பேராற்றல் படைத்தவர்களே எழுந்திருங்களே

பேராற்றல் படைத்தவர்களே எழுந்திருங்களே, ஏ,எல்.சூர்யா, பி.பாசிட்டிவ் புரொடக்ஷன்ஸ், விலை 100ரூ. வாழ்க்கையில் வெற்றி பெற வழிகாட்டும் கட்டுரைகள் அடங்கிய புத்தகம். “அறிவாற்றலும் அறியாமையும்”, “கனவுகள் மெய்ப்படுமா?”, “கடமையைச் செய், பலனை எதிர்பாராதே” முதலான தலைப்புகளில் 15 கட்டுரைகளை ஏ.எல்.சூர்யா எழுதி இருக்கிறார். பயனுள்ள புத்தகம். நன்றி: தினத்தந்தி, 24/1/2018.

Read more

சட்டம் என்ன சொல்கிறது?

சட்டம் என்ன சொல்கிறது?, மணிமேகலைப் பிரசுரம், விலை 220ரூ. சட்டம் பற்றி அனைவரும் அறிந்து கொள்வது அவசியம், பல்வேறு பிரச்சினைகளுக்கு சட்டம் கூறும் தீர்வு என்ன என்பதை, சட்ட நிபுணர் ஏ.பி.ஜெயச்சந்திரன் கேள்வி – பதில் ரூபத்தில் எழுதியுள்ளார். பயனுள்ள புத்தகம். நன்றி: தினத்தந்தி, 24/1/2018.

Read more

உலக நாயகன் கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசன், தினத்தந்தி பதிப்பகம், விலை 280ரூ. ‘தினத்தந்தி’யில் வரலாற்றுச் சுவடுகள் நெடுந்தொடர் வெளியானபோது, நடிகர் கமல்ஹாசன் வரலாறு 70 வாரங்களாக வெளிவந்தது அது இப்போது தினத்தந்தி பதிப்பகத்தால் ‘உலக நாயகன் கமல்ஹாசன்’ என்ற பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 352 பக்கங்கள். முழுவதும் கண்ணைக் கவரும் வண்ணத்தில். 6 வயதில் ‘களத்தூர் கண்ணம்மா’வில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானது. சினிமாவுக்காக பரத நாட்டியம் கற்றுக் கொண்டு ‘டான்ஸ் மாஸ்டர்’ ஆனது. 27 வயதில் நூறு படங்களில் நடித்து சாதனை புரிந்தது. தமிழ், மலையாளம், […]

Read more

மனித யந்திரம்

மனித யந்திரம், சின்னப்ப பாரதி, கோரல், பக். 119, விலை ரூ.100. சமூகத்தின் விளிம்புகளில் வாழ்ந்து வருவோர் குறித்து தொடர்ந்து எழுதி பரவலான வரவேற்பைப் பெற்ற எழுத்தாளர் கு. சின்னப்ப பாரதியின் பன்னிரண்டு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இது. ஊரில் எல்லாருடைய இழுப்புக்கும் இசைந்து கொடுக்கும் செருப்பு தைக்கும் தொழிலாளி வீரன் முதல், வாழ்க்கைப்பட்ட வீட்டில் அனைவருக்கும் இசைந்து கொடுக்கும் இல்லத்தரசி, ஒரு காவல் நிலையத்தையே தனது இல்லமாக்கிக் கொண்டு அங்கு நடைபெறும் அநீதிகளின் ஏக நேரடி சாட்சியான போதிலும், அந்த அநீதிகளுக்கு இசைந்து […]

Read more

தமிழகத் தொல்லியல் ஆய்வுகள் கீழடி வரை….

தமிழகத் தொல்லியல் ஆய்வுகள் கீழடி வரை…., சி.இளங்கோ, அலைகள் வெளியீட்டகம், பக்.112,  விலை ரூ.80. தமிழக வரலாற்றைத் தெரிந்து கொள்ள தொல்லியல் ஆய்வுகள் உதவுகின்றன. இந்நூல் அத்தகைய ஆய்வுகளைப் பற்றி விரிவாகக் கூறுகிறது. சென்னை பல்லாவரம் செம்மண் மேட்டுப் பகுதி, திருவள்ளூர் மாவட்டம் கொற்றலையாற்றுப் படுகை, அத்திரம்பாக்கம் பகுதி உள்ளிட்ட பல பகுதிகளில் கிடைத்த பல்வேறு கல் ஆயுதங்கள், கற்கால மனிதர்கள் தங்கியிருந்த குகைகள், கைக்கோடரிகள், தென்னார்க்காடு, வடஆர்க்காடு, தர்மபுரி, நீலகிரி மலைத்தொடர், தேனி மாவட்டப் பகுதிகள், மதுரை அருகேயுள்ள குன்றுகளில் வரையப்பட்டுள்ள பாறை ஓவியங்கள் போன்ற […]

Read more

சின்னச் சின்ன சிறகுகள்

சின்னச் சின்ன சிறகுகள், தவத்திரு சுவாமி ஓங்காரநந்தா, பக்.306,  விலை ரூ.250. ஆன்மிக உலகில் புக விரும்பும் மக்களுக்கு இறை, வாழ்வியல் தத்துவத்திற்கான வழிகாட்டியாக இந்நுலை வெளிக் கொணர்ந்திருக்கிறார் நூலாசிரியர். ஒரு கலையை கற்க சற்குரு எவ்வளவு முக்கியம் என்பதை விரிவாக விளக்கிக் கூற முற்பட்டிருப்பது அருமை. சற்குருவானவர் ஆத்ம, ஸ்ரீ, மகாவித்தை என மூன்று வித்தைகளுக்கு அதிபதியாக விளங்குகின்றார் என்றும், காலங்களுக்கும் பிறவிகளுக்கும் அப்பாற்பட்டவர் என்றும் நூலாசிரியர் பதிவு செய்கிறார். இப்பிரபஞ்சத்தில் காண்பது, உணர்வது இரண்டு. ஒன்று அண்டம், மற்றொன்று பிண்டம். இவற்றைப் […]

Read more

பன்முக நோக்கில் இராமானுசர்

பன்முக நோக்கில் இராமானுசர், பதிப்பாசிரியர்: ப.முருகன், கங்காராணி பதிப்பகம், பக்256, விலை ரூ.160. உடையவர் என்று போற்றப்படும் ஸ்ரீஇராமானுசர் வேதத்துக்கு எளிய உரை வகுத்தவர். இளையாழ்வார், யதிராஜர், உடையவர், எம்பெருமானார், சடகோபன் பொன்னடி, கோயிலண்ணர், பாஷ்யகாரர், திருப்பாவை ஜீயர், இராமானுசர் ஆகிய எட்டுப் பெயர்களால் இவரை வைணவர்கள் போற்றித் துதிக்கின்றனர். இராமானுசரின் ஆயிரமாவது பிறந்த நாள் விழாவை நினைவுகூரும் வகையில், சென்னை அரும்பாக்கம் வைணவக் கல்லூரி தமிழ்த் துறையினரால் தேசியக் கருத்தரங்காக நடத்தப்பட்டு, பன்முக நோக்கில் இராமானுசர் பற்றி 21 பேர் எழுதிய ஆழமான ஆய்வுக் […]

Read more

யுகப் புரட்சி

யுகப் புரட்சி,  அமரர் கல்கி, வானதி பதிப்பகம், பக்.232, விலை ரூ.140. அமரர் கல்கி 1931 -39 காலகட்டத்தில் எழுதிய 20 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். மகாராஷ்டிர மாநிலம் பெயிஸ்பூர் கிராமத்தில் 1937 இல் நடந்த காங்கிரஸ் மாநாட்டைப் பற்றிய கட்டுரை, அம்மாநாட்டில் பேசப்பட்ட விஷயங்கள், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுடன் மட்டும் நின்றுவிடவில்லை. மாநாட்டுக்குச் சென்றவர்கள் தங்கிய இடம், குளிக்க செய்திருந்த ஏற்பாடுகள், மின்சாரம் இல்லாத அந்த ஊரில் இரவு நேரத்தில் எரியவிடப்பட்ட விளக்குகள், அளிக்கப்பட்ட உணவு என அனைத்தையும் மிகுந்த நகைச்சுவை உணர்வுடன் விவரிக்கிறது. […]

Read more

அறிவு வழிகள்

அறிவு வழிகள், பேகன் கட்டுரைகள், தமிழில் முகில்வண்ணன், சாகசம், பக்.280, விலை ரூ.250. பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்  என்றார் மகாகவி பாரதியார். இங்கிலாந்து நாட்டில் ஏற்பட்ட மறுமலர்ச்சி காலத்தின் குழந்தை என கருதப்பட்ட பிரான்சிஸ் பேகனின் 60 கட்டுரைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு இந்நூலில் தொகுத்தளிக்கப்பட்டிருக்கின்றன. பிரான்சிஸ் பேகன் வாழ்ந்த காலத்தின் சமூக நிலைமைகளுக்கேற்ப அக்கால வாழ்வியல் விழுமியங்கள் இருந்திருக்கின்றன. அவற்றில் புது ஒளி பாய்ச்சும்விதமாக பேகன் தனது கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறார். உண்மை, மத ஒற்றுமை, பழியுணர்ச்சி, பொறாமை, […]

Read more

காந்தி வழியது உலகம் – காந்தியத்தின் உலகளாவிய தாக்கம்

காந்தி வழியது உலகம் – காந்தியத்தின் உலகளாவிய தாக்கம், முதல் தொகுதி. இராம் பொன்னு, சர்வோதய இலக்கியப் பண்ணை, பக்.224, விலை ரூ.150. மகாத்மா காந்தியின் சிந்தனைகள் உலக அளவில் ஏற்படுத்திய தாக்கத்தைக் கூறும் நூல். கான் அப்துல் கஃபார் கான், மார்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா, தலாய் லாமா, ஆங் சான் சூ கி, லான்சா டெல் வாஸ்டோ (சாந்திதாஸ்), சீசர் எஸ்ட்ரடா சாவெஸ், லெக் வலெசா ஆகியோர் மக்களுக்காக உலக அளவில் போராடியவர்கள். அவர்கள் பல்வேறு போராட்ட வழிமுறைகளைப் பின்பற்றினாலும் […]

Read more
1 2 3 4 5 8