இருண்மையியல் கொள்கைகளும் பயில்முறைகளும்

இருண்மையியல் கொள்கைகளும் பயில்முறைகளும்,  ம.திருமலை, செல்லப்பா பதிப்பகம்,  பக்.224, விலை ரூ.220. ஒருவர் அல்லது ஒரு பொருள் தனிப்பட்டுத் துலக்கமாகத் தெரியாமலும் தக்க வெளிப்பாட்டில் இல்லாத முறையிலும் இருப்பது இருண்மை. இலக்கியப் படைப்பின் உள்ளே பொதிந்து வைக்கப்பட்டுள்ள ஒரு கருத்தானது, முதல் வாசிப்பில் தெளிவாகப் புலப்படாத நிலையில்தான் அது இருண்மை எனப்பட்டது. 16 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் நிலவிய அரசியல் நெருக்கடிகள் எதையும் வெளிப்படையாகக் கூற முடியாதபடி தடுத்தன. அப்போது படைப்பாளிகள் மறைபொருளாக, இரட்டைப் பொருள் கொண்ட உருவகநிலையில் எதையும் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார்கள் […]

Read more

மதுரைக் கோயில் வரலாறு

மதுரைக் கோயில் வரலாறு, இரா.இளங்குமரன், செல்லப்பா பதிப்பகம், விலை 120ரூ. கோவில் நகரம் என்று புகழ்பெற்ற மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோவிலின் சிறப்புகள், அந்தக் கோவில் தொடர்பான வரலாறு போன்றவை விளக்கமாகத் தரப்பட்டுள்ளன. கட்டுரை வடிவில் தராமல் பேசிக்கொள்வது போன்ற நடையில் இந்த புத்தகத்தை அமைத்து இருப்பதால், படிக்க சுவையாகவும் ருசிகரமாகவும் உள்ளது. மதுரைக்கோவிலை நேரில் கண்டது போன்ற உணர்வை இதன் மூலம் பெறலாம். நன்றி: தினத்தந்தி. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027254.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more

கண்ணன் வருவாயா

கண்ணன் வருவாயா, வாழ்வியல் அனுபவங்கள், வரலொட்டி ரெங்கசாமி, தனலெட்சுமி பதிப்பகம், சென்னை, விலை 330ரூ. தன்னலமற்ற அன்பின் வெளிப்பாடு பகவத் கீதையைப் புனித நூலாக்கியது நாம் செய்த மிகப் பெரிய தவறு என்று இந்நூலைத் தொடங்கியுள்ளார் வரலொட்டி ரெங்கசாமி. பகவத் கீதையை ஒரு தத்துவமாக நினைத்து ஒதுக்கிவைக்காமல் வாழ்க்கைக்குத் தேவையான ஒன்றாகப் பார்க்கும்போது அதில் ஏராளமான வாழ்வியல் விளக்கங்கள் பொதிந்து கிடக்கின்றன என்கிறார் ஆசிரியர். பகவத் கீதையை முதிய வயதில் படிக்கலாம் என்னும் எண்ணம் குறித்த மாறுபட்ட கருத்தைப் பதிவு செய்திருக்கிறார் வரலொட்டி ரெங்கசாமி. […]

Read more

கல்கியின் முத்திரைக் கதைகள்

கல்கியின் முத்திரைக் கதைகள், செல்லப்பா பதிப்பகம், மயூரா வளாகம், 48, தானப்ப முதலி தெரு, மதுரை 1, விலை 100ரூ. தமிழ்நாட்டின் மாபெரும் எழுத்தாளரான கல்கி எழுதிய 12 சிறந்த சிறுகதைகள் கொண்ட நூல் இது. ஏறத்தாழ 80 ஆண்டுகளுக்கு முன் எழுதிய கதைகள். ஆயினும் இன்று பூத்தமலர் போல மணம் வீசுகின்றன. கல்கியின் கதைகளுக்கு வயதே இல்லை. மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் ம. திருமலை, கல்கியின் கதைகளை எல்லாம் படித்துப் பார்த்து, ஆராய்ந்து இந்த 12 கதைகளை முத்திரைக் கதைகளாகத் தேர்வு […]

Read more

அரசு பதில்கள்

அரசு பதில்கள், குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக். 192, விலை 150ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-307-4.html கலை, இலக்கியம், சினிமா, அரசியல், சமூகம், அறிவியல், உலக அறிவு, நாடகம், விளையாட்டு, மொழிபெயர்ப்பு, விமரிசனம் என்று எல்லாமும் அடங்கிய ஒரு கருத்துப் பெட்டகம்தான் அரசு பதில்கள். ஒவ்வொரு பதிலிலும் வாழைப்பழத்தில் ஊசிஏற்றுவதுபோல ஒரு விமர்சனம் இருக்கும். எல்லா பதிலும் ஆழ்ந்த பட்டறிவும் ஒரு தேடலும் இருக்கும். வயது வித்தியாசம் இன்றி ரசிக்க முடியும். இந்தியாவின் […]

Read more

ஆச்சி

ஆச்சி, கவிஞர் கண்ணதாசன், பக். 207, கண்ணதாசன் பதிப்பகம், சென்னை – 17. விலை ரூ. 100 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-587-2.html நாட்டுக்கோட்டைச் செட்டியார்களின் வழக்காறுகள், மரபுகள், மாண்புகள், சமூக யதார்த்தம் ஆகியவற்றோடு பின்னிப் பிணைந்த உரைநடைச் சித்திரம்தான் கவியரசு கண்ணதாசனின் ஆச்சி நாவல். இந்நாவலில் பயின்று வருகிற சீதை ஆச்சி, தண்ணீர்மலையான், பெரியகருப்பன், ராமநாதன், தெய்வானை, அன்னபூரணி, மெய்யம்மை ஆகிய ஒவ்வொரு கதாபாத்திரமும் செட்டியார் மரபின் அழுத்தமான வார்ப்புகள். ஒரு சமூகத்தின் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை […]

Read more