இந்தியாவின் மேன்மைகளும் சிறப்புகளும்

இந்தியாவின் மேன்மைகளும் சிறப்புகளும், பேராசிரியர் க.பரந்தாமன், மணிமேகலைப் பிரசுரம், விலை 125ரூ. தமிழ்ச் சமுதாயம் ஆய்வு செய்யப்பட்டுள்ளதுடன், தற்போதைய நிலையில் தமிழ்ச் சமுதாயம் எந்த அளவு வளர்ச்சியையும், வீழ்ச்சியையும் சந்தித்துள்ளது என்பது தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக இன்றைய இந்தியச் சமுதாயத்தில் இளைஞர்கள் என்ற தலைப்பில் வெளியான கட்டுரை அனைவரையும் சிந்திக்க தூண்டுகிறது. சட்டங்களும், சம்பிரதாயங்களும் மக்கள் நலன் கருதியே செயல்படுத்துவதன் மூலம் உலக நாடுகளுக்கு இந்தியா வரும் 20 ஆண்டுகளில் வழிகாட்டும் என்று நூலாசிரியர் தன்னுரைய வைர வரியையும் நூலில் சுட்டி காட்டி உள்ளார். […]

Read more

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன், கல்கி, சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம், விலை ஐந்து பாகங்களும் சேர்த்து 2500ரூ. புதிய வடிவமைப்பில் பொன்னியின் செல்வன் கல்கியின் படைப்புகள் அரசுடைமை ஆக்கப்பட்ட பிறகு, அவருடைய நூல்கள் பல்வேறு பதிப்பகங்களால், பல்வேறு வடிவங்களில் வெளியிடப்படுகின்றன. குறிப்பாக கல்கியின் பிரம்மாணடமான வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் அநேகமாக எல்லாப் பதிப்பங்களிலும் விதம் விதமான தோற்றங்களிலும், விலைகளிலும் வெளியிடப்பட்டுள்ளன. இப்போது சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் இந்த நாவலை, கண்ணையும், கருத்தையும் கவரும் வண்ணம் வெளியிட்டுள்ளது. ஐந்து பாகங்களும் ஐந்து புத்தகங்களாக, ஆர்ட் காகிதத்தில் அச்சிடப்பட்டுள்ளன. பக்கத்துக்குப் பக்கம் […]

Read more

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு, எஸ்.ஜெகன்னாதன், எஸ்.எஸ்.பப்ளிகேஷன்ஸ், விலை 100ரூ. மனிதர்களை மகிழ்விக்கும் கால்நடைகளை போற்ற வேண்டும் என்று விவசாயப் பெருமக்களால் கொண்டாடப்படுவதுதான் மாட்டுப் பொங்கலும், அதையொட்டி கொண்டாடப்படும் ஜல்லிக்கட்டு விளையாட்டும். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மட்டுமல்ல, உலக நாடுகள் பலவற்றில் கால்நடைகளை வைத்து கொண்டாடும் விழாக்கள் குறித்து இந்த நூலில் எழுத்தாளர் எஸ்.ஜெகன்னாதன் சுவையாக எழுதியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 24/1/2018.

Read more

இலக்கிய அமுதம்

இலக்கிய அமுதம், ச.உமாதேவி, நந்தினி பதிப்பகம், விலை 80ரூ. இலக்கியச் சுடர், எழுத்துச் சிற்பி முதலான விருதுகளைப் பெற்றுள்ள ச.உமாதேவி, “இலக்கிய அமுதம்” என்ற தலைப்பில், நூல் எழுதியுள்ளார். பாவேந்தர் கவிதைகளில் பெண்ணியம், அருட்பா காட்டும் பண்பாட்டுக் கூறுகள், திருக்குறளில் கல்வி உள்பட 15 ஆய்வு கட்டுரைகள் இதில் அடங்கியுள்ளன. எல்லாம், இலக்கியச் சிறப்பு வாய்ந்த கட்டுரைகள். சிந்தனைக்கு விருந்தளிப்பவை. நன்றி: தினத்தந்தி, 24/1/2018.

Read more

தாமரை செந்தூர் பாண்டி நாவல்கள்

தாமரை செந்தூர் பாண்டி நாவல்கள், சிவாமி புத்தகாலயம், விலை 900ரூ. ஏழை மக்களின் துயர வாழ்வை படம் பிடித்துக் காட்டுவதில் வல்லவர் தாமரை செந்தூர் பாண்டி. அவர் எழுதிய நாவல்களில் முக்கியமான 16 நாவல்களை தேர்வு செய்து, ஒரே புத்தகமாக (மொத்தம் 1184பக்கங்கள்)வெளியிட்டு இருக்கிறார்கள். நாவல்களில் தாமரை செந்தூர் பாண்டி தனக்குரிய முத்திரைகளை ஆழமாகப் பதித்திருக்கிறார். இந்த நூலில் உள்ள “அந்தரங்க கேள்வி” என்ற நவால், “குருவம்மா” என்ற பெயரில் திரைப்படமாகியது. அதற்கு திரைக்கதை அமைத்து, டைரக்ட் செய்த தாமரை செந்தூர்பாண்டி ரிக்ஷாக்காரராக நடிக்கவும் […]

Read more

தப்புக்கடல

  தப்புக்கடல, பெ.கருணாகரன், குன்றம் பதிப்பகம், விலை 150ரூ. மண் வாசனை வீசும் பெ. கருணாகரன் கதைகள் தமிழ்நாட்டில் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரும், பத்திரிகையாளருமான .கருணாகரன் எழுதிய 15 சிறுகதைகள் கொண்ட புத்தகம் ‘தப்புக்கடல’. கதாபாத்திரங்களை வடிவமைப்பது, கதையை வேகமாக நடத்திச் செல்வது இரண்டிலும் முழு வெற்றி பெற்றிருக்கிறார், கருணாகரன். அணிந்துரை வழங்கிய வெ. இறையன்பு, “பெ.கருணாகரன் எழுத்துகள் பரிச்சயமானவை மட்டுமல்ல. படிக்கத் தூண்டுபவையும் கூட… மண்ணின் மணம் நிறைந்தவை” என்று குறிப்பிட்டிருப்பது, முற்றிலும் உண்மை. நன்றி: தினத்தந்தி, 24/1/2018.

Read more

ஒரு துணைவேந்தரின் கதை

  ஒரு துணைவேந்தரின் கதை, சே.சாதிக், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், முதல்பாகம் விலை 400ரூ, இரண்டாம் பாகம் விலை 350ரூ. சென்னைப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சே.சாதிக், தனது வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்களைத் தொகுத்து கதை போல எழுதி இருக்கிறார். முதல் பாகத்தில் இளமைக் காலப் பள்ளிப் படிப்பு முதல் பி.இ.படிப்பில் சேரும் வரையிலான நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கியுள்ளார். இரண்டாம் பாகத்தில் பொறியியல் மாணவராகவும், ஆசிரியராகவும் இருந்த காலகட்டத்தை விளக்கியுள்ளார். எழுத்து, மொழி, பேச்சு மொழி இவ்விரண்டையும் கையாண்டு மிகச் சாதாரண நடையில் பாமரரும் […]

Read more

எமோஷனல் இன்டெலிஜென்ஸ் 2.0,

எமோஷனல் இன்டெலிஜென்ஸ் 2.0, சோம.வள்ளியப்பன், கிழக்கு பதிப்பகம், விலை 175ரூ. உணர்வு மேலாண்மை என்ற எமோஷனல் இன்டெலிஜென்ஸ் புத்தகத்தில் மனிதர்களிடையே நட்பை ஏற்படுத்த தேவைப்படும் குணாதிசயங்கள் தெளிவுப்படுத்தப்பட்டு உள்ளது. அத்துடன் நமக்கு ஏற்படும் விதவிதமான உணர்வுகளை எப்படி ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த முடியும் என்ற வழியையும் இந்த நூல் கற்றுத்தருகிறது. அத்துடன், பிறந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும், பெண்களுக்கு ஏற்படும் மனஅழுத்தங்களில் இருந்து மீள்வதற்கான வழிகளும் கற்றுத்தருகிறது. மன்னிப்பின் அவசியத்தையும், மற்றவர்களுக்கு உதவி செய்வதன் முக்கியத்துவத்தையும் இந்த நூல் மூலம் தெரிந்து கொள்ள முடியும். எல்லாவற்றுக்கும் […]

Read more

இனி இல்லை மரணபயம்

இனி இல்லை மரணபயம், சந்தியா நடராஜன் சந்தியா பதிப்பகம், விலை 100ரூ. மரணம், வாழ்க்கையின் எதார்த்தம், இந்த எதார்த்தத்தை ஏற்கமறுக்கிற மனம், பயத்தில் வாழ்க்கையின் பெரும்பாலான சந்தோஷத் தருணங்களைக் கொண்டாட விடாமல் செய்கிறது.இதனால் வாழ்க்கையை வாழாமல் தொலைத்து விடுகிறவர்கள் நிறைய பேர். மரணத்தைப் பற்றி தேவையில்லாத பயமும் குழப்பமும் கொண்டவர்களுக்கு உற்ற தோழனாக இருக்கும் இந்த நூல். நன்றி: தி இந்து, 6/1/2018.

Read more

பத்துப்பாட்டினில் ஆளுமை வளர்ச்சி,

பத்துப்பாட்டினில் ஆளுமை வளர்ச்சி, முனைவர் கெ.ரவி, நிலாசூரியன் பதிப்பகம், விலை 200ரூ. பழந்தமிழர்கள் ஆளுமைத் திறன் உடையவர்களாகத் திகழ்ந்தனர். சங்க இலக்கிய நூலான பத்துப்பாட்டினில் இடம் பெற்றுள்ள தமிழர்களின் ஆளுமையை முனைவர் கெ.ரவி ஆய்வு செய்துள்ளார். பத்துப்பாட்டினில் காணப்படும் ஆளுமை வளர்ச்சிக் கோட்பாடு, உளவியல் அறிஞர்களின் ஆளுமை வளர்ச்சிக் கோட்பாட்டோடு ஒத்துப்போகும் தன்மையை இந்த நூலில் அவர் விளக்கியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 24/1/2018.

Read more
1 2 3 4 8