இலக்கிய சிற்பி மீரா

இலக்கிய சிற்பி மீரா, சாகித்ய அகாதெமி, விலை 50ரூ. சாகித்திய அகாதெமியின் சார்பில் வெளிவரும் ‘இந்திய இலக்கிய சிற்பிகள்’ வரிசையில் கவிஞர் மீரா குறித்து எழுதப்பட்ட நூல். ‘மீரா கவிதைகள்’ (மரபு கவிதை), ‘கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்’ (வசன கவிதை), ‘ஊசிகள்’ (அங்கத கவிதை), ‘மூன்றும் ஆறும்’ (கவியரங்க கவிதை), ‘குக்கூ’ (குறுங்கவிதை), ‘வா இந்தப்பக்கம்’ (கட்டுரை) என்பன என்றென்றும் அவரது பெயர் சொல்லும் முத்திரை நூல்கள். கல்லூரி பேராசிரியர், முதல்வர், போராளி, இதழாசிரியர், கவிஞர், கட்டுரை ஆசிரியர், பதிப்பாளர் என்றாற்போல் […]

Read more

தமிழில் ஒற்றுப்பிழையின்றி எழுத மிக எளிய விதிகள்

தமிழில் ஒற்றுப்பிழையின்றி எழுத மிக எளிய விதிகள், முனைவர் மணிமேகலை புஷ்பராஜ், பாவேந்தன் நினைவு அறக்கட்டளை, பக். 96, விலை 50ரூ. மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனாரின் திருமகள் மணிமேகலையார் படைத்தளித்துள்ள நூல் இது. தமிழ்மொழியின் சிறப்பில் துவங்கி, தமிழ் இலக்கணம் குறித்தும், ஒற்றுப்பிழைகள், வலி மிகுதல், வலி மிகாமை குறித்தும், தவறும் சரியும் ஆகும் சொற்கள் பற்றியும் எழுதி, தமிழின் தலையாய நூல்களையும் குறிப்பிட்டு நூல் நிறைவு பெறுகிறது. அறிஞர் பலர் தமிழில் பிழையின்றி எழுத வழிகாட்டியுள்ளனர். அந்த வரிசையில் அண்மையில் வெளிவந்த, […]

Read more

சீனத்தின் குரல்

சீனத்தின் குரல், மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 108, விலை 25ரூ. சீன நாட்டு வரலாற்றில் மகான் கம்பூஷியஸ் காலம் முதல் செஞ்சீனத்தலைவன் மா-சே-துங் காலம் வரையில் நடந்த நிகழ்வுகளின் சுருக்கத்தை சீனத்தின் குரல் என்ற தலைப்பில் நூலாசிரியர் சி.பி.சிற்றரசு தொகுத்துள்ளார். 20 மூல நூல்களிலிருந்து கடந்த 2500 ஆண்டுகளாக சீன நாடு எழுப்பிய குரல்களை, அனைவரும் படித்து தெரிந்து கொள்ளும்வகையில் எளிமையாக தொகுக்கப்பட்டுள்ளது. சீனாவில் நடந்த முக்கியமான பிரச்சினைகளை நுட்பமாகத் தெரிந்து கொள்ள உதவும் புத்தகமாகும்.   —- […]

Read more