பொருநை நதிக் கரையினிலே

பொருநை நதிக் கரையினிலே, கன்யூட்ராஜ், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 230ரூ. தமிழகத்தின் பெரும்பான்மை நதிகளில் ஆற்றுநீரும், ஆற்று மணலும் பெருமளவில் கொள்ளையடிக்கப்படுவதை இந்த நவீனம் சித்தரிக்கிறது. பிரசார நெடி வீசுகிறது என்றாலும், கதை சுவாரஸ்யம் உள்ள சம்பவங்களுக்கும் பஞ்சம் இல்லை. தாமிரபரணி தண்ணீரை நம் முன்னோர் தீர்த்தமாக எடுத்துச் சென்று, கடவுளுக்கு அபி ஷேகம் செய்தனர்; அப்படியே குடிக்கவும் செய்தனர். அவ்வளவு துாய்மையாக இருந்தது. இன்று, மீன்கள் வாழக்கூட முடியாத அளவிற்கு, தண்ணீர் மாசு அடைந்து விட்டது. காரணம், ஒன்று சாக்கடை, […]

Read more

விஞ்ஞான லோகாயத வாதம்

விஞ்ஞான லோகாயத வாதம், ராகுல் சாங்கிருத்யாயன், தமிழில் ஏ.ஜி.எத்திராஜுலு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 135ரூ. காரண காரிய வாதம், உண்மை, தலைவிதி தத்துவம், மூடநம்பிக்கைகள், பூதங்களும் இயக்கங்களும், குணாம்ச மாறுதல் போன்றவை குறித்து விரிவான விளக்கங்களை முன்வைப்பதுடன், பல்வேறு விவாத களங்களையும் உருவாக்கி சொல்லி இருக்கிறார் ஆசிரியர். நன்றி: தினத்தந்தி. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027075.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

அழகான அம்மா

அழகான அம்மா, ரஷ்ய சிறார் கதைகள், தமிழில் யூமா வாசுகி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 360, விலை 290ரூ. குழந்தைகளின் உலகம் மிக இனிமையானது. சாதாரண விஷயங்களையும் கதையாக சொல்லும் போது, ஈர்க்கும் பருவம் அது. வாழ்க்கையின் புரிதலை, கதை வழியாக கேட்பதால் ஆனந்தமடையும் வயது. அதனால் தான், வீடியோ காட்சிகளாகவும், ஆடியோ பேச்சுகளாகவும் வடிவம் எடுத்துள்ள கதைகளுக்கும் மவுசு குறையவில்லை. ‘டிவி சேனலில்’ ஒளிபரப்பாகும், பொம்மை படங்களின் கதைகள், இந்த தலைமுறை குழந்தைகளை ஈர்க்கின்றன. இருந்தாலும், ‘பாட்டி வடை சுட்ட […]

Read more

இருளர்களும் இயற்கையும்

இருளர்களும் இயற்கையும், முனைவர் இரா, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,  விலை 50 ரூ. இருளர் என்பது இருள் என்ற சொல்லுடன் தொடர்புடையது. காடுகளின் இருண்ட பகுதிகளில் வாழ்வதாலும், இந்த இனத்தை சேர்ந்தவர்கள் கறுப்பு நிறத்தில் இருப்பதாலும், இருளக்கிழங்குகளை உண்பதாலும் இந்தப் பெயரைப் பெற்றிருக்கிறார்கள் என பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள மொத்த பழங்குடி மக்களில் இருளர்கள் 25% தொன்மையான இருளர்களின் சுற்றுச்சூழல் மற்றும் பாரம்பரிய அறிவு, அறிவார்ந்த சிகிச்சைத் திறன், தாவரங்கள் பற்றிய புரிதல் என சி.மஞ்சுளா மேற்கொண்ட ஆய்வின் தழுவல் […]

Read more

அரிஸ்டாடில் எழுதிய அரசியல்

அரிஸ்டாடில் எழுதிய அரசியல், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 285 ரூ. பண்டைய கிரேக்கத்தில் வாழ்ந்தவர் பேரறிஞர் அரிஸ்டாட்டில், மாவீரன் அலெக்சாண்டரின் ஆசிரியர் பல துறைகளில் மேதையாகத் திகழ்ந்தார். அரிஸ்டாடில் அரசியல் பற்றி கூறிய கருத்துக்கள் பல்வேறு மொழிகளிலும் தொகுக்கப்பட்டது. புத்தக வடிவம் பெற்ற இந்த நூற்றாண்டில் மட்டும் அரிஸ்டாடிலின் அரசியல் நூல் ஆங்கிலத்தில் 68 விதமாக மொழிபெயர்க்கப்பட்டு புத்தகங்களாக வெளிவந்தன. இந்தப் புத்தகத்தை சி சுப்பிரமணியம் மிக அழகாக தமிழில் மொழிபெயர்த்துள்ளார். அரிஸ்டாடில் பற்றியும் அவருடைய அரசியல் பற்றியும் அறிய சிறந்த […]

Read more

மார்க்சிய அறிவுத் தோற்றவியல்

மார்க்சிய அறிவுத் தோற்றவியல், நா.வானமாமலை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 70, விலை50ரூ. இந்நுால், தமிழ்ப் புலமைத் தளத்தின் வழியாக, மார்க்சிய அறிவு ஆராய்ச்சி இயலைச் சிறப்பாகக் கற்பிக்கிறது. அறிவின் தோற்றம், உண்மை, பிழை முதலான அறிவுத் தத்துவப் பிரச்னைகளை எடுத்து விளக்கும்போது, தமிழ்த் தத்துவ நிலைப்பாடுகள் வழியாக விளக்குவதும், மார்க்சிய நிலைப்பாடுகளை எடுத்துக் கூறுவதும் மார்க்சியத்தை கற்க வழிவகுக்கிறது. இந்நுால் வழியாக வெளிப்படும் மார்க்சிய சிந்தனை, தமிழ் மரபில் வேர் பிடித்து வளரும் என்பது முன்னிறுத்தப்பட்டுள்ளது. நன்றி: தினமலர், 1/7/2018. இந்தப் […]

Read more

சுடர்கள் ஏற்றும் சுடர்

சுடர்கள் ஏற்றும் சுடர், பொன்னீலன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 180, விலை 160ரூ. பேராசிரியர் நா.வானமாமலை நாட்டார் வழக்காற்றியலின் தந்தை. மார்ச்சிய லெனினிய அகராதி, தமிழர் நாட்டுப் பாமரர் பாடல்கள், தமிழர் நாட்டுப் பாடல்கள், புதுக்கவிதை – முற்போக்கும் பிற்போக்கும் – போன்ற அவரது நுால்கள் தமிழுக்கு சிறந்த பங்களிப்புகள். அவரது அன்றாட வாழ்க்கை, ரசனைகள், குறைகள், சாதனைகள், வேதனைகள், அவரைப் பற்றிய மதிப்பீடுகள் ஆகியவை பொன்னீலனால் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரு காலகட்டத்தில் புதுக்கவிதை இடதுசாரி விமர்சகர்களால் அங்கீகரிக்கப்படவில்லை. தொ.மு.சி.ரகுநாதன், கலாநிதி […]

Read more

குழந்தைகளும் குட்டிகளும்

குழந்தைகளும் குட்டிகளும்,  ஓல்கா பெரோவ்ஸ்கயா, தமிழில் – ருக்மணி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்கம் 260, விலை ரூ.180. வீடுகளில் ஓநாய், புலி, கழுதை, குதிரை, நரி, மான் ஆகியவற்றை சிறு குட்டிகளில் இருந்து வளர்ந்து வருவதைப் பற்றிய வித்தியாமான, சுவாரசியமான அனுபவங்களை இப்புத்தகத்தில் தெரிந்து கொள்ள முடியும். ஓல்கா, சோன்யா, யூலியா, நத்தாஷா ஆகிய நான்கு சகோதரிகளும் இந்த விலங்குகளைக் குட்டியில் இருந்தே வளர்ப்பதும், அவற்றுடன் விளையாடுவதும், அன்பு செலுத்துவதும் சுவாரசியமாக விளக்கப்பட்டுள்ளது.காட்டு விலங்குகள் வீட்டுச் சூழ்நிலையில் வளரும்போது […]

Read more

ஐரோப்பியத் தத்துவ இயல்

ஐரோப்பியத் தத்துவ இயல், ராகுல் சாங்கிருத்யாயன், தமிழில் ஏ.ஜி.எத்திராஜுலு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 124, விலை 105ரூ. இந்திய பயண உலகின் தந்தை’ எனப் புகழப்படும் ராகுல் சாங்கிருத்யாயன், கிரேக்கத் தத்துவ அறிஞர்களின் தத்துவங்களையும், ஐரோப்பியத் தத்துவார்த்த சிந்தனையாளர்களின் கருத்துக்களையும் மிக விரிவாக எடுத்துக் கூறுகிறார். அதுவே ஐரோப்பியத் தத்துவ அறிஞர்கள் குறித்த பார்வையையும், தத்துவங்களையும், சமயங்களையும் முழுமையாக ஐரோப்பியத் தத்துவ இயல் நுாலில் முன் வைத்துத் தந்துள்ளார். யுனிக் தத்துவவியலாளர்களில் (கி.மு. 600 – 400) வரை ஆரம்பித்து, முதல் […]

Read more

குழந்தைகளும் குட்டிகளும்

குழந்தைகளும் குட்டிகளும், ஓல்கா பெரோவ்ஸ்கயா, ருக்மணி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக். 260, விலை 180ரூ. ஓல்கா, சோன்யா, யூலியா, நத்தாஷா ஆகிய நான்கு சகோதரிகள், காட்டில் வாழக்கூடிய புலி, ஓநாய், நரி உள்ளிட்ட கொடிய விலங்குக் குட்டிகளை வீட்டில் வளர்க்கின்றனர். அவற்றுக்கு உணவளிப்பதும், குதுாகலத்துடன் விளையாடுவதும், அன்பு செலுத்துவதும் என, ஒவ்வொன்றையும் படிக்கப் படிக்க பரவசமும், மகிழ்ச்சியும், திகிலும், துயரமும், ஆர்வமும் மாறி மாறி ஆட்கொள்வதை உணர முடிகிறது. நன்றி:தினமலர், 27/5/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more
1 3 4 5 6 7 26