நான் உங்கள் ரசிகன்

நான் உங்கள் ரசிகன், மனோபாலா, சூரியன் பதிப்பகம், விலை 180ரூ. ‘குங்குமம்’ வார இதழில் வெளிவந்த இந்த சூப்பர் ஹிட் தொடர், திரையுலகில் கால் பதிக்க முற்படும் / பாடுபடும் உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் வழிகாட்டியாக விளங்கும் நூல். நன்றி: குங்குமம், 12/1/2018.

Read more

செகண்ட் ஒப்பினியன்

செகண்ட் ஒப்பினியன், டாக்டர் கு.கணேசன், சூரியன் பதிப்பகம், விலை 200ரூ. எதை நம்புவது என்று தெரியாமல் எல்லா தரப்பையும் நம்பி, அனைத்து மருத்துவர்களையும் சந்தித்து சகல மருந்துகளையும் உட்கொண்டு மக்கள் வாழ்கின்றனர். இந்த அறியாமையை இந்நூல் போக்குகிறது. நன்றி: குங்குமம், 12/1/2018.  

Read more

தமிழ்நாட்டு நீதிமான்கள்

தமிழ்நாட்டு நீதிமான்கள், கோமல் அன்பரசன், சூரியன் பதிப்பகம், விலை 190ரூ. சென்ற நூற்றாண்டின் சட்டத்துறை வரலாறும், அதிலிருந்து பல்லாயிரம் கிளைகளாக விரிந்து அன்றைய சமூக, அரசியல் சூழலுக்குச் செல்லும் குறிப்புகளின் ஒரு பெருந்தொகுப்பாக உள்ளது இந்த நூல். நன்றி: குங்குமம், 12/1/2018.

Read more

பயங்கரவாதி என புனையப்பட்டேன்

பயங்கரவாதி என புனையப்பட்டேன், மொகமது ஆமிர் கான், நந்திதா ஹக்ஸர், தமிழில் அப்பணசாமி, எதிர் வெளியீடு, விலை 200ரூ. வேடிக்கையில்லை. இதுபோன்ற ஒரு நிலையை நம்மால் அடைய முடிந்தால் மட்டுமே உணர முடியும். இது மொகமது ஆமிர் கானின் தன் வரலாறு. இதில் அவரது சுகமான நினைவுகளும், சந்தோஷப் பகிர்வும் இல்லை. பலவிதமான வழக்குகளில் பு9னைவாக சேர்க்கப்பட்டு வதைக்கப்பட்டவர். சந்தேகமும், குறிப்பிட்ட மதமும் பொதுப்புத்தியில் தீவிரவாதி என முத்திரை குத்தப்பட்டு நிலை நிறுத்தப்படுகின்றன. அத்தகைய நிலைக்கு ஆளாக்கப்பட்டவர் மொகமது. அதற்காக வலியை சிரமேற்கொண்டு இப்போது […]

Read more

சதுர பிரபஞ்சம்

சதுர பிரபஞ்சம், கோ. வசந்தகுமார், டிஸ்கவரி புக் பேலஸ், விலை 200ரூ. மனிதனால் படைக்கப்பட்டது மொழி. ஆனால் மனிதனிலிருந்து கவிஞனைப் படைப்பது கவிதை. மொழி கருவி. கவிதையோ படைப்பாளி. அருமையான கவிதை தளத்தின் மேலிருந்து தகித்து ஒளிர்கிறார் வசந்தகுமாரன். தனித்தனி அனுபவங்களின் வெளியீடு அல்ல இக்கவிதைகள். ஒரே நீண்ட அனுபவச் சங்கிலியின் வெவ்வேறு கண்ணிகள். கருத்துகளின் அடிப்படையில் எழுதப்பட்டு, கருத்துகளாகவே மீந்துவிடும் மேஜைக் கவிதைகளிலிருந்து வேறுபடுபவை. வசந்தகுமாரனின் மொழி ஆரவாரமற்று வெளிப்பாட்டுக்குத் தேவையான அளவு மட்டுமே கைக்கொள்ளப்படுகிறது. வெளிப்பாடு, அனுபவம் இரண்டும் தீவிரம் பெறும்போது […]

Read more

கிம் கி டுக்கின் சினிமாட்டிக் உடல்கள்

கிம் கி டுக்கின் சினிமாட்டிக் உடல்கள், ஜமாலன், நிழல், விலை 120ரூ. உலகத்தின் சினிமா ரசிகர்களுக்கு கிம் கி டுக் இப்பொழுது நெருக்கமான பெயர். குறிப்பாக இளைஞர் சமூகத்திற்கு அவரே ஆகச் சிறந்த இயக்குநர். அவரைப் பற்றிய முழுதான கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு. தவிர்க்க முடியாத அவரின் அரிதான நீண்ட நேர்காணல் காணக்கிடைக்கிறது. திரைப்படத்தை புரிந்து கொள்ளும் முயற்சியில் இருக்கிற எல்லோருக்கும் இது கையில் இருக்க வேண்டிய புத்தகம். அவரது சினிமா வழக்கமான சினிமாக்களின் பழக்கப்பட்ட பாதையிலிருந்து விலகி நிற்கிறது. அவரது கதையுலகம் ஒரு […]

Read more

புரட்சியாளன்

புரட்சியாளன், ஆல்பர்ட் காம்யூ, ப்ரெஞ்சிலிருந்து தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா, காலச்சுவடு பதிப்பகம், விலை 475ரூ. ஆல்பர்ட் காம்யூவின் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது. நாம் வாழும் காலத்தைப் புரிந்துகொள்ளும் முயற்சியில் இன்று வரைக்கும் இந்த நூல் உதவிக் கொண்டே வருகிறது. நிச்சயமற்ற உலகில் வாழக்கூடிய அனைத்து சூழலையும் காம்யூ அவரின் வார்த்தைகளில் பிரத்யேகமாக எழுதிச் செல்கிறார். ஒவ்வொரு கட்டுரையும் அடுத்தடுத்த கணத்தில் ஒருமை கூடி நிற்கிறது. மிகவும் கவனம் தேவைப்படுகிற நினைவையும் உணர்வையும் சேர்த்து ஒருங்கிணைந்து படிக்க வேண்டிய கட்டுரைகள். நம் வாழ்க்கையின் சாத்தியமின்மைகளை […]

Read more

தமிழ் திரைப்பட நூற்றாண்டு 2018

தமிழ் திரைப்பட நூற்றாண்டு 2018, பெ. வேல்முருகன், ஒளிக்கற்றை வெளியீட்டகம். திரைப்படங்களின் ஆதி சித்திரங்களைத் தொகுத்திருக்கும் நூல். இந்தியாவில் திரைப்படத்திற்கான முயற்சிகள் எவ்விதம் ஆரம்பித்தது, அதற்கான முயற்சிகள் பற்றி தெளிவாகவும் சுருக்கமாகவும், மிகையின்றியும் சொல்லப்பட்டு இருக்கிறது. இந்தியாவின் முதல் திரைப்படம், நடராஜ முதலியாரின் ‘கீச்சுவதம்’, முதலில் தமிழ் பேசிய திரைப்படம் என விரிவாகவும் கட்டுரைகள் உள்ளன. ஒன்றை முற்றாக அறிந்து தெரிந்துகொள்வதற்கு முன், அதன் அடிப்படை தெரிதல் அவசிமானது. அரிதான சில போஸ்டர்கள், நாம் பார்த்தறியாத விளம்பரங்களின் கவனம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. லூமியர் சகோதரர்களின் திரைப்படக்காட்சி […]

Read more

கேட்பவரே

கேட்பவரே, லக்ஷ்மி மணிவண்ணன், படிகம், விலை 320ரூ. வாழ்க்கையை விடவும் பெரிய வகைமாதிரியை உருவாக்குவதே கலையின் நோக்கம். தமிழ் கவிதையின் தரிசனங்களில் வெகு அரிதாகவே லக்ஷ்மி மணிவண்ணன் போன்றவர்களை காண முடிகிறது. அது அப்படித்தான். கலைஞனது சுயசரிதையில் எஞ்சிக் கிடக்கும் சுவாரஸ்யம்தான் என்ன? அவனது வாழ்க்கையா? ஒரு மனிதன், படைப்பாளனாகிற அந்தக் கணத்திலிருந்தே அவன் செல்லுகிற பாதை முன்கூட்டி நிச்சயக்கப்பட்டு விடுகிறது. மணிவண்ணன் சூதாட்டப் பலகையில் சுற்றி வருகிற எண்களைப் பார்க்கிற அதி தீவிர கவனத்திலேயே வாழ்க்கையைப் பார்க்கிறார். பிரதி செய்யவே முடியாத அவரது […]

Read more

மத்திய கால இந்திய வரலாறு

மத்திய கால இந்திய வரலாறு, சதீஷ் சந்திரா, வேட்டை எஸ். கண்ணன், பாரதி புத்தகாலயம், விலை 390ரூ. பொதுவாக நாம் வரலாறுகளை பின் தொடர்வதே இல்லை. ஆனால், அதுதான் நமக்கு மிகவும் அவசியமானது. இந்தப் புத்தகத்தில் இந்தியாவின் மத்திய கால வரலாறு விலாவாரியாக விவரிக்கப்படுகிறது. அவர்களின் கட்டிடக்கலை, வளர்ச்சி, வீழ்ச்சி எல்லாமே தெளிவாக எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது. சதீஷ் சந்திராவின் பணி அவ்வளவு சிறப்பானது. மக்களுக்கு அணுக்கமாகவும், நெருக்கமாகவும் வாழ்ந்தவர்களின் இடம் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. தெளிவாக வரலாற்றை பின் தொடர்வதில் சதீஷ் சந்திரா முன்னணியில் நிற்கிறார். தவிக்க விடாமல் […]

Read more
1 2 3 9