அகமும் புறமும்

அகமும் புறமும், புலவர் நன்னன், நன்னன் குடி வெளியீடு, விலை: ரூ.400 நன்னனின் 95-வது பிறந்தநாளையொட்டி வெளிவந்துள்ள இத்தொகுப்பில், திராவிட இயக்கத்தின் முன்னணித் தலைவர்கள், தமிழறிஞர்கள், சட்டத் துறையினர், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், குடும்பத்தினர் என்று பலரும் அவரைக் குறித்து எழுதிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. நன்னன் தம்மைப் பற்றி எழுதியவையும் அவரது நூல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகளும் இதில் அடக்கம். தொடக்கப் பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கி தமிழாசிரியராகவும், பின்பு கல்லூரிப் பேராசிரியராகவும், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநராகவும் கல்வித் துறையில் தடம்பதித்தவர் நன்னன். தொலைக்காட்சியின் வாயிலாக […]

Read more

மாணவர்களுக்குரிய பொதுக் கட்டுரைகள்,

மாணவர்களுக்குரிய பொதுக் கட்டுரைகள், புலவர் நன்னன், ஏகம் பதிப்பகம், பக். 200+192, விலை 80+75ரூ. தமிழறிஞர் மா.நன்னன், பல ஏடுகளில் எழுதிய கட்டுரைகளும், பல மேடைகளில் பேசிய பேச்சுக்களும் இவ்விரண்டு தொகுதிகளில் இடம் பெற்றுள்ளன. நூலாசிரியரின் நுண்ணிய அறிவுத் திறனை ஒவ்வொரு கட்டுரையும் இயம்புகின்றன. இரு நூல்களிலும் முறையே, 25 + 20 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. முதல் நூலில், ‘பெண் தன் உணர்வை ஆணைப் போல் வெளிப்படுத்தாமையே அதன் சுவையைக் கூட்டும்போலும்’ என்றும் (பக்.21), ‘உண்மையறிவே மிகும்’ என்ற கட்டுரையில், வள்ளுவரின், ‘தொட்டனைத் […]

Read more

பெரியார் கணினி

பெரியார் கணினி, புலவர் நன்னன், ஏகம் பதிப்பகம், விலை 650ரூ. பகுத்தறிவு தந்தை என்றும், பகுத்தறிவு பகலவன் என்றும் போற்றப்பட்டவர் தந்தை பெரியார். அவர் உதிர்த்த ஐயாயிரம் பொன் மொழிகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. அரசியல், அறிவியல், கடவுள், கல்வி, சமூக சீர்திருத்தம், சாதி, சுயமரியாதை, தமிழர் நாத்திகம், நரகம் மோட்சம், மதம், பகுத்தறிவு, புராண இதிகாசங்கள், பொதுவுடைமை, மூடநம்பிக்கை என்பன போன்ற தலைப்புகளில் பெரியார் மொழிந்த மொழிகளை புலவர் நன்னன் இந்த நூலில் அழகுற தொகுத்து வழங்கியுள்ளார். இந்த நூல் குறித்து […]

Read more

இவர்தாம் பெரியார்

இவர்தாம் பெரியார், 8.திருமணம், புலவர் நன்னன், ஏகம் பதிப்பகம், விலை 70ரூ. பெரியார் வரலாறு தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை “இவர்தாம் பெரியார்” என்ற தலைப்பில் தொடர்ந்து புத்தகங்களாக புலவர் நன்னன் எழுதி வருகிறார். எட்டாவது புத்தகம், “திருமணம்” என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. திருமணம் என்றால் அது பெரியாரின் திருமணம் பற்றியது அல்ல. பல்வேறு திருமணங்கள் பற்றி பெரியார் வெளியிட்ட அறிக்கைகளும், நிகழ்த்திய சொற்பொழிவுகளும் கொண்டது. மாதிரிக்கு ஒன்று- 24/2/1932-ல் “குடியரசு” பத்திரிகையில் பெரியார் வெளியிட்ட அறிக்கை: “புதுவை முரசு” ஆசிரியர் தோழர் பொன்னம்பலனார் […]

Read more

ஏன்? எதற்கு? ஆன்மிக சந்தேகங்களுக்கு விடையும் விளக்கமும்

ஏன்? எதற்கு? ஆன்மிக சந்தேகங்களுக்கு விடையும் விளக்கமும், நர்மதா பதிப்பகம், விலை 100ரூ. இந்து சமயத்தில் நிறைய சம்பிரதாயங்கள், சடங்குகள். ஆனால் ஒவ்வொன்றும் பொருள் பொதிந்தவை. அர்த்தம் அறியாததால் அவை வீண் என்று கருதுகிறோம். அவற்றின் பயன் அறிந்து பலன் பெற இந்நூல் உதவும். கோவிலில் இறைவனை வழிபடுதல், பிரகாரத்தைச் சுற்றி வருதல், திருமுழுக்கு (அபிஷேகம்) செய்தல், தானம் செய்தல், பூஜையறையின் விதிமுறைகள் இவை போன்ற ஆன்மிகத்தில் ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் அறிய பல விஷயங்களை கேள்வி – பதில் வடிவில் தொகுத்து அளித்துள்ளார் […]

Read more

வீரமாமுனிவரின் தொன்னூல் விளக்கம்

வீரமாமுனிவரின் தொன்னூல் விளக்கம், வெளியிட்டவர் ம.மத்தியாசு, திருநெல்வேலி, விலை 600ரூ. இத்தாலி நாட்டில் பிறந்து இந்தியாவில் தமிழகத்திற்கு வந்து இறைபணி ஆற்றியதோடு தமிழ் மொழியை வளர்த்த வீரமாமுனிவர் வழங்கிய ஐந்திலக்கணத் தொன்னூல் விளக்கம் என்ற நூலை மூலமும் பதப்பகுப்பும், தொகுப்பும் கொண்டு நேருக்கு நேர் உரை என்ற முறையில் புதுமையாக வடிவமைத்துக் கொடுத்திருக்கிறார் நூலாசிரியர் ம. மத்தியாசு. வீரமாமுனிவர் தந்தருளிய இந்நூல் பழைய ஓலைச்சுவடிகளில் உள்ளதுபோல அடி பிரிக்காமல் தொடர்ச்சியாக உரைநடைபோல் அச்சிடப்பட்டுள்ளது மட்டுமல்ல, அனைத்தும் புதிய முறைப்படி மாற்றப்பட்டுள்ளது. எனவே இந்நூல் வாசிப்பவர்களுக்கு […]

Read more