வெற்றி வித்துக்கள்

வெற்றி வித்துக்கள், நல்லி குப்புசாமி செட்டியார், நன்னூல் அகம், பக்.146, விலை ரூ.100. நூலின் தலைப்புக்கு ஏற்றவிதத்தில் படைக்கப்பட்டிருக்கும் அருமையான குறுங்கதைகளின் தொகுப்பு இந்நூல். தன்னம்பிக்கை, சுயமுன்னேற்றம் குறித்து பல நூல்கள் வெளிவந்திருந்தாலும், அவை எல்லாம் சொல்லக் கூடிய விஷயங்களை நேரடியாகச் சொல்பவையாக இருக்கின்றன. அல்லது ஆலோசனை சொல்பவையாகவோ, அறிவுரை சொல்பவையாகவோதான் புரிந்து கொள்ளப்படுகின்றன. பிறரின் அறிவுரையை ஏற்றுக் கொள்ளக் கூடிய மனநிலை குறைந்துவரும் இக்காலத்தில், அத்தகைய நூல்கள் ஏற்படுத்தும் தாக்கமும் குறைவாகவே இருக்கிறது. இந்நூல் அவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டு, குறுங்கதைகள் மூலம் வாழ்க்கைக்குத் தேவையான […]

Read more

நெஞ்சில் நிறைந்த ஏ.என்.

நெஞ்சில் நிறைந்த ஏ.என்., நன்னூல் அகம், விலை 160ரூ. சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் இயக்குனராகப் பணியாற்றிய ஏ. நடராஜன், எல்லோராலும் அன்புடன் “ஏ.என்.” என்று அழைக்கப்பட்டவர். எழுத்தாளர், இசை ஆர்வம் மிக்கவர், சொற்பொழிவாளர் என்று பன்முகம் கொண்டவர். அவரால் வாழ்க்கையில் முன்னேறியவர்கள் ஏராளம். நடராஜனின் சிறப்புகளை பல்வேறு கோணங்களில் பாராட்டியுள்ள பல வி.ஐ.பி.கள் எழுதிய கட்டுரைகள் இந்த நூலில் அடங்கியுள்ளன. ஏ. நடராஜனுடன் நெருங்கிப் பழகியவரான நல்லிகுப்புசாமி செட்டியார் இந்த நூலை மிகச் சிறப்பாகத் தொகுத்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 23/3/2017

Read more

நெஞ்சில் நிறைந்த ஏ.என். டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார்

நெஞ்சில் நிறைந்த ஏ.என். டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார், நன்னூல் அகம், விலை 160ரூ- தொலைக்காட்சி இயக்குநராக பணிபுரிந்த ஏ. நடராஜனின் நினைவு கூறும் நூல். அவர் எழுத்தாளரும் கூட. ஒரு கால கட்டத்தில் சதா சர்வகாலமும் நாம் கேட்டுக் கொண்டிருந்த பெயர் இது. நிறைய ரசனை உணர்வுகள் பெருகி வந்ததால் பார்த்து வந்த பணிக்கு மேலாக கல்வி கேள்விகளில் சிறந்திருக்கிறார். இசையின் மீதான அவரது ஈடுபாடு போற்றுதற்குரியது. மொத்த நூலிலும் அவர் பற்றி எழுதியிருக்கிற கட்டுரைகளில் ஆத்மார்த்தம் தெரிகிறது. அவர் எல்லோர் மீதும் […]

Read more

நெஞ்சில் நிறைந்த ஏ.என்.

நெஞ்சில் நிறைந்த ஏ.என்., டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார், நன்னூல் அகம், பக். 272, விலை 160ரூ. சென்னைத் தொலைக்காட்சியின் முன்னாள் இயக்குநர் ஏ.நடராஜன் (ஏ.என்) அவர்களின் நட்பு வட்டம் எத்துணை பெரியது? எத்தகைய சான்றோர்களுடன் அவர் பழகி இருக்கிறார்? ஓர் உற்ற நண்பனாக, உடன் பிறவாச் சகோதரனாக, சரியான நேரத்தில் சரியான ஆலோசனை வழங்குபவராக, திறமைசாலிகளை இனம் கண்டு ஊக்குவிக்கும் ஆசானாக, எளியோர்களை வளர்த்துவிட்ட வழிகாட்டியாக என பல்வேறு ரூபங்களில், எண்ணற்ற இதயங்களில் வியாபித்திருக்கும் அவரின் வாழ்க்கைப் பயணத்தின் வரலாற்றுப் பதிவாக மலர்ந்திருக்கிறது […]

Read more

சவீதா நாவல்கள்

சவீதா நாவல்கள், சவீதா, நன்னூல் அகம், பக். 1264, விலை 800ரூ. சுகமான வாசிப்பு அனுபவம் தரும் சவீதா ஒரு அபூர்வமான எழுத்துச் சிற்பி. உளி எடுத்துக் கொஞ்சம், கொஞ்சமாகச் செதுக்குவதுபோல், சொற்களைச் செதுக்கும் ஒரு அபூர்வக் கலைஞன், நிலவின் பாலில் குளிப்பதைப்போலவும், நிர்மலத் தென்றலில் குறிப்பதைப்போலவும், சுகம் தரும் வார்த்தைகளை வர்ணனைகளில் கொண்டு வரும் மாயாவி சுவீதா. இந்தத் தொகுதியில் உள்ள, 18 நாவல்களும், சுகமான வாசிப்பு அனுபவத்தைத் தரும். ‘மலைச் சிகரங்கள் மேகங்களால் கூர் மழுங்கி இருந்தன. மூடுபனி, யூகலிப்டஸ் மரங்களுக்கு […]

Read more

குண்டூசி பி.ஆர்.எஸ்.கோபால் சரித்திரமும் ஏடுகளும்

குண்டூசி பி.ஆர்.எஸ்.கோபால் சரித்திரமும் ஏடுகளும், வாமணன், மணிசாகர் பதிப்பகம், சென்னை 108, பக். 448, விலை 200ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-161-1.html சினிமா என்பது வெறும் பொழுதுபோக்குச் சாதனம் அல்ல. சங்கீதம், நாட்டியம் போல அதுவும் ஒரு சிறந்த கலை வடிவமே என்ற கொள்கையுடையவர் குண்டூசி கோபால். சினிமா நிருபராகவும், சினிமா விமர்சகராகவும், சினிமா இதழாசிரியராகவும் அவர் தமிழ் சினிமா உலகுக்குப் பங்காற்றியவர். குறிப்பாக இந்திப்பட, வெளிநாட்டுப் பட மோகம் அதிகமிருந்த காலகட்டத்தில் தமிழ்ப் படங்களைப் பற்றிய செய்திகளை […]

Read more