பாலில் சர்க்கரை பழுதாகலாமோ?

பாலில் சர்க்கரை பழுதாகலாமோ?, ப.க.பொன்னுசாமி, கனவு வெளியீடு, விலைரூ.80. பல்கலைக் கழகங்களில் துணை வேந்தராக பணியாற்றிய பேராசிரியரின் கட்டுரை தொகுப்பு நுால். சில கட்டுரைகள், அவர் படித்த கல்வி நிறுவனங்களை சிறப்பாக நினைவு கூர்ந்துள்ளன. இரண்டு தீபாவளி என்ற கட்டுரையில், சோக நிகழ்வுகள் சொல் ஓவியமாகியுள்ளன. மகன் நாவரசு நினைவுடனும், ஆழ்துளைக் குழாயில் உயிர் விட்ட சிறுவன் சுஜித் நினைவுடனும் வரைந்துள்ளார். சென்னையிலிருந்து புறப்படும் நிகழ்வை ஒரு கட்டுரையாக வடித்துள்ளார். சென்னை வரும்போது, மகன் இருந்தான்; நாய் ஜானியும் இருந்தது. போகும்போது மகனும் இல்லை; […]

Read more

பிடிச்சிருக்கா

பிடிச்சிருக்கா, ம. திருவள்ளுவர், இனிய நந்தவனம் பதிப்பகம், விலைரூ.150. வாழ்க்கை மேம்பாட்டிற்குத் தேவையான தத்துவங்களை விளக்கும் நுால். சுறுசுறுப்பாக இருப்பதற்கு உடற்பயிற்சி போதும். சரியான பாதையைத் தேர்ந்தெடுப்பதற்கு மனப்பயிற்சியும், விழிப்புணர்வும் அவசியம் என்கிறார். உரிய நேரத்தில் ஆற்றலையும் தனித்திறமையையும் கண்டுபிடிக்காதவர் பின்தங்கிவிடுவர் என்கிறார். சாமானியன் என்று எண்ணிக் கொண்டிருக்காமல், கலாம் போல உயர்ந்த மனிதராக மாறியாக வேண்டும். அதற்கு உரிய ஆற்றல், திறமையை உரிய நேரத்தில் கண்டு உணர வேண்டும். காத்திருக்கப் பழக வேண்டும். பொறுமையை வளர்க்க வேண்டும். வெற்றியின் இலக்கணமாக தொடர் தோல்விகளுக்குத் […]

Read more

லவ குசா

லவ குசா, தி.செல்லப்பா, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.150. விசேஷம் இது வித்தியாசம் என்ற பெயரில் தமிழக கோவில்களின் அதிசய வரலாறு, செல்லும் வழி குறித்து எழுதிய செல்லப்பாவின் இரண்டாவது புத்தகம். கர்ப்பிணியாய் கானகம் சென்ற சீதாவின் வயிற்றில் பிறந்த கன்றுக்குட்டிகளாம் லவன், குசன் பற்றிய அழகான தொகுப்பு இது. இக்கதையில் மணமுடிக்கும் போது சீதாவின் வயது, கானகம் சென்ற போது வயது, மகப்பேறின் போதுள்ள வயதை குறிப்பிடுவது அரிய தகவல். பொறுமையின் சிகரமான சீதா ஏன் பொங்கி எழுந்தாள்… வானளாவ […]

Read more

தமிழ் படிக்க எழுத 45 நாட்கள் ஆசிரியர் பெற்றோர் கையேடு

தமிழ் படிக்க எழுத 45 நாட்கள் ஆசிரியர் பெற்றோர் கையேடு, மு.கனகலட்சுமி, சிவசக்தி பதிப்பகம், விலைரூ.500. தமிழ் மொழியை எளிதாக கற்பிக்கும் வகையில் நுட்பமாக ஆய்வு செய்து, உருவாக்கப்பட்டுள்ள பயிற்சி நுால். பெற்றோரும், ஆசிரியரும் பயன்படுத்த தக்க வகையில் உள்ளது. பின்தங்கிய கிராம அரசுப்பள்ளி மாணவ –மாணவியரிடம் சோதனை முறையில் அமல்படுத்தி, மேம்படுத்தப்பட்டுள்ளது. கல்வி அதிகாரியின் பாராட்டும் பெற்றுள்ளது. தாய்மொழி கற்பித்தலில், பெற்றோர், ஆசிரியருக்கு உள்ள பங்கை துல்லியமாக உணர்த்தி, எளிய அணுகு முறையில் பாடங்கள் எழுதப்பட்டுள்ளன. புரிந்து கற்க ஏதுவாக, 45 நாட்களுக்கு […]

Read more

தியாகச் செம்மல் காமராஜ்

தியாகச் செம்மல் காமராஜ், சாவி, நர்மதா பதிப்பகம், விலைரூ.75. மறைந்த காமராஜரின் அரசியல் வாழ்வை விவரிக்கும் நுால். பத்திரிகையாளர் சாவி, நேரடியாக பார்த்தவற்றை பதிவு செய்துள்ளார். கேள்வி – பதிலாகவும் உள்ளது. பதவியில் இருந்து விலகுவதால், அசவுகரியங்கள் ஏற்படாதா என்ற கேள்விக்கு, ‘ஓய்வூதியத்தில் வீட்டு வாடகை, வரி போக, 1,000 ரூபாய் மீதமிருக்கும். அதில், காங்கிரஸ் கமிட்டி கூட்டத்திற்கு சென்று வரும் செலவு, 600 ரூபாய்; மீதமுள்ள, 400 ரூபாயை என் செலவுக்கும், தாய்க்கும் அனுப்பியது போக, மீதி பணத்தை ஏழைகளுக்கு கொடுத்து விடுவேன்…’ […]

Read more

திருமந்திரம் பத்தாம் திருமுறை – மூலம் முழுவதும்

திருமந்திரம் பத்தாம் திருமுறை – மூலம் முழுவதும், பதிப்பக வெளியீடு, அருணா பப்ளிகேஷன்ஸ்,விலைரூ.220. திருமூலர் அருளிய திருமந்திரம் நுால் மறு அச்சாக்கம் செய்யப்பட்டுள்ளது. பத்தாம் திருமுறையாகப் போற்றப்படும் இந்த நுாலின் மூல வடிவம் தெளிவாக அச்சிடப்பட்டுள்ளது. எளிதாக படிக்கும் வகையில், வடிவமான எழுத்துக்களில் உரிய துணைத் தலைப்புகளுடன் அமைந்துள்ளது. எளிதில் பழுதாகாத வகையில் கெட்டி அட்டை அமைப்புடன், புத்தகம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் பாதுகாக்கப்பட வேண்டிய நுால். நன்றி: தினமலர்,20/12/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

வெற்றிக்கு உதவும் சிந்தனைத் துளிகள்

வெற்றிக்கு உதவும் சிந்தனைத் துளிகள், ஆர்.ஹேமா பாஸ்கர் ராஜு, ஆசிரியர் வெளியீடு, விலைரூ.200. அறிவியல் அறிஞர்கள், ஆன்மிகப் பெரியோர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், தத்துவவாதிகள், சமயத் தலைவர்கள், சான்றோர் மற்றும் அறிஞர்களின் உரைகளிலிருந்தும், நூல்களில் இருந்தும் தேர்ந்த பொன்மொழிகளின் தொகுப்பு நுால். அப்துல் கலாம் முதல் அவ்வையார் வரை, கலில் ஜிப்ரான் முதல் வில்லியம் ஹில்பெர்ட் வரை, 405- தலைப்புகளில் முத்தான கருத்துக்களை தொகுத்துள்ளார். -– பேராசிரியர் இரா.நாராயணன். நன்றி: தினமலர்,20/12/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more

மணிவாசகர் உணர்த்தும் அகப்பொருள் நுட்பம்

மணிவாசகர் உணர்த்தும் அகப்பொருள் நுட்பம், இடைமருதூர் கி.மஞ்சுளா, மணிவாசகர் பதிப்பகம், பக்.368, விலை ரூ.300. ;சைவ சமயத்தின் கருவூலமாகத் திகழும் பன்னிரு திருமுறையில் எட்டாம் திருமுறையாக வைத்துப் போற்றப்பெறுபவை மணிவாசகரின் திருவாசகமும் திருக்கோவையாரும். இவ்விரு நூல்களிலும் இடம் பெற்றுள்ள அகமரபுச் செய்திகள் அமைந்த பாடல்களின் நுட்பங்களை ஆய்ந்து எழுதப்பட்ட முனைவர் பட்ட ஆய்வு நூல் இது. திருவாசகத் தேன் என்பது உலக வழக்கு. இந்நூலாசிரியர், திருவாசகம் மட்டுமல்ல, திருக்கோவையாரும் தேன்தான் என்கிறார். திருவாசகத்தேன் உணவாகவும், திருக்கோவையார் தேன் மருந்தாகவும் விளங்குகிறது என்று நயம்படக் கூறுகிறார். […]

Read more

இளையராஜா ஏன் முதல்வர் வேட்பாளர் இல்லை?

இளையராஜா ஏன் முதல்வர் வேட்பாளர் இல்லை? ,  டி.தருமராஜ், கிழக்கு பதிப்பகம், பக்.176, விலை ரூ.180.     சமுதாயத்திற்கு ஆட்சி அதிகாரத்திலிருந்து விலகி நிற்கிற பொது பிம்பங்கள் அவசியம். அப்படிப்பட்ட பொது பிம்பமாக இளையராஜா இருக்கிறார். அதனால் அவர் முதல்வர் வேட்பாளராக மாட்டார் என்பதை விளக்குகிறது நூலின் தலைப்பைக் கொண்ட கட்டுரை. இந்நூலில் 12 கட்டுரைகள்அடங்கியுள்ளன. ஏற்கெனவே தமிழ்த் திரைப்படப் பாடல்கள் தமிழ் மக்களின் மனதில் ஏற்படுத்திய தாக்கங்கள் எவை? இளையராஜா இசை அமைத்த பாடல்கள் அவற்றிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன என்பதை இந்நூலில் […]

Read more

தமிழ் நூல் தொகுப்புக் களஞ்சியம்

தமிழ் நூல் தொகுப்புக் களஞ்சியம்,  முனைவர் சுந்தர சண்முகனார், மணிவாசகர் பதிப்பகம், பக்.800, விலை ரூ.650.   மணிவாசகர் பதிப்பகத்தின் வைரவிழா வெளியீடாக இந்நூல் வெளிவந்திருப்பதற்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது. ஒரு புறம் இது மகிழ்ச்சியான செய்தி என்றால், இன்னொரு மகிழ்ச்சியான செய்தியும் உண்டு. அதற்குக் கீழ்க்காணும் பதிவு துணைசெய்யும். பழைய புத்தகக் கடையில் கண்டெடுத்த அற்புதமான புத்தகங்களில் ஒன்று "தமிழ்நூல் தொகுப்புக் களஞ்சியம். தமிழ் இலக்கியம் படிக்கும், இலக்கியத்தில் லயிக்கும் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய, அவர்கள் படிக்க வேண்டிய புத்தகம். தமிழ் அகராதித் […]

Read more
1 93 94 95 96 97 505