மகாகவி பாரதியார் கவிதைகள்

மகாகவி பாரதியார் கவிதைகள், ஜீவா பதிப்பகம், சென்னை, விலை 300ரூ. மகாகவி பாரதியார் கவிதைகள், வசன கவிதைகள் அடங்கிய முழுத் தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது. 664 பக்கங்கள் கொண்ட புத்தகத்தின் விலை 300ரூ. மகாகவி பாரதியார் எழுதிய கட்டுரைகள் கொண்ட நூலும் வெளிவந்துள்ளது. 440 பக்கங்கள் கொண்ட புத்தகம். விலை 275ரூ. பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் என்ற நூலும் வெளியிடப்பட்டுள்ளது. 480 பக்கங்கள். விலை 275ரூ. மேற்கண்ட புத்தகங்களின் பதிப்பாசிரியர் டி. சுப்புலட்சுமி. 3 நூல்களையும் வெளியிட்டோர் ஜீவா பதிப்பகம். நன்றி: தினத்தந்தி, 31/12/2014.   […]

Read more

ஜீவா பார்வையில் கலை இலக்கியம்

ஜீவா பார்வையில் கலை இலக்கியம், கே. ஜீவபாரதி, ஜீவா பதிப்பகம், சென்னை, பக். 240, விலை 150ரூ. கலை இலக்கியம் குறித்து, கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ப. ஜீவானந்தம் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். சங்க இலக்கியம் முதல், தற்கால இலக்கியம் வரையிலும் வெளியாகியுள்ள அத்தனை படைப்புகள் பற்றிய தன் எண்ண ஓட்டங்களை, எழுத்தாக வடித்துள்ளார் ஜீவா. மனிதத்தை மேம்படுத்தும் இலக்கியங்களை நல்ல இலக்கியங்களாகவும், சமுதாய மேம்பாட்டிற்கு துணைபுரியாத இலக்கியங்களை, நசிவு இலக்கியங்களாகவும், ஜீவா இனங்காட்டியுள்ளார். உலகத்தின் இலக்கிய முன்னோடிகளையும், அவர்களின் படைப்புகளையும், […]

Read more

ஜீவா பார்வையில் அறிஞர்களும் கவிஞர்களும்

ஜீவா பார்வையில் அறிஞர்களும் கவிஞர்களும், கே. ஜீவபாரதி, ஜீவா பதிப்பகம், பக். 288, விலை 180ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-284-1.html நக்கீரர், கபிலர், அவ்வை, கம்பன், பாரதி, வ.உ.சி., கவிமணி, பெரியார், லெனின், உமர் கய்யாம் முதலான கவிஞர்களையும், அறிஞர்களையும் பார்த்தும் படித்தும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ப. ஜீவானந்தம் பெற்ற அனுபவங்களின் தொகுப்புதான் இந்த நூல். 56 தலைப்புகளில், 56 அறிஞர்களை நமக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார் ஜீவா. அவரின் உரைகள், புத்தக மதிப்புரைகள், அணிந்துரைகள் முதலானவற்றின் […]

Read more

உலகப்பன் காலமும் கவிதையும்

உலகப்பன் காலமும் கவிதையும், கே. ஜீவபாரதி, ஜீவா பதிப்பகம், சென்னை, பக். 328, விலை 200ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-346-7.html புதுவைக்குயில் பாவேந்தர் பாரதிதாசனின் கவிதைகளைப் படிப்போர் மதுவை உண்ட வண்டுபோல மயங்குவர் என்பது திண்ணம். பாடாத பொருளில்லை எனச் சொல்லும் அளவுக்கு, அந்த எழுச்சிக் கவிஞர் எழுதிக் குவித்த, முதல் கவிதை தொடங்கி அத்தனைக் கவிதைகளையும் ஆய்வுக்கு உள்ளாக்கியுள்ளார் நூலாசிரியர். இந்தக் கவிதைகள் படைக்கப்பட்ட சூழல், பாரதிதாசனின் வாழ்க்கைச் சம்பவங்கள் போன்றவை அந்தக் காலகட்டத்தில் நிலவிய அரசியல் […]

Read more

பாரதிதாசன் கவிதைகள் பற்றி ஆய்வு நூல்

பாரதிதாசன் கவிதைகள் பற்றி ஆய்வு நூல், ஜீவா பதிப்பகம், சென்னை, விலை 200ரூ. பெண் விடுதலை, தமிழ் மொழி வளர்ச்சி, சுயமரியாதை, பொதுவுடைமை, கைம்பெண் கொடுமை போன்றவற்றை கருப்பொருளாகக் கொண்டு கவிதைகளை எழுதி புரட்சிக் கவிஞர் எனப் புகழ் பெற்றவர் பாரதிதாசன். அவர் எழுதிய முதல் கவிதை தொடங்கி இறுதிக்கவிதை வரை அத்தனைக் கவிதைகளையும் எழுத்தாளர் கே. ஜீவபாரதி ஆய்வு செய்துள்ளார். இந்தக் கவிதைகள் படைக்கப்பட்ட சூழல், அந்த காலகட்டத்தில் நிலவிய அரசியல் நிகழ்வுகள் போன்றவற்றை கோடிட்டு காட்டியிருப்பது நூலுக்கு மேலும் அழகு சேர்க்கிறது. […]

Read more

சமுதாயப் பார்வையில் மணிமேகலை

சமுதாயப் பார்வையில் மணிமேகலை, கே. ஜீவபாரதி, ஜீவா பதிப்பகம், பக். 216, விலை 110ரூ. மணிமேகலையின் முன் கதையாகிய சிலப்பதிகார ஆராய்ச்சியில் தொடங்கிப் பதிகமும், வஞ்சிக் காண்டமும், இளங்கோவடிகளால் இயற்றப்படவில்லை எனக்காட்டி, இளங்கோவுக்கு கண்ணகி கதையை சொன்னவர் சாத்தனார் என்பது சரியா என வினவி, மணிமேகலை படைத்த சாத்தனாரும், சங்கத்துச் சீத்தலைச் சாத்தனாரும் ஒருவரல்லர் என, நிறுவிச் செல்கிறது இந்த நூல். பசிப்பிணி அறுத்த பாத்திரமான மணிமேகலையைச் செதுக்கியுள்ள பாங்கினை, வியந்து விதந்து சொல்கிறது. பொதுவுடைமைச் சிந்தனையாளராகிய நூலாசிரியர், தம் கருத்திற்கேற்பச் சமுதாயப் பணியை, […]

Read more

ஜீவா பார்வையில் பாரதி

ஜீவா பார்வையில் பாரதி, ஜீவா பதிப்பகம், சென்னை, விலை 200ரூ. தமிழக அரசியல்வாதிகளில் தனித்துவமிக்கவர் ஜீவா. இவர் மிகச் சிறந்த பேச்சாளர். இலக்கியவாதி. தொடக்கத்தில் காந்தீய கருத்துகளால் ஈர்க்கப்பட்டு பின்னர் சுயமரியாதை கருத்துக்களை ஏற்று, இறுதியில் கம்யூனிஸ்டாக வாழ்ந்தவர். அவர் பேச்சில் தொடாத துறைகளே இல்லை. இடம் பெறாத தலைவர்களே இல்லை. காந்தியடிகள், வ.உ.சி., பரலி சு.நெல்லையப்பர், மறைமலையடிகள், வ.ரா. போன்றவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு பெற்ற ஜீவா, பாரதியாருடன் பழகியதில்லை. இருந்தபோதிலும் பாரதியின் படைப்புகளை படித்து, தமிழ் மக்களிடம் பாரதியைக் கொண்டு செல்லும் பணியில் […]

Read more

ஜீவா பார்வையில் பாரதி

ஜீவா பார்வையில் பாரதி, கே. ஜீவபாரதி, ஜீவா பதிப்பகம், சென்னை, விலை 200ரூ. காந்தி வ.உ.சி., பரலி சு. நெல்லையப்பர், மறைமலையடிகள், வ.ரா. போன்ற மகாகவி பாரதியார் காலத்தில் வாழ்ந்தவர்களைச் சந்திக்கும் வாய்ப்பையும் அவர்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்யும் சூழலையும் ஜீவா பெற்றார். ஆனால் மகாகவி பாரதியைச் சந்திக்கும் வாய்ப்பு ஜீவாவுக்கு வாய்க்கவில்லை. இருப்பினும் பாரதியின் படைப்புகளை கருத்தூன்றிப் படித்து, அதில் தன் மனத்தை இழந்து தமிழ் மக்களிடத்தில் பாரதியைக் கொண்டு செல்லும் மகத்தான பணியைச் சிறப்பாகச் செய்து முடித்தவர் ஜீவா. அதற்கு இந்த […]

Read more
1 2 3 4