இந்தியாவில் கடல் கோட்டைகள்

இந்தியாவில் கடல் கோட்டைகள், சி.எஸ்.முருகேசன், சங்கர் பதிப்பகம், பக்.272, விலை ரூ.275. பாதுகாப்பற்ற கடல்களுக்கு நடுவே பாதுகாப்பான கோட்டைகளை அமைப்பது என்பது சாதாரண விஷயமா? ஆனால், அப்படிப்பட்ட கோட்டைகளையும் அமைத்துள்ளனர் என்பதை இந்த நூல் எடுத்துரைக்கிறது. உலகில் எங்கெல்லாம் கடல் சார்ந்த நாடுகள் உள்ளனவோ அங்கெல்லாம் தமது நாட்டைப் பாதுகாக்க இந்த வகை கடல் கோட்டைகள் அமைக்கப்படுகின்றன. இவை ராணுவ நடவடிக்கைகளுக்கு மட்டுமே பாதுகாப்புக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய கடல் கோட்டைகள், கடல் நடுவில் துறைமுக வசதி கொண்ட மணல் தீவுகள் அல்லது பெரிய பாறைத் […]

Read more

சுக வாழ்வு அருளும் ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர்

சுக வாழ்வு அருளும் ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர், தெள்ளாறு ஈ.மணி, சங்கர் பதிப்பகம், விலைரூ.165. சிவனின் ஒரு வடிவமான, ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு பற்றி விளக்கும் நுால். முறையாக வழிபட்டால் பொன், பொருளை வாரிக் கொடுப்பார் என விளக்குகிறது. பைரவரை வழிபடும் முறை, அவர் ஏந்தியிருக்கும் ஆயுத தத்துவம், வாகனங்கள், கடன் பிரச்னை தீர்க்கும் சொர்ணாகர்ஷண பைரவர் போன்ற தலைப்புகளில் தகவல்கள் உள்ளன.‘உடலே ஆலயம்’ என, திருமந்திரப் பாடலைக் கொண்டு அலசுகிறது. கோவில் கருப்பக்கிரகம், தீபம், சிவலிங்கம் போன்றவற்றுக்கு தத்துவ ரீதியாக விளக்கம் தருகிறது. பைரவர் […]

Read more

சதுரகிரி சித்தர்கள்

சதுரகிரி சித்தர்கள், சி.எஸ்.முருகேசன், சங்கர் பதிப்பகம், விலை: ரூ.300. சித்தர்களின் பூமி எனப்படும் சதுரகிரிக்குச் செல்லும் பயண அனுபவமாக இந்த நூல் விரிவடைகிறது. சதுரகிரி பயணத்தின்போது கண்ட காட்சிகள், அந்த இடம் தொடர்பான தகவல்கள் ஆகியவை பக்திப்பெருக்குடன் விளக்கப்பட்டு இருக்கின்றன. அவை தொடர்பான மரபுவழிக் கதைகள், அமா னுஷ்யமான செய்திகள் ஆகியவையும் தரப்பட்டு இருக்கின்றன. அங்கு செல்வதற்கான ஆபத்தான பாதைகள் குறித்தும், பாதுகாப்பாக எவ்வாறு செல்வது என்பது பற்றியும் தகவல் தரப்பட்டு இருக்கிறது. பெண் சித்தர் ஒருவரின் தரிசனம் கிடைத்த அதிசய தகவல், பாண்டவர்கள் […]

Read more

தமிழ் இந்தியா

தமிழ் இந்தியா, ந.சி.கந்தையா பிள்ளை, சங்கர் பதிப்பகம், விலைரூ.275 தமிழர்களின் நாகரிகம், இந்தியாவின் பழைய நில அமைப்பு பற்றிய புகழ் வாய்ந்த நுால்.சிந்து சமவெளியில் மொகஞ்சதாரோ, ஹரப்பா நகரங்கள் 1921ல் கண்டறியப்பட்டன. அங்கு கிடைத்த பழம் பொருள்களை ஆராய்ந்து, அங்கு வாழ்ந்தோர் தமிழர்கள் என்றும், அவர்கள் நாகரிகம், மெசபடோமியா எகிப்து பழைய நாகரிகங்களை ஒத்துள்ளது என்றும் பதிவு செய்துள்ளார். புத்தருக்குப் பின் இந்திய அரசாங்க அமைப்பு, தத்துவ சாஸ்திரிகள், பாடலிபுத்திரம் போன்றவை குறித்தும் சொல்கிறார். தமிழ்மொழியில் வெளிவராத பல அரிய செய்திகள் அடங்கிய கருத்துக் […]

Read more

வாழ்க்கைப் படிகள்

வாழ்க்கைப் படிகள், புலவர் மா.அருள்நம்பி, சங்கர் பதிப்பகம், விலை:ரூ.75. வாழ்வில் முன்னேறுவதற்கு வழிகாட்டியாக, அறிஞர்களின் அனுபவ வா அறிவு, சிறப்பாக வாழ்ந்து காட்டியவர்களின் வாழ்வியல் முறை ஆகியவை திருமந்திரம், திருக்குறள், தேவாரம் திருவாசகம், மகாபாரதம், ராமாயணம் போன்றவற்றின் எடுத்துக்காட்டுகளுடன் தரப்பட்டு இருக்கின்றன.  நன்றி: தினத்தந்தி, 6/2/22 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

தமிழர் வரலாறு

தமிழர் வரலாறு, ப.பாலசுப்பிரமணியன், சங்கர் பதிப்பகம், பக்.208, விலை ரூ.200. இந்தியப் பகுதியில்தான் பூர்வ குடிகள் வாழ்ந்தனர் என்பதற்கான சான்றுகள் பல உள்ளன. தொல் உயிர்கள் தோன்றி, வளர்ந்து, பெருகியதும் இந்தியாவில்தான்; மனிதனும் அங்குதான் தோன்றி வளர்ந்திருக்கக்கூடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். கி.மு. நான்காயிரம் ஆண்டுகள் வரை இந்தியா முதல் பாரசீகம், எகிப்து, சைப்ரஸ், கிரேத்தா வரையில் ஒரே இனத்தைச் சேர்ந்த மக்களே வாழ்ந்தனர்; தென் பகுதியில் வாழ்ந்த மக்களே வடக்கிலும் இன்ன பிற இடங்களிலும் சென்று குடியேறினர். இந்த உலகில் இல்லாத ஒரு நிலப்பரப்பு […]

Read more

கர்ம வினைகள் நீக்கும் கால பைரவ ரகசியம்

கர்ம வினைகள் நீக்கும் கால பைரவ ரகசியம், ஜெகதா, சங்கர் பதிப்பகம், விலைரூ.260. கால பைரவரின் புராணத்தில் துவங்கி, பைரவர் சிறப்புகளையும் வழிபாட்டு முறைகளையும் கூறி, பைரவ வழிபாட்டால் கிட்டும் பலன்கள், தமிழகத்திலுள்ள பைரவர் தலங்கள், பைரவர் சஷ்டி கவசம், அஷ்ட பைரவர் அவதாரங்கள், பைரவர் ஆற்றல்கள், பிரபஞ்ச ரகசியம், நட்சத்திர கோவில்கள் போன்ற பல தகவல்கள் தொகுக்கப்பட்ட நுால். சனி பகவானுக்குக் குரு என்பதாகக் கூறி, ஒவ்வொரு ராசிக்காரரும் முறைமையோடு வழிபாடு செய்ய வேண்டிய கிழமைகள் தரப்பட்டுள்ளன. பைரவர் விரதம் மேற்கொள்ள வேண்டிய […]

Read more

தமிழக வரலாற்றுக் கோட்டைகள் பகுதி – 2

தமிழக வரலாற்றுக் கோட்டைகள் பகுதி – 2, சி.எஸ்.முருகேசன், சங்கர் பதிப்பகம், விலைரூ.350. சங்கப் பாடல் வரிகள் மற்றும் வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில் மிக விரிவாக கோட்டை ஆய்வுகள் மேற்கொண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அரிய தகவல்கள் வியக்க வைக்கின்றன. மன்னர்களுக்குள் ஏற்பட்ட பகைமை, பொறாமை, பணியாமை, மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை போன்றவற்றால் நடந்த போர்களுக்கெல்லாம் கோட்டைகளே தாக்குதல்களையும், தண்டனைகளையும் ஏற்று காலப்போக்கில் சிதிலமடைந்த விபரங்கள், வரலாற்றுச் சம்பவங்களின் குறிப்புகளோடு தரப்பட்டுள்ளன. அன்றைய நாடுகளின் அமைப்பு, வானளாவிய கோட்டைகளின் அமைப்பு, கட்டுமானச் சிறப்புகள், சிற்பக் கலைகள், […]

Read more

உண்மை வாரிசு

உண்மை வாரிசு, ப.பாலசுப்ரமணியன், சங்கர் பதிப்பகம், பக். 152, விலை 150ரூ. திருநங்கையை மையமாக வைத்து எழுதப்பட்ட நாடக நூல். அரவாணிகள் என்று சொல்லும் பெயர் காரணமும் விளக்கமாகச் சொல்லப்பட்டுள்ளது. அத்துடன் வெற்றி பெற்ற திருநங்கை பட்டியலும் சொல்லப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக அரவாணியாக பிறந்து பெற்றோருக்கு தலைக்குனிவு வரக்கூடாது என்று வீட்டை விட்டு விலகிய பின் அதிர்ஷ்டவசமாக, தொழில் அதிபரின் வாரிசகாக ஆகி, திருநங்கையர் தலைநிமிர வழி காட்டுவதுடன், தன்னை வெறுத்து ஒதுக்கிய பிறந்த குடும்பத்தை சீராக்கியதை அழகாக சித்தரித்துள்ளார். -சீத்தலைச்சாத்தனார். நன்றி: தினமலர், 16/5/21. […]

Read more

ஸ்ரீ விநாயக புராணம்

ஸ்ரீ விநாயக புராணம், வேணு சீனிவாசன், சங்கர் பதிப்பகம், விலைரூ.150 வியாசர் எழுதிய பதினெட்டு புராணங்களில் விநாயக புராணம் உபபுராணம் ஆகும். பிருகு முனிவர், வேதவியாசரிடம் கேட்ட விநாயக புராணத்தை வடமொழியில் பாடினார். அதைப் பின்பற்றி, கச்சியப்ப முனிவர் தமிழில் பாடினார். இந்நுாலில், 38 பகுதிகள் உள்ளன. பிரம்மாவிடம், வியாசர் விநாயகர் சரிதம் கேட்டது, அரக்கர்களை அழித்த ஆனைமுகன் குறித்து எழுதியவை சுவையாக உள்ளன. – டாக்டர் கலியன் சம்பத்து. நன்றி: தினமலர், 22/11/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more
1 2 3 9