பல்லவர் வரலாறு

பல்லவர் வரலாறு, டாக்டர் மா.இராசமாணிக்கனார், ஜீவா பதிப்பகம், பக். 312, விலை 260ரூ. பல்லவ மன்னர்களின் முன்னோர் யார், அவர்கள் தமிழர்களா என்ற கேள்விகளுக்கு, இன்னும் தீர்க்கமான விடை அறிவிக்கப்படவில்லை. பல்லவர்கள் கிரந்தம் எழுத்துகளை அறிமுகப்படுத்தினர்; பின், அவர்களே தமிழில் கல்வெட்டுகளை அமைத்தனர். வடமொழியை ஆதரித்த அவர்கள் தான், தமிழ் சிறக்கவும் உதவினர். தமிழகத்தில் கல்லாலும், மலையைக் குடைந்தும் கோவில்கள் கட்டி, கட்டடக் கலையை வளர்த்தனர். இந்நுால், பல்லவ மன்னர்களைப் பற்றி அறிந்து கொள்ள, வாசகர் இடையே ஆர்வத்தை துாண்டும். – சி.கலாதம்பி நன்றி: […]

Read more

சேர மன்னர் வரலாறு

சேர மன்னர் வரலாறு, அவ்வை சு.துரைசாமி, ஜீவா பதிப்பகம், விலை 220ரூ. இலக்கியம், கல்வெட்டு, செப்பேடு, நாணயம், அகழ்வு ஆய்வுகள் கொண்டு ஒரு நாட்டின் வரலாறு எழுதப்படுகிறது. சேரர் வரலாறு பற்றி கே.ஜி.சேஷைய்யர் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். தமிழில், பேராசிரியர் அவ்வை சு.துரைசாமி பிள்ளை, சேர நாடு முழுமையும் சுற்றி தொண்டி, வஞ்சி முதலிய வரலாற்று புகழ்மிக்க இடங்களை நேரில் கண்டு ஆய்வு செய்தார். மலைகள், ஆறுகள் முதலியவற்றின் முந்தைய பெயர்களையும், தற்போது வழக்கில் உள்ள பெயர்களையும் ஆய்ந்து இந்த நுாலில் வெளிப்படுத்தியுள்ளார். சேர நாட்டின் […]

Read more

பல்லவர் வரலாறு

பல்லவர் வரலாறு, மா.ராசமாணிக்கனார், ஜீவா பதிப்பகம், விலை 260ரூ. தமிழகத்தை 7 நூற்றாண்டுகளாக ஆட்சி செய்த பல்லவ மன்னர்களின் பூர்வீகம் எது என்பதுஇன்னும் உறுதிப்படாத நிலையிலும், கி.பி.250ல் தொடங்கி, கி.பி.882 வரை நீடித்த பல்லவ மன்னர்களின் ஆட்சி பற்றிய அரிய செய்திகளின் தொகுப்பாக இந்த நூல் ஆக்கப்பட்டு இருக்கிறது. பல்லவ மன்னர்கள் ஒவ்வொருவர் பற்றிய விவரம், அவர்களின் ஆட்சித் திறமை, அவர்கள் காலத்தில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் என்று அனைத்து விவரங்களையும் அடக்கியுள்ள இந்த நூல், பல்லவ மன்னர்களின் வரலாற்றின் முழுமையான ஆவணமாகத் திகழ்கிறது. […]

Read more

கொங்கு தமிழக வரலாறு

கொங்கு தமிழக வரலாறு, கா.அப்பாதுரையார், ஜீவா பதிப்பகம், விலை 180ரூ. கோவை, நீலகிரி, ஈரோடு, தர்மபுரி உள்ளிட்ட பல பகுதிகளைக் கொண்ட கொங்கு மண்டலம் என்பது, பழங்காலந்தொட்டு மிகச் சிறப்புடன் விளங்கியது என்பதை, ஆய்வு நோக்கில் எழுதப்பட்ட இந்த நூல் தெளிவாக விளக்குகிறது. ஆதிகாலம் முதல் சங்க காலத்தின் இறுதியான கி.பி. 240 முடிய கொங்கு மண்டலம் எவ்வாறு சிறப்புடன் இருந்தது? அங்கு நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள், பல நாடுகளுடன் நடைபெற்ற வாணிபம், படையெடுப்புகள், மன்னர்களின் ஆட்சி முறை என்று பலதரப்பட்ட விஷயங்களை பன்மொழிப் […]

Read more

சேர மன்னர் வரலாறு

சேர மன்னர் வரலாறு,  ஒளவை சு.துரைசாமி, ஜீவா பதிப்பகம், பக்.232, விலை ரூ.220. மூவேந்தர்களுள் ஒருவராகிய சேர மன்னர்களுக்கென்று விரிவான வரலாறு கிடையாது. சங்க நூல்களை நன்கு பயின்றால் அன்றி சேர நாட்டின் பண்டை நாளை அறிவது அரிது; சோழர்களைப் பற்றியும், பாண்டியர்களைப் பற்றியும் வரலாற்று நூல்கள் உண்டானதுபோல, சேர நாட்டுக்கு வரலாற்று நூல்கள் தோன்றவில்லை; சேர நாடு பிற்காலத்தே கேரள நாடென வழங்கத் தலைப்பட்டது. சேர நாடென்பது கேரள நாடானதற்கு முந்திய நிலையாதலால் அதன் தொன்மை நிலை அறிதற்குச் சேர மன்னர்களையும், சேர நாட்டு […]

Read more

மாநகராட்சி நகராட்சி சட்டங்கள்

மாநகராட்சி நகராட்சி சட்டங்கள், சோ.சேசாசலம், ஜீவா பதிப்பகம், பக்.280, விலை ரூ. 230 ஓர் அரசின் நிர்வாக கட்டமைப்பில் உள்ளாட்சி அமைப்புகளின் பணி என்பது மிகவும் இன்றியமையாதது. அரசின் திட்டங்கள் மக்களுக்குச் சென்றடைவதிலும், அடிப்படை வசதிகள், வரி வசூல், நிர்வாகம் போன்றவற்றில் உள்ளாட்சி அமைப்புகள் பெரும் பங்கு வகிக்கின்றன. இதில், 1919-இல் இயற்றப்பட்ட சென்னை மாநகராட்சி சட்டங்கள், அதன் தொடர்ச்சியாக இயற்றப்பட்ட நகராட்சி சட்டங்கள் ஆகியவை குறித்து இந்நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. மேலும், தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகளின் எண்ணிக்கை, மாநகராட்சியை நிர்வகிக்க மக்களால் […]

Read more

பிற்காலச் சோழர் சரித்திரம்

பிற்காலச் சோழர் சரித்திரம், டி.வி.சதாசிவ பண்டாரத்தார், ஜீவா பதிப்பகம், விலை 570ரூ. தமிழகத்தில் கி.பி. 9-ம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் இருந்து 13-ம் நூற்றாண்டின் கடைசிப் பகுதி வரை சக்கரவர்த்திகளாக வீற்றிருந்து சோழ மன்னர்கள் ஆட்சி செய்த முழுமையான வரலாறு, இந்த நூல் மூலம் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. சோழ மன்னர்கள் ஒவ்வொருவரும் எந்தக் காலத்தில் ஆட்சியில் இருந்தனர், அவர்கள் ஆட்சி முறை, குடவோலை மூலம் தேர்தல்கள் நடத்தப்பட்ட விதம், நிலங்களை அளக்க எடுக்க நடவடிக்கைகள், நீர்ப்பாசன திட்டங்கள், அப்போது நடைபெற்ற போர்கள் மற்றும் […]

Read more

ஜீவா பார்வையில் கலை இலக்கியம்

ஜீவா பார்வையில் கலை இலக்கியம், கே.ஜீவபாரதி, ஜீவா பதிப்பகம், பக்.240, விலை ரூ.225. தமிழகப் பொதுவுடமை இயக்கத்தின் தலைவர்களில் முக்கியமானவராக இருந்த ப.ஜீவானந்தம், பிற பொதுவுடமை இயக்கத் தலைவர்களில் இருந்து வித்யாசமானவர். கலை, இலக்கியம் தொடர்பாக அவர் ஆற்றிய உரைகள், எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் மலர்ந்திருக்கிறது. பொதுவுடமை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ் இலக்கியம் பற்றி பேசாத, கவனத்தில் கொள்ளாத காலத்தில் கம்பனில் காணப்படும் ஜனநாயகக் கருத்துகளை, பொதுவுடமைக் கருத்துகளைப் பற்றி, சங்க இலக்கியங்கள் பற்றி எல்லாம் ஜீவா பேசியிருக்கிறார்; எழுதியிருக்கிறார். அவை தொடர்பான […]

Read more

தினம் ஒரு சிந்தனை

தினம் ஒரு சிந்தனை, கவிஞர் அரிமழம் ப.செல்லப்பா, ஜீவா பதிப்பகம், விலை 200ரூ. வருடம் 365 நாட்களும் வாசகர்களை சிந்திக்க வைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் இந்தப் புத்தகத்தை கவிஞர் அரிமழம் ப.செல்லப்பா எழுதியுள்ளார். சிந்தனைக்கு விருந்தளிக்கக்கூடிய 365 குட்டிக்கதைகள் இப்புத்தகத்தில் உள்ளன. ஒவ்வொரு நாளும் ஒரு கதையைப் படித்தால் போதும். ஒரு வருடம் ஓடிவிடும். கதைகள் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளன. இளைய தலைமுறையினர் படிக்க வேண்டிய நூல். நன்றி: தினத்தந்தி,8/11/2017.

Read more

ஜப்பான் நாட்டுச் சிறுவர்க கதைகள்,

  ஜப்பான் நாட்டுச் சிறுவர் கதைகள், அரு.வி.சிவபாரதி, ஜீவா பதிப்பகம், விலை 80ரூ. ஜப்பான் நாட்டுச் சிறுவர் சிறுகதைகளின் தொகுப்பு. இந்த நூலில் 21 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. குழந்தைகளுக்கு எளிதில் புரியும வகையில் அரு.வி.சிவபாரதி அழகிய முறையில் மொழிபெயர்த்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 11/10/2017.

Read more
1 2 3 4