அம்மாவின் கதை

அம்மாவின் கதை, எஸ்.கிருபாகரன், விகடன் பிரசுரம், விலை 175ரூ. தமிழகத் திரை உலகிலும், அரசியலிலும் அரை நூற்றாண்டு காலம் ஆதிக்கம் செலுத்தியவர் ஜெயலலிதா. பேராசிரியராக விரும்பிய ஜெயலலிதா, “வெண்ணிற ஆடை” படத்தின் மூலம் திரை உலகில் காலடி எடுத்து வைத்தார். பின்னர் எம்.ஜி.ஆர். மூலம் அரசியலுக்கு வந்தார். தமிழக முதல் – அமைச்சர் ஆனார். எதிர்நீச்சல் போட்டார். அவருடைய வாழ்க்கை வரலாற்றை சுவைபட எழுதியுள்ளார் எஸ்.கிருபாகரன்.பலரும் அறிந்திராத ஜெயலலிதா வாழ்க்கையின் ஆரம்பகால நிகழ்ச்சிகள், அவர் எதிர்கொண்ட சவால்கள், எதிர்ப்புகள் என அனைத்து சம்பவங்களையும் விரிவாகவும், […]

Read more

இந்திய அரசியலமைப்பும் கூட்டாட்சியும்

இந்திய அரசியலமைப்பும் கூட்டாட்சியும், ஆலடி அருணா, விகடன் பிரசுரம், பக்.400, விலை ரூ.250. 23 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அரசியலமைப்புச் சட்டம் பற்றியும் கூட்டாட்சி பற்றியும் எழுதப்பட்ட இந்நூல், இன்றைய அரசியல் பிரச்னைகளைப் புரிந்து கொள்ள உதவுவதாக இருக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் நிர்வாகம், நிதி, நீதி, மொழிக் கொள்கை உட்பட பலவிஷயங்களில் எவ்வாறு மத்திய அரசின் அதிகாரத்தை வலுப்படுத்தும் பல அம்சங்களைக் கொண்டிருக்கிறது என்பதை நூல் விளக்குகிறது. மாநிலத்தின் நிர்வாகத் தலைவராக ஆளுநர் விளங்குகிறார். தன்னிடம் உள்ளநிர்வாகத்தை நேரடியாக அல்லது தமக்குக் கீழ் பணிபுரியும் […]

Read more

சட்டத்தால் யுத்தம் செய்

சட்டத்தால் யுத்தம் செய்,  நீதிபதி கே.சந்துரு, விகடன் பிரசுரம், பக்.167, விலை ரூ.115. ஜனநாயக நாட்டின் முக்கிய அங்கமாக நீதிமன்றங்கள் விளங்குகின்றன. அந்த நீதிமன்றங்களின் கதவுகளை தங்கள் தரப்பு நியாயங்களுக்காகத் தட்டி போராடி வென்ற பெண்களின் வழக்குகள் குறித்து இந்த நூல் பேசுகிறது. இந்த வழக்குகளைத் தொடுத்த பெண்களின் முயற்சி மற்றும் அவர்கள் தொடர்ந்த வழக்கின் மூலம் கிடைத்த தீர்ப்புகள் குறித்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். ஆணாதிக்கச் சிந்தனை பரவிக் கிடக்கும் இந்த சமூகச் சூழலில் உயர்பதவியில் இருக்கும் பெண்கள் தொடங்கி, விளிம்பு நிலையில் […]

Read more

கிறுக்கு ராஜாக்களின் கதை

கிறுக்கு ராஜாக்களின் கதை, முகில், விகடன் பிரசுரம், பக். 264, விலை 190ரூ. மண்ணில், ஆட்சி செய்த, ஆட்சிக்காக அட்டூழியம் செய்த கொடூரர்களின் வரலாறு. வார இதழில் தொடராக வந்த கட்டுரைகள், இப்போது நூல் வடிவமெடுத்திருக்கின்றன. சிலரின் வரலாற்றை அறியும்போது, வாசகர்கள் அதிர்ச்சி அடைவர் என்பது உறுதி. நன்றி: தினமலர், 17/1/2018.

Read more

எல்லா உணவும் உணவல்ல

எல்லா உணவும் உணவல்ல, பாலு சத்யா, விகடன் பிரசுரம், விலை 125ரூ. உணவு வகைகளில் அச்சமின்றி உண்ணும் உணவு எது? அளவோடு உண்ணும் உணவு எது? தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை எவை? நோயுற்றவர்கள் தவிர்க்க வேண்டிய உணவு எது? இப்படி உணவுகள் பற்றி பயனுள்ள தகவல்கள் கூறுகிறார் பாலு சத்யா. அத்துடன் பிரியாணி முதல் கேக் வரை பல்வேறு உணவுகளைத் தயாரிக்கும் முறைகளும் விளக்கப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 24/1/2018.

Read more

உயிர்மெய்

உயிர்மெய்,  கு.சிவராமன், விகடன் பிரசுரம், பக்.224, விலை ரூ.185. பருவ வயது தொடங்கும் ஆண், பெண் உடல்களில் ஏற்படும் மாற்றங்களை விளக்குவது தொடங்கி, திருமணமாகி அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்வது வரை ஏற்படக் கூடிய பல்வேறு பிரச்னைகளைப் பற்றியும் அவற்றிற்கான தீர்வுகளைப் பற்றியும் விரிவாக விளக்கும் நூல். தைராய்டு பிரச்னை, ரத்தசோகை உள்ளிட்ட பல்வேறு உடல்நலக் கோளாறுகள் கருத்தரிப்பதில் பல தடைகளை ஏற்படுத்துகின்றன. அந்தத் தடைகளைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள் இந்நூலில் கூறப்பட்டுள்ளன. ஆண்-பெண் உறவு தொடர்பான அனைத்து கற்பிதங்கள், நம்பிக்கைகளின் உண்மைத்தன்மைகளை இந்நூல் எடுத்துக்காட்டி, அது […]

Read more

உணவின்றி அமையாது உலகு

உணவின்றி அமையாது உலகு,  அ.உமர் ஃபாரூக், விகடன் பிரசுரம், பக்கம் 103, விலை ரூ.110. ‘இந்த உலகில் எல்லா போர்களும் தொடங்கிய இடம் உணவுதான். எல்லா உணவுகளையும் நம்மால் இயற்கையைப் பின்பற்றி உற்பத்தி செய்ய முடியும். ஆனால் நாமோ அன்றாட உணவுகளில் கூட நஞ்சைக் கலந்து வைத்திருக்கிறோம்’ என்கிறார் நூலின் ஆசிரியர். ஆங்கில மருத்துவரும், அக்குபஞ்சர் மருத்துவத்திலும் தேர்ச்சி பெற்றுள்ள நூலாசிரியர், நம் அன்றாட பயன்பாட்டுப் பொருள்களான பால், சர்க்கரை, எண்ணெய், மசாலாத்தூள் என அனைத்திலும் கலப்படம் செய்யப்பட்டுள்ளதை ஆதாரங்களோடு விளக்குகிறார். மேலும் பலர் விரும்பி […]

Read more

செரிமானம் அறிவோம்

  செரிமானம் அறிவோம், டாக்டர் பா.பாசுமணி, விகடன் பிரசுரம், விலை 100ரூ. சாப்பிடுகிற உணவு சத்துள்ளதாகவும், எளிதில் ஜீரணிக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும். சாப்பிடுவதில் ஒழுங்கீனம் ஏற்பட்டால், உடல் நலம் பாதிக்கப்படும். எந்தெந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும், எப்படிச் சாப்பிட வேண்டும் என்பதை விரிவாக விளக்குகிறார், டாக்டர் பா.பாசுமணி. சாப்பிடுவதற்கு எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும், சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கலாமா என்பது போன்ற கேள்விகளுக்குப் பதில் தருகிறார். நன்றி: தினத்தந்தி, 2/8/2017.

Read more

முதலீட்டு மந்திரம் 108

முதலீட்டு மந்திரம் 108, நாணயம் விகடன் சி.சரவணன், விகடன் பிரசுரம், விலை 150ரூ. பணத்தை எதில் முதலீடு செய்தால் லாபம் அதிகமாகக் கிடைக்கும் என்று விவரிக்கிறது இந்த நூல். ஒருவர் மாதம் ரூ.1000 வீதம் 30 ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்து வந்தால் கோடீசுவரர் ஆகலாம் என்று கூறுகிறார், இந்த நூலின் ஆசிரியரும், “நாணயம் விகடன்” இதழின் முதன்மை பொறுப்பாசிரியருமான சி. சரவணன். சேமிப்புக்கும், முதலீட்டுக்கும் உள்ள வித்தியாசத்தை கூறுவதுடன் 108 முதலீட்டு மந்திரங்களை விவரிக்கிறார். பொருளாதாரம் பற்றிய முக்கிய விவரங்களை அறிந்து கொள்ளவும், […]

Read more

ஆரோக்கியம் உங்கள் கையில்

ஆரோக்கியம் உங்கள் கையில், டாக்டர் பி.எஸ்.லலிதா, விகடன் பிரசுரம், விலை 155ரூ. நம் உச்சி முதல் பாதம் வரையிலான உடலின் முக்கிய உறுப்புகள், உள்ளங்கையில் புள்ளிகளாக அமைந்துள்ளன. எந்த உறுப்பு எந்த புள்ளியைக் காட்டுகிறது என்பதை அறிந்து, முறையாக அழுத்தம் கொடுப்பதன் மூலம், நோயாளியை குணப்படுத்தலாம் என்று கூறுகிறார், இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் டாக்டர் பி.எஸ்.லலிதா. மருந்தில்லா மருத்துவம் பற்றி பல தகவல்கள் கொண்ட புத்தகம். நன்றி: தினத்தந்தி, 16/8/2017.

Read more
1 2 3 4 5 31