அறிவியலுக்கு அப்பால்

அறிவியலுக்கு அப்பால், நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன், வானதி பதிப்பகம், பக். 152, விலை 125ரூ. நம்மைச் சுற்றிலும் அறிவியலுக்கு அப்பாற்பட்டு எவ்வளவோ நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அறிவியலுக்கே சவால் விடுபவை அவை. அவற்றில் சிலவற்றை அலசி, அவற்றை மூடத்தனம் என்று ஒதுக்காமல், அதில் உள்ள உண்மைத்தன்மையை தேட வைக்கும் முயற்சி இந்நூல். இசை ஞானமே இல்லாத ரோஸ்மேரி பிரவுன் – இசைமேதைகளின் ஆவியுலகில் இருந்து தரப்பட்ட புது கம்போசிஷன்களில் இசைத்தட்டுக்களை விற்பனைக்குக் கொண்டு வந்தது, அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி கொல்லப்படுவதை முன்கூட்டியே […]

Read more

ஜீன் ஆச்சர்யம்

ஜீன் ஆச்சர்யம், மொஹமத் சலீம், புலம், விலை 160ரூ. பிரமிக்க வைக்கும் அற்புத அறிவியல் குறித்த நூல். அற்ப கேள்விகள் என்று நாம் ஒதுக்கும் விஷயங்கள் தான் அறிவியலின் ஆதாரம் என்ற சுவாரஸ்யமான கருதுகோளில் இருந்து ஆரம்பிக்கிறது, ‘ஜீன் ஆச்சர்யம்’. கிரேக்க சிந்தனையாளன் பிதாகரசின் விநோதமான கேள்வியில் துவங்கும் மரபணு ஆராய்ச்சியின் வரலாறு, அரிஸ்டாட்டிலின் ஆதிக்கம், ஸ்வாமர்டாம் Vs கிராபின் சண்டை, ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலீயின் மார்பக அறுவை சிகிச்சை என்று படிப்படியாக நகர்ந்து செல்கிறது. ‘குரோமோசோமின் உள்ளே மரபணு இருக்கிறது, மரபணு […]

Read more

அகத்தியர் யோக ஞானத் திறவுகோல்

அகத்தியர் யோக ஞானத் திறவுகோல், ஸ்ரீ ஸக்தி சுமனன். அகத்திய மகரிஷி, சித்தர்கள் கண்டறிந்த எல்லா வித்தைகளையும் தெளிவாக கூறியவர்களில் முதன்மை ஆனவர். அகத்திய மகரிஷி, தன் ஞானத்தை சுருக்கி, சித்தர் மார்க்கத்தில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்காக, 30 பாடல்களில் அகத்தியர் ஞானம் 30 ஆக தந்திருக்கிறார். தற்காலத்தவர்கள் விளங்கி கொள்ளும்படி, தியான சாதனையில் சித்த வித்யா விளக்கவுரையாக ஸ்ரீ ஸக்தி சுமனன் அவர்கள் எழுதிய விளக்கவுரையே, அகத்தியர் யோக ஞானத் திறவுகோல் எனும் இந்நூல். அகத்திய மகரிஷியை, குருவாக கொண்டு சாதனை செய்ய […]

Read more

தமிழ்வாணனின் தன்னிகரில்லா பதில்கள்

தமிழ்வாணனின் தன்னிகரில்லா பதில்கள், லேனா தமிழ்வாணன், மணிமேகலை பிரசுரம், விலை 320ரூ. தமிழ் இதழியல் உலகில், பொது அறிவு களஞ்சியமாக வெளிவந்தது, ‘கல்கண்டு’ வார இதழ். அந்த இதழ் மலர துவங்கிய காலத்தில் இருந்தே, தமிழ்வாணனின், ‘என்னை கேளுங்கள்’ என்ற கேள்வி – பதில் பகுதி துவங்கியது. அப்பகுதி, தற்போது புத்தகமாக வெளிவந்துள்ளது. அரசியல், நகைச்சுவை, பொது என, மூன்று பிரிவுகளில், கேள்வி – பதில்கள் தொகுக்கப்பட்டுள்ளன. ‘காமராஜருக்கு, சொந்த ஊரான விருதுநகரில், அவருக்கு மதிப்பு உண்டா’ என்ற கேள்விக்கு, ‘ஆப்பிள் பழம், காய்த்து […]

Read more

திண்ணைகளற்ற பெரு நகரங்களில்

திண்ணைகளற்ற பெரு நகரங்களில், நர்மதா, பாப்லோ பதிப்பகம், பக். 82, விலை 80ரூ. தொலைந்து போன் மனித மனங்களைத் தேடும் ஒரு முயற்சி இது. ‘எல்லோர்க்கும் எல்லாம் கிட்டும் நல்வாழ்வு தேடும் நல்லோர் நிறை சமூகம் வேண்டும்’ என்பது கவிஞரின் அன்றாடப் பிரார்த்தனை. அதுவே படிப்போரை நாளைய உலகம் நல்லோரின் கை சேரலாம் என்ற நம்பிக்கை கொள்ள வைக்கிறது. -இரா. மணிகண்டன், நன்றி: குமுதம் 1/2/2017.

Read more

சர்தார் வல்லபாய் படேல்

சர்தார் வல்லபாய் படேல், அ.செல்வமணி, ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ், பக். 458, விலை 280ரூ. அசோகர், கனிஷ்கர், சந்திர குப்தர், சாணக்கியர், சத்ரபதி சிவாஜி, மேவார்ராணாக்கள், தாந்தியோதோபி, நானாசாகிப் போன்ற மாவீரர்கள் இந்த பாரத தேசத்தை வலிமைமிக்க நாடாக ஆக்க எடுத்த முயற்சிகள் தனித்தனியானவை. தனித்துவமானவை. ஆனால் பிரிந்து கடந்த இந்த பாரதத்தை செம்மைப்படுத்தி, ஒரு குடையின் கீழ் கொண்டு வந்த மாவீரர் சர்தார் வல்லப பாய்படேல் என்ற ஒரு தனி மனிதரே. அவரது வாழ்க்கை வரலாற்றை முழுமையாகத் தரும் நூல் இது. -இரா. […]

Read more

நீங்கள் எந்த மரம்?

நீங்கள் எந்த மரம்?, அ. அறிவுநம்பி, சித்திரம் வெளியீடு, பக். 158, விலை 120ரூ. மொழி, சமூகம், நாடு, மானிடர், தனி மாந்தர் ஆகிய தளங்களில் ஆசிரியர் எழுதிய கட்டுரைகள் தொகுப்பு இந்நூல். தமிழ் மொழியை வளர்த்தெடுப்பதில் உள்ள அக்கறை, பாரதியின் கனவு மெய்ப்பட வேண்டும் என்பதில் காட்டும் முனைப்பு, மதுரையின் கடம்பவன பழமை, வரதட்சணை என்ற வியாபாரம், காலதாமதத்தைப் போக்கும் மனக்கட்டுப்பாடு, மரபுகளின் மாற்றத்தால் நன்மையா? தீமையா? என்பதைப் புலப்படுத்தும் மரபுக் கட்டுரை, தமிழுக்கு ஒளி கூட்டிய வ.சு.ப. மாணிக்கனார், அறிவியல் கூத்து, […]

Read more

அக்னிசாட்சி

அக்னிசாட்சி, மலையாளம் லலிதாம்பிகை அந்தர்ஜனம், தமிழில் சிற்பி பாலசுப்பிரமணியம், சாகித்திய அகாதெமி, பக். 128, விலை 100ரூ. கேரளத்தில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு நம்பூதிரி குடும்பங்களில் நிலவி வந்த இறுக்கமான நம்பிக்கைகள், சடங்குகள் பற்றியும், பெண்ணடிமைத்தனம் பற்றியும் மிகவும் யதார்த்தமாகச் சொல்லும் நாவல். நம்பூதிரி குடும்பத்தைச் சேர்ந்த ஆண்களும் கூட சுதந்திரமற்றவர்களாக, குடும்பத்தில் மூத்தோர் சொல்லுக்குக் கட்டுப்பட்டு, வழிபாடு, சடங்குகளைச் செய்து கொண்டு வாழ்பவர்களாக இருந்திருக்கின்றனர். அப்படி வாழ்ந்த ஒரு நம்பூதிரியின்மனைவி, அங்கிருந்த அடக்குமுறைகள் பிடிக்காமல், கணவன் வீட்டைவிட்டு வெளியேறி தாய் வீடு […]

Read more

திரைத்தொண்டர்

திரைத்தொண்டர், பஞ்சு அருணாசலம், விகடன் பிரசுரம், பக். 288, விலை 185ரூ. அறுபது ஆண்டுகால தமிழ்த் திரையுலக வரலாற்றுடன் பின்னிப் பிணைந்திருக்கிற பஞ்சு அருணாசலத்தின் சுயசரிதை இந்நூல். பஞ்சு அருணாசலத்தின் தந்தை அந்தக் காலத்திலேயே பி.ஏ. படித்திருந்தும், சம்பளத்துக்கு வேலை செய்வதை அவமானமாகக் கருதி, வேலைக்குப் போகாமல் இருந்ததால், அம்மாவின் நகைகள் அத்தனையையும் இழக்க நேரிடுகிறது. அந்தக் கோபத்தில் முதன் முதலாக அப்பாவை எதிர்த்துப் பேசிவிட்டு, வீட்டை விட்டு வெளியேறி, பணம் சம்பாதிக்க பஞ்சு அருணாசலம் சென்னைக்கு ரயில் ஏறியது, நெஞ்சை நெகிழச் செய்கின்றது. […]

Read more

நீர் மேலாண்மை

நீர் மேலாண்மை, பெருமாங்குப்பம் சா. சம்பத்து, ரேணுகாம்பாள் பப்ளிஷர்ஸ், பக். 256, விலை 200ரூ. “நீரின்றி அமையாது உலகு‘’ என்று சொல்லித் தெரியும் நிலை இப்போதில்லை. ஆனால் நீரைப் பாதுகாக்கும் முயற்சிகள், நீர் வளத்தை மேம்படுத்தும் செயல்களை எல்லாம் நாம் செய்கிறோமோ? என்றால், இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். இந்நூலில் நீரின் தோற்றம், நீரின் இன்றியமையாமை, நீர் வளத்தைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்? என்பன போன்ற விவரங்களை மிகவும் எளிமையாகச் சொல்லியிருக்கிறார் நூலாசிரியர். தேசிய நதிநீர் இணைப்பு சாத்தியமா? ஏன் நதிகளை இணைக்க வேண்டும்? […]

Read more
1 423 424 425 426 427 505