உலகத்துச் சிறந்த நாவல்கள்

உலகத்துச் சிறந்த நாவல்கள் (உலகப் புகழ்பெற்ற 15 நூல்களின் அறிமுகம்), க.நா.சுப்ரமண்யம், முல்லை பதிப்பகம், பக்.368, விலை ரூ.250. உலக மொழிகளில் வரும் அத்தனை இலக்கியப் படைப்புகளையும் மூலமொழிகளில் ஒரு வாசகனால் படித்துவிட முடியாது. அவனறிந்த மொழியில் நாவலின் மொழிபெயர்ப்பு கிடைத்தால் மட்டுமே படிப்பது சாத்தியம். அதை சாத்தியமாக்கியுள்ளார் தமிழ் எழுத்தாளரும், விமர்சகருமான க.நா.சுப்ரமண்யம். உலக இலக்கிய நாவல் பரப்பில் எத்தனை விதமான சிருஷ்டிகள் இருக்கின்றன என்பதைத் தமிழ் வாசகர்கள் அறிந்துகொள்ள பயன்படும் என்ற வரிகளுடன் 15 உலகத்துச் சிறந்த நாவல்களை அறிமுகம் செய்து […]

Read more

மரியா மாண்டிசோரியின் மனிதன் உருவாகிறான்

மரியா மாண்டிசோரியின் மனிதன் உருவாகிறான்,  தமிழில்: மீனாட்சி சிவராமகிருஷ்ணன், முல்லை பதிப்பகம், பக்.136, விலை ரூ.100. மாண்டிசோரி பள்ளிகள் என்றால் நமக்கு சிறுகுழந்தைகளுக்கான பள்ளிகளே நினைவுக்கு வரும். ஆனால் வெளிநாடுகளில் மாண்டிசோரி கல்விமுறையைப் பின்பற்றுகிற கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களும் உள்ளன. ஹாலந்தில் 5 பல்கலைக்கழகங்கள் உள்ளன. பாரிஸில் தனியார் மாண்டிசோரி கல்லூரி உள்ளது. இந்த நூல் மாண்டிசோரி கல்விமுறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்ப கல்வி கற்கும் முறையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று சொல்லும் இந்நூல், வெறும் வேலைக்கான கல்வி என்பதில் இருந்து […]

Read more

மரியா மாண்டிசோரியின் குடும்பத்தில் குழந்தை

மரியா மாண்டிசோரியின் குடும்பத்தில் குழந்தை,  தமிழில்: மீனாட்சி சிவராமகிருஷ்ணன்,முல்லை பதிப்பகம்,  பக்.112, விலை ரூ.90. குழந்தைகளுக்கான வித்தியாசமான கற்பித்தல் முறையை உலகுக்கு அளித்த மரியா மாண்டிசோரி, இந்நூலில் குழந்தைகளைக் குடும்பத்தில் உள்ளவர்கள் எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும்; எப்படி அவர்களை நடத்த வேண்டும் என்று விளக்கியிருக்கிறார். குழந்தை தன்னைத் தானே உருவாக்கிக் கொள்கிறான் என்பது உண்மை. இதுவே ஆதாரமாக இருக்கும் தத்துவம். குழந்தை தன்னுடைய எண்ணங்களை வெளியிட விரும்பும்போது பிரத்யேகமான முறையில் செய்கிறான். அது அவனுடையதேயான முறை. குழந்தைகளை தம்முடைய ஆதிக்கத்தில் வைத்துக் கொண்டிருக்கும் […]

Read more

பாவேந்தர் பாரதிதாசனின் ஒன்பதுசுவை

பாவேந்தர் பாரதிதாசனின் ஒன்பதுசுவை, போர்மறவன், முல்லை பதிப்பகம், விலை 20ரூ. கவிதை வடிவில் இரு சிறு நாடகங்கள். தமிழின் அழகும், தமிழர்தம் காதலும், வீரமும் பேசும் எளிய காவியங்கள். பாவேந்தரின் பா நயத்தில் பரிமளித்திருப்பது சிறப்பு. நன்றி: குமுதம், 13/6/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

மனிதன் புரியாத புதிர்

மனிதன் புரியாத புதிர்(Man The Unknown), அலெக்சிஸ் காரெல், முல்லை பதிப்பகம், பக். 416, விலை 250ரூ. ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இந்நூலாசிரியர் முதல் உலகப் போரின்போது (1914-19) ராணுவ சிறப்பு மருத்துவராக அரிய சேவை புரிந்து அமெரிக்கா, பிரிட்டிஷ் போன்ற அரசுகளால் கௌரவிக்கப்பட்டு ‘நோபல்’ பரிசும் பெற்றவர். இந்நூல் மருத்துவத்தையும், மனிதனையும் விஞ்ஞானக் கண்ணோடு ஆராய்ச்சி செய்து எழுதியது. 1935ல் ஆங்கிலத்தில் வெளியான இந்நூல், உலக மொழிகள் பலவற்றிலும் மொழி பெயர்க்கப்பட்டு, பல பதிப்புகளைக் கண்டது. நமது முன்னாள் ஜனாதிபதி மறைந்த அப்துல்கலாம் […]

Read more

பாவேந்தர் பாரதிதாசனின் பாண்டியன் பரிசு

பாவேந்தர் பாரதிதாசனின் பாண்டியன் பரிசு, முனைவர் சபா. அருணாசலம், முல்லை பதிப்பகம், விலை 40ரூ. புரட்சிக் கவிஞர் படைத்த வீரம், காதல், நகைச்சுவை என யாவும் நிறைந்த ஒப்பற்ற காவியமான பாண்டியன் பரிசின் சுருக்கம், முழுமையாகப் படித்த உணர்வைத் தரும் வகையில் செதுக்கித் தந்திருப்பது பாராட்டத்தக்கது. நன்றி: குமுதம், 21/3/2018.

Read more

மனிதன் – புரியாத புதிர்

மனிதன் – புரியாத புதிர்,  அலெக்சிஸ் காரெலின், தமிழில்: அ.நடராசன், முல்லை பதிப்பகம், பக்.416, விலை ரூ.250. மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும், சிந்தனைக்கும் காரணமாக அவனுடைய உடல் இயங்கும் தன்மைகளும் உள்ளன என்ற அடிப்படையில் எழுதப்பட்டுள்ள நூல். பிரான்சைச் சேர்ந்த மருத்துவர் அலெக்சிஸ் காரெலின் தனது மருத்துவ அறிவின் துணை கொண்டு மனிதனின் உணர்வுகள் மனிதனின் உடலை எவ்விதம் பாதிக்கின்றன என்று ஆராய்கிறார். மனிதனின் இன்றைய வாழ்க்கைமுறை அவனுடைய உடலையும் சிந்தனைகளையும் செயல்களையும் எவ்வாறு பாதிக்கின்றன என்பதையும் விளக்குகிறார். நவீன தொழில்துறை மிகப்பெரிய அளவுக்கு வளர்ந்திருந்தாலும் […]

Read more

மன்னனின் கௌரவம் சதுரங்க நடுவிலே

மன்னனின் கௌரவம் சதுரங்க நடுவிலே, வே.குமரவேல், முல்லை பதிப்பகம், பக். 136, விலை 100ரூ. திரைப்படப் பாடல் ஒன்றின் வரிகளை நுாலின் தலைப்பாகக் கொண்டிருக்கும் இந்நுால், அரசியல் சிந்தனைகளை அலசும் விதத்தில் எழுதப்பட்டுள்ளது. இன்றைய அரசியல் சூழலில் தக்கது எது, தகுதியானது எது என்பதை ஆழ்ந்த சிந்தனையோடு வெளிப்படுத்தியிருக்கிறார் ஆசிரியர். ‘மக்கள் எவ்வழி மன்னன் (தலைவர்கள்) அவ்வழி’ என்ற சிந்தனையே இன்று எண்ணத்தக்கதாய் உள்ளது என்ற கருத்தை முன்வைக்கும் ஆசிரியர், அரசியலில் எத்தகைய மாற்றம் வர வேண்டும் என்பதை இந்நுாலில் வலியுறுத்துகிறார். கடந்த தேர்தலில் […]

Read more

பொதுமக்களும் சட்டங்களும்

பொதுமக்களும் சட்டங்களும், க.ராஜாராம், முல்லை பதிப்பகம், பக். 304, விலை 150ரூ. சட்டசபை அதிகாரங்கள், தனிப்பட்ட சட்டங்கள், சொத்துக்கள் பற்றிய சட்டம், ஒப்பந்தங்களுக்கான சட்டம், கிரிமினல் சட்டம், அவதுாறு சட்டம், சாட்சியங்களுக்கான சட்டம், சிவில், கிரிமினல் நடைமுறைச் சட்டம் என, ஒன்பது பகுதிகளைக் கொண்ட இந்நூல் ஆங்கிலத்தில் ஜி.சி.வெங்கடசுப்பாராவ் எழுதியதின் தமிழாக்கம். கடந்த, 65 ஆண்டு களில் அரசியல் அமைப்புச் சட்டம் முதல், அனைத்து வகைச் சட்டங்களும் பெரும் மாற்றங்களைப் பெற்றுள்ளன. நடைமுறைச் சட்டங்கள், ஒப்பந்தச் சட்டங்கள், சொத்துரிமைச் சட்டங்கள், மாற்றக்கூடிய உண்டியல் சட்டங்கள் […]

Read more

பொதுமக்களும் சட்டங்களும்

பொதுமக்களும் சட்டங்களும், ஆங்கிலத்தில் ஜி.சி. வெங்கட சுப்பாராவ், தமிழில் க. ராசாராம், முல்லை பதிப்பகம், விலை 150ரூ. நம்முடைய வாழ்க்கையில் காணக்கூடிய, சந்திக்ககூடிய சட்டங்கள் குறித்து ஜி.சி. வெங்கட சுப்பாராவ் ஆங்கிலத்தில் எழுதிய நூல். இதை முன்னாள் சபாநாயகர்,க. ராசாராம் மொழிபெயர்த்துள்ளார். தனிப்பட்ட சட்டங்கள், சொத்துகள் பற்றிய சட்டம், ஒப்பந்தங்களுக்கான சட்டம், கிரிமினல் சட்டம், சிவில் நடைமுறைச் சட்டம் மற்றும் பலவகை சட்டங்கள் எளிமையாக விளக்கப்பட்டுள்ளன. நன்றி : தினத்தந்தி,23/8/2017.

Read more
1 2 3 4 5 8