கலாக்ஷேத்ரா ருக்மிணிதேவி,சில நினைவுகள் சில பகிர்வுகள்

கலாக்ஷேத்ரா ருக்மிணிதேவி,சில நினைவுகள் சில பகிர்வுகள், ஆங்கில மூலம்: எஸ். சாரதா, தமிழில்: கிருஷாங்கினி, சதுரங்கம் பதிப்பகம், பக்.384, விலை ரூ.300. உலகப் பிரசித்தி பெற்ற கலாக்ஷேத்ரா என்னும் இந்திய பாரம்பரியக் கலைக் கல்வி மையத்தைப் பற்றியது இந்தப் புத்தகம். அதே நேரத்தில் ஈடு இணையற்ற அந்தக் கலை மையத்தை உருவாக்கிய ருக்மிணிதேவி பற்றிய வரலாற்றுப் பதிவாகவும் இருக்கிறது. கலாக்ஷேத்ராவில் சேர்ந்து கலை ஞானத்துக்காகத் தனது வாழ்நாளையே அர்ப்பணம் செய்த எஸ். சாரதா எழுதிய ஆங்கில மூல நூலின் தமிழ் மொழி மாற்றமாக இந்தப் […]

Read more

நலம் நலமறிய ஆவல்

நலம் நலமறிய ஆவல், நாகூர் ரூமி; பினாக்கிள் புக்ஸ், பக்.448, விலை ரூ.420. நமது வாழ்முறைத் தவறுகளினால் நமக்கு நோய் வருகிறது. வாழ்முறையை சரிசெய்துகொண்டால் நோய்களைக் குணப்படுத்தும் வேலையை நம் உடலே செய்து கொள்ளும். வேண்டுமெனில், பாரம்பரியமான வீட்டு வைத்தியம் செய்துகொள்ளலாம். எந்த நோயைப் பற்றியும் நாம் கவலைப்படத் தேவையில்லை. இதுதான் இந்த நூலின் சாராம்சம். சாதாரண தலைவலி, காய்ச்சலில் தொடங்கி புற்றுநோய்வரை எல்லா நோய்களைப் பற்றியும் இந்நூலில் விரிவாக அலசப்பட்டுள்ளது. ஆனால், எதுவுமே பயமுறுத்தும்படியாக இல்லை. சொல்லப்போனால், நோயைப் பற்றி நாம் கவலைப்படாமல் இருந்தாலே […]

Read more

ஓமியோபதி ஆர்கனான், என் பார்வையில் தேடலும் புரிதலும்

ஓமியோபதி ஆர்கனான், என் பார்வையில் தேடலும் புரிதலும், கி.அம்பலவாணன், மனோரஞ்சிதம் பதிப்பகம், பக்.496, விலை ரூ.390. ஹோமியோபதி மருத்துவத்தை உருவாக்கிய டாக்டர் சாமுவேல் ஹனிமன் எழுதிய ORGANON OF MEDICINE என்ற நூலின் தமிழாக்கமே இந்நூல். வரிக்கு வரி, எழுத்துக்கு எழுத்து நேரடியாக மொழிபெயர்ப்பது என்ற முறையில் இல்லாமல், நூலாசிரியர் தான் அந்நூலைப் புரிந்து கொண்டவிதத்தில் இருந்து பல விளக்கங்களுடன் இந்நூலைப் படைத்துள்ளார். நோய்க்கு மருந்தல்ல; நோயாளிக்கே மருந்து என்ற அடிப்படையில் நோயைக் குணப்படுத்தும் ஹோமியோபதி மருத்துவமுறையின் பல அடிப்படைகளை இந்நூல் விளக்குகிறது. 291 […]

Read more

தடங்கள்

தடங்கள், ராபின் டேவிட்சன், தமிழில்: பத்மஜா நாராயணன், எதிர் வெளியீடு, பக்.312, விலை ரூ.320. ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த ராபின் டேவிட்சன் என்ற பெண்மணி நான்கு ஒட்டகங்கள் மற்றும் தனது ஒரே சொந்தமான டிக்கிட்டி எனும் நாயை அழைத்து கொண்டு 1977 – ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய பாலைவன எல்லை நகரான ஆலிஸ் ஸ்பிரிங் என்ற ஊரில் இருந்து இந்தியப் பெருங்கடல் வரை 1700 மைல்கள் தனியே பயணம் மேற்கொண்டார். அந்த பயணத்தில் ஏற்பட்ட சுவையான அனுபவங்களை விளக்கி அவர் எழுதிய பயண நூலான ட்ரேசஸ் […]

Read more

வேத வாழ்வில் பெண் குரல்

வேத வாழ்வில் பெண் குரல், ஜி.ஏ.பிரபா, சந்தியா பதிப்பகம்,பக்.120, விலை ரூ.115. வேதகாலப் பெண்களான மைத்ரேயி, லோபமுத்ரா, காத்யாயினி, ஸ்ரீமதி, ஜபாலா, மானஸ புத்ரா, கார்கி, ஷ்ரத்தாவதி முதலிய 20 பேர் பற்றிய கதைகள் இந்நூலில் உள்ளன. வேத காலத்தில் மக்கள் நியாயம், சத்தியம், உண்மை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர்; பொறாமை, கோபம், அடுத்துக் கெடுக்கும் எண்ணமில்லாமல் வாழ்ந்தனர்; ஆணுக்கு சரிநிகராகப் பெண்கள் அனைத்துரிமைகளையும் பெற்றிருந்தனர்; அறிஞர்கள் சபையில் எதிர்த்து வாதாடவும், புரோகிதமும் செய்யவும் அனுமதிக்கப்பட்டிருந்தனர் என்பன போன்ற தகவல்களோடு அன்றைய பெண்களின் புத்திசாலித்தனம் […]

Read more

இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களில் பெண்ணியச் சிந்தனைகள்

இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களில் பெண்ணியச் சிந்தனைகள், தொகுப்பாசிரியர்: மு.சாயபு மரைக்காயர்,வானதி பதிப்பகம், பக்.504, விலைரூ.400. குறிப்பிடத்தக்க இஸ்லாமிய படைப்பாளிகளான ஜெய்புன்னிசா, தாழை மதியவன், குணங்குடி மஸ்தான் சாகிபு, கா.மு.ஷெரீப், மு.சாயபுமரைக்காயர், நசீமா பானு, மீரான் மைதீன், சல்மா, அப்துல்ரகுமான் உள்ளிட்ட பலருடைய படைப்புகளில் காணக் கிடைக்கும் பெண்ணியச் சிந்தனைகளைப் பற்றி பேசும் நூல். 77 கட்டுரைகளின் தொகுப்பான இந்நூலில் பெண்ணுரிமை தொடர்பான இஸ்லாமிய நெறி என்ன என்பதைப் பல கட்டுரைகள் விளக்குகின்றன. 1400 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த போர்களில் நிறைய ஆண்கள் கொல்லப்பட்டதால், பெண்கள் […]

Read more

மண்ணும் மனிதரும்

மண்ணும் மனிதரும்,  சிவராம காரந்த், தமிழில்; தி.ப.சித்தலிங்கையா, சாகித்திய அகாதெமி, பக்.648, விலை ரூ.485. ஞானபீட விருது பெற்ற கன்னட எழுத்தாளரின் சிறந்த படைப்பு. ஒரு கடலோர வேளாண்மைக் குடும்பத்தில் நவீன நாகரிகம் குறுக்கிடுகிறது. நிலத்தை விட்டு தொழில் செய்ய நகரத்துக்கு இடம் பெயர்தல் நிகழ்கிறது. ஆங்கிலக் கல்வி பெற்ற இரண்டாம் தலைமுறை, மண்ணுடன் தனக்குள்ள உறவுகளை இழக்கிறது. மூன்றாம் தலைமுறை வேலையில்லாத் திண்டாட்டத்தை எதிர்கொள்கிறது. இத்தகைய நெருக்கடியில் அந்தக் குடும்பப்பெண்கள் முன்னேறவும், நிலை நிற்கவும் போராடுகிறார்கள். பார்வதி, சரசுவதி, நாகவேணி என்ற மூன்று […]

Read more

மௌனத்தின் நிழல்

மௌனத்தின் நிழல்,கர்ணன்  கவிதா பப்ளிகேஷன், பக்.320. விலை ரூ.280; விடுதலைப் போராட்டத்தைப் பின்புலமாகக் கொண்டு தமிழில் ஏற்கெனவே பல புதினங்கள் வந்துள்ளன. இதுவும் அவ்வகையிலானதுதான் எனினும், குறிப்பிட்ட ஓர் ஊரை மட்டுமே கதைக்களமாகக் கொண்டிருப்பதாலும், நிஜத்தில் வாழ்ந்து மறைந்தவர்களே கதாபாத்திரங்களாக இடம் பெற்றிருப்பதாலும் மற்றவற்றிலிருந்து வேறுபடுகிறது. ஆன்மிக நகரமாக அறியப்பட்டிருக்கும் மதுரை, தென்னிந்தியாவின் அரசியல் எழுச்சிக்குக் காரணமாக இருந்ததை ஏராளமான உண்மை நிகழ்வுகள் மூலம் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார் ஆசிரியர். தொடக்கத்தில் காவல்துறை அதிகாரி சேதுராமன் மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்து வழிபாடு செய்வதைப் படிக்கும்போதே […]

Read more

பெர்சியாவின் மூன்று இளவரசர்கள்

பெர்சியாவின் மூன்று இளவரசர்கள்-உலக இதிகாசங்களில் குழந்தைகள்-ரோஹிணி சவுத்ரி, தமிழில்: சசிகலா பாபு, எதிர் வெளியீடு, பக்.200, விலை ரூ.200. உலக நாடுகளின் பாரம்பரியங்களை பறைசாற்றும் பல்வேறு புராணக் கதைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்புதான் இந்நூல். ஆனால், இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், நூலில் இடம்பெற்றுள்ள அனைத்து கதைகளின் நாயகர்களுமே சிறுவர்கள் என்பதுதான். இதிகாசங்களில் இடம்பெற்றுள்ள இளவரசர்களின் பாத்திரங்களை மட்டும் தனியாகத் தொகுத்து, அவற்றினூடே புராணங்களின் கருப்பொருள்கள் அலசப்பட்டிருக்கின்றன. இந்தியாவின் இணையற்ற இதிகாசமாகக் கருதப்படும் மகாபாரத்தை எடுத்துரைக்கும்போது கூட, பால்ய பருவ பாண்டவர்களின் கதையாகவே அது விரிகிறது. […]

Read more

பரமாத்துவிதம் ஒரு சைவ நெறி

பரமாத்துவிதம் ஒரு சைவ நெறி, கி.முப்பால்மணி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்.222, விலை ரூ.180. உலகாயதம், சித்தாந்த சைவம், வைணவம், சங்கரமதம் ஆகியவற்றை மறுத்து 16 ஆம் நூற்றாண்டில் எழுந்த நெறிதான் பரமாத்துவிதம். பரமாத்துவித நெறியைப் பின்பற்றுபவர் உலகின் எப்பொருளும் தம்மிடத்திலும், தாம் உலகின் எல்லாப் பொருள்களிலும் இருப்பதாக உணர்வார்கள். பிரம்மம் என்பது எல்லாமான பூரணமாக உள்ளது. "பிரபஞ்சம் முழுவதும் உள்ள பூரணம் செயல் தன்மையானது. அதனுடைய இருப்பும், விளக்கமுமே பிரபஞ்சப் பொருள்களின் வாழ்வும், பண்புமாகும். பிரம்மம், பூரணம் தன்னை […]

Read more
1 60 61 62 63 64 180