கண் தெரியாத இசைஞன்

கண் தெரியாத இசைஞன், விளாதீமிர் கொரலேன்கோ, தமிழில் – ரா. கிருஷ்ணையா, ஜீவா பதிப்பகம், பக். 286, விலை ரூ.200, அளவில் நூல் பெரிதல்ல என்றாலும் ரஷிய நாவல்களில் வாசித்த அல்லது வாசிக்கப் போகும் ஒவ்வொருவரையும் மறக்க முடியாமல் வைத்திருக்கச் செய்யும் பிரம்மாண்டமான வல்லமையைக் கொண்டது.  மனித மனதின் உள்ளுறை ஆழத்தை ஊடுருவிப் பார்த்து அதன் கலைச் சிந்தனையை மிகத் திறமையாக வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டவரான கொரலேன்கோ, இந்த நாவலில் பிறப்பிலேயே பார்வையில்லாத ஒருவனை – பியோத்தர் – கதைநாயகனாகக் கொண்டு உண்மையான அகத்தின் […]

Read more

பல கோணங்களில் பசும்பொன் தேவர்

பல கோணங்களில் பசும்பொன் தேவர் (கட்டுரைகள்), தொகுப்பாசிரியர் கே. ஜீவபாரதி, ஜீவா பதிப்பகம், பக்.320, விலை ரூ.260. சாதித் தலைவரைப் போலவும் மதத் தலைவரைப் போலவும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை முன்னிறுத்தும் இன்றைய காலகட்டத்தில், அந்த கண்ணோட்டத்தை மறுக்கும்விதமாக வெளிவந்திருக்கிற இந்த நூல், தேவரின் ஆளுமையைப் பற்றிய எண்ணற்ற சித்திரங்களைக் கட்டுரைகளாகத் தருகிறது. சாதி வட்டத்துக்கு அப்பாற்பட்டவராகப் பசும்பொன் தேவர் திகழ்ந்தது பற்றியும் அவருடைய பல செயல்பாடுகள், நிகழ்வுகள் பற்றியும் மகரிஷி சுத்தானந்த பாரதியார் தொடங்கி, மா. இராசமாணிக்கனார் வரை 56 பேரின் சிந்தனைகள் […]

Read more

தமிழ்நூல் வரலாறு

தமிழ்நூல் வரலாறு, பாலூர் கண்ணப்ப முதலியார், ஜீவா பதிப்பகம், பக். 440, விலை ரூ.360. சங்க இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், சித்தர் பாடல்கள், நிகண்டுகள், புராணங்கள், தல புராணங்கள், தனிப்பாடல் திரட்டு போன்றவை குறித்தும், தமிழ் வளர்த்த பெüத்தர்கள், கிறிஸ்தவர்கள், சைவ மடங்கள் குறித்தும், முஸ்லிம் புலவர்கள் குறித்தும் தெளிவாகவும், விரிவாகவும் இந்நூலில் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு நூலைப் பற்றிக் கூறுமிடத்தும் அந்நூலிலுள்ள சில பாடல்களை ஆசிரியர் மேற்கோளாக எடுத்துக்காட்டுகிறார். இந்நூலில் முற்கால, இடைக்கால, பிற்கால நூல்களைப் பற்றியும் அவற்றின் ஆசிரியர்களைப் பற்றியும் குறிப்பிட்டிருப்பது மட்டுமல்ல, […]

Read more

இவர்தான் லெனின்

இவர்தான் லெனின் (கட்டுரைகள், கதைகள், குறிப்புகள்),  பூ.சோமசுந்தரம், ஜீவா பதிப்பகம், பக்.264, விலை ரூ.220. ரஷ்ய பொதுவுடைமை இயக்கத்துக்கும், ரஷ்யப் புரட்சிக்கும் தலைமை தாங்கிய பெருமைக்குரியவர் வி.இ.லெனின். அவருடன் பழகியவர்கள் லெனினுடனான தமது அனுபவங்களை கட்டுரைகளாக, கதைகளாக, வாழ்க்கைக் குறிப்புகளாக எழுதி இருக்கிறார்கள். அவற்றின் தொகுப்பாக இந்நூல் மலர்ந்திருக்கிறது. லெனின் மிகப் பெரிய தலைவராக இருந்தபோதிலும், ரஷ்யாவில் வாழும் மிகச் சாதாரணமான ஏழை மக்களின் வாழ்க்கை குறித்து மிக அதிகமான கவனம் கொண்டிருந்தது; ஏழை மக்களுடன் நெருங்கிப் பழகியது; அவர்களின் நலன் என்கிற நோக்கில் […]

Read more

தென் இந்திய வரலாறு

தென் இந்திய வரலாறு, கே.ஏ.நீலகண்டசாஸ்திரி, ஜீவா பதிப்பகம், விலைரூ.500. கல்வெட்டு, செப்பேடு, நாணயங்கள், இலக்கியம், செவிவழிச் செய்திகளை ஆய்ந்து வரலாறு எழுதப்படுகிறது. கர்நாடகா, ஆந்திரா, தமிழகம், கேரளா பற்றிய தென் இந்திய வரலாறு சரியாக பதிவு செய்யப்படவில்லை என்ற குறை இருந்தது. அதை போக்கும் வகையில், இலங்கை நாட்டையும் இணைத்து, விரிவாக எழுதப்பட்ட வரலாற்று நுால். கி.மு., 300 முதல், கி.பி., 1600 விஜயநகரப் பேரரசு வீழ்ச்சி வரை எழுதியுள்ளார். மன்னர்களின் வீரம், கொடை, காதல், மக்களின் பொருளாதார நிலை, பண்பாட்டு வளம், இலக்கிய […]

Read more

தொல்காப்பியம்

தொல்காப்பியம், புலியூர்க்கேசிகன், ஜீவா பதிப்பகம், விலை 400ரூ. உலக மொழிகளின் இலக்கண வரம்பினை உறுதிப்படுத்தும் நூல்கள் அனைத்துக்கும் முற்பட்டது என்று போற்றப்படும் தொல்காப்பியத்திற்கு எளிய விளக்க உரையாக இந்த நூல் தயாராகி இருக்கிறது. நச்சினார்க்கினியர், இளம்பூரணனார் ஆகியோரின் உரைகளைத் தழுவி இந்த விளக்க உரை எழுதப்பட்டு இருக்கின்றது என்ற போதிலும், தொல்காப்பியம் முழுவதையும் புரிந்து கொள்ளத் தக்க வகையில் சுருக்கமான வரிகளைக் கொடுத்து இருப்பதன் மூலம் இந்த நூல் தனித்துவம் பெறுகிறது. தொல்காப்பியத்தின் ஒவ்வொரு கருத்துக்கும் விளக்க உரையுடன் எடுத்துக்காட்டுகள் கொடுத்து இருப்பதால் படிக்க […]

Read more

பிற்காலச் சோழர் சரித்திரம்

பிற்காலச் சோழர் சரித்திரம், டி.வி.சதாசிவ பண்டாரத்தார், ஜீவா பதிப்பகம், பக். 592, விலை 570ரூ. ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு இன்றியமையாதவை என்று அறிஞர்கள் கருதுவனவற்றுள் அந்நாட்டின் சரித்திர நுால் சிறந்ததொன்றாம். முன்னோர் ஒழுகிக் காட்டிய உயர்ந்த நெறிகளையும் அன்னார் கொண்டிருந்த சிறந்த பண்பினையும், பின்னோர்க்கு நினைப்பூட்டி அவர்களை நல்வழிப்படுத்துவன நாட்டின் பழைய சரிதங்களே என்லாம் என்று தன் முன்னுரையில் கூறுகிறார் சதாசிவ பண்டாரத்தார். சோழன் விசயாலயன், முதல் ஆதித்த சோழன், முதல் பராந்தக சோழன், கண்டராதித்த சோழன், அரிஞ்சய சோழன், சுந்தர சோழன், உத்தம […]

Read more

தினம் ஒரு சிந்தனை

தினம் ஒரு சிந்தனை, அரிமழம் ப.செல்லப்பா, ஜீவா பதிப்பகம், விலை 200ரூ. பல்வேறு தலைப்புகளில் சிந்தனையைத் தூண்டும் கருத்துக்களின் துணுக்குத் தோரணமாக இந்த நூல் விளங்குகிறது. இதில் இடம் பெற்றுள்ள 365 கருத்துக்களில் ஆன்மிக செய்திகள், வாழ்வில் ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டிய நற்பண்புகள், பிரபலமானவர்களின் வாக்கு, உண்ணும் உணவில் உள்ள சிறப்பு, நவபாஷாணம் என்றால் என்ன என்பவை போன்ற ஏராளமான பயன் உள்ள தகவல்கள் தரப்பட்டு இருக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 4/12/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை […]

Read more

சிலம்பொலியார் பார்வையில்

சிலம்பொலியார் பார்வையில், கே.ஜீவபாரதி,  ஜீவா பதிப்பகம், பக்.96, விலை ரூ.80. நூலாசிரியர் தொகுத்த”பட்டுக்கோட்டையார் பாடல்கள்' என்ற நூலுக்கும், நூலாசிரியர் எழுதிய புதுயுகக் கவிஞனும் புதியவன் குரல்களும் மற்றும் அப்துற்-றஹீம் வாழ்வியல் இலக்கியம் ஓர் ஆய்வு ஆகிய நூல்களுக்கும் தமிழறிஞர் சிலம்பொலி சு.செல்லப்பனார் எழுதிய அணிந்துரைகளின் தொகுப்பே இந்நூல். சிலம்பொலி செல்லப்பனாரின் 85 -ஆவது பிறந்த நாள் சிறப்பு மலருக்கு நூலாசிரியர் எழுதிய கட்டுரை பின் இணைப்பாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்களின் சிறப்புகளை சிலம்பொலி செல்லப்பனார் எடுத்துக் கூறுகிறார். “மக்களின் இன்றைய தேவைக்கேற்ற புதுமையான […]

Read more

தென் இந்திய வரலாறு

தென் இந்திய வரலாறு, கே ஏ நீலகண்ட சாஸ்திரி, ஜீவா பதிப்பகம், விலை ரூ. 500. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து விஜயநகரப் பேரரசு வீழ்ச்சி வரை தமிழகத்தில் நடைபெற்ற அத்தனை வரலாற்று நிகழ்வுகளும் இந்த நூலில் தொகுத்துத் தரப்பட்டு இருக்கின்றன, தமிழகத்தின் புவியியல் அமைப்பு, பூர்வகுடி மக்களின் கலாச்சாரம், மௌரியப் பேரரசு, சாதவாகனர்களின் ஆட்சி,  பல்லவர், பாண்டியர் ஆகிய மூன்று அரசுக்கு இடையே நடைபெற்ற மோதல், பாமணி அரசர்கள், விஜயநகரப் பேரரசின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி ஆகியவை மிக விரிவாக இந்நூலில் தரப்பட்டிருக்கின்றன. குறிப்பிட்ட […]

Read more
1 2 3 4