கவிதை மரபும் தொல்காப்பியமும்

கவிதை மரபும் தொல்காப்பியமும், இராம.குருநாதன், மணிவாசகர் பதிப்பகம், பக்.208, விலை ரூ.150. “மரபென்பது காலந்தோறும், இடந்தோறும் வழக்குத் திரிந்தவற்றுக்கேற்ப வழுப்படாமற் செய்வதோர் முறைமை’ என்கிறார் நச்சினார்க்கினியர். “தொல்காப்பியப் பொருளதிகாரம் தமிழ்க் கவிதையியலுக்கான கட்டமைப்பைக் கொண்டது. எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் ஆகிய இரண்டு இலக்கண நீர்மையைப் புலப்படுத்தினாலும், அவை கவிதை கோட்பாட்டிற்குரிய இயல்போடு அமைந்து, பொருளதிகாரம் உணர்த்தும் கவிதையியலுக்குத் துணை செய்வனவாய் உள்ளன’ என்கிறார் நூலாசிரியர். தொல்காப்பியக் கவிதையியல், சம்ஸ்கிருதத்தோடும், கிரேக்க கவிதையியலோடும் ஒப்பும் உறவும் கொண்டிருப்பதை இந்நூல் மிகச் சுருக்கமாக எடுத்துரைக்கிறது. அதுமட்டுமல்ல, மேலைநாட்டுக் கலை, […]

Read more

சமூகவியல் பார்வையில் பாரதியார்

சமூகவியல் பார்வையில் பாரதியார், க.ப.அறவாணன், தமிழ்க் கோட்டம்,பக்.232,  விலை ரூ.200.  மகாகவி பாரதியின் கட்டுரைகள், கவிதைகள் ஆகியவற்றில் இருந்து அவர் காலத்திய சமூகம் தொடர்பான அவருடைய கருத்துகளை விளக்கிக் கூறும் நூல். பாரதியாரின் தமிழ் வழிக் கல்வி பற்றிய கருத்து, சாதி ஏற்றத் தாழ்வுகளைப் பற்றிய அவருடைய பார்வை, பெண் சுதந்திரம், தேசப் பற்று குறித்த அவருடைய கருத்துகள், பாரதி விரும்பிய குடியாட்சிமுறை, பொதுவுடமை குறித்த அவருடைய எண்ணம், பிற மொழி இலக்கியங்கள் குறித்த அவருடைய பார்வை என பல்வேறு பரிமாணங்களில் பாரதியை இந்நூல் […]

Read more

தகவல் பெறும் உரிமைச் சட்டம்

தகவல் பெறும் உரிமைச் சட்டம் – 2005ம், பொதுத் தகவல் அலுவலரின் கடமைகளும், வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், பக்.648; ரூ.550. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் எந்தத் தகவலை வேண்டுமானாலும் அரசுத்துறைகளிடமிருந்து கேட்டுப் பெற முடியும் என்ற நம்பிக்கை பொதுவாக உள்ளது. ஆனால் உண்மையில் எல்லாத் தகவல்களையும் நாம் பெற முடியாது என்பதை இந்நூல் எடுத்துக் காட்டுகிறது. தகவலைத் தரும் நிர்வாக அமைப்புகள் குறித்த விரிவான தகவல்கள் இந்நூலில் அடங்கியுள்ளன. தகவல் பெறும் உரிமைச் சட்டம் தோன்றியதன் பின்னணி, அதன் வரலாறு, […]

Read more

திருப்புமுனையான திரைப்படப் பாடல்கள்

திருப்புமுனையான திரைப்படப் பாடல்கள், ஜி.எஸ்.எஸ்.,, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.160. மொழிக்கு இசையில்லை. ஆனால் பாடலுக்கு மொழி அவசியம். கவிஞர்களின் ரசனையில் தோய்ந்து வரும் வார்த்தைகள் வரிகளாக கட்டமைக்கும் போது, மொழி புரிந்தால் மட்டுமே மனம் லயிக்கும். 32 முத்தான பாடல்களை, அவற்றின் வரிகளை படமாக்கப்பட்ட விதத்தை, ஒளிப்பதிவு கோணத்தை, இன்னும் சில கூடுதலான தகவல்களோடு சேர்த்து காவியமாக்கியுள்ளார் நுாலாசிரியர் ஜி.எஸ்.எஸ்., ‘திருப்புமுனையான திரைப்பட பாடல்கள்’ புத்தகத்தில் ஒவ்வொரு பாடலுக்குமான பாடலாசிரியரின் தாக்கத்தையும் தெளிவுபடுத்தியது அருமை. தசாவதாரம் படத்தில், ‘கல்லை மட்டும் […]

Read more

என் வானம் என் பூமி

என் வானம் என் பூமி, சுப.சோமசுந்தரம், காவ்யா, விலைரூ.110. கட்டுரை, சிறுகதை, மரபு, புதுமை என அனைத்துக் கலவையாக திகழ்கிறது இந்நுால். முதலாவது பகுப்பான என் பூமி சொற்பொழிவுடன் துவங்குகிறது. இதில் சில சிறுகதைகளாகவும், சில கட்டுரைகளாகவும் உள்ளன. இரண்டாம் பகுப்பான என் வானம், தொ.பரமசிவம், வள்ளுவம், தொல்காப்பியம் என இலக்கிய, இலக்கணத்தைப் பேசுகின்றன. இயல்பான நடை, மொழிப்பற்று, ஜாதி பேதமற்ற போக்கு இவை தனித்தன்மைகளாக வெளிப்படுகின்றன. இலக்கியக் கருத்துகளிலும் நகைச்சுவை கலந்து சுவைக்கச் செய்துள்ளது, ‘தும்மல்’ பற்றிய கட்டுரை. கண்ணகி மூட்டிய தீயையும், […]

Read more

கொரோனாவின் அவலங்களும் பாதுகாத்துக் கொள்ளும் வழிகளும்!

கொரோனாவின் அவலங்களும் பாதுகாத்துக் கொள்ளும் வழிகளும்!, பு.சி. இரத்தினம், மணிமேகலை பிரசுரம், விலைரூ.170 கொரோனா தொற்றின் துவக்கம் முதல், எட்டாம் கட்ட ஊரடங்கு வரை நோய் பரவலையும், பாதிப்புகளையும் விளக்குகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய – மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகளைக் கால வரிசையில் விவரிக்கிறது. வணிக நிறுவனங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள், தகவல் தொழில் நுட்ப அலுவலகங்கள் செய்த மாற்று ஏற்பாடுகள் பற்றி விவரிக்கப் பட்டுள்ளன. எல்லா ஊடகங்களிலும் கொரோனாவின் பெயர் தான் பிரதானமாகக் காணப்படுகிறது. கைகளை சோப்பு போட்டு கழுவுதல், முக கவசம் […]

Read more

பாம்பு மனிதன்’ ரோமுலஸ் விட்டேகர்

பாம்பு மனிதன்’ ரோமுலஸ் விட்டேகர், ஜாய் விட்டேகர், வானதி பதிப்பகம், விலைரூ.500 பாம்பு, முதலை போன்ற உயிரினங்களுடன் நெருக்கமாக வாழும், ரோமுலஸ் விட்டேகரின் வாழ்க்கை வரலாற்று நுால். ஆங்கிலத்திலிருந்து தமிழில் பெயர்க்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பிறந்து, இந்தியாவில் பாம்பு, முதலைகளை பாதுகாக்கும் சேவையில் ஈடுபட்டு வருபவர் விட்டேகர். இந்த அற்புத பணிக்கு நகர்ந்து வந்த விதமும், வழித்தடமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இயற்கை மீதான புரிதலைத் துாண்டுகிறது. பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்ற எதிர்மறை எண்ணம், நம்பிக்கை நிறைந்த நாட்டில், அவற்றை தகர்க்கும் வழிமுறைகளுடன் களத்தில் […]

Read more

பள்ளிக்கூடம் படிப்பதற்கு அல்ல

பள்ளிக்கூடம் படிப்பதற்கு அல்ல, இளவேனில், இளா வெளியீட்டகம், விலைரூ.280. இன்றைய கல்வி முறை, குழந்தைகளின் விளையாட்டு ஆர்வத்தை எவ்வாறெல்லாம் மழுங்கடித்துக் கொண்டிருக்கிறது என்பதையும், படிப்பைத் தவிர வேறெதையும் திறமையாகப் பார்க்காத அதன் குறைபாட்டையும் விளக்கும் நுால். ஆசிரியர் – மாணவர் இடையே புரிதலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. குறிப்பாக, வளர் இளம் பருவ மாணவ – மாணவியரின் உளவியலை அழகாகப் பேசுகிறது. எதிர்காலத்தில் ஆசிரியர்கள் உருவாக்க வேண்டிய மாணவர்கள் குறித்த முழுமையான அறிவைப் பெறுவதற்கு துணை புரியும். காதலும், கிரிக்கெட்டுமாய் கழிந்த பள்ளிப் பருவ […]

Read more

அந்தக் காலப் பக்கங்கள்

அந்தக் காலப் பக்கங்கள், அரவிந்த் சுவாமிநாதன், தடம் பதிப்பகம், விலைரூ.200. சென்னையிலிருந்து இடம்பெயர்ந்த 10ம் வயதில் பள்ளியில் சேர்வதற்கான மாற்றுச் சான்றிதழ் கிடைக்கக் காலதாமதமானபோது அப்பா, தாத்தாவின் மரப்பெட்டிகளைக் குடைந்து கிடைத்த பழைய இலக்கியங்கள் பற்றி பேசும் நுால். அவை இன்னதென அறிய இயலா இளமைக் காலத்திலேயே தனிப்பட்ட ஈர்ப்பு வந்ததாக குறிப்பிடுகிறார். ‘மறந்துபோன பக்கங்கள், வடுவூர் துரைசாமி ஐயங்காரின் சமய ஆராய்ச்சி, ஓலைச் சுவடிகள், அந்தக் கால விளம்பரங்கள், நாடி சோதிடம் புரியாத புதிரா, எழுத்து மூவர், விடுதலைக்கு முந்தைய சமய இதழ்கள், […]

Read more

100 சிறுவர் கதைகள்

100 சிறுவர் கதைகள், வானொலி அண்ணா என்.சி.ஞானப்பிரகாசம், கற்பகவித்யா பதிப்பகம், விலைரூ.340 சிறுவர்களுக்கு நல்லறம் போதிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். பண்பாட்டை உயர்த்தும் வண்ணம், 100 கதைகள் உள்ளன. புகழ் பெற்ற வானொலி நிகழ்ச்சிகளை வழங்கிய வானொலி அண்ணா எழுதியவை தொகுத்து வெளியிடப்பட்டுள்ளன. முதல் கதையே, ‘உழைத்து வாழ வேண்டும்’ என்ற தலைப்பில் அமைந்து உள்ளது. அனைத்து கதைகளும் நேரடியாக கேட்பது போன்ற தொனியில் எழுதப்பட்டுள்ளன. மிகவும் எளிய மொழி நடையில் சொல்லப்பட்டுள்ளன. உழைப்பு, அறத்துடன் வாழ்தல் போன்றவற்றின் மேன்மையை பறை சாற்றுவதாக கதைகள் […]

Read more
1 75 76 77 78 79 505