பாம்பு மனிதன்  ரோமுலஸ் விட்டேகர்

பாம்பு மனிதன்  ரோமுலஸ் விட்டேகர்,  வாழ்க்கைப் பயணம், ஸய் விட்டேகர்; தமிழில்: கமலாலயன்; வானதி பதிப்பகம், பக்.448; விலை ரூ. 500;  பாம்பு மனிதன் ரோமுலஸ் விட்டேகர் வாழ்க்கைப் பயணம் – ஒரு வாழ்க்கை வரலாறுதான். என்றபோதிலும் ஒரு நாவலுக்குரிய சுவாரசியத்துடனும் விறுவிறுப்புடனும் ரசித்துப் படிக்கும்படியாகச் செல்கிறது. சென்னையின் பாம்புப் பண்ணை, கிழக்குக் கடற்கரைச் சாலையிலுள்ள முதலைப் பண்ணை ஆகியவற்றின் பின்னால் எத்தகைய உழைப்பு இருந்திருக்கிறது, எத்தகைய மனிதர்கள் உழைத்திருக்கிறார்கள் என்பதையெல்லாம் விவரிக்கிறது இந்த நூல். ஆங்கிலத்தில்\”ஸ்நேக் மேன் என்ற பெயரில் வெளிவந்த – […]

Read more

தொடுவானம் தேடி

தொடுவானம் தேடி,  அ.தில்லைராஜன், கோ.அருண்குமார், சஜி மேத்யூ,  வானவில் புத்தகாலயம், பக்.264,  விலை ரூ.299.  தொழில், வணிகம் உலகமயமாகிவிட்டது. கார்ப்பரேட் நிறுவனங்கள் உலகெங்கும் தமது வேர்களை ஆழமாக ஊன்றி வருகின்றன. இந்நிலையில் அவற்றிற்கிசைவாக, அவற்றின் ஒரு பகுதியாக இங்குள்ள சிறு, குறு தொழில்கள் இருக்க வேண்டிய தேவை உள்ளது. சிறு, குறு தொழில் நடத்துபவர்கள் நவீன தொழில், வணிக மேலாண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டிய தேவை உள்ளது. ஆனால், நமது நாட்டில் சிறு, குறு தொழில், வணிகச் செயல்முறைகள் அனுபவம் சார்ந்தே உள்ளன. அறிவியல்பூர்வமான […]

Read more

உலக சாதனை படைத்த விளையாட்டு வீராங்கனைகள்

உலக சாதனை படைத்த விளையாட்டு வீராங்கனைகள், சூர்யகுமாரி, நர்மதா பதிப்பகம், விலைரூ.90 உலக அளவில் சாதனை படைத்த விளையாட்டு வீராங்கனைகளின் வாழ்க்கை குறிப்பை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள தொகுப்பு நுால். சாதனைக்கும் துாண்டும் வகையில் அமைந்துள்ளது. 37 வீராங்கனைகள் பற்றிய குறிப்புகள் உள்ளன. தகவல் மிக எளிமையாக சொல்லப்பட்டுள்ளது. வாழ்வில் முன்னேறத் துடிப்போருக்கு வழிகாட்டும் வகையில் உள்ளது. பெண்கள் ஏற்றமிகு வாழ்வில் நடை போட துணை புரியும். நன்றி:தினமலர், 17/1/2021 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more

சான்றோர்கள் வாழ்வில்

சான்றோர்கள் வாழ்வில், பாவலர் மலரடியான், சஞ்சீவியார் பதிப்பகம், விலைரூ.60 அரசியல்வாதிகள், ஆன்மிக அறிஞர்கள், வெளிநாட்டுத் தலைவர்கள் வாழ்வில் நிகழ்ந்த அற்புத நிகழ்ச்சிகளில் வெளிப்படுத்திய கருத்துக்கள் நிறைந்த நுால். காந்தி முதல் கண்ணதாசன் வரை, அறிஞர்களின் நகைச்சுவைகள் விரவிக் கிடக்கின்றன. நிலவில் கால் பதித்த ஆம்ஸ்ட்ராங்கின் தாயிடம், உங்கள் மகன் நிலவில் கால் பதித்த நிகழ்ச்சி மகிழ்ச்சி தந்ததா என்று நிருபர் கேட்டார். தாயின் பதில் நெகிழ்ச்சி தருகிறது. உயர்ந்தது தாய் மனம். – சீத்தலைச் சாத்தன் நன்றி:தினமலர், 17/1/2021 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

வாசி யோகத்தில் மெய்ஞானம்

வாசி யோகத்தில் மெய்ஞானம், ஆர்.சுந்தர், விஜயா பதிப்பகம், விலைரூ.85 பஞ்சபூதங்களால் ஆனது மனித உடல். இந்த உடல் இயக்கத்திற்கு, காற்று முக்கிய பங்கு வகிக்கிறது. காயமே இது பொய்யடா; வெறும் காற்றடைத்த பையடா என்று சித்தர் வாக்கின் படி, காற்று மிகவும் இன்றியமையாதது. காற்றை யோக முறையில் செயல்படுத்தும் வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன. எட்டு வகை யோக முறைகளை விரிவாகப் பேசுகிறது. மெய்ஞானிகள் என்று துவங்கி, நல்ல மொழிகள் என்ற எட்டு தலைப்புகளுடன் நுால் நிறைவெய்துகிறது. சிவவாக்கியர், பட்டினத்தார், வள்ளலார், அவ்வையார் போன்ற சித்தர்களின் கருத்தை […]

Read more

தாடகை நாச்சி மீனாட்சி வரலாறு

தாடகை நாச்சி மீனாட்சி வரலாறு, சொக்கரமணகிரி தாசலிங்கம், பூமாயி பதிப்பகம், விலைரூ.250 ஆன்மிக அன்பர்களுக்கு அருட்கொடையாக வந்துள்ள இந்நுால், மாயாசக்தி அன்னை மீனாட்சியின் பெருமை பேசுகிறது. பக்தி பரவசமூட்டும் எளிய தமிழ் சொற்களால் சங்க காலத்து பாடல்கள் விளக்கப்பட்டு உள்ளன. முதல், இடை, கடை தமிழ்ச் சங்கத்தில் இடம்பெற்ற புலவர்களை, ஞானிகளை, முனிவர்களை விளக்கும் விதம் அருமை. மதுரையை விட்டு பிரியும் போது நக்கீரர் பாடிய, ‘என்றினி மதுரை காண்பேம்…’ என்ற பாடலும், அதன் விளக்கமும் இதற்கு சான்று. ‘சர்க்கரை பந்தலில் தேன்மாரி’ போல […]

Read more

விண்ணோடும் முகிலோடும்

விண்ணோடும் முகிலோடும், பானுமதி கண்ணன், இருவாட்சி, விலைரூ.150 இருபத்தெட்டு அத்தியாயங்களில் புதிய கதைக்களத்தை அறிமுகம் செய்கிறது இந்த நாவல். ஆதிரை என்னும் பாத்திரத்தைச் சுற்றிப் பின்னப்பட்டிருந்தாலும், பிற பாத்திரங்களையும் கவனமாகப் படைத்துள்ளார். மலையாள வாடை கலந்த ஒரு மொழிநடையைப் பேச்சு மொழியில் பயன்படுத்தியுள்ளது கனம் சேர்த்துள்ளது. சென்னைத் தமிழ் – அதிலும் கோடம்பாக்கம் தமிழும் கொலுவிருக்கிறது. எப்போதோ நடந்த அரியலுார் ரயில் விபத்தை நினைவுபடுத்தும் வகையில் ஒரு ரயில் விபத்தைக் காட்டி, தன் வரலாற்று அறிவுக்கு விளக்கம் தந்துள்ளார். சினிமாவில் இரண்டாம் நிலையில் நடிப்பவர்களும், […]

Read more

சிறுகாப்பியங்களில் திருக்குறள்

சிறுகாப்பியங்களில் திருக்குறள், ச.தண்டபாணி தேசிகர், லட்சுமி பதிப்பகம், விலைரூ.60 திருக்குறள் கருத்துக்கள் சொல்லப்படாத தமிழ் இலக்கியங்களே இல்லை எனலாம். இந்நுால் தமிழ் சிறு காப்பியங்களில் சொல்லப்பட்ட திருக்குறளின் கருத்துக்களை, எடுத்துக்காட்டு பாடல்களுடன் விளக்கிச் சொல்கிறது. இந்நுாலில் காப்பியங்களில் திருக்குறள், சூளாமணியில் வள்ளுவம், நீலகேசியில் வள்ளுவம், உதயணகுமார காவியத்தில் வள்ளுவம், யசோதர காவியத்தில் வள்ளுவம் என்ற தலைப்புகளில் கட்டுரைகள் அமைந்து உள்ளன. தமிழ் சிறு காப்பியங்களில் கதையையும், அதனுள் கூறப்பட்டுள்ள திருக்குறள் கருத்தையும் தெரிந்து கொள்ள பேருதவியாக உள்ளது. – ராமலிங்கம் நன்றி: தினமலர், 31/1/21 […]

Read more

வால்மீகி அறம்

வால்மீகி அறம், வால்மீகி அறம் நல்லி குப்புசாமி செட்டியார், பிரெய்ன் பேங்க், விலைரூ.395 வால்மீகி எழுதிய காலம் தொட்டு, பல்வேறு மொழிகளிலும் ராமாயணம் வெளியாகி விட்டது. சில பல மாறுதல்களுடன் கம்பர் எழுதிய பிறகு, தமிழறிஞர்கள் இதை அக்குவேறு ஆணி வேறாக ஆய்வு செய்து விட்டனர். இதே அளவுக்கு நல்லி குப்புசாமி செட்டியார், ராமாயணத்தை ஆய்வு செய்து எழுதியுள்ளதுடன், ஒவ்வொரு அத்தியாயத்திலும், அந்த சம்பவத்துக்கான அறத்தையும் எழுதி, மனித இனம் ராமனை எப்படி பின்பற்ற வேண்டும் என்பதை சிறப்பாக காட்டியுள்ளார். ராமபிரான் பிறந்த தேதி, […]

Read more

பிடிச்சிருக்கா

பிடிச்சிருக்கா, ம. திருவள்ளுவர், இனிய நந்தவனம் பதிப்பகம், விலைரூ.150 வாழ்க்கை மேம்பாட்டிற்குத் தேவையான தத்துவங்களை விளக்கும் நுால். சுறுசுறுப்பாக இருப்பதற்கு உடற்பயிற்சி போதும். சரியான பாதையைத் தேர்ந்தெடுப்பதற்கு மனப்பயிற்சியும், விழிப்புணர்வும் அவசியம் என்கிறார். உரிய நேரத்தில் ஆற்றலையும் தனித்திறமையையும் கண்டுபிடிக்காதவர் பின்தங்கிவிடுவர் என்கிறார். சாமானியன் என்று எண்ணிக் கொண்டிருக்காமல், கலாம் போல உயர்ந்த மனிதராக மாறியாக வேண்டும். அதற்கு உரிய ஆற்றல், திறமையை உரிய நேரத்தில் கண்டு உணர வேண்டும். காத்திருக்கப் பழக வேண்டும். பொறுமையை வளர்க்க வேண்டும். வெற்றியின் இலக்கணமாக தொடர் தோல்விகளுக்குத் […]

Read more
1 3 4 5 6 7 8