மலர்களே கொஞ்சம் மலருங்கள்

மலர்களே கொஞ்சம் மலருங்கள், சிறுவர்களுக்கான அறிவியல் சிறுகதைகள், லூர்து எஸ்.ராஜ், வைகறை பதிப்பகம், விலை 40ரூ. பூக்கள் குறித்த அறிவியல் சார்ந்த விஷயங்கள், வித்தியாசமான கதை பாணியில் சொல்லப்படுகின்றன. மாணவர்கள் மனதில் எளிதில் இடம்பிடித்து மணம் வீசும். நன்றி: குமுதம், 28/3/2018.

Read more

பிருகு சம்ஹிதா

பிருகு சம்ஹிதா, தமிழில் எட்டயபுரம் க. கோபி கிருஷ்ணன், குமரன் பதிப்பகம், விலை பிருகு சம்ஹிதா ரூ.500, விவாக தீபிகா ரூ.400. இந்து ஜோதிடத்தின் தந்தையாக விளங்கும் பிருகு மகரிஷியின் ஜோதிட நூல், “பிருகு சம்ஹிதா”. இந்த நூலை தமிழில் எட்டயபுரம் க. கோபி கிருஷ்ணன் மொழி பெயர்த்துள்ளார். வடமொழியில் உள்ள மகரிஷியின் ஜோதிடக் கருத்துகளை தமிழ் மரபுக்கேற்ற வகையில், எல்லோருக்கும் புரியும் வகையில் எளிமையாக எழுதியுள்ளார். 12 ராசிக்குரிய பலன்கள் இதில் சொல்லப்பட்டிருக்கின்றன. 1,296 லக்ன பாவ பலன்களை உள்ளடக்கியது. இதே ஆசிரியர் […]

Read more

அங்கீகாரம்

அங்கீகாரம், கலைமாமணி பி.ஆர். துரை, சந்திரிகா பதிப்பகம், சென்னை, பக். 240, விலை 150ரூ.   To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-274-7.html ஒண்ணாம் வகுப்பு மட்டுமே படித்த சினிமா மற்றும் நாடகக் கலைஞரான துரை, தன் 55 ஆண்டுகால கலையுலக அனுபவங்களை வாழ்க்கை வரலாறாக வடித்திருக்கிறார். மேடை நாடகம், திரைப்படம், டி.வி. நாடகம், டப்பிங் தொடர், வானொலி நாடகம், கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம் என்று பல்வேறு பரிமாணங்களில் அவர் ஆற்றிய பணிகள் பிரமிப்பு. மோட்டார் சுந்தரம் பிள்ளை, புது […]

Read more

அரவாணிகள் அன்றும் இன்றும்

அரவாணிகள் அன்றும் இன்றும், முனைவர் கி. அய்யப்பன், விசாலாட்சி பதிப்பகம், கடையம் நல்லாப்பாளையம், விழுப்புரம் 605701, பக். 166, விலை 150ரூ. அரவாணியரின் உணவு, உறவு, சடங்குகள், தொழில்கள் என அவர்களது வாழ்க்கையை நூலாசிரியர் ஆய்வு செய்து விளக்கியுள்ளார். அரவாணிகளது கல்விநிலை, பொருளாதார நிலை போன்றவை பற்றியும், அவர்களது குழுவுக்குள் பேசும் கவுடி மொழி குறித்தும் கூறப்பட்டுள்ளது. பெண்ணியநோக்கில் அரவாணியம், திருக்குறள், அகநானூறு, நீலகேசி போன்ற இலக்கியங்களில் அரவாணியம் என அரவாணிகள் நிலை அன்றும் இன்றும் பகுத்து விளக்கப்பட்டுள்ளது. அரவாணிகள் குறித்து அறிய இந்நூல் […]

Read more

குமரகுருபரரின் தமிழ் உள்ளம்

குமரகுருபரரின் தமிழ் உள்ளம், ந. முருகேசன், ஓலைச்சுவடித்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் 613010, பக்கங்கள் 94, விலை 80ரூ குமரகுருபரரின் தமிழ்ப்பற்று அளவிடற்கரியது. அருந்தமிழ், செழுந்ததமிழ்த் தெள்ளமுது, சொற்களை பழுத்த தொகைத்தமிழ், புத்தமுதம் வழிந்தொழுகும் தீந்தமிழ், இசை முத்தமிழ் என்றெல்லாம் அகங்குளிரப்பாடி 17ஆம் நூற்றாண்டில் தமிழை உச்சாணிக் கொம்புக்கு ஏற்றியவர். பக்தி மணமும் பைந்தமிழ் மணமும் கமழும் நூலாக இது திகழ்கிறது. இவ்வாறு தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ம. திருமலை வழங்கியுள்ள அணிந்துரை இந்நூலுக்கு அணி சேர்த்துள்ளதை வழிமொழிந்தே ஆகவேண்டும். குமரகுருபரரின் தமிழ் […]

Read more