டாக்டர் ரங்கபாஷ்யத்தின் சரிதம்

டாக்டர் ரங்கபாஷ்யத்தின் சரிதம், சாந்தகுமாரி சிவகடாட்சம், சாந்திசிவா பப்ளிகேஷன்ஸ், பக். 397, விலை 600ரூ. டாக்டர் என். ரங்கபாஷ்யம் என்கிற டாக்டர் என்.ஆரின் வாழ்க்கை வரலாற்றை மட்டுமல்ல, மருத்துவத்துறையின் வளர்ச்சியையும் இந்நூலின் மூலம் அறிந்து கொள்ள முடியம். தந்தையைப் போல் தானும் மருத்துவராகி, சிரமப்படக் கூடாது என்று நினைத்து விமானியாக விருப்பப்பட்டவர் ரங்கபாஷ்யம். ஆனால் ரமணரின் ஆலோசனைப்படி மருத்துவம் படிக்கச் சென்றார். அதன் விளைவு, இரைப்பை குடல் அறுவைச் சிகிச்சை என்ற துறையை இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை மருத்துவக் கல்லூரியில் தொடங்கினார். இந்தப் பிரிவை […]

Read more

திரைக்கதை

திரைக்கதை (விரிவாக்கப் பதிப்பு), தர்மா, ரம்யா பதிப்பகம், பக். 320, விலை 200ரூ. கன்னடத் திரையுலகில் நீண்டகால அனுபவம் உள்ள ஒரு தயாரிப்பாளரால் தமிழில் எழுதப்பட்டு வெளிவந்திருக்கிறது இந்த நூல். “நம்மவள்’‘ என்ற கதையை எழுதி, அதை முழுத் திரைக்கதையாக்கித் தந்திருக்கும் முயற்சி புதியது; பாராட்டுக்குரியது. இன்று செல்லிடப்பேசி கேமராவில் குறும்படம் எடுத்தே பலரும் திரைக்கலையைக் கற்றுக் கொள்கிறார்கள். தனியார் திரைப்படக் கல்லூரிகளும் ஏராளம் உள்ளன. திரைக்கதை எழுதுவது எப்படி என்பதை அனுபவப்பூர்வமாக விவரிக்கும் இந்த நூல், மாணவர்களுக்கு மட்டுமின்றி ஆசிரியர்களுக்கும் பயன்படும். ஒரு […]

Read more

வெளிச்ச விதைகள்

வெளிச்ச விதைகள், கவிஞர் இரா. இரவி, வானதி பதிப்பகம், பக். 190, விலை 120ரூ. ‘உலகில் உறவுகள் ஆயிரம் இருந்தாலும் பெற்ற அம்மாவிற்கு, நிகர் ஏதுமில்லை’ என்று தாயையும் உலகை உணர்த்தும் ஆசான் என்று தந்தையையும் போற்றும் கவிஞர் இரவியின் கவிதைகள் போற்றுதலுக்குரியவை. பெண்மை, தமிழர், தமிழ்மொழி, இயற்கை, தன்னம்பிக்கை, சமூக அவலங்கள் என்று படிப்போர் மனதில் கவிதை கொண்டு உழவிட்டு வெளிச்ச விதைகளை கவிதைதோறும் விதைத்துப் போகிறார். -இரா. மணிகண்டன், நன்றி: குமுதம், 25/1/2017.

Read more

வினாடிக்கு 24 பொய்கள்

வினாடிக்கு 24 பொய்கள், இயக்குனர் மிஷ்கின், எஸ். தினேஷ், பேசாமொழி வெளியீடு, பக். 102, விலை 100ரூ. சினிமா பார்த்து சினிமாவை பற்றி தெரிந்து கொள்ளலாம். ஆனால், அது சார்ந்த புத்தகங்களை படித்து தான், சினிமாவை புரிந்து கொள்ள முடியும். சினிமா என்பது, இயக்குனரின் ஒரு பார்வை மட்டுமே. புத்தகங்கள் தான், சினிமா சார்ந்த இரண்டாயிரம் பார்வைகளை கொடுக்க வல்லது’ என்பது, எஸ்.தினேஷின் ஒரு கேள்விக்கு, மிஷ்கின் அளித்த பதிலின், ஒரு பகுதியாக வருகிறது. இவ்வாறு, சினிமா பற்றிய மிஷ்கினின் பார்வையை வாசகர் முன் […]

Read more

சீனப் பெண்கள் சொல்லப்படாத கதை

சீனப் பெண்கள் சொல்லப்படாத கதை, சின்ரன், தமிழில் வி. விஜயபத்மா, எதிர் வெளியீடு, பக். 318, விலை 280ரூ. சீனாவின், ஆளுங்கட்சி தலைவர்களின் மனைவியர், நகரத்தின் உச்சரிக்கப்படாத ஒதுக்குப்புற கிராமத்தின் ஏழை விவசாயியின் மனைவி என, சமூகத்தின் அனைத்து பகுதி பெண்களின் கண்ணீர் கதைகளை, அவர்களின் வாக்குமூலமாக பதிவு செய்தவர்,சின்ரன். வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளரான சின்ரன், சீனாவின் மறைவு பிரதேசமான, பெண்களுக்கு எதிராய் அனைத்து தளத்திலும் நடக்கும் வன்கொடுமைகளை, வெளிச்சம் போட்டு காட்டி உள்ளார். இது, உலக பெண்களுக்கு எதிரான கொடுமையாக, உலகம் அங்கீகரிப்பதோடு, […]

Read more

மண்ணின் மரங்கள்

மண்ணின் மரங்கள், கா. கார்த்திக் தமிழ்தாசன், இயல்வாகை வெளியீடு, பக். 60, விலை 75ரூ. நீர் நிலை, மரங்களை அழித்து, நகரம் நிர்மாணிக்கப்படுகிறது. சாலை ஓர நிழலுக்காக, விரைவில் வளரும், வெளிநாட்டு மரங்கள் நடப்படுகின்றன. நாட்டு மரங்களை நம்பி வாழ்ந்த உயிரினங்கள், உணவு கிடைக்காமல் அழிகின்றன. இதனால், மகரந்த சேர்க்கையின்றி, காய்கறி, பழங்களும் அருகி, உயிர்ச்சூழல் பாதிக்கப்படுகிறது. மேலும், காற்று, மழை, வெயிலை தாங்க பழக்கமில்லாத, அயல் மரங்களும் மடிகின்றன. இதை விரிவாக பதிவு செய்கிறது, இந்நூல். நன்றி: தினமலர், 16/1/2017.

Read more

நிலைத்த பொருளாதாரம்

நிலைத்த பொருளாதாரம், ஜே.சி. குமரப்பா, தமிழில் அ.கி. வேங்கட சுப்பிரமணியம், இயல்வாகை வெளியீடு, பக். 160, விலை 200ரூ. நிலைத்த பொருளாதாரம் என்னும் முற்போக்கு சிந்தனை நூல்,ஜே.சி.குமரப்பாவின் சிறைப்படைப்பு. இயந்திர மயமாதல், முதலாளித்துவம், உலக மயமாதல் என்னும் செயல்பாடுகள் வேகமாக பரவிய போது, அதை கேள்விகளுக்கு உட்படுத்தி, அதன் எதிர்கால தாக்கம் பற்றி விரிவாக எழுதி இருக்கிறார். பன்மயம் என்பது மாறி, ஒருமயமாகும் போது ஏற்படப்போகும் விளைவுகளை ஆராய்ந்து, காந்தியின், கிராம பொருளாதாரத்தின் நன்மைகளையும் அலசுகிறது. இக்காலத்திற்கு அவசியமான நூல். நன்றி: தினமலர், 16/1/2017.

Read more

நரகம்

நரகம், டான் பிரவுன், தமிழில் இரா.செந்தில், எதிர் வெளியீடு, பக். 760, விலை 550ரூ. அமெரிக்க எழுத்தாளரான, டான் பிரவுனின், ‘டாவின்சி கோட்’டுக்கு பின் வெளிவந்து, உலக ரசிகர்களை ஈர்த்துள்ளது நரகம். வலுவான கதாபாத்திரங்கள், தந்திரக்குவியலால் பின்னி இருக்கிறார் பிரவுன். ‘தூசடைந்த புத்தகங்களும், பயன்படாத பாதை வழிகளும், புராதன உலகின் சதித்திட்டங்களை மூடி மறைத்திருக்கின்றன‘ என, வாசகர்களை நம்ப வைத்து விடுகிறார். நன்றி: தினமலர், 16/1/2017.

Read more

பயணம்

பயணம், சிரியாவின் சிதைந்த இதயத்தை நோக்கி, சமர் யாஸ்பெக், தமிழில் ஸ்ரீதர் ரங்கராஜ், எதிர் வெளியீடு, பக். 344, விலை 320ரூ. ஒரு பத்திரிகையாளராக, நீதியின் பக்கம் நின்று, தன் பேனா வாளை சுழற்றும் தைரியம் சிலருக்கு மட்டுமே வாய்க்கும். அந்த வகையில், தான் ஒரு பெண்ணாக இருந்தும், போருக்கு எதிரான அறப்போரை, தைரியமுடன் தொடுத்து, சிரியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டவர், சமர் யாஸ்பெக். அவரின், ‘பயணம்’ என்னும் இந்நூல், ஜனநாயகத்தின் முதல் அமைதிப் பேரணியில் இருந்து, ஐ.எஸ்.ஐ.எஸ். சின் ஊடுருவல் வரையான வாழ்வாதார […]

Read more

பயங்கரவாதி என புனையப்பட்டேன்

பயங்கரவாதி என புனையப்பட்டேன், மொகமது ஆமிர் கான், நந்திதா ஹக்ஸர், தமிழில் அப்பணசாமி, எதிர் வெளியீடு, பக். 240, விலை 200ரூ. கடந்த, 1998ல் கடத்தப்பட்டு, வதைக்கு உள்ளாக்கப்பட்டு, 24 குண்டு வெடிப்புகள் தொடர்பாக, 19 வழக்குகளில் சேர்க்கப்பட்டவர், ஆமிர் கான். 14 ஆண்டு சிறைத் தண்டனைக்கு பின், தன்னை குற்றமற்றவன் என்பதை நிரூபித்து, விடுதலையாகிறான். தந்தையை இழந்து, தாயை நோயாளியாக பார்க்கும் அவனை, சமூகம் எப்படி நடத்துகிறது என்பது தான், இந்நூல். இது, போலீஸ் உள்ளிட்ட துறைகளின் தப்பித்தல், தப்ப வைத்தல், தப்பு […]

Read more
1 425 426 427 428 429 505