மூட்டு வலிக்கான சிகிச்சை முறைகள்

மூட்டு வலிக்கான சிகிச்சை முறைகள், பாலா வெங்கட், அருண் நிலையம், விலை 30ரூ. மூட்டு வலிக்கான சிகிச்சை முறைகள் குறித்து நூல் ஆசிரியர் அறிந்ததையும், மருத்துவர்களிடம் கேட்டு அறிந்ததையும் நூலாக வடித்துள்ளார். மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் இவற்றில் தங்களுக்கு ஏற்ற முறையினை பயன்பற்றி பயன் பெறலாம். நன்றி: தினத்தந்தி, 3/1/2018.

Read more

நல்லதங்காள் கதைப்பாடல் – பதிப்பும் ஆய்வும்

நல்லதங்காள் கதைப்பாடல் – பதிப்பும் ஆய்வும்,  ஓ.பாலகிருஷ்ணன், அய்யா நிலையம்,  பக். 136, விலை ரூ.130. சாதாரண மக்களின் வாழ்க்கை, பண்பாடு, பழக்க, வழக்கங்கள் நம்பிக்கைகள் ஆகியவற்றைப் பிரதிபலிப்பவை நாட்டுப்புற இலக்கியங்கள். மன்னரின் மகளாக, மன்னரின் மனைவியாக இருந்த நல்லதங்காளின் வாழ்க்கைக் கதை என்றாலும், சாதாரண மக்களின் வாழ்க்கையையே நல்லதங்காள் கதைப்பாடல் சொல்கிறது. தொடர்ந்து 12 ஆண்டுகள் மழை பெய்யாததால், பஞ்சம் ஏற்பட்டு, இருக்கும் பொருட்களை எல்லாம் விற்றுத் தின்று, இனி கூலி வேலை செய்தாவது பிழைப்போம் என்றநிலை மன்னர் குடும்பத்துக்கு வர வாய்ப்பில்லை. தனது […]

Read more

சொல்லி முடியாதவை

சொல்லி முடியாதவை,  ஜெயமோகன், நற்றிணை பதிப்பகம்,  பக். 160, விலை ரூ.180. நூலாசிரியர் தன் நண்பர்கள், வாசகர்களின் வினாக்களுக்கு எழுதிய விடைகளாக அமைந்த 27 கட்டுரைகளின் தொகுப்பு. ஆசாரங்கள் தேவையா? பண்டிகைகளைக் கொண்டாடத்தான் வேண்டுமா? குடும்ப உறவில் ஏன் இத்தனை வன்முறை? தற்கொலை தியாகமாக ஆகுமா? நம் பண்பாட்டுக்கென உடை உண்டா? கற்பு என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது? காதலர் தினக் கொண்டாட்டம் தேவையா? தீபாவளி யாருடையது? உள்ளிட்ட பல கேள்விகள் இடம் பெற்றுள்ளன. நிலத்தில் யார்க்கும் அஞ்சா நெறி கொண்டு தன் வாழ்க்கையைத் தானே […]

Read more

குமரி நாட்டில் சமணம் தோற்றம் வளர்ச்சி வீழ்ச்சி

குமரி நாட்டில் சமணம் – தோற்றம் வளர்ச்சி வீழ்ச்சி, சிவ.விவேகானந்தன், காவ்யா, பக்.615, விலைரூ.650. தமிழகத்தின் பழங்கால சமயங்களில் சமணமும் ஒன்று. சமண சமயத்தைச் சேர்ந்த அகத்திய முனிவர் பதினெண்குடி வேளிர், அருவாளர்களோடு தென்னகத்திற்கு வந்து, காடுகளை அழித்து நாடுகளாக்கி மக்களைக் குடியேற்றினார் என்பதும், வடக்கிலிருந்து பத்திரபாகு என்ற சமண முனிவர் மைசூர் நாட்டில் உள்ள சிரவணபௌகெள குகையில் தங்கி, அவருடைய சீடரான விசாக முனிவரை சமண மதத்தைப் பரப்புவதற்காக தமிழகத்திற்கு அனுப்பி வைத்தார் என்பதும் சமண மதம் வடக்கிலிருந்து தமிழகத்துக்கு வந்தது என்பதையே சொல்கின்றன. […]

Read more

பத்துப் பாட்டினில் ஆளுமை வளர்ச்சி

பத்துப் பாட்டினில் ஆளுமை வளர்ச்சி, கெ.இரவி, நிலாசூரியன் பதிப்பகம், பக்.280, விலை ரூ.200. ஏதேனும் ஓர் இலக்கை எடுத்துரைப்பது இலக்கியம் எனப்படும். மனித உள்ளத்தின் தன்மைகளை எடுத்துரைப்பது உளவியல் எனப்படும். ஆளுமை என்பதை, ஆங்கிலத்தில் பர்சனாலிட்டி என்று கூறுவர். இது, தனி மனிதனது உடல் தோற்றம், பேசுவது, உடுப்பது, பழகுவது, அறிவாற்றல், குணங்கள், பண்புகள் முதலியவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. இம்மூன்றையும் விரிவாக விளக்குகிறது இந்நூல். சங்க இலக்கியங்களை உளவியல் இலக்கியம் என்கிறார் தமிழண்ணல். அந்த வகையில் இலக்கியமும் உளவியலும் நெருங்கிய தொடர்புடையவை. இலக்கியத்தில் உள்ள ஆளுமை […]

Read more

சுந்தரகாண்டம் (படக்கதை)

சுந்தரகாண்டம் (படக்கதை), டாக்டர் வே. ஹரிகுமார் பதிப்பகம், தாரணி பதிப்பகம், விலை 20ரூ. ராமாயணத்தின் இறுதிப் பகுதி சுந்தர காண்டம். ராவணனால் கடத்திச் செல்லப்பட்ட சீதையை ராமன் மீட்பதுதான் சுந்தரகாண்டம். இதைப் படக்கதையாக்கி இருக்கிறார் டாக்டர் வே.ஹரிகுமார். ஓவியங்களை அழகாகத் தீட்டியிருக்கிறார் தமிழ். பாராட்டத்தக்க முயற்சி. நன்றி: தினத்தந்தி, 3/1/2018.

Read more

ஸ்ரீ ஐயப்பன் பஜனைப் பாடல்கள்

ஸ்ரீ ஐயப்பன் பஜனைப் பாடல்கள், பாலசர்மா, ஸ்ரீ விக்னேஷ் பதிப்பகம், விலை 30ரூ. சபரிமலைக்கு செல்ல மாலை அணிந்து விரதம் இருப்பவர்கள் படிப்பதற்காக ஐயப்பன் பஜனைப் பாடல்கள் அடங்கிய நூல். நன்றி: தினத்தந்தி, 3/1/2018.

Read more

அங்கீகாரமற்ற வீட்டுமனைகள்

அங்கீகாரமற்ற வீட்டுமனைகள், அ.பாலகிருஷ்ணன், ராஜாத்தி பதிப்பகம், விலை 80ரூ. விவசாய நிலங்களை வீட்டுமனைகளாக மாற்றுவது எப்படி?, அதிகாரமற்ற வீட்டு மனையை வாங்கவோ, விற்கவோ முடியுமா? அங்கீகாரமற்ற வீட்டுமனை எங்கே எப்படி விண்ணப்பம் செய்வது? இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை அளிக்கும் நூல். நன்றி: தினத்தந்தி, 3/1/2018.

Read more

வங்கிகள் வழங்கும் சேவைகள்

வங்கிகள் வழங்கும் சேவைகள், M.ராமச்சந்திரன், வசந்த பதிப்பகம், விலை 150ரூ. வங்கியில் உயர் பதவிகளை வகித்தவரும், வங்கி பயிற்சி கல்லூரி பேராசிரியருமான எம்.ராமச்சந்திரன், வங்கிகள் குறித்த பொதுமக்கள் அறிய வேண்டிய தகவல்களை புள்ளி விவரங்களுடன் இந்நூலில் கொடுத்துள்ளார். இந்த நூலின் விலை 150ரூ. மற்றும் சிறுதொழில் கடன் (:ரூ.100). வியாபாரக் கடன் (ரூ.75), வீட்டுக்கடன் (ரூ70), வாகனக் கடன் (ரூ.60), கல்விக்கடன் (ரூ70), விவசாயக் கடன்(ரூ.60), காசோலைகள் (ரூ120) ஆகிய நூல்களையும் இவர் எழுதியுள்ளார். எல்லாமே, வங்கிப் பணிகள் பற்றி பொதுமக்கள் அறிந்து கொள்ள […]

Read more

நாங்கள் நலம் நீங்கள் நலம் பெற

நாங்கள் நலம் நீங்கள் நலம் பெற, B.R.பொன்னம்பலம், மணிமேகலைப் பிரசுரம், விலை 50ரூ. வாழ்க்கைக்கு வழிகாட்டக் கூடிய விஷயங்கள் அடங்கிய புத்தகம். பெண்களுக்கு நூலாசிரியர் பி.ஆர்.பொன்னம்பலம் கூறும் சில குறிப்புகள் பெண்கள் இருளில் விளக்கு வைத்தவுடன் அழக்கூடாது. விளக்கு வைத்தபின், வளையல்களை கழற்றக்கூடாது. செவ்வாய், வெள்ளி ஆகிய கிழமைகளில் வீட்டை விட்டுச் சென்றால், இரவு வீடு திரும்பி விட வேண்டும். அன்று பிறர் வீடுகளில் தங்கக்கூடாது. உப்பைத் தரையில் சிந்தக்கூடாது. அரியைக் கழுவும்போது தரையில் சிந்தக்கூடாது. இப்படி நிறைய குறிப்புகள் இந்த நூலில் கூறப்பட்டுள்ளன. […]

Read more
1 335 336 337 338 339 505