மௌனத்தின் சாட்சியங்கள்

மௌனத்தின் சாட்சியங்கள், சம்சுதீன் ஹீரா, பொன்னுலகம் பதிப்பகம், விலை 350ரூ. கலவரத்தின் சாட்சியங்கள் சென்னையில் உள்ள வாசகசாலை அமைப்பின் இலக்கியப் பரிசு பெற்ற நாவல். கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தின் அகம் புறம் இரண்டையும் விலாவாரியாகப் பேசுகிறது. யாசர் என்றொரு அப்பாவி மனிதன் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் கைதாகி செய்யாத குற்றத்துக்குத் தண்டனை அனுபவித்து விடுதலையாகி சென்னை நோக்கி ரயிலில் செல்கிறான். அந்த பயணத்தில் அவன் தன் வாழ்க்கையைத் திரும்பிப் பார்ப்பதே இந்நாவல். குண்டுவெடிப்புக்கு முன்னால் அதற்கான சூழல் உருவான விவரங்களை நாவலாசிரியர் சம்சுதீன் ஹீரா உள்விவகாரங்களைத் […]

Read more

மிளிர்கல்

மிளிர்கல், ஞாநி, பொன்னுலகம் பதிப்பகம். கார்ப்பரேட் நிறுவனத்தோடு காப்பியத்தின் பயணம் பொன்னுலகம் பதிப்பகம் வெளியிட்டுள்ள, இரா.முருகவேள் எழுத்திய, மிளிர்கல் என்ற நாவலை சமீபத்தில் படித்தேன். கண்ணகியை மையமாகக் கொண்ட கதை. கண்ணகி குறித்து, சோழ மண்டலம், பாண்டிய மண்டலம் என பகுதிக்கு ஏற்றவாறும், வணிகர்கள், மீனவர்கள் என, இனத்துக்குத் தக்கவாறும் கருத்துக்கள் நிலவுகின்றன.அந்த கருத்துக்களை எல்லாம் திரட்டி, ஒருமுகப்படுத்தும் புதிய முயற்சியில், பெண் ஆய்வாளர் ஒருவர் செல்கிறார். அவருடன் நவரத்தின கல் ஆய்வாளரும் செல்கிறார். இவர்கள் பற்றியதுதான் கதை. கண்ணகியைத் தேடி செல்லும் இவர்கள், […]

Read more

மிளிர்கல்

மிளிர்கல், பொன்னுலகம் பதிப்பகம், திருப்பூர், விலை 200ரூ. புகாரில் இருந்து கண்ணகி கோவலனுடன் கிளம்பிச் சென்று மதுரையை எரித்து பின்னர் தன்னந்தனியே காடேகி மலை உச்சிக்குச் சென்று பத்தினித் தெய்வமான கதை சிலப்பதிகாரம். கண்ணகி மண்மகள் பாராத தன் வண்ணச்சீரடிகளுடன் புகாரில் இருந்து நடந்து சென்ற வழியே பயணிக்கும் இந்நாவல் தன் பயணத்தின் வழியாக சிலப்பதிகாரம் தொடர்பான பல கேள்விகளுக்கு சமகாலப் பார்வைகள் வழியாக விடை காண முயல்கிறது. ஆனால் அத்துடன் நின்றுவிடாமல் காங்கேயம் பகுதியில் கிடைப்பதாகச் சொல்லப்படும் மாணிக்கம் போன்ற அபூர்வ கற்களைச் […]

Read more

மிளிர் கல்

மிளிர் கல், இரா. முருகவேள், பொன்னுலகம் பதிப்பகம், திருப்பூர், விலை 200ரூ. சிலப்பதிகாரம் துவங்கி பன்னாட்டு வணிகம் வரை மிளிர்கல் என்ற நாவலைப் படித்து முடித்துள்ளேன். இந்த நாவலை திருப்பூரை சேர்நத் இரா. முருகவேசள் என்ற எழுத்தாளர் எழுதியுள்ளார். பொன்னுலகம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. முருகவேள், ஆங்கில நாவல்கள் சிலவற்றை மொழிபெயர்த்துள்ளார். பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம், எரியும் பனிக்காடு ஆகியவை அவரின் மொழிபெயர்ப்பில் குறிப்பிடத்தக்கவை. எரியும் பனிக்காடு நாவல், ரெட் டீ நாவலின் மூலம். இந்த நாவல்தான், பாலாவின் பரதேசி படத்தின் கதை. மிளிர்கல் […]

Read more

மிளிர் கல்

மிளிர் கல், இரா. முருகவேள், பொன்னுலகம் பதிப்பகம், திருப்பூர், விலை 200ரூ. ரத்தினக் கற்கள் தேடும் நீலகண்டப் பறவை நாகரிகச் சமூகங்கள் நாதங்கள் வேரைத் தேடுகின்றன. அடையாளங்களை மீட்டுருவாக்கம் செய்கின்றன. வரலாற்றில் புதையுண்ட தங்களின் பண்பாட்டு விழுமியங்கள் குறித்துக் கரிசனம் கெள்கின்றன. சிலம்பு தமிழின் தொன்மை அடையாளம், கண்ணகியும்தான். கண்ணகியின் காற்சிலம்பிலிருந்த மாணிக்கப் பரல்கள் பண்டைத் தமிழகத்தின் ஒப்பற்ற விளைச்சல், பெரு வணிகப் பண்டம். மாணிக்கம், மரகதம், கோமேதகம் என்றெல்லாம் ரத்தினக் கற்கள் சுட்டப்படுகின்றன. இவை புறநானூறு போன்ற செவ்விலக்கியங்களில் மிளிர மணிகள் எனப்படுகின்றன. […]

Read more