கவனக் குறைவுகளும் அவற்றின் தீர்வுகளும்

கவனக் குறைவுகளும் அவற்றின் தீர்வுகளும், டாக்டர் எம்.பிர்லா பவளம், மணிமேகலைப் பிரசுரம், பக். 192, விலை 160ரூ. மனிதனின் வாழ்க்கையில் கவனம் பெறும் இடத்தைக் கவன வேல் என்னும் தலைப்பில் நுணுக்கமாக ஆய்ந்துள்ள நூல். தலைப்பின் ஆழத்தையும் அகலத்தையும் கனமாக்காமல் எளிமையாக உணர்த்துவதற்கு இசையைத் துணைக்கு அழைத்துள்ளார். எம்.எல்.வசந்தகுமாரி, பி.சுசீலா, இளையராஜா, எம்.எஸ். சுப்புலட்சுமி என்று பல இசைக் கலைஞர்களின் இசை லயத்தை எடுத்துக்காட்டி விளக்கியுள்ளார். மூன்று பாகங்களாகப் பகுத்து அவற்றில் பதினொரு அத்தியாயங்களை வகுத்துத் தந்துள்ளார். மருத்துவ ஆர்வலர்களை நிச்சயம் கவரும். ஆங்கிலத்தில் […]

Read more

யோக நித்திரை என்னும் மெஸ்மெரிசம்

யோக நித்திரை என்னும் மெஸ்மெரிசம், மறைமலை அடிகள், பாலாஜி பதிப்பகம், பக். 191, விலை 200ரூ. வசிய மந்திரம்’ என்று வாயளவில் பேசப்படும் ஹிப்னாடிசம், மெஸ்மெரிசம் பற்றிய அறிவியலை விளக்கியுள்ள நுால். 100 ஆண்டுகளுக்கு முன், ஞானசாகரம் என்ற மாத இதழில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. திருமாலின் அறிதுயிலுடன் இதை ஒப்பிடுகிறார். அருள் துாக்கம், இருள் துாக்கம் என்றும் வகைப்படுத்துகிறார். மூச்சுப் பயிற்சி, அமைதி காத்தல், நரம்புகளை இளக்கச் செய்தல், நினைவை நிறுத்தல், விரல்களால் உடலில் ஆற்றல் செலுத்தல், சொல்லி சொல்லி அறிதுயிலில் ஆழ்த்தும் […]

Read more

ஜப்பான் பயணக் கட்டுரைகள்

ஜப்பான் பயணக் கட்டுரைகள், ஐந்திணைப் பதிப்பகம், விலை: ரூ.60ஐந்திணைப் பதிப்பகம், விலை: ரூ.60 தி.ஜானகிராமனின் இரு பயணக் கட்டுரைகள் இன்றும்கூட வாசிக்கப்பட வேண்டியவை. ஒன்று, ‘உதயசூரியன்’ (ஜப்பான் பயணக் கட்டுரைகள் – சுதேசமித்திரன் – 1967), மற்றொன்று ‘கருங்கடலும் கலைக்கடலும்’ (செக்கோஸ்லோவோகியா பயண அனுபவங்கள் – கணையாழி – 1974). வெறுமனே பயணக் கட்டுரையாக அல்லாமல், அங்கே சென்றபோது தனக்குத் தோன்றிய சிந்தனைகளை எல்லாம் அவ்வளவு அழகாக வடித்திருப்பார் தி.ஜா. கியாத்தோ ரயில் நிலையத்தில் கூலிகளையோ போர்ட்டர்களையோ காண முடியவில்லை என்று சொல்கிற இடத்தில், […]

Read more

ஏதிலி

ஏதிலி, அ.சி.விஜிதரன், சிந்தன் புக்ஸ் வெளியீடு, விலை: ரூ.250. ஈழப் போரின் பின்னணியில் எவ்வளவோ நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதப்பட்டிருந்தாலும்கூட, அதன் சில பக்கங்கள் இன்னும் ஆழமாக அணுகப்படாமலே இருக்கின்றன. போரால் ஈழத் தமிழர்கள் எதிர்கொண்ட நெருக்கடிகளை மகத்தான இலக்கியங்களாக்கிய ஷோபாசக்தி, ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில், “போராட்டத்துக்கும் சாதிக்கும் இடையேயான தொடர்பு, குழந்தைப் போராளிகளின் அகவுலகம், ஈழப் பிரச்சினை குறித்த சிங்கள அடித்தள மக்களின் பார்வை, போராட்டத்தில் இஸ்லாமியர்களின் பங்களிப்பு என முழுமையான படைப்புகள் இனிதான் எழுதப்பட வேண்டும்” என்றார். […]

Read more

கழுதைப்பாதை

கழுதைப்பாதை, எஸ்.செந்தில்குமார், எழுத்து பிரசுரம் வெளியீடு, விலை: ரூ.375 கழுதைகள் மனிதரோடு இணைந்து வாழப் பழகி கிட்டத்தட்ட 6,000 வருடங்கள் ஆகிவிட்டன. இன்று கழுதைகள் காண்பதற்கரிய விலங்காகிப் போனாலும், தமிழ்நாட்டில் சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை பொதி சுமக்கும் விலங்காக, குறிப்பாக மலைப் பகுதிகளில் பயன்பட்டுவந்திருக்கின்றன. 1950-களில் தேனி, கம்பம் சுற்றுவட்டார மலைப் பகுதிகளில் விளையும் காப்பித் தளிர்களை இறக்கவும், தரையிலிருந்து அத்தியாவசியப் பொருட்களை மலைக்கு மேலேற்றவும் பயன்படும் கழுதைகள், அவற்றின் மேய்ப்பர்களான கழுதைக்காரர்கள், அந்த மலைகளின் ஆதிகுடிகளான முதுவான்கள், முதுவாச்சிகள், தலைச்சுமைக் கூலிகள், […]

Read more

தி ஆர்.எஸ்.எஸ். அண்டு தி மேக்கிங் ஆஃப் தி டீப் நேஷன்

தி ஆர்.எஸ்.எஸ். அண்டு தி மேக்கிங் ஆஃப் தி டீப் நேஷன், தினேஷ் நாராயணன், பெங்குயின் வெளியீடு,விலை: ரூ.699 இன்னும் ஐந்தாண்டுகளில் நூற்றாண்டைக் காணவிருக்கிறது ‘ஆர்.எஸ்.எஸ்.’ எனும் ‘ராஷ்ட்ரிய ஸ்வயம்ஸேவக் சங்’. கடந்த காலத்தைப் பொற்காலமாக உருவகித்து இந்தியாவை ஒற்றை இந்து தேசியமாக மாற்றும் கனவில் அது முன்னேறிக்கொண்டிருக்கிறது. அந்த இயக்கத்தின் வழித்தோன்றலான பாஜக ஆட்சியில் இருப்பதால் அதன் கனவுக்குச் செயல் வடிவம் கொடுக்கும் வகையிலான காரியங்கள் ஒவ்வொன்றாகச் செயல்படுத்தப்படுகின்றன. நாட்டின் மீதும் அரசின் மீதும் இவ்வளவு செல்வாக்கு கொண்டிருந்தாலும், அந்த அமைப்பு பெரிதும் […]

Read more

அரோரா

அரோரா, சாகிப்கிரான், புது எழுத்து வெளியீடு, விலை: ரூ.100 அரோரா’ என்பதற்கு மூல அர்த்தம் வைகறை. சூரியனின் மின்னூட்டம் பெற்ற துகள்கள் உயர் வளிமண்டலத்தில் இருக்கும் அணுக்களோடு மோதுவதால் வட, தென் துருவப் பகுதிகளில் சிவப்பாகவும் பச்சையாகவும் வானில் ஏற்படுத்தும் கதிர்வீச்சு ‘அரோரா’ என்று அழைக்கப்படுகிறது. இயற்கையும் அதன் வழிகளும் தம்மிடமுள்ள புதிரை, சில வேளைகளில் மாற்று விடைகளை, மனிதன் வழியாக வெளியிடுகின்றன. அப்படி வெளியிடும் சிறந்த கலை ஊடகங்களில் ஒன்றாகக் கவிதை இருக்கலாம் என்று சாகிப்கிரான் கவிதைகளைப் படிக்கும்போது தோன்றுகிறது. நிகழ்ச்சிகள், அனுபவங்கள், […]

Read more

தலித்துகள்

தலித்துகள்: நேற்று இன்று நாளை, ஆனந்த் டெல்டும்டே, தமிழில்: பாலு மணிவண்ணன், கிழக்குப் பதிப்பகம், விலை: ரூ.225. ஆய்வாளரும் மனித உரிமைச் செயல்பாட்டாளருமான ஆனந்த் டெல்டும்டே இந்தியாவின் சாதி அமைப்பு குறித்துத் தீவிரமாக எழுதிவரும் ஆளுமை. டெல்டும்டேவின் எழுத்துகளில் பலவும் ஏற்கெனவே தமிழுக்குக் கொண்டுவரப்பட்டு நமது உரையாடல்களில் முக்கியப் பங்காற்றுவதாக இருக்கின்றன. கமலாலயன் மொழியாக்கத்தில் வெளிவந்த ‘மஹத்: முதல் தலித் புரட்சி’ (என்சிபிஹெச் வெளியீடு), ச.சுப்பாராவ் மொழியாக்கத்தில் வெளிவந்த ‘சாதியின் குடியரசு’ (பாரதி புத்தகாலயம்) ஆகிய டெல்டும்டேவின் புத்தகங்கள் சமீபத்திய வரவுகளில் முக்கியமானவை. அந்த வரிசையில், […]

Read more

ஈரம்

ஈரம் ; ஆசிரியர் : பூபதி பெரியசாமி, வெளியீடு: கவிஓவியா பதிப்பகம், விலை ரூ. 120/- வாழ்க்கை அனுபவங்களை கருவாக்கி, சிறுகதைகளாக புனைந்து தொகுக்கப்பட்டுள்ளது. மொத்தம், 17 கதைகள் உள்ளன. பணம் தேடி, கணவன், மனைவி ஆளுக்கொரு திசையில் ஓட, வீடு அர்த்தமற்றதாகி, விடுமுறை தினத்தில் மட்டும், வேடந்தாங்கலாகும் சூழலை விளக்குகிறது, ‘அறுவை சிகிச்சை’ என்ற கதை.சமூக சேவை, சாமியாட்டம், அலைபேசி, முகநுால் என, பல கருக்கள் கதைகளில் வந்து கலகலப்பூட்டுகின்றன. – டி.எஸ்.ராயன். நன்றி: தினமலர். இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

தமிழில் சுயசரித்திரங்கள்

தமிழில் சுயசரித்திரங்கள் ; ஆசிரியர் : சா. கந்தசாமி, வெளியீடு: சாகித்ய அகடமி, விலை ரூ. 290/- தமிழில் வெளிவந்த, 12 அறிஞர்களின் சுயசரிதங்களை ஆராய்ந்து அழகுடன் தொகுத்துள்ள நுால். காவியம், புராணம் எல்லாம் கனவில் மிதக்க வைக்கும். கதைகளில், இனிப்பான உண்மை இருக்கும்; சுயசரிதங்களில், கசக்கும் உண்மை இருக்கும். அவற்றை படிப்பதால், வெற்றி, தோல்வி கடந்த அனுபவமே மனதில் தங்கும். ஜெர்மனியில் கொடுங்கோலன் ஹிட்லர், மகள் ஆனிபிராங்குக்கு ஒரு டயரி பரிசளித்தார். அது, அவரது சுயசரிதை. டச்சு மொழியில் வெளிவந்து, பல கசக்கும் […]

Read more
1 125 126 127 128 129 505