இப்படித்தான் ஜெயித்தார்கள்

இப்படித்தான் ஜெயித்தார்கள், ஒரு பத்திரிகையாளனின் நேர்காணல்கள், மோ.கணேசன், பாரதி புத்தகாலயம், பக்.239, விலை ரூ.230. “அப்போது எங்கள் வீட்டில் கேட்பதற்கு வானொலி பெட்டி கூட இல்லை’ என்கிறார் பிரபல வானொலி அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத். பள்ளித் தேர்வில் நான்கு முறை தோல்வி அடைந்ததை சிரித்துக் கொண்டே கூறுகிறார் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன். சென்னை வந்த மூன்றே மாதத்தில் வீடு வாங்கினேன்- அப்போது எனக்கு வயது 15 என நம்மை புருவம் உயர்த்த வைக்கிறார் ஓவியர் ஸ்யாம். இதேபோன்று மணல் மாஃபியாக்களுக்கு முடிவு கட்டிய அமுதா ஐஏஎஸ், […]

Read more

தமிழ் இந்தியா

தமிழ் இந்தியா, ந.சி.கந்தையா பிள்ளை, சங்கர் பதிப்பகம், விலைரூ.275 தமிழர்களின் நாகரிகம், இந்தியாவின் பழைய நில அமைப்பு பற்றிய புகழ் வாய்ந்த நுால்.சிந்து சமவெளியில் மொகஞ்சதாரோ, ஹரப்பா நகரங்கள் 1921ல் கண்டறியப்பட்டன. அங்கு கிடைத்த பழம் பொருள்களை ஆராய்ந்து, அங்கு வாழ்ந்தோர் தமிழர்கள் என்றும், அவர்கள் நாகரிகம், மெசபடோமியா எகிப்து பழைய நாகரிகங்களை ஒத்துள்ளது என்றும் பதிவு செய்துள்ளார். புத்தருக்குப் பின் இந்திய அரசாங்க அமைப்பு, தத்துவ சாஸ்திரிகள், பாடலிபுத்திரம் போன்றவை குறித்தும் சொல்கிறார். தமிழ்மொழியில் வெளிவராத பல அரிய செய்திகள் அடங்கிய கருத்துக் […]

Read more

பொருநை – ஆதிச்சநல்லூர்

பொருநை – ஆதிச்சநல்லூர் (அறிக்கைகளும், அருங்காட்சியகங்களும்), முத்தாலங்குறிச்சி காமராசு, பொன் சொர்ணா பதிப்பகம், பக்.383, விலை ரூ.375. ஆதிச்சநல்லூரின் தாழிகளை, இருக்கும் இடத்திலேயே பார்த்து மகிழவும், வரவிருக்கும் மத்திய அகழாய்வுத் துறை அருங்காட்சியகத்தின் விளக்கங்களையும், திருநெல்வேலியில் அமைக்கப்படவுள்ள மாநில அகழாய்வுத் துறை அருங்காட்சியகம் குறித்தும் நூல் எடுத்துரைக்கிறது.  நூலுக்கு மெருகேற்ற பல்வேறு காலங்களில் ஆதிச்சநல்லூர் குறித்து வெளியிடப்பட்ட ஆங்கிலம், தமிழ் அறிக்கையின் முழு வடிவங்களை ‘க்யூ ஆர்’ கோடு மூலம் பார்க்கும் வசதி உள்ளது. இதில் முனைவர் சத்தியபாமாவின் அறிக்கையும் (2004), அதே ஆண்டில் […]

Read more

தேசமே உயிர்த்து எழு!

தேசமே உயிர்த்து எழு!, டாக்டர் க. கிருஷ்ணசாமி, கிழக்கு பதிப்பகம், பக்: 216, விலை ரூ. 250. இந்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைப்பது தவறு என்று கண்டிக்கும் “இந்தியா ஒன்றியமா?’ கட்டுரையில் தொடங்கி, “நேதாஜியின் மர்ம மரணம்’, “சாதி ஒழிப்பு நாடகம்’, “திராவிட பேரினவாதம்’, “வன்னிய இட ஒதுக்கீடு’, “மாறாத அமெரிக்கா’, “புதிய கல்விக் கொள்கை’, “எழுவர் விடுதலை’, “காலத்துக்குப் பொருந்தாத சாதிப்பட்டியல்’ உள்ளிட்ட 39 தலைப்புகளில் உள்ளாட்சி நிகழ்வுகளிலிருந்து உலக நாடுகளின் நடப்பு வரை சுருக்கமாகவும் தெளிவாகவும் விவரித்திருக்கிறார் நூலாசிரியர். […]

Read more

உவர் மணல் சிறுநெருஞ்சி

உவர் மணல் சிறுநெருஞ்சி, தாமரைபாரதி, டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், விலை: ரூ.130. சென்னையில் மாவட்ட வருவாய் அலுவலராகப் பணிபுரியும் தாமரைபாரதி, 1990-களிலிருந்து கவிதைகளை எழுதிவருகிறார். அவருடைய இரண்டாம் கவிதைத் தொகுப்பு இது. முதல் கவிதைத் தொகுப்பான ‘தபுதாராவின் புன்னகை’, பிரமிள் 2021-சிறப்புச் சான்றிதழ் விருதுபெற்றது. நன்றி: தமிழ் இந்து, 2/4/22, இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%89%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%a8%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

தேசியமும் திராவிடமும்

தேசியமும் திராவிடமும், துரை கருணா, எம்.ஜி.ஆர். பாசறை, பக் – 200, விலை ரூ. 300. தேசியமும் திராவிடமும் – என்ற இந்த நூலில் பெரும் பகுதி திராவிட இயக்கத்தின் வளர்ச்சி, ஆட்சி, அதிகாரம் குறித்து எழுதப்பட்டுள்ளது. மொத்தமாக 39 கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். தேசியம் என்று வரும் போது, காங்கிரஸ் பேரியக்கத்தின் ஆரம்ப கால சுதந்திரப் போராட்ட வீரர்களான வ.உ.சி, வாஞ்சிநாதன் வரலாற்றுச் சம்பவங்களுடன் தொடங்குகிறது. “வாஞ்சியின் தீவிரவாதச் செயலும் அவரது உயிரிழப்பும் தனக்கு உவப்பிலை’ என்று வ.உ.சி.யின் அறிக்கையை எடுத்துக்காட்டி […]

Read more

தமிழரைத் தேடி

தமிழரைத் தேடி, த.தங்கவேல், சமூக இயங்கியல் ஆய்வு மையம், பக்.326, விலை ரூ.250. ஓர் இனத்தின் பண்பாடுகளை வரையறுக்க அவ்வினத்தின் மொழியை முன்னிறுத்துவது உலக வழக்கம். அவ்வகையில் தமிழர்களுக்கும் தமிழுக்கும் நீண்ட நெடிய வரலாறு உண்டு. பிற இனத்தின் உடன்பாடான பண்பாட்டுக் கூறுகளையும் தமிழினம் உள்வாங்கியது. அதேநேரத்தில் தமிழினத்தின் தனித்துவமான அடையாளங்கள் பேணிக்காக்கப்பட்டன. தமிழர்களின் பண்பாட்டில் புகுந்த பிற இனங்கள் குறித்த ஆய்வுக்கு முக்கியத்துவம் அளித்து இந்நூல் எழுதப்பட்டுள்ளது. தமிழர்கள் யார், அவர்களின் பண்பாட்டு அடையாளங்கள் யாவை, அவர்களது தோற்றம், குடியேற்றங்கள் எங்கு எப்போது […]

Read more

வானவில்

வானவில், வாண்டா வாஸிலெவ்ஸ்கா, ஆர்.ராமநாதன், ஆர்.எச்.நாதன், அலைகள் வெளியீட்டகம், விலை: ரூ.240. இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் நாஜிப் படைகளை ஸ்டாலின் தலைமையிலான சோவியத் செஞ்சேனை எதிர்கொண்ட வரலாற்றின் அடிப்படையில் எழுதப்பட்ட நாவல் இது. போலந்தில் பிறந்து, ஜெர்மனியின் தாக்குதல் காரணமாக அன்றைய சோவியத் ஒன்றியத்தின் பகுதியாக இருந்த இன்றைய உக்ரைனின் லிவிவ் நகரில் அடைக்கலமாகி கம்யூனிஸ்ட்டாக வாழ்ந்த வாண்டா வாஸிலெவ்ஸ்கா எழுதிய நாவலின் தமிழ் வடிவம் இது. நன்றி: தமிழ் இந்து, 2/4/22. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000033159_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் […]

Read more

சுட்டிக் கதைகள்

சுட்டிக் கதைகள், நீலாவதி, சுருதிலயம், விலை: ரூ.125. அஞ்சல் துறையின் முன்னாள் ஊழியரான நூலாசிரியர் தன் பெயர்த்திக்குக் கதைகள் சொல்வதற்காக நிறைய சிறார் கதைகளைப் படித்து, அதன் மூலம் தானே சிறார் கதைகளைப் படைக்கத் தொடங்கினார். அப்படி அவர் இயற்றிய 16 சிறார் கதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு கதையும் சிறாருக்கான நீதிக் கருத்தைச் சொல்வதாக அமைந்துள்ளது. நன்றி: தமிழ் இந்து, 2/4/22, இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – […]

Read more

கண்ணகி கோட்டை

கண்ணகி கோட்டை, ஜோஜ், ஜலோ பப்ளிகேஷன்ஸ், விலை: ரூ.900. பிழை செய்யும் கணவனை மன்னித்து, அன்புடன் அவனை ஏற்றுக்கொண்டு, நிம்மதியான வாழ்க்கையை வாழும் மனைவியின் கதையை நவீன கண்ணகியாக உருவகப்படுத்தி எழுதப்பட்டுள்ள நாவல். இந்நாவலில் ஒவ்வொரு பத்தியின் ஒவ்வொரு வரியும் ஒரே எழுத்தோசையுடன் இடம்பெற்றிருப்பது இதன் சிறப்பம்சம். நன்றி: தமிழ் இந்து, 2/4/22. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more
1 6 7 8