மஹத் முதல் தலித் புரட்சியின் உருவாக்கம்

மஹத் முதல் தலித் புரட்சியின் உருவாக்கம், ஆனந்த் டெல்டும்டே, தமிழில் கமலாலயன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 550ரூ.   பொதுக்குளத்தில் நீரெடுக்கும் உரிமைக்கான போராட்டம்தான் அம்பேத்கரின் தலைமையிலான தலித் இயக்கத்தின் தொடக்கம். 1927-ல் மஹத்தில் நடந்த இரண்டு மாநாடுகள் அதன் தொடக்கப்புள்ளி. ஆவணக் காப்பகத் தரவுகளைக் கொண்டு இதுவரை வெளிவராத தகவல்களை உள்ளடக்கியதாக இந்த நூலை எழுதியிருக்கிறார் ஆய்வாளரும் மனிதஉரிமைச் செயல்பாட்டாளருமான ஆனந்த் டெல்டும்டே. முதல் மாநாட்டின் ஏற்பாட்டாளரான ஆர்.பி.மொரெ எழுதிய மராத்திய நூலின் மொழிபெயர்ப்பையும் இந்நூலில் சேர்த்திருப்பது சிறப்பு. நன்றி: […]

Read more

மூளைக்குள் சுற்றுலா

மூளைக்குள் சுற்றுலா, வெ. இறையன்பு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 658, விலை 1500ரூ. ‘மூளைக்குள் சுற்றுலா’ என தலைப்பிட்டு, நம் மூளையின் மூலை முடுக்குக்கெல்லாம் செல்ல வைத்து விட்டார், நுாலாசிரியர். சிம்பன்சியை விட, மூன்று மடங்கு மூளை, நமக்கு அதிகம் என்பதில் துவங்கி, புராணம், கடவுள், மதங்கள் தோன்றியதன் காரணத்தை விளக்குகிறார். உலகச் சண்டைகள் ஏன் உருவாகுகின்றன என்பதற்கு, இதுவரை யாரும் சொல்லாத, அழகான விளக்கமும் வேறு. ‘ஹைட்ரா’ விலங்கின் தலையை வெட்டினால், இரண்டு தலைகள் முளைக்கின்றன. அதற்கும், ஜெல்லி மீனுக்கும் […]

Read more

மஹத்

மஹத், முதல் தலித் புரட்சியின் உருவாக்கம், ஆனந்த் டெல்டும்ப்டே, தமிழில் கமலாலயன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 550ரூ. எழுச்சியின் தொடக்கம் மனித உரிமைச் செயல்பாட்டாளரும் அரசியல் விமர்சகருமான ஆனந்த் டெல்டும்ப்டே சமீபத்தில் எழுதி பெரும் கவனத்தைப் பெற்ற நூலின் மொழியாக்கம். தலித் இயக்கத்தின் தொடக்கமாகக் கருதப்படும் 1927-ம் ஆண்டு மஹத் மாநாடுகளை, அதற்கு முன்பு நடந்த உரிமைப் போராட்டங்கள், உலகளவிலான எழுச்சிகள் ஆகியவற்றுடன் ஒப்பிட்டு அதன் முக்கியத்துவத்தை விரிவாக விளக்கும் பகுத்தாய்வு. ஆவணக் காப்பகத் தரவுகள், இதுவரை மராத்தி மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு […]

Read more

இருளர்களும் இயற்கையும்

இருளர்களும் இயற்கையும், சி.மஞ்சுளா, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 150ரூ. தமிழகப் பழங்குடிகளில் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்டவர்கள் இருளர்கள். இரண்டாவது நிலையில் இருந்தாலும் இவர்களுடைய எண்ணிக்கை என்னவோ ஒன்றரை லட்சம்தான். தமிழகத்தில் அருகிவரும் ஆறு பழங்குடிகளில் ஓர் இனமாக இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். ‘இருளர்கள் என்றால் பாம்பு பிடிப்பவர்கள்’ என்பதுதான் பொதுச் சித்திரம். அதேநேரம் தாவரங்களை மருத்துவ சிகிச்சைக்குப் பயன்படுத்திவரும் இவர்களது மரபு அறிவைப் பற்றி ஆராய்ச்சி அடிப்படையில் முனைவர் சி. மஞ்சுளா ‘இருளர்களும் இயற்கையும்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இதுபோன்ற […]

Read more

பழந்தமிழில் காலங்கள்

பழந்தமிழில் காலங்கள், ச.சுபாஷ் சந்திரபோஸ், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 160ரூ. இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற காலப்பகுப்பை தொல்காப்பியர் காலம் தொட்டு விரிவான ஆதாரங்களுடன் விளக்கும் பழந்தமிழ் இலக்கண ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு. மொழியில் ஆய்வாளர்களுக்கும் மாணவர்களுக்கும் பயனுள்ள நூல். நன்றி:தி இந்து, 6/9/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

மனிதனுக்கு மரணமில்லை

மனிதனுக்கு மரணமில்லை, த.ஸ்டாலின் குணசேகரன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட். பக்.276, விலை ரூ.230. பொதிகை தொலைக்காட்சியில் தினசரி காலை ஒளிபரப்பாகும் தமிழ் விருந்து நிகழ்ச்சியில் நூலாசிரியர் ஆற்றிய உரைகளின் தொகுப்பே இந்நூல். சுவாமி விபுலானந்த அடிகள், ஆர்.கே.சண்முகம் செட்டியார், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், வ.உ.சிதம்பரம்பிள்ளை, உ.வே.சாமிநாதையர், ரவீந்திரநாத் தாகூர், ஜி.டி.நாயுடு, ஆப்ரகாம் லிங்கன், பெர்னாட்ஷா, தாமஸ் ஆல்வா எடிசன், கேப்டன் லட்சுமி உள்ளிட்ட நாமறிந்த – நாமறியாத – பல ஆளுமைகளைப் பற்றிய மிகச் சுருக்கமானதும், அதே சமயம் மனதில் பதியும் […]

Read more

இஸ்லாமியத் தத்துவ இயல்

இஸ்லாமியத் தத்துவ இயல், ராகுல் சாங்கிருத்யாயன், ஏ.ஜி.எத்திராஜீலு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 200, விலை 170ரூ. இந்நுால் ஹிந்தியிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட ஒரு தத்துவ நுாலாகும். எளிய தமிழில் இஸ்லாமிய சமயம் குறித்த ஒரு ஆழ்ந்த சிந்தனையை, வரலாற்றை இந்நுால் முன்வைக்கிறது. முகமது நபி பெருமானது வரலாற்றில் துவங்கும் இந்நுால், இஸ்லாமிய சமயத்திலுள்ள கருத்து வேற்றுமைகளையும், கிழக்கிந்திய இஸ்லாமியத் தத்துவ அறிஞர்கள், ஸ்பெயினின் இஸ்லாமியத் தத்துவ அறிஞர்கள் குறித்தும், விரிவாக எடுத்துரைக்கிறது. இஸ்லாமியர் மட்டுமல்லாது, இம்மதத்தைப் பற்றி அறிய விழையும் அனைவருக்கும் […]

Read more

பரமாத்துவிதம் ஒரு சைவ நெறி

பரமாத்துவிதம் ஒரு சைவ நெறி, கி.முப்பால்மணி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்.222, விலை ரூ.180. உலகாயதம், சித்தாந்த சைவம், வைணவம், சங்கரமதம் ஆகியவற்றை மறுத்து 16 ஆம் நூற்றாண்டில் எழுந்த நெறிதான் பரமாத்துவிதம். பரமாத்துவித நெறியைப் பின்பற்றுபவர் உலகின் எப்பொருளும் தம்மிடத்திலும், தாம் உலகின் எல்லாப் பொருள்களிலும் இருப்பதாக உணர்வார்கள். பிரம்மம் என்பது எல்லாமான பூரணமாக உள்ளது. "பிரபஞ்சம் முழுவதும் உள்ள பூரணம் செயல் தன்மையானது. அதனுடைய இருப்பும், விளக்கமுமே பிரபஞ்சப் பொருள்களின் வாழ்வும், பண்புமாகும். பிரம்மம், பூரணம் தன்னை […]

Read more

காலனியத் தொடக்கக் காலம்(கி.பி 1500-1800)

காலனியத் தொடக்கக் காலம்(கி.பி 1500-1800), எஸ்.ஜெயசீல ஸ்டீபன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 195ரூ. உலகம் சுற்றிய அடிமைகள் தமிழகம் காலனியாதிக்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டபோது நிகழ்ந்த சமூக மாற்றங்களையும் அவற்றின் விளைவுகளையும் பேசும் ஐந்து ஆய்வுக் கட்டுரைகளின் மொழிபெயர்ப்பு. ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் ராணுவத்தில் சேர்ந்தது, கைவினைஞர்கள் மற்றும் மீன்பிடிச் சமூகங்களின் வாழ்க்கை நிலை, ஐரோப்பியர்களின் அடிமை வணிகம், மற்ற நாடுகளுக்கு அனுப்பப்பட்ட தமிழக அடிமைகளின் நிலை என காலனிய கால கட்டத்து வரலாற்றைப் பேசும் தொகுப்பு. போர்த்துகீசு, பிரெஞ்சு மொழிகளில் உள்ள இதுவரை […]

Read more

பெண்ணியம் வரலாறும் கோட்பாடுகளும்

பெண்ணியம் வரலாறும் கோட்பாடுகளும், சாரா காம்பிள், டோரில் மோய்; தமிழில்: ராஜ் கெளதமன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்.108, விலை ரூ.90. பெண்ணியம் பற்றி வெளிவந்த இரண்டு நூல்களின் தொகுப்பே இந்நூல். சாரா காம்பிள் பதிப்பாசிரியராக இருந்து உருவாக்கிய பெண்ணியமும் பின்னையப் பெண்ணியமும் என்ற நூலும், டோரில் மோய் எழுதிய பாலியல்/ பிரதியியல் அரசியல்: பெண்ணிய இலக்கிய கோட்பாடு என்ற நூலும் பெண்ணியம் சார்ந்த சிந்தனைகளை நம் முன் வைக்கிறது. ஐரோப்பியச் சூழலில் தோன்றிய பெண்ணியம் பற்றிய சிந்தனைகளாக இவை இருந்தாலும், […]

Read more
1 2 3 4 5 26