உண்டு ஆனால் இல்லை

உண்டு ஆனால் இல்லை,யோகி, தெய்வப்புலவர் தமிழ் இயல்பியல் ஆராய்ச்சிக்கூடம், பக். 184, விலை 150ரூ. உலகில் எந்த உயிரும் மனதின் ஆதிக்கத்தில்தான் இயங்குகிறது. மனம் சொன்னால் உடல் சிரிக்க வேண்டும்; மனம் வருந்தினால் அழ வேண்டும்; அதிர வேண்டும்; இப்படி ஒவ்வொரு நகர்வுமே மனதின் கட்டளைப்படியே நடக்கிறது. சஞ்சலத்தில் உழலும் இந்த மனதைச் சமன்படுத்திப் பண்படுத்த பலப்பலவாக ஆன்மிகம், தத்துவம், உளவியல் சார்ந்த நுால்கள் வந்து கொண்டுதானிருக்கின்றன. அவற்றுக்கிடையே பலவகையிலும் வேறுபடும் நுால்களில் ஒன்று. ஒருவருக்கு நன்மை தரும் ஒன்று, இன்னொருவருக்கு இழப்பாக இருக்கிறது. […]

Read more

தலித் இலக்கியம் ஒரு பார்வை

தலித் இலக்கியம் ஒரு பார்வை, முனைவர் பத்மாவதி விவேகானந்தன், ராஜம் வெளியீடு, பக். 224, விலை 140ரூ. தலித்தியமும், பெண்ணியமும் சமத்துவத்திற்கான தத்துவங்களாகும். காலம் காலமாக அடங்கிக் கிடந்தவர்கள் இன்று வெடித்துப் போராட்ட களத்தையும், எழுத்து ஆயுதத்தையும் பயன்படுத்தி அடிமைச் சிறையில் இருந்து வெளிவரத் துடிக்கின்றனர். கடந்த, 20 ஆண்டுகளாக, முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தலித் படைப்பாளிகள், கவிதை, சிறுகதை, நாவல், தன் வரலாறு, திறனாய்வு, தத்துவம் என, அனைத்துத் துறைகளிலும் அறிவாற்றல் மிக்கப் படைப்புகளைத் தந்து சாதனை புரிந்து வருகின்றனர். உறங்கிக் […]

Read more

ஊர்சுற்றிப் புராணம்

ஊர்சுற்றிப் புராணம்,  ராகுல் சாங்கிருத்யாயன், தமிழில்: ஏ.ஜி.எத்திராஜுலு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்.158, விலை ரூ.130. முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் முதற்பதிப்பைக் கண்ட இந்நூல், அதன் சிறப்பு காரணமாக இப்போது ஆறாம் பதிப்பைக் கண்டுள்ளது. மனிதனின் அடிப்படை இயல்பே ஊர் சுற்றுவதுதான். இயற்கையான புராதன மனிதன் மிகவும் ஊர்சுற்றியாகத்தான் இருந்திருக்கிறான். புத்தர், மகாவீரர், சுவாமி தயானந்தர் உட்பட பலரும் ஊர்சுற்றிகளாகத்தான் இருந்திருக்கிறார்கள். ஊர்சுற்றும் மனப்பான்மை மனிதனுக்கு இல்லாமலிருந்தால், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உருவாகியிருக்காது. பல்வேறு கலாசாரம், அறிவியல் கண்டுபிடிப்புகள் எல்லாம் […]

Read more

பொங்கல் விழாச் சிந்தனைகள்

பொங்கல் விழாச் சிந்தனைகள், ஐவர் வழி.வ.வேட்பையன், திருவள்ளுவர் மன்றம், விலை 150ரூ. பொங்கல் பற்றியும், இலக்கியங்கள் குறித்தும் பயனுள்ள கட்டுரைகள் கொண்ட நூல். தமிழறிஞர்கள் புலவர்களும், எழுதிய கட்டுரைகள் சிந்தனைக்கு விருந்தளிக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 3/1/2018.

Read more

மூதாய் மரம்

மூதாய் மரம், வறீதையா கான்ஸ்தந்தின், தடாகம் வெளியீடு, விலை 80ரூ. கடல் பழங்குடி வாழ்வின் அடிப்பதைத் தகுதி விழிப்புநிலை. ஒரு பழங்குடி மனிதன் வேட்டைக் களத்தில் தன் முழு உடலையும் புலன்களாக்கிக் கொள்கிறான். களத்தில் தன்னை தற்காத்துக்கொண்டு சிறந்த வேட்டைப் பெறுமதிகளுடன் குடிலுக்குத் திரும்புகிறான். கடலைப் பொழுதுகளின், காட்சிகளின், ஒலிகளின், வாசனைகளின் வரைபடமாய்க் காணக் கற்றுக்கொண்டிருக்கிறான். இறுதி மூச்சு வரை கடலின் மாணவனாக வாழ்கிறான். விழிப்புநிலை தவறவிட்டால் பழங்குடி வாழ்வு பொருளற்றுப் போய்விடுகிறது. நன்றி: தி இந்து, 6/1/2018.

Read more

பறவையியல்

பறவையியல், வ.கோகுலா & சி.காந்தி, ஜாஸிம் பதிப்பகம், விலை 300ரூ. தமிழ்ச் சூழலில் அறிவியல் சார்ந்த படைப்புகள் கணிசமாக இருந்தாலும் பறவையியல் குறித்த படைப்புகள் பெருவாரியாக இல்லை என்பதே உண்மை. சமீபகாலமாகத்தான் பறவைகள் தொடர்பான புத்தகங்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. அந்த வரிசையில் இந்தப் புத்தகமும் சேர்ந்துள்ளது. பறவைகளின் உடற்கூறு பற்றி சற்று விரிவாகப் பேசுகிறது இது. நன்றி: தி இந்து, 6/1/2018.

Read more

பனை மரமே பனை மரமே

பனை மரமே பனை மரமே, ஆ.சிவசுப்பிரமணியன், காலச்சுவடு பதிப்பகம், விலை 425ரூ. தமிழகத்தில் பரவலாகக் காணப்படும் மரம் பனை. இம்மரத்தை மையமாகக் கொண்டு உருவான வாய்மொழி வழக்காறுகளையும் எழுத்துப் பதிவுகளையும் இந்நூல் கொண்டுள்ளது. கிறிஸ்துவுக்கு முந்தைய காலத்தைய தமிழ் பிராமிக் கல்வெட்டுகளில் தொடங்கி இடைக்கால கல்வெட்டுகள் வரை, தொல்காப்பியம் சங்க இலக்கியம் தொடங்கி – வாய்மொழி இலக்கியம் – நவீன இலக்கியம் வரை என பல அரிய தரவுகளின் துணையுடன் இந்நூல் உருவாகியுள்ளது. நன்றி: தி இந்து, 6/1/2018.

Read more

அனைத்து நோய் தீர்க்கும் 50 யோசனைகள்

அனைத்து நோய் தீர்க்கும் 50 யோசனைகள், பி.கிருஷ்ணன் பாலாஜி, ஸ்ரீ பதஞ்சலி மஹரிஷி, விலை 300ரூ. ஆரோக்கியமா வாழ யோகாசனங்கள் உதவுகின்றன. அனைத்து வகையான நோய்களைத் தீர்க்க உதவும் 50 யோகாசனங்கள் பற்றி படங்களுடன் இந்த நூல் விளக்குகிறது. நன்றி: தினத்தந்தி, 3/1/2018.

Read more

புத்தரின் போதனைகள் தீக நிகாயம்

புத்தரின் போதனைகள் தீக நிகாயம், பிக்கு போதிபால மகாதேரோ மற்றும் திரிபீடகத் தமிழாக்கக் குழுவினர், திரிபிடகக் குழுவினர், விலை 500ரூ. புத்தர் பெருமாள் 84ஆயிரம் போதனைகளைத் தமது தாய் மொழியான பாலி மொழியில் சீடர்களுக்கும், பொதுமக்களுக்கும் போதித்துள்ளார். இது காலப்போக்கில் ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் மொழி பெயர்க்கப்பட்டது. தொடர்ந்து 21-ம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் தமிழ் மொழியிலும் வெளிவரத் தொடங்கி உள்ளது. அதனுடைய முதல்நூல்தான் இது. இதில் ஒழுக்கவியல் மற்றும் பெரும் இயல் கீழ் 34 பிரிவுகளில் புத்தரின் போதனைகள் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் […]

Read more

தமிழ்ச்சிப்பி

தமிழ்ச்சிப்பி, முனைவர் இரா.சம்பத், ஜெ.கலைவாணி, ஆர்.அனைத்திந்திய ஆராய்ச்சிக்கழகம், விலை 500ரூ. “ஆர்” அனைத்திந்திய ஆராய்ச்சிக்கழகம் நடத்திய 13வது பன்னாட்டுக் கருத்தரங்கில் பல தமிழறிஞர்கள் பங்கு கொண்டு, இலக்கியத்தை பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து கட்டுரைகளை சமர்ப்பித்தனர். அந்த கட்டுரைகளின் தொகுப்பு நூல். சிறந்த இலக்கிய நூல். நன்றி: தினத்தந்தி, 3/1/2018.

Read more
1 334 335 336 337 338 505