யாருமற்ற கடற்கரை உரையாடல்

யாருமற்ற கடற்கரை உரையாடல், மிதக்கும் யானை, ராஜா சந்திரசேகர், சந்தியா பதிப்பகம், விலை: ரூ. 140. மிலன் குந்தேராவின் சொற்களில், ‘நாவல் என்பது ஆசிரியரின் வாக்குமூலம் அல்ல; எலிப்பொறியாக மாறிவிட்ட இன்றைய உலகத்தில், மனித வாழ்க்கை மீதான விசாரணை’. துளி அமுதமும் நிறைய விஷமுமாக இறங்கிக்கொண்டிருக்கும் இன்றைய வாழ்க்கையின் மீதான விசாரணையாக விரிகிறது சுனில் கிருஷ்ணனின் முதல் நாவல் ‘நீலகண்டம்’. காதல் திருமணம், குழந்தைக்கான தவிப்பு, பெண் குழந்தையைத் தத்தெடுப்பது, ஆட்டிஸம் பாதித்த அந்தக் குழந்தையை வளர்ப்பதன் துயர சாகசம் – இதையெல்லாம் ஒற்றை வரிசையில் அல்லாமல் பல்வேறு முனைகளில், […]

Read more

நஞ்சும் துளி அமுதமும்

நஞ்சும் துளி அமுதமும், நீலகண்டம், சுனில் கிருஷ்ணன், யாவரும் பதிப்பகம், விலை: ரூ.270 கட்டற்ற வேலை நேரம், அன்றாட அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தொழிலாளர்கள் உழன்றுகொண்டிருந்த நேரத்தில்தான் இந்தியாவின் முதல் தொழிற்சங்கமான ‘மெட்ராஸ் லேபர் யூனியன்’ 1918 ஏப்ரல் 27-ல் உருவானது. திரு.வி.க., சிங்காரவேலர், வ.உ.சி., பி.பி.வாடியா ஆகியோர் முன்முயற்சியில் சென்னையில் தொடங்கப்பட்டபோது, அதன் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் வழக்கறிஞரான சக்கரைச் செட்டியார். தன் வாழ்நாள் முழுவதையுமே தொழிலாளர் நலன் காக்க, தொழிற்சங்கங்களை உருவாக்கிச் செயல்படுத்தினார் அவர். பஞ்சாலை, மின்னுற்பத்தி – விநியோகம், மண்ணெண்ணெய் விநியோகம், […]

Read more

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம்

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம், பாமயன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை ரூ.190 சுற்றுச்சூழலைச் சீர்கெடுக்காமல் இயற்கையோடு இயைந்து வேளாண்மையை மேற்கொள்ளக்கூடிய நடைமுறைகள் பரவலாகிவருகின்றன. ஆனால், இதற்கு வழிகாட்டும் முழுமையான களக் கையேடு நம்மிடம் இல்லை. அதை மனதில்கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது பாமயனின் இந்நூல். ‘இந்து தமிழ்’ நாளிதழின் ‘நிலமும் வளமும்’ பகுதியில் வெளியாகி, பரவலான வரவேற்பைப் பெற்ற தொடர் இது. தமிழகத்தில் இயற்கை வேளாண்மை பரவலாகக் காரணமாக இருந்த ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’போல இந்த நூலும் பயன்படும். நன்றி: தமிழ் இந்து இந்தப் புத்தகத்தை […]

Read more

ஸ்ரீஅகத்திய பகவான் அருளிய ஆதித்ய ஹ்ருதயம் விரிவுரை

ஸ்ரீஅகத்திய பகவான் அருளிய ஆதித்ய ஹ்ருதயம் விரிவுரை, சு.அரங்கநாதன், ஸ்ரீ அரங்கன் நிலையம், பக்.496, விலை ரூ.400. வான்மீகத்தில், இராம – இராவண யுத்தத்தின்போது, போரின் நிலையைக் காண வருகின்றார் மாமுனிவர் அகத்தியர். போரினால் சோர்வும் துயரமும் கொண்டிருக்கும் இராமனுக்கு அவர் உபதேசித்த வெற்றி மந்திரம்தான் “ஆதித்ய ஹ்ருதயம்”. சூரியதேவனின் பலத்தையும் ஆற்றலையும் பெற்றுத் தரும் இந்த மந்திரத்தை நாளும் மும்முறை ஓதினால், வெற்றி உறுதி என்று அருளிச் செய்கிறார் அகத்திய முனிவர். சிதம்பரத்தில் தமிழாசிரியராக இருந்து பணி ஓய்வு பெற்றவர் சு. அரங்கநாதன். விபத்தில் […]

Read more

பிசினஸ் டிப்ஸ்

பிசினஸ் டிப்ஸ்,  சதீஷ் கிருஷ்ணமூர்த்தி, கிழக்கு பதிப்பகம், பக்.128, விலை140. சொந்தமாகத் தொழில் செய்ய விழைவோருக்கு எளிமையான, கலகலப்பான மொழியில் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார் சதீஷ் கிருஷ்ணமூர்த்தி.குட்டி, குட்டியாக இருபத்து மூன்று அத்தியாயங்களாகப் பிரித்து, புதிதாகத் தொழிலில் முனைவோருக்கு உந்து சக்தியாக இருக்கும் வகையில் நூலை வடிவமைத்திருக்கிறார். புதிதாய் பணியில் சேரும் ஓர் ஊழியரின் முதல் நாள் அனுபவம் அவருக்கு மறக்க முடியாதவண்ணம் அமைவதற்கு என்ன செய்கிறீர்கள்? என்று கேட்கும் சதீஷ், ஓர் அருமையான யோசனையை முன்வைக்கிறார். நீங்கள் பணிக்கு அமர்த்தும் புதிய ஊழியரை வரவேற்க […]

Read more

விநோத சந்திப்பு

விநோத சந்திப்பு (சீனத்துச் சிறுகதைகள்),  இராம.குருநாதன், டிஸ்கவரி புக் பேலஸ், பக்.112, விலை ரூ.100. 13 சீனத்துச் சிறுகதைகள் ஆங்கிலம் வழி தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு இந்நூலில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.1937 -1945 கால கட்டத்தில் ஜப்பான் சீனாவை ஆக்ரமித்தது அந்த ஆக்கமிப்பை எதிர்த்து சீன மக்கள் போராடினார்கள். அந்தப் போராட்டம் சீன மக்களிடையே ஏற்படுத்திய மாற்றங்களை காற்று, நெருப்பு விதை ஆகிய சிறுகதைகள் அற்புதமாகச் சித்தரிக்கின்றன. கற்பனையும் கனவும் மட்டும் ஒரு பெண்ணுக்கு இருந்தால் போதாது, எந்தப் பொறுப்பையும் சிறப்பாக ஏற்றுச் செயல்பட வேண்டும் என்பதைச் […]

Read more

கனவோடு நில்லாமல்

கனவோடு நில்லாமல், ஜெ. சதக்கத்துல்லாஹ், வானதி பதிப்பகம்,  பக்: 224, விலை ரூ. 150; தனது வாழ்க்கை அனுபவங்களை எழுதியுள்ள நூலாசிரியர்சதக்கத்துல்லாஹ் கனவை நனைவாக்குங்கள் என்று கூறி அதற்கான பலமடங்கு உந்து சக்தியை இந்த நூலின் மூலம் அளித்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருபுவனம் கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்து, இளம் வயதில் தந்தையை இழந்து, குடும்ப வறுமையிலும் பல தடைக்கற்களைப் படிக்கற்களாக மாற்றி பள்ளி, கல்லூரி, வெளிநாடுகளில் மேற்படிப்பை முடித்து இன்று ரிசர்வ் வங்கியின் தென்மண்டல இயக்குநராக உயர்ந்துள்ளார் சதக்கத்துல்லாஹ். மிக எளிய குடும்பத்தைச் […]

Read more

புதிய செலபஸ்

புதிய செலபஸ்,  கோ.வரதராஜன்,  தமிழ்ச்சுவடி, பக்.424, விலை ரூ.400. தேசியப் பண்பாட்டை வடிவமைத்த ஆன்மிக அறிஞர்கள் முதல் தற்கால தூய்மை இந்தியா திட்டம் வரை-அவற்றைப் பற்றி மிக எளிமையாக, அதே நேரத்தில் அதன் சாரம் குறையாத வகையில் நூலாசிரியர் கட்டுரைகளாக இந்நூலில் தொகுத்துள்ளார். பொதுவியல், கல்வியியல் மற்றும் தத்துவவியல், பொருளியல், விஞ்ஞானவியல் என நான்கு பகுதிகளாகப் பிரித்து, அதில் 81 கட்டுரைகளை இடம் பெறச் செய்துள்ளார். வாழ்வுக்கு வள்ளுவரையும், படிப்பறிவுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணனையும், பண்பாட்டுக்கு சகோதரி நிவேதிதையையும், இலக்கியத்துக்கு பாரதி, கம்பரையும், அறிவியலுக்கு அப்துல் […]

Read more

அகம் செய விரும்பு

அகம் செய விரும்பு,  நா.சங்கரராமன், விஜயா பதிப்பகம், பக்.168, விலை ரூ.130. நூலின் தலைப்பே வித்தியாசமாக இருப்பதைப் போல நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகளின் தலைப்புகளும் வித்தியாசமாக உள்ளன. நீங்கள் எந்த வருட மாடல்? இளிச்சவாயர்களாக இருப்போம்,  யார் உங்கள் பிக் பாஸ்,  அம்மாவும் நீயே… அப்பாவும் நீயே ஆகியவை சில உதாரணங்கள். இந்நூலில் அடங்கியுள்ள 16 கட்டுரைகளும், நமது வாழ்வில் உள்ள பல்வேறு பிரச்னைகளை எவ்வாறு சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை விளக்குவதாக இருக்கின்றன. அதே சமயம் அறிவுரை வழங்கும் தொனியில் இல்லாமல் […]

Read more

சிறகை விரி பற!

சிறகை விரி, பற!, பாரதி பாஸ்கர், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக்.176, விலை ரூ.130. ஆன்மிகத்தை மையமாகக் கொண்டு உலகின் சகல விஷயங்களையும் பார்க்கும் நூலாசிரியரின் 31 கட்டுரைகள் அடங்கிய நூல் இது. நமது பாரம்பரிய சிந்தனைகள், முன்னோரின் வாழ்க்கைமுறைகளை இன்றைய வாழ்க்கையுடன் இணைத்துப் பார்த்து தெளிவான புரிதல்களை இந்நூல் வழங்கியுள்ளது. அநீதியான எதையும் எதிர்க்கும் பண்பு நூல் முழுவதும் இழையோடி இருக்கிறது. பக்கம் பக்கமாக எழுதப்பட வேண்டிய பல விஷயங்கள் ஓரிரு வரிகளிலேயே சொல்லப்பட்டிருக்கின்றன. எதையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை ” கண், […]

Read more
1 2 3 9