோராலும் செய்யப்படுவதால் அது மலினமானதும் அல்ல. அவரவர்களின் மனநிறைவே அவர்களின் படைப்பின் தன்மையாக இருக்கும். அதேபோல, அடையாளப்படுத்துதல், உணரச்செய்தல் என்ற இரு நிலைகளை எடுத்துக்கொண்டால் உணரச்செய்யும் படைப்புகளே மனதில் நிற்பதாகத் தோன்றுவதுண்டு. சூரியனையும் நிலவையும் வரைவது எளிது. ஆனால், நிலவின் குளிர்ச்சியையும், சூரியனின் தகிப்பையும் நமக்குள் கடத்தப்படுதல் வேண்டும். தான் நம்பும் கலை மீது அதீதப் பிரியம் கொண்டவர்களால் மட்டுமே […]

Read more

பேய்ச்சி

பேய்ச்சி, ம.நவீன், வல்லினம், யாவரும் வெளியீடு, விலை 300ரூ. வசைச்சொற்கள் அளவுகோல் ஆகுமா? ம.நவீன் எழுதிய ‘பேய்ச்சி’ நாவலை (வெளியீடு: வல்லினம் பதிப்பகம், மலேசியா; யாவரும் பப்ளிஷர்ஸ், தமிழ்நாடு) மலேசிய அரசாங்கம் தடைசெய்திருக்கிறது. தடை கோரியவர்கள் சில தமிழ் எழுத்தாளர்கள்; தமிழ் அமைப்புகள் எனத் தெரிகிறது. தடை கோர முக்கியக் காரணம், இந்நாவலில் பாலுறுப்புகளையும் சாதியையும் குறிக்கும் வசைச்சொற்கள் இடம்பெற்றுள்ளன என்பது. பாத்திரங்களின் உரையாடலில் வசைகள் வருவதும் அவற்றில் பாலுறுப்பு, பாலுறவு தொடர்பானவை அமைவதும் இயல்பானதே. கீழ், மேல் என எதிரிடையைக் கொண்டது சாதியமைப்பு. […]

Read more

தாளடி

1967 தாளடி, சீனிவாசன் நடராஜன், தேநீர் பதிப்பகம், விலை: ரூ.230 குடிசை நெருப்பில் குளிர்காயும் புனைவு ஓவியரும் எழுத்தாளருமான சீனிவாசன் நடராஜன் இலக்கிய மதிப்பீடுகளில் மட்டுமின்றி, அரசியல் கருத்துகளிலும் தனது மாறுபட்ட பார்வைகளைத் தயங்காது முன்வைப்பவர். சமீபத்தில் அவர் எழுதியிருக்கும் ‘1967 தாளடி’ நாவல், நேர்க்கோட்டு முறையைத் தவிர்த்து, கடந்த காலத்துக்கும் நிகழ்காலத்துக்கும் மாறி மாறிப் பயணிக்கிறது. பாத்திரங்களுக்கு இடையிலும் கூடுவிட்டுக் கூடுபாய்கிறது. நாட்டியம், ஓவிய நுண்கலைஞர்களின் மனவோட்டங்களையும் ரசிக மனோபாவங்களையும் விவரிக்கிறது. நாகப்பட்டினத்திலிருந்து ஹம்பிக்கும் அங்கிருந்து ஐரோப்பாவுக்கும் நாவல் பயணிக்கிறது. நிர்வாண ஓவியங்களை […]

Read more

தலித்துகள்: நேற்று இன்று நாளை

தலித்துகள்: நேற்று இன்று நாளை, ஆனந்த் டெல்டும்டே, தமிழில்: பாலு மணிவண்ணன், கிழக்குப் பதிப்பகம், விலை: ரூ.225 ஆய்வாளரும் மனித உரிமைச் செயல்பாட்டாளருமான ஆனந்த் டெல்டும்டே இந்தியாவின் சாதி அமைப்பு குறித்துத் தீவிரமாக எழுதிவரும் ஆளுமை. டெல்டும்டேவின் எழுத்துகளில் பலவும் ஏற்கெனவே தமிழுக்குக் கொண்டுவரப்பட்டு நமது உரையாடல்களில் முக்கியப் பங்காற்றுவதாக இருக்கின்றன. கமலாலயன் மொழியாக்கத்தில் வெளிவந்த ‘மஹத்: முதல் தலித் புரட்சி’ (என்சிபிஹெச் வெளியீடு), ச.சுப்பாராவ் மொழியாக்கத்தில் வெளிவந்த ‘சாதியின் குடியரசு’ (பாரதி புத்தகாலயம்) ஆகிய டெல்டும்டேவின் புத்தகங்கள் சமீபத்திய வரவுகளில் முக்கியமானவை. அந்த […]

Read more

அசைந்தபடியே இருக்கிறது தூண்டில்

அசைந்தபடியே இருக்கிறது தூண்டில், இரா.மதிபாலா, தேநீர் பதிப்பகம், விலை: ரூ.80 கட்டுக்கடங்காத காதல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் சார்பு செயலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றிருக்கும் மதிபாலா, தலைமைச் செயலக ஊழியர்கள் முன்னெடுத்த கலை இலக்கிய விழாக்களின் காரணகர்த்தாக்களில் ஒருவர். அலுவல் பணிகளுக்கு இடையிலும் தனக்குள் இருந்த கவிஞனைக் காப்பாற்றி வைத்திருந்தவர், ஓய்வுக் காலத்தை எழுத்துப் பணிக்காக ஒதுக்கியிருக்கிறார். முதல் தொகுப்பு வெளிவந்து இருபது ஆண்டுகளுக்குப் பின்பு, கடந்த ஆண்டில் ‘84 கவிதைகள்’ என்ற தலைப்பில் அவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு வெளிவந்தது. இந்த மூன்றாவது தொகுப்பில் உள்ள […]

Read more

துர்க்கையின் புதுமுகம்

துர்க்கையின் புதுமுகம், என்.சண்முகலிங்கன், தமிழில் பக்தவத்சல பாரதி, சந்தியா பதிப்பகம், விலை 190ரூ. மாறும் சமூகங்கள் மாறும் வழிபாடுகள் இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிய கிராமமான தெல்லிப்பழையில், கடந்த நூற்றாண்டின் பிற்பாதியில் துர்க்கை வழிபாடு தொடங்கப்பட்டு ஈழம் முழுவதும் துர்க்கை அம்மன் கோயில்களும் வழிபாடும் பரவியது தொடர்பான சமூகவியல், மானுடவியல் ஆவணம் இந்நூல். தாய் தெய்வ வழிபாடுகள் தொடரும் மரபும் அதற்கான சமூகக் காரணங்களையும் பேசும் முக்கியமான மானுடவியல் நூல் இது. தென்னிந்திய, தமிழ் சமய, கலாச்சாரம் மரபுகளுடன் தொன்மையான உறவு கொண்டவர்கள் ஈழத் […]

Read more

பதிமூனாவது மையவாடி

பதிமூனாவது மையவாடி, சோ.தர்மன், அடையாளம் பதிப்பகம், விலை 320ரூ. இலக்கியமா, பிரச்சாரமா? இது எல்லாவற்றையும் தொகுத்துப்பாருங்கள். ‘வெள்ளைக்காரர்கள் விட்டுச்சென்ற முப்பத்து ஆறாயிரம் கண்மாய்களைத் திராவிடக் கட்சிகள் அழித்த கதையைப் பேசுகிறேன்’ என்று தன்னைப் பிரகடனப்படுத்திக்கொள்ளும் ‘சூல்’ நாவலுக்குக் கடந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருது கிடைக்கிறது. சோ.தர்மன் அதைத் தொடர்ந்து, கிறிஸ்தவ மதப் பிரிவினரைப் பின்புலமாகக் கொண்டு – குறிப்பாக, கிறிஸ்தவக் கல்வி நிலையங்கள், மடங்கள் போன்றவற்றை மிகக் கடுமையாக விமர்சிக்கும் விதமாக ‘பதிமூனாவது மையவாடி’ நாவலை எழுதுகிறார். ஜெயமோகன் முன்னுரை எழுதுகிறார். ‘அடையாளம்’ […]

Read more

என்ட அல்லாஹ்

என்ட அல்லாஹ், தொகுப்பு: ஏபிஎம்.இத்ரீஸ், ஆதிரை வெளியீடு, டிஸ்கவரி புக் பேலஸ், விலை: 180 இலங்கை உள்நாட்டுப் போரால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுள் ஒன்று. எண்பதுகளுக்குப் பிறகு தொடங்கிய இந்தப் போர், 2009-ல் அதன் உச்சம் தொட்டது. இலங்கையிலிருந்து உலகம் முழுக்க நிலம்பெயர்ந்து வாழும் எழுத்தாளர்கள் பலரும் போரின் விளைவுகள் குறித்துக் காத்திரமாகத் தொடர்ந்து எழுதிவருகின்றனர். தமிழ் இலக்கியம் உலகம் முழுக்கப் பரவியதற்கு ஈழத் தமிழர்களின் புலம்பெயர்வும் காரணமாகச் சொல்லப்படுகிறது. இறுதிக்கட்ட போருக்குப் பிறகும் ஈழத் தமிழர்களின் வாழ்வில் வசந்தம் வீசிவிடவில்லை. அதிலும், ஈழம் […]

Read more
1 13 14 15 16 17 44