தமிழகச் சுற்றுலாக் கோட்டைகளும் காதல் கோட்டைகளும் பகுதி – 3

தமிழகச் சுற்றுலாக் கோட்டைகளும் காதல் கோட்டைகளும் பகுதி – 3, சி.எஸ்.முருகேசன், சங்கர் பதிப்பகம், விலைரூ.150 பண்டைய தமிழர் ஆட்சிக் காலத்தில் கட்டடக் கலையும் அழகுணர்ச்சியும் சிறந்து விளங்கியிருக்கின்றன என்பதை சங்க கால இலக்கியங்கள் இயம்புகின்றன. குறிப்பாகக் கோட்டைகளும், மதில்களும் முடி மன்னர்களின் பெருமைகளாகக் கருதப்பட்டன. ஒரு நாட்டின் மீது போர் தொடுக்கும்போது, எதிரி மன்னரின் மதிலை அழிப்பதே அன்று வெற்றியின் உச்சமாகக் கருதப்பட்டது. பிற்காலத்தில் வணிகத்திற்கான கோட்டைகளும், காதல் கோட்டைகளும் கூட கட்டப்பட்டன. செஞ்சி கோட்டை, வேலுார் கோட்டை, தரங்கம்பாடி கோட்டை, சதுரங்கப்பட்டினம் […]

Read more

அஞ்சலை அம்மாள்

அஞ்சலை அம்மாள் ,  ராஜா வாசுதேவன்,  தழல், பக்.320;  விலை ரூ.250.   சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட சாமானியக் குடும்பத்துப் பெண் அஞ்சலை அம்மாளின் தியாகத்தை ஒரு நாவல் போல விறுவிறுப்பாகவும், யதார்த்தத்தோடும் எழுதியிருக்கிறார் நூலாசிரியர். நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த அஞ்சலையம்மாள், துணிச்சலுடன் வெள்ளைக்கார இளைஞரை எதிர்கொண்டு அவரது தவறான செயலுக்கு மக்கள் ஆதரவுடன் தண்டனை தருவதும், ஆங்கிலேய அரசு தேடிவந்த பாரதியாரை புதுச்சேரியில் இருந்து மாட்டுவண்டியில் தனது வீட்டுக்கு வரவழைத்து உபசரித்து ஆசி பெற்றதும் வியக்க வைக்கிறது. அஞ்சலை அம்மாளின் சுதந்திர போராட்ட செயல்களுக்குப் […]

Read more

 இப்படியும் மனிதர்கள்

 இப்படியும் மனிதர்கள்,  சீ.சந்திரசேகரன், தொகுப்பாசிரியர்: ந.க.மங்களமுருகேசன், பகவதி பதிப்பகம்,  பக்.160, விலை ரூ.100;  உளவியல் மருத்துவ நிபுணரான நூலாசிரியர் தனது 40 ஆண்டு கால அனுபவங்களின் அடிப்படையில் இந்நூலை எழுதியிருக்கிறார். தன்னிடம் சிகிச்சைக்கு வந்த பலதரப்பட்ட நோயாளிகளின் பிரச்னைகளைக் கேட்டு, அவற்றுக்கு அவர் அளித்த சிகிச்சைகளைப் பற்றி எழுதியிருக்கிறார். உளவியல் மருத்துவர் என்பதால், அவர் விவரிக்கும் சம்பவங்கள் கதைகளைப் படிப்பதைப் போன்ற உணர்வைத் தருகின்றன. எனினும் மருத்துவரீதியான பல அரிய தகவல்கள், உண்மைகள் நூல் முழுவதும் உள்ளன. மனித வாழ்வில் இவ்வளவு மனநலப் பிரச்னைகளா? […]

Read more

வாழ்வியல்

வாழ்வியல், த.திலகர்; விஜயா திலகர் பதிப்பகம், பக். 128, விலை ரூ.150;  சுவாமி சின்மயானந்தரால் தொடங்கப்பட்ட சின்மயா மிஷன் அமைப்பில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொண்டு புரிந்து வரும் நூலாசிரியர் திலகர், சுவாமிஜியிடம் கற்ற, கேட்ட விஷயங்களைப் பல்வேறு தலைப்புகளில் நூலாக வடித்துள்ளார். மனம் ஒரு குரங்கு – அதைக் கட்டுப்படுத்த வேண்டும். செய்யும் விஷயத்தில் முழு மனதைச் செலுத்துவதே தியானம் . நாம் எந்தத் துறையைத் தேர்வு செய்ய வேண்டும், மணவாழ்க்கையில் நிம்மதியாக இருப்பது எப்படி, ஓம் என்ற எழுத்தின் சிறப்பு, பள்ளிப் […]

Read more

பூமியைச் சுற்றிப் பாருங்கள்

பூமியைச் சுற்றிப் பாருங்கள்,  பத்ஹுர் ரப்பானி,  செய்யது ஹோம் பப்ளிஷர்ஸ், பக்.426, விலை ரூ.250.   1970 ஆகஸ்ட் மாதத்திலிருந்து 20 அக்டோபர் 2018 வரை உலகின் பல நாடுகளுக்குச் சென்று வந்த தனது பயண அனுபவங்களை நூலாசிரியர் இந்நூலில் பதிவு செய்திருக்கிறார். வெறும் பயண அனுபவங்களாக மட்டும் இல்லாமல், சென்ற இடத்தின் சிறப்புகள், வித்தியாசமான தன்மைகள், வரலாறு என அனைத்தையும் தொட்டுச் செல்கிறது இந்நூல். சிங்கப்பூரில் எந்த நாட்டு நாணயத்தைக் கொடுத்தாலும் மாற்றிக் கொள்ளலாம். பணம் மாற்றுவதற்கென்றே பல நிறுவனங்கள் பல இடங்களில் இருக்கின்றன. […]

Read more

புதிய கல்விக் கொள்கை 2020- வரமா சாபமா?

புதிய கல்விக் கொள்கை 2020- வரமா சாபமா? ,  ஆர்.ரங்கராஜ் பாண்டே, கிழக்கு பதிப்பகம், பக்.168, விலை  ரூ.175 . மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து பல்வேறு அரசியல் கட்சியினரிடம் இருந்து ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பல்வேறு கருத்துகள் கூறப்படும் சூழலில், தமிழகத்தின் மொழி அரசியல், நீட் தற்கொலை அரசியல் என பல்வேறு விஷயங்களை இந்நூலில் பேசியிருக்கிறார் நூலாசிரியர் . தனது விருப்பத்துக்கு ஏற்ப உயர் கல்வியை படிக்கும் சுதந்திரம் புதிய கல்விக் கொள்கையில் வழங்கப்பட்டுள்ளது. இது, கல்லூரிப் படிப்பில் மிகப்பெரிய புரட்சியை […]

Read more

கண்டதும்… கேட்டதும்

கண்டதும்… கேட்டதும், விஜயலட்சுமி மாசிலாமணி, விஜயா பப்ளிகேஷன்ஸ், பக்.144, விலை ரூ.70.  உலகமெங்கும் பெண்களின் நிலை ஆண்களின் நிலையைக் காட்டிலும் கீழானதாகவே இருக்கிறது. இந்நிலை மாற, பெண்கள் தானும் உயர்ந்து, தன்னைச் சுற்றியுள்ளவர்களையும் உயர்த்த வேண்டும், ஓர் ஆசிரியரைப் போல. உலகின் பல நாடுகளில் உள்ள பெண்கள் இதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். நூலாசிரியர் பல நாடுகளுக்குப் பயணம் செய்த தனது அனுபவங்களின் அடிப்படையில், அந்நாடுகளில் தான் கண்டவற்றையும், கேட்டவற்றையும் ஆதாரமாகக் கொண்டு, ஒவ்வொரு நாட்டிலும் பெண்கள்நிலை எவ்வாறு உள்ளது என்பதை இந்நூலில் எடுத்துரைத்துள்ளார். அமெரிக்காவில் […]

Read more

நம் குழந்தை பத்திரம்

நம் குழந்தை பத்திரம், அ.சங்கரலிங்கம், வாசகன் பதிப்பகம், விலைரூ.150 ‘நான் எப்படி படித்தாலும் மறந்து போய் விடுகிறது’ என, குழந்தைகளின் படிப்பு பயத்தின் பிரதிபலிப்புடன், ‘நம் குழந்தை பத்திரம்’ புத்தகம், பக்கங்களில் பாதம் பதித்து நடை பழகி வரிகளில் வாலிபனாகி ஓடுகிறது.பாடங்களை மனப்பாடம் செய்யாமல் புரிந்து படிக்க வேண்டும் என பக்கத்திற்கு பக்கம் எளிமையாக படிக்கும் முறைகளை தெளிவாக பதிவு செய்து உள்ளார் எழுத்தாளர் சங்கரலிங்கம். புத்தக பக்கங்களை ஆக்கிரமித்துள்ள ஒவ்வொரு தலைப்புகளும். இன்றைய கல்வி முறையை காட்டுகிறது என்றாலும், படிப்பு ஒரு சுமையா […]

Read more

நான் கண்ட போராளிகள் – களமும் வாழ்வும்

நான் கண்ட போராளிகள் – களமும் வாழ்வும்,  ஓவியர் புகழேந்தி,  தோழமை வெளியீடு,  பக்.456, விலை ரூ.480. தமிழீழம் நான் கண்டதும் – என்னைக் கண்டதும்; தலைவர் பிரபாகரன் – பன்முக ஆளுமை என்ற இரு நூல்களுக்குப் பிறகு ஓவியர் புகழேந்தியின் மூன்றாவது நூல் இது. விடுதலைப் புலிகளின் வசம் தமிழீழம் இருந்த காலத்தில் இரு தடவைகள் பயணம் மேற்கொண்டவர் ஓவியர் புகழேந்தி. அவரின் இரண்டாவது பயணத்தில் 40 நாள்கள் அங்கு தங்கியிருக்கிறார். இந்த தடவை மனைவி குழந்தைகளுடன் சென்றதால், தான் சந்தித்த ஆளுமைகள் […]

Read more

இருளைக் கிழித்தொரு புயற்பறவை

இருளைக் கிழித்தொரு புயற்பறவை, இளவேனில், கொற்றவை வெளியீடு, விலைரூ.250   ரஷ்ய நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர் மாக்ஸிம் கார்க்கியின் குழந்தைப் பருவம் பற்றி விளக்கும் நுால் இது. சிறு வயதில் கார்க்கி அனுபவித்த சித்ரவதைகளையும், அவரைச் சுற்றி நடந்த நிகழ்வுகளையும் கண்முன் கொண்டு வருகிறார், ஆசிரியர் இளவேனில். கஷ்டப்பட்ட காலத்திலும், பல நுால்களை தேடித் தேடி படித்து, தன் அறிவையும், கலை, இலக்கிய புலமையையும் வளர்த்த விதத்தையும் படிக்கும் போது, பிற்காலத்தில் மிகச்சிறந்த எழுத்தாளராக உருவானதற்கான அடிப்படையை புரிந்து கொள்ள முடிகிறது. நன்றி: […]

Read more
1 4 5 6 7 8