ஆதித்தநல்லூரும் பொருநைவெளி நாகரிகமும்

ஆதித்தநல்லூரும் பொருநைவெளி நாகரிகமும், அ. இராகவன், அழகு பதிப்பகம், விலைரூ.220, தமிழர்களின் மிகத்தொன்மை நாகரிகமான ஆதித்தநல்லுாரில் கிடைத்த அரும்பொருட்களை விரிவாக ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள நுால். திராவிட நாகரிகம் லெமூரியாக் கண்டத்தின் வாயிலாக உலகில் மேற்கிலும், கிழக்கிலும் பரவியது என ஆதாரங்களை முன்வைக்கிறது.உலகிலே ஒப்பற்ற நாகரிகத்தை உருவாக்கியது திராவிட இனத்தவர் என்பதை வெளிநாட்டார் ஆய்வை எடுத்துக்காட்டி விளக்குகிறார். மட்பாண்டங்கள், மண்டை ஓடுகள், அரிய கருவிகள் பற்றி விரிவாக உணர்த்துகிறது. திராவிட நாகரிக வாழ்வில் பொன், இரும்பு ஆகியவை அணிகலன்ளாக வடிவமைத்து அணிந்ததை எடுத்துரைக்கிறது. பண்டைத் தமிழர் […]

Read more

வாழ்க்கையில் ஏற்படும் முக்கிய சந்தேகங்களும் தீர்வுகளும்!

வாழ்க்கையில் ஏற்படும் முக்கிய சந்தேகங்களும் தீர்வுகளும்!, சஞ்சீவி ராஜா சுவாமிகள், மணிமேகலை பிரசுரம், விலைரூ.150 அடியார்கள் கேட்ட வினாக்களுக்கு விடையாகத் தந்த தகவல்களை பேசுகிறது இந்த நுால். சில வினாக்களுக்கு, அனுபவப்பூர்வமாக விடையளித்திருப்பது வாழ்வின் யதார்த்தத்தைக் காட்டுகிறது. பிரச்னைகள் அதன் தீர்வு என்ற முறையில் செல்கிறது. சாஸ்திர சம்பிரதாயங்கள், வழிபாடுகள் ஏன் பின்பற்றப்படுகின்றன என்பதை காரண காரியங்களோடு விளக்குகிறது. ஞானம், தியானம் என்பனவற்றை முழுமையாக விவரிக்கிறது. பிறப்பும் இறப்பும் கர்மவினையின் செயலே என்பதை இந்த நுால் பதிவு செய்துள்ளது.பஞ்சபூதம், நவகிரகம், மனிதப்பிறவி. பாபம், சாபம் […]

Read more

மகாத்மா?

மகாத்மா?, இளமதி அறிவுடைநம்பி, உ.வி.சா.பிரின்ட்சன் கிரியேஷன்ஸ், விலைரூ.100. காந்தி மகாத்மாவா, இல்லையா என்பதை புதிய கோணத்தில் பார்க்கும் நுால். மொத்தம் 12 கட்டுரைகள் உள்ளன. அரசியல் ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவும். காந்தியின் கருத்தில் மிக முக்கியமானது நாட்டுக்கு வக்கீல், வைத்தியர் அவசியம் இல்லை என்பதே. உண்ணும் முறை அறிந்தால் வைத்தியரும் தேவை இல்லை. குற்றமின்றி வாழப் பழகினால் வக்கீல்களும் தேவையில்லை என்கிறார். அரச குலத்தில் பிறந்து இளவரசனாக வாழ்ந்தாலும் புத்தருக்கு போர்க்குணம் பிடிக்கவில்லை. போரால் ஏற்படப் போவது ஒற்றுமையோ, வெற்றியோ அல்ல. மாறாக பகைமையும், […]

Read more

கிரேக்க மருத்துவ தந்தை ஹிப்போகிரேட்டஸ்

கிரேக்க மருத்துவ தந்தை ஹிப்போகிரேட்டஸ், ஜெகதா, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலைரூ.80. பாவம் செய்பவர்களுக்கு ஆண்டவனால் தரப்படும் தண்டனையே நோய் என்ற கருத்தை உடைத்து நொறுக்கிய மருத்துவ அறிவியல் முன்னோடி பற்றி எழுதப்பட்டுள்ள நுால். பேய், பயம், கடவுள் கோபத்தால் நோய் வருகிறது என்பதெல்லாம் அப்பட்டமான பொய் என நிரூபித்து, அறிவியல் அணுகுமுறையால் வெற்றி பெற்றவர். இவரது கருத்துகள் மருத்துவ உலகில் இன்றும் அறியப்படுகின்றன. மருத்துவ சேவை புரிய விழையும் டாக்டர் எடுக்கும் சத்தியப் பிரமாணத்துக்கு, ஹிப்போகிரேட்டஸ் உறுதிமொழி என பெயர். பல நாடுகளில் […]

Read more

அழகர் கோயில்

அழகர் கோயில், தொ.பரமசிவன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலைரூ.300 தமிழகத்தில் மிக முக்கியமான வைணவ திருக்கோவில்களில் ஒன்றான அழகர் கோவில் பற்றி ஆராய்ந்து, வரலாற்றுப்பூர்வமாக விரிவான தகவல்களுடன் வெளிவந்துள்ள நுால். கோவிலின் அமைப்பு, தோற்றம், இலக்கியங்களில் உள்ள குறிப்புகள், அழகர் கோவிலின் சமூகத் தொடர்பு என பல விபரங்களை ஆராய்ந்து, துல்லியமான தகவல்களை பதிவு செய்துள்ளது. அந்த வட்டார மக்களுக்கு கோவிலுடன் உள்ள தொடர்பு பற்றியும் விரிவாக ஆராய்கிறது. இதில், கள்ளர் இன மக்கள், இடையர் இன மக்கள், பள்ளர் மற்றும் பறையர் இன […]

Read more

இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை

இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை, டாக்டர் அபினவம் ராஜகோபாலன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.470. மனிதனுக்கு முக்கியமானது எது. வாழ்க்கை வசதிகளா? மன நிம்மதியா? எல்லா வசதிகளும் படைத்தவர்கள் ஏதோ ஒன்று குறைவதாக கருதி கவலை அடைகின்றனர். எந்த கவலையும் இல்லாத சூழலே மன நிம்மதி. அந்த நிம்மதியை கார், பங்களா, பணம் போன்ற வசதிகள் பெற்றுத் தராது; ஆன்மிகம் மட்டுமே நிம்மதியை கொடுக்கும் என்பதை தெளிவுபடுத்தும் நுால் தான், இன்பமே எந்நாளும் துன்பமில்லை. புத்தக அமைப்பும் புதுமையாக இருக்கிறது. குருவுடன் […]

Read more

நானும் நீதிபதி ஆனேன்

நானும் நீதிபதி ஆனேன், கே.சந்துரு, அருஞ்சொல், விலைரூ.500. வாழும் காலத்தில் சாதனைகள் புரிந்த தமிழக சட்ட மேதை சந்துரு எழுதிய சுயசரிதை நுால். சமூக அக்கறை மிக்க செயல்பாட்டாளராக, வழக்கறிஞராக, நீதிபதியாக ஆற்றிய பன்முகச் சேவைப் பணிகளின் தொகுப்பாக மலர்ந்து உள்ளது. தமிழ் சமூகத்தில் ஒரு காலகட்ட வலியையும், அதற்கான மாற்றத்தை தேடியபோது ஏற்பட்ட அனுபவத்தையும், 22 கட்டுரைகளில் தருகிறது. நெகிழ்வை உள்ளீடாக கொண்டு உள்ளது. சுய புராணத்தை முன் வைக்கவில்லை இந்த நுால்; சமூகத்தில் கற்றதை, அனுபவமாக பெற்றதை வளர்ச்சி செயல்பாட்டுக்கு பயன்படுத்திய […]

Read more

மனிதகுலம் நம்பிக்கையூட்டும் ஒரு வரலாறு

மனிதகுலம் நம்பிக்கையூட்டும் ஒரு வரலாறு, ருட்கர் பிரெக்மன், மஞ்சள் பப்ளிஷிங் ஹவுஸ், விலைரூ.599. மனித குலம் நம்பிக்கையுடன் பயணிக்கிறதா, அவநம்பிக்கையுடன் நகர்கிறதா என்ற மதிப்பீட்டை முன்வைத்து எழுதப்பட்டுள்ள முக்கிய நுால். தொல்லியல், மரபியல், மானுடவியல் மற்றும் வரலாற்றுச் சான்றுகளை மையப்படுத்தி உள்ளது. உலகில் நெருக்கடியான காலங்களில் நடந்த முக்கிய சம்பவங்களை மறு விசாரணை செய்கிறது. சுயநலத்துக்கு மனிதன் முன்னுரிமை கொடுக்கிறான் என, காலங்காலமாக நிலவும் கருத்து மீது கேள்வி எழுப்புகிறது. நெருக்கடிகளின் போது மிக இயல்பாக செயல்பட்டுள்ளது மனித இனம் என்பதை பல்வேறு ஆய்வுகளை […]

Read more

சுக வாழ்வு அருளும் ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர்

சுக வாழ்வு அருளும் ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர், தெள்ளாறு ஈ.மணி, சங்கர் பதிப்பகம், விலைரூ.165. சிவனின் ஒரு வடிவமான, ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு பற்றி விளக்கும் நுால். முறையாக வழிபட்டால் பொன், பொருளை வாரிக் கொடுப்பார் என விளக்குகிறது. பைரவரை வழிபடும் முறை, அவர் ஏந்தியிருக்கும் ஆயுத தத்துவம், வாகனங்கள், கடன் பிரச்னை தீர்க்கும் சொர்ணாகர்ஷண பைரவர் போன்ற தலைப்புகளில் தகவல்கள் உள்ளன.‘உடலே ஆலயம்’ என, திருமந்திரப் பாடலைக் கொண்டு அலசுகிறது. கோவில் கருப்பக்கிரகம், தீபம், சிவலிங்கம் போன்றவற்றுக்கு தத்துவ ரீதியாக விளக்கம் தருகிறது. பைரவர் […]

Read more

விதியே கதை எழுது

விதியே கதை எழுது…., அப்சல், பாரதி புத்தகாலயம், விலைரூ.120 சிறுகதை மற்றும் கட்டுரைகளால் அறியப்பட்ட எழுத்தாளர் அப்சலின் முதல் நாவல். தனிமை என்பதே ஒரு கும்பலின் அளவளாவல் தான். மனசும், மனசாட்சியும், நிகழ்வுகளும் ஓயாது எதையாவது உரைத்துக் கொண்டே இருக்கும். இப்பேருண்மையின் பெருஞ்சான்றா உள்ளது இந்த நுால். இறப்பு, மரணம் என்ற வார்த்தையை கேட்டால், அச்சப்படும் ஒருவனின் வாழ்க்கையை பேசுகிறது. பேரன்பின் கனிவே மரணம் என அறிவதை, காதல், கருணை, மோகம், கலகலப்பு, உருக்கம் கலந்து சொல்லி உள்ளார். விதி எழுதும் கதைகள் விஸ்தாரமானது; […]

Read more
1 2 3 4 5 6 505