இலக்கியத் தென்றல்

இலக்கியத் தென்றல், உமாதேவி பலராமன், நந்தினி பதிப்பகம், விலைரூ.100. பழந்தமிழ் இலக்கியங்களின் ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு; மொத்தம் 19 கட்டுரைகள். விவேக சிந்தாமணி, பரிபாடல், மணிமேகலை, குறுந்தொகை, ஏலாதி என பழைய இலக்கியங்கள். அருட்பா, பட்டினத்தார், இடைக்கால பாடல்கள். இணையத்தமிழ் பாரதி எனப் புதிய நோக்கில் கட்டுரைகள்.பசிப்பிணி என்னும் பாவி என, பவுத்த காப்பியமான மணிமேகலையில் உள்ள வரிகள் பசியின் கொடுமையை கூறும். இது மாதிரி கருத்தமைந்த பாடல்களை எடுத்துக் காட்டி விளக்குகிறார். பல்கலை மாணவர்கள் படிக்க வேண்டிய புத்தகம். – சீத்தலைச்சாத்தன் நன்றி: […]

Read more

நகைச்சுவை நாடகங்கள்

நகைச்சுவை நாடகங்கள், வானொலி அண்ணா என்.சி.ஞானப்பிரகாசம், கற்பகவித்யா பதிப்பகம், விலைரூ.325 நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் எழுதப்பட்டுள்ள நாடகங்களின் தொகுப்பு நுால். மொத்தம், 15 நாடகங்கள் உள்ளன; அனைத்தும், வானொலி நிகழ்ச்சிகளில் ஒலிபரப்பாகி புகழ்பெற்றவை; நேயர்களிடம் பாராட்டுகளை பெற்றவை. நுகர்வோர் சட்டங்களை மிக எளிமையாக புரிய வைக்கும் நுட்பத்துடன் எழுதப்பட்டுள்ளது. அன்றாடம் வாழ்வில் எதிர்கொள்ளும் மருத்துவம், நுகர்வோர் உரிமை போன்ற பொருளடக்கங்களைக் கருவாகக் கொண்டுள்ளன. வாசிப்பதற்கும், நடிப்பதற்கும் ஏதுவாக உள்ளன. மிகவும் எளிய நடையில் அமைந்துள்ளன. சிறு சுலபமான உரையாடல்கள் மிகவும் நயமாக வும், […]

Read more

அறுபத்து மூவர் சரிதத்தில் ஆச்சரியமூட்டும் பெண்கள்

அறுபத்து மூவர் சரிதத்தில் ஆச்சரியமூட்டும் பெண்கள், ப.ஜெயக்குமார், உமாதேவி பதிப்பகம், விலைரூ.200. பெரிய புராணத்தில் இடம்பெற்ற பெண்களில், 19 பேரின் வரலாற்றை படைத்துள்ளார். இதில், 13 பேர் இல்லத்தரசியராகவும், ஒருவர் மகள் என்னும் நிலையிலும் ஒருவர் தாய் என்னும் நிலையிலும், இன்னொருவர் தமக்கை என்னும் நிலையிலும் இடம்பெற்றுள்ளனர். மூன்று பேர் நாயன்மார் வரிசையில் இடம்பெற்றுள்ளனர். இவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்துக் கட்டுரைகளைப் படைத்துள்ளார். கட்டுரையின் மையத்தை உள்ளடக்கிய பழமை மாறாத அழகிய ஓவியத்தை பதித்து மெருகூட்டியுள்ளார்.எளிய நடையில் படைக்கப்பட்டுள்ளது. அழகிய வடிவமைப்புடன் அமைந்துள்ளது. பக்தி […]

Read more

நேருவின் வாழ்க்கை

நேருவின் வாழ்க்கை, தி.ஜ.ரங்கநாதன், அர்ஜித் பதிப்பகம், விலைரூ.150. மறைந்த பிரதமர் ஜவகர்லால் நேருவின் வாழ்க்கை வரலாறு சுருக்கமாக தரப்பட்டுள்ள நுால். பல்வேறு ஆங்கில புத்தகங்கள், நேரு எழுதிய புத்தகங்களின் துணை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. நேருவின் வாழ்க்கை நிகழ்வுகளை, 43 இயல்களாக பிரித்து தொகுக்கப்பட்டுள்ளது. எளிய மொழி, தடங்கலற்ற வாசிப்பை தருகிறது. இறுதியாக நேரு எழுதிய உயில் வாசகங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அது நெகிழ்ச்சியுடன் உள்ளது. இந்தியா மீது நேரு கொண்டிருந்த பற்றையும், வளர்ச்சியில் செலுத்திய உழைப்பையும், அவரது வாழ்க்கை மாண்பையும் தெரிவிக்கிறது. படிக்க வேண்டிய வாழ்க்கை […]

Read more

அக்கினிக் குஞ்சு

அக்கினிக் குஞ்சு, என்.உமாதாணு, ஆசிரியர் வெளியீடு, விலைரூ.200. கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து, கல்வி அறிவால் உயர்ந்த கணித ஆசிரியரின் சுயசரிதை நுால். ஏழு பாகங்களாக எழுதப்பட்டுள்ளது. முதல் பாகம் சொந்த வாழ்க்கை, பொது வாழ்க்கை என பிரிக்கப்பட்டுள்ளது.பொது வாழ்வில் மறைந்த கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஜீவா மற்றும் தலைவர்களுடன் ஏற்பட்ட அறிமுகம், கட்சியுடனான தொடர்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. கணித ஆசிரியராக பணிபுரிந்தது, ஆசிரியர் உரிமைக்காக போராட்டங்கள் நடத்தியது மட்டுமின்றி, சுலபமாக கணித சூத்திரங்களை மாணவர்கள் மனதில் ஏற்றும் எளிய நடைமுறையை உருவாக்கியது பற்றியும் […]

Read more

சிவஞான சித்தியார் சுபக்கம்

சிவஞான சித்தியார் சுபக்கம், பொ.முத்தையா பிள்ளை, அழகு பதிப்பகம், விலைரூ.350. அருணந்தி சிவாச்சாரியார், மறைஞான சம்பந்தருக்கு சிவஞான போதப் பொருளை ஓதி எடுத்துரைத்து வந்ததே சிவஞான சித்தியார். இதில் அடங்கிய பரபக்கம், சுபக்கம் எனும் இரு பகுதிகளில், சித்தாந்தப் பார்வையால் சைவக் கோட்பாடு உண்மைகளைப் புலப்படுத்தும் செய்யுள்களால் அமைந்ததே சுபக்கம். சுபக்கம் என்றால், ‘தன் பக்கம்’ என்பதாகப் பொருள் கூறப்படுகிறது. சிவஞான சித்தியார் சுபக்கத்திற்கு எழுதப்பட்ட பல உரைகள் இருப்பினும், பல ஆய்வு விளக்கங்களோடு அமைந்த இந்த உரை நுாலில், சிவஞான யோகியின் கருத்தின் […]

Read more

என் கடமை – ஊழல் ஒழிக!

என் கடமை – ஊழல் ஒழிக!, நல்லம நாயுடு, நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், பக்: 216; ரூ. 225. காவல்துறையில் உயரதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற நல்லம நாயுடுவின் வாழ்க்கை வரலாறும், பணிக்காலத்தில் ஊழலுக்கு எதிராகவும், சமூகக் குற்றங்களுக்கு எதிராகவும் போராடி வென்ற அவரது அரிய அனுபவங்களும் இந்நூலில் இரண்டு பாகங்களாகத் தொகுத்துத் தரப்பட்டிருக்கின்றன. தேனி மாவட்டம், குப்பிநாயக்கன்பட்டி என்கிற கிராமத்தில் நடுத்தர விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் நல்லம நாயுடு. மாணவப் பருவத்திலேயே விளையாட்டு வீரராக விளங்கினார். கூடைப்பந்து விளையாட்டில் பலமுறை சாம்பியன் பட்டம் வென்றவர். […]

Read more

கொங்கு தேன்

கொங்கு தேன், சிவகுமார், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.225 நடிகர் சிவக்குமாருடன் ஒரு பயணம். திரைப்பட நடிகர் என்பதைத் தாண்டி சிவகுமார் எந்த ஒரு விஷயத்தையும் சுலபமாக எழுத்தில் கொண்டுவர நினைக்க மாட்டார். கொண்டுவந்துவிட்டார் என்றால் அது நேர்த்தியாக இருக்க வேண்டும் என்று நினைப்பார். ‘சிவகுமார் ஏன் எல்லோருக்கும் இனிய மனிதராக இருக்கிறார்?’ என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. இந்த எழுத்துகளைப் படிக்கிற ஒவ்வொருவருக்கும், அந்தக் காரணங்கள் ஒவ்வொன்றாகப் புரியும். குறிப்பாக அவர் நினைவாற்றல், நன்றியுணர்வு, பிறந்த இடத்தை மறக்காமல் இருக்கிற […]

Read more

சிலிங்

சிலிங், கணேசகுமாரன், எழுத்து பிரசுரம், விலை: ரூ.110. ரகசியங்களின் சுரங்கம் மூன்றாவது அடுக்காக இருப்பதாகச் சொல்லப்படும் மனிதர்களின் புதைநிலை மன வன்மமானது, தமிழில் புனைவுகளாக வெளிப்பட்டது குறைவு. கோபிகிருஷ்ணன் இந்தப் புள்ளியில் தொடர்ந்து எழுதினார். மனிதர்களின் மனமானது அழுக்குகள் நிரம்பிய ஓர் இருட்டறை என்பதை நிறுவ அவர் தன்னையே பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டார். தொடர்ந்து இரைந்துகொண்டே இருக்கும் உள்மனத்தை அவர் இறுதிவரை எழுதிக் கடக்கவே முயன்றார். மனிதர்களின் புதைநிலை மனமானது ரகசியங்களின் சுரங்கம். ஒருவர் அதைப் பொதுவெளியில் திறந்து காட்டும்போது, அவர் இந்தச் சமூகத்திரளுக்குப் பொருத்தமற்றவர் […]

Read more

தெற்கிலிருந்து ஒரு சூரியன்

தெற்கிலிருந்து ஒரு சூரியன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.300. தமிழக சட்டமன்றத்தில் கருணாநிதி ஆற்றிய உரைகளிலேயே சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது ‘மாநில சுயாட்சி’ தீர்மானத்தை நிறைவேற்றக் கோரும் அவருடைய 20.04.1974 உரை. நீண்ட அந்த உரையிலிருந்து சிறு பகுதி: “கடந்த ஐந்தாறு ஆண்டுகளில் பசுமைப் புரட்சியின் மூலமாக உணவுத் துறையிலே தன்னிறைவு பெற்று, இன்றைக்கு மற்ற மாநிலங்களுக்கு உணவுத் தானியங்களை வழங்கி, அவர்களுடைய பசியை ஓரளவு குறைக்கின்ற பெருமை உடையதாகத் தமிழக அரசு விளங்குகிறது. பியுசி வரை இலவசக் கல்வி, 1967-க்கு […]

Read more
1 76 77 78 79 80 505