அன்னை தெரசா

அன்னை தெரசா, கள்ளிப்பட்டி சு.குப்புசாமி, ஏகம் பதிப்பகம், விலை 55ரூ. வாழ்க்கை வரலாறு என்ற வரிசையில், அன்னை தெரசா, ராமானுஜர், போதிதர்மர், நெல்சன் மண்டேலா, காந்தியடிகள், அடால்ப் ஹிட்லர், பிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா, பாரதியார், அம்பேத்கர், காமராஜர், கக்கன், எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா, சிவாஜிகணேசன் ஆகியோரின் வாழ்க்கை குறிப்பு சுருக்கமாகவும் சிறப்பாகவும் தனித்தனி நூல்களில் தரப்பட்டு இருக்கின்றன. நன்றி: தினதந்தி, 17/1/21 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

நெஞ்சம் மறப்பதில்லை

நெஞ்சம் மறப்பதில்லை, சித்ரா லட்சுமணன், எழுத்து பிரசுரம், விலை 340ரூ. தமிழ் சினிமா உலகில், திரைக்குப் பின்னால் நடைபெற்ற காதல், மோதல், துரோகம் போன்ற பலதரப்பட்ட சம்பவங்கள் இந்த நூல் மூலம் வெளிச்சத்துக்கு வந்து இருக்கின்றன. நடிகர், நடிகைகள் மட்டும் அல்லாது, திரைப்படத்துறை சார்ந்த அத்தனை பிரிவினர் வாழ்வில் நடைபெற்ற சுவாரசியமான நிகழ்வுகள், இதுவரை அறியப்படாத ஆச்சரியமான செய்திகள் இந்த நூலில் தொகுத்துத் தரப்பட்டு இருக்கின்றன. எம்.ஜி.ஆருக்கு சிவாஜி எழுதிய கடிதம், பல பிரபலங்கள் போராட்ட வாழ்வுக்குப் பின் திரைப்படத்துறையில் நுழைந்த கதை, சிவாஜி […]

Read more

சாலாம்புரி

சாலாம்புரி, அ.வெண்ணிலா, அகநி வெளியீடு, விலை 400ரூ. கைத்தறி நெசவு தொடர்பான சொல் சாலாம்புரி என்பதைத் தலைப்பாகத் தாங்கி இருக்கும் இந்த நாவல். தமிழகத்தில் 1950 களில் நடைபெற்ற அரசியல், அப்போதைய நெசவாளர்களின் வாழ்க்கை ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. திராவிடர் கழகத்தில் இருந்து விலகி தொடங்கப்பட்ட தி.மு.க.வின் வளர்ச்சிக்கு உழைக்கும் கதாநாயகன், அவரைச் சுற்றி நடைபெறும் நெசவாளர்களின் வாழ்க்கைச் சம்பவங்கள், சாதி பிரச்சனை ஆகியவை கண் முன் படம் பிடித்துக் காட்டப்பட்டு இருக்கின்றன. சரளமான நடை, கதாபாத்திரங்களின் அப்பட்டமான பேச்சு, விறுவிறுப்பான […]

Read more

தமிழ் – தமிழ் அகராதி

தமிழ் – தமிழ் அகராதி, தமிழ்ப்பிரியன், அருணா பப்ளிகேஷன்ஸ், விலைரூ.250 சொற்களின் பொருளை உணர அகராதி துணை செய்கிறது. அரிய தமிழ் சொற்களுக்கு பொருள் கூறும் வகையில் இந்த அகராதி தயாரிக்கப்பட்டுள்ளது. அகர வரிசைப்படி சொற்கள் தொகுக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு உதவும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. சிவா என்ற சொல்லுக்கு, கடுக்காய், கீழ்க்காய்நெல்லி, நெல்லி, பங்கம்பாலை, வன்னி என்ற சொற்கள் பொருளாகக் கூறப்பட்டுள்ளன. நன்றி: தினமலர், 31/1/21 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]

Read more

தமிழ் சமஸ்கிருதம் உறவு

தமிழ் சமஸ்கிருதம் உறவு, தி.முருகரத்தினம், வீரா.அழகிரிசாமி, க.மணிவாசகம், ஞாலத் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மன்றம், விலை 200ரூ. தமிழ் மொழிக்கும் சமஸ்கிருதத்துக்கும் இடையே உள்ள உறவு தொடர்பாக ஞாலத் தமிழ்ப்பண்பாட்டு ஆய்வுமன்ற கருத்தரங்கில் தமிழ் அறிஞர்கள் அரங்கேற்றிய கட்டுரைகளில் 10 கட்டுரைகள் தேர்ந்து எடுக்கப்பட்டு இந்த நூலில் பிரசுரிக்கப்ட்டுள்ளன. ஒவ்வொரு அறிஞரும், தமிழ் மற்றும் திராவிடத்தின் தாக்கம் சமஸ்கிருதத்தில் இருக்கிறது. சமஸ்கிருதம் எந்த வகையிலும் தமிழில் பாதிப்புச் செய்யவில்லை என்பதையும், தமிழ் இலக்கணம், வடமொழி இலக்கணத்திற்குக் காலத்தால் முந்தியது என்பதையும், மொழிகளுக்கெல்லாம் முதல்மொழி சமஸ்கிருதம் […]

Read more

இந்திய பாரம்பரியம்

இந்திய பாரம்பரியம், சி.செல்வராஜ், சி.எஸ்.ஆர்.பப்ளிகேஷன்ஸ், விலை 375ரூ. பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு மாணவர்களின் வரலாற்றுப் படிப்பு முழுமைபெற வேண்டும் என்றால், நமது பாரம்பரியப் பெருமைகளை முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம் என்ற நோக்கில் இந்த நூல் எழுதப்பட்டு இருக்கிறது. இந்தியப் பாரம்பரியம், வரலாற்றுப் பாரம்பரியம், ஆன்மிகப் பாரம்பரியம், கவின்கலை மற்றும் கைவினைப் பாரம்பரியம் ஆகிய 5 அம்சங்களை விளக்குவதுடன், இவற்றை உலக நாடுகளுடன் ஒப்பிட்டு, நமது பாரம்பரியம் எந்த அளவுக்கு சிறந்தது என்பது எடுத்துக்காட்டப்பட்டு இருக்கிறது. மனித இனம் முதன்முதலில் இந்தியாவில்தான் தோன்றி […]

Read more

புத்தரின் சிந்தனைகள்

புத்தரின் சிந்தனைகள், பவுத்தப் பிரியன், கரியன்குள்ள அம்மாள் பதிப்பகம், விலைரூ.50 பகவன் என்றால் புத்தன். பகவான் என்றால் இந்து மதக் கடவுள். பகவன் புத்தர் உருவ வழிபாட்டை விரும்பாதவர். கருத்துச் சுதந்திரத்தை ஆதரித்தவர். புத்தம் பலவித கருத்துக்களை சொல்லி நிற்கிறது. அதில் தேர்ந்த தெளிந்த கருத்துக்களை தொகுத்து நுாலாக்கப்பட்டுள்ளது. மனைவியைப் பற்றி, அழகில் கர்வம் கூடாது, ஆடம்பரம் பகட்டு கூடாது, சகோதரி போல அன்பு காட்ட வேண்டும், எல்லா உயிர்களிடமும் தாயைப் போல பரிவு காட்ட வேண்டும், ஆடம்பர தேவைகளில் ஆர்வம் காட்டக்கூடாது என […]

Read more

கலைமிகு கோயில்களும் கல்லெழுத்துச் சாசனங்களும்

கலைமிகு கோயில்களும் கல்லெழுத்துச் சாசனங்களும் (கட்டுரைகள் தொகுப்பு) , குடவாயில் பாலசுப்ரமணியன்; அன்னம், பக்.240, விலை ரூ.210;  அண்மைக்காலமாக திருக்கோயில்கள் பற்றிய வரலாறுகள், புனையப்பட்ட கற்பனைச் செய்திகளின் அடிப்படையில் கட்டுரைகளாக்கப்படுகின்றன. ஆனால் இதற்கு மாறாக, கல்வெட்டு ஆதாரங்களின் அடிப்படையில் குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய வரலாற்றுக் கட்டுரைகள் உள்ளன. அவற்றின் தொகுப்பு இந்நூல். ஏராளமான படங்களுடன் கூடிய இந்தத் தொகுப்பின் மூலம் அறிய முடிகிற சில தகவல்கள்:ராஜராஜனின் தாய் வானவன் மாதேவி திருக்கோவிலூர் மலையமானின் மகள் என்பது; இந்தத் தகவல் திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோயிலிலுள்ள எண்பது […]

Read more

பாகவதப் பாரதம்

பாகவதப் பாரதம்,  சிவ.விவேகானந்தன், காவ்யா, பக்.592, விலை ரூ.600; வியாசரால் எழுதப்பட்ட வடமொழிப் புராணமான ஸ்ரீமத் பாகவதம், விஷ்ணுவின் அவதாரக் கதைகளைக் கூறுவது. அதே வியாசர் எழுதிய இதிகாசமான மகாபாரதம், பாண்டவ- கெளரவர்களிடையிலான குருவம்ச பங்காளிச் சண்டையை மையமாகக் கொண்டது. இந்த இரண்டையும் இணைக்கும் “பாகவதப் பாரதம்” என்ற காப்பியம் தமிழில் 1800-ஆம் ஆண்டுகளில் தமிழில் ஓலைச்சுவடியில் எழுதப்பட்டிருப்பது வியப்புக்குரிய செய்தி. குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீபல்பநாப நாடார் இந்நூலை எழுதி இருக்கிறார். அம்மானைப் பாடல் வடிவில் பாகவதப் பாரதம் எழுதப்பட்டுள்ளது. அந்த ஓலைச்சுவடியில், […]

Read more

முகநூல் பதிவுகள்

முகநூல் பதிவுகள்,  பெ.சுபாசுசந்திரபோசு,  சிந்தியன் பதிப்பகம், பக்.192; விலை ரூ.200. முகநூல் பதிவுகளாக இருந்தாலும் நூலாசிரியர் கூறியுள்ளபடி இந்நூல் தமிழ் மொழி முதல் பசிபிக் கடற்கரை வரை நம்மை அழைத்துச் செல்கிறது. அமெரிக்கப் பயண அனுபவங்கள், தமிழ் இலக்கியங்கள் பற்றிய குறிப்புகள், தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய அறிமுகங்கள், சிங்கப்பூர் பற்றிய செய்திகள், ஜப்பான் நாட்டின் பல்கலைக்கழகங்கள் பற்றிய தகவல்கள் என நூலின் எல்லை விரிவடைந்து கொண்டே செல்கிறது. நாமறியாத பல தகவல்கள் நூல் முழுவதும் நிரம்பியிருக்கின்றன.தமிழ்நாட்டில் புனித மரமாகவும், வழிபாட்டு மரமாகவும் இருப்பது அரச […]

Read more
1 2 3 4 5 6 8