கள்ளிவட்டம்

கள்ளிவட்டம், பா.சரவணகுமரன், போதிவனம், விலை 100ரூ. கீழத்தஞ்சை:மண்ணும் மனங்களும் நாகை திருக்கண்ணங்குடியைச் சேர்ந்த பா.சரவணகுமரனின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு. திருமணம் தள்ளிப்போகும் இளைஞனின் ஏக்கங்கள், அவன் மண் சார்ந்த நினைவுகள் என இரண்டு தளங்களில் எழுதப்பட்ட இயல்புவாதச் சிறுகதைகள். மகள் பருவம் எய்தியதும் கள்ளுக்கடையை மூடிவிட்டு தார்ச்சாலை போடும் வேலைக்குப் போகும் பரமேஸ்வரி, மகளின் திருமணத்துக்காக விற்ற ‘மாரியம்மா’ செல்லும் வழியில் இறந்துவிட மாடு வாங்கியவருக்குப் பணத்தைத் திருப்பிக்கொடுக்கும் சின்னச்சாமி என உழைப்புக்கும் பெருந்தன்மைக்கும் உதாரணங்களாக விளங்கும் காவிரிப் படுகையின் கதாபாத்திரங்கள், கதைகள் நெடுகிலும் […]

Read more

ஈர்ப்பின் பெருமலர்

ஈர்ப்பின் பெருமலர், எஸ்.சண்முகம், போதிவனம், விலை 120ரூ. வாழ்வின் நேர்க்கோட்டுப் பாதையிலிருந்து சற்றே விலகிச் செல்லும் அகச் சொல்லாடலில் முகிழ்த்த கவிதைகளின் தேர்ந்த தொகுப்பு. எதையும் முழுமையாக சொல்லித் தீராத சொற்களிலிருந்து உயிர்க்கும் இக்கவிதைகளில் வெளிப்படும் இருண்மை மொழி வாசகனையும் அகவெழுச்சி கொள்ள வைக்கிறது. ‘காட்சியில் புதைந்திருக்கும் எல்லையின்மையோ மின்னி மின்னி அழைக்கிறது உடன் யாருமற்றிருக்கும் அத்தனியனை -எனும் வரிகள், நம்மையும் உடன் அழைத்துக்கொள்ளும் கவி வரிகளாக உள்ளன. நன்றி: தி இந்து, 12/5/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more

தெருக்கூத்து கலைஞர்கள்

தெருக்கூத்து கலைஞர்கள், கோ. பழனி, சி. முத்துகந்தன், போதிவனம். To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-492-2.html தமிழ் மண்ணில் கூத்து, நாடகம், கதை சொல்லல், ஆட்டங்கள், இசை தொகுப்புகள் என, பல்வேறு நிகழ்த்து கலைகள் உள்ளன. கேரளத்து கதகளி, கர்நாடகத்து யட்சகானம், ஆந்திரத்து வீதிநாடகா ஆகியன போன்று தமிழகத்தில் தனித்தன்மை வாய்ந்த ஒரு முழுமையான அரங்காக தெருக்கூத்து விளங்குகிறது. இந்த கலைகள் அந்தந்த மாநிலத்தவர்களால், அங்கீகரிக்கப்பட்டது போல தெருக்கூத்து தமிழர்களால் அங்கீகரிக்கப்படவில்லை என்ற கசப்பான உண்மையை நாம் அனைவரும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். […]

Read more