இதயம் காப்பது எளிது

ஸ்ரீராமாநுச நூற்றந்தாதி, தி. பாஷ்ய ராமாநுசதாசன், விக்னேஷ் வெளியீடு, 26 – நியூ காலனி, ஜோசியர் தெரு, சென்னை – 34, பக்கம் 160, விலை 100 ரூ.   வைணவர்கள் தலைவணங்கிப் போற்றும் தூய தலைவர் ராமாநுசர். அவரைப் போற்றி, திருவரங்கத்தமுதனார் அருளிச்செய்த அந்தாதி நூல் இது. இந்நூலில் 108 பாடல்கள் அந்தாதி முறையில் பாடப்பெற்றுள்ளன. உரையாசிரியர் வைணவக் கொள்கைகளைப் பரப்பும் பணியினை மேற்கொண்டவர். ராமாநுசர் பெயரால் அவர் பிறந்த ஸ்ரீபெரும்புதூரில் நுழைவுவாயில்கள் அமைத்தவர். வைணவக் கொள்கைகளில் தெளிந்த அறிவு கொண்டு ஆழங்கால்பட்டவர், […]

Read more

கங்கை கரையினிலே

கங்கை கரையினிலே, ப. முத்துக்குமாரசாமி, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை – 600 014, பக்கம் 205, விலை 150 ரூ. எழுபதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ள ப. முத்துக்குமாரசாமி, செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் வம்சாவளி, தமிழை முறையாகப் படித்த ஆன்மிகவாதி. ஆன்மிகத்தை நல்ல தமிழில் வழங்கும் ஆற்றல் கைவரப்பெற்றவர். நூலாசிரியர் சென்ற ஆண்டு சதுர்தாம் தரிசனம் என்று அழைக்கப்படுகின்ற யமுனோத்திரி, கங்கோத்திரி, கேதாரிநாத் மற்றும் பத்ரிநாத் ஆகிய தலங்களுக்கு புனிதயாத்திரை செய்துவிட்டு, நம்மையெல்லாம் இந்த நூலின் வாயிலாக அத்துணை புண்ணிய தலங்களுக்கும் அழைத்தும் செல்லுகிறார். […]

Read more

இமய குருவின் இதய சீடன்

சூரியன், சாந்தகுமாரி சிவகடாட்சம், சாந்தி சிவா பப்ளிகேஷன்ஸ், பக்கம் 176, விலை 120 ரூ. சிறுகதைகள், பயணக் கட்டுரைகள் என, இதுவரை 10 நூல்களை எழுதி வெளியிட்டிருக்கும் சாந்தகுமாரி சிவகடாட்சத்தின் புதிய நாவல் சூரியன். கிராமம், நகரம் என, இரண்டு வழிகளில் பயணிக்கும் இந்த நாவலில் வரும் கதாபாத்திரங்களை, அவரவர் இருப்பிடத்திற்கே உரிய குணங்களோடு, ஒப்பனை இன்றி படைத்துள்ளார் ஆசிரியர். இன்றைய, இளைய தலைமுறையினரின் வாழ்க்கைப் போக்கின் மீது தனக்குள்ள வருத்தத்தை, ‘சூரியன்’ நாவலில் ஆழமாக பதிவு செய்துள்ளார். நாவல் பிரியர்களுக்கு நல்ல தீனி.   […]

Read more

ஜாமக்கோள் பிரசன்னம்

ஜாமக்கோள் பிரசன்னம், ஆர். செல்வம், புஞ்சை புளியம்பட்டி மற்றும் இருவர், வெளியீடு ஜெமினி பதிப்பகம், பக்கம் 272, விலை 270 ரூ ஜோதிடக்கலை வேதத்தின் ஓர் அங்கமாகும். அதில் பிரசன்னம் என்பதும் ஒரு பகுதி. இந்நூல் ஜாமக்கோள் பிரசன்னம் பற்றி, ஜோதிட நூல் சமண, சமய முனிவர்களில் ஒருவராகிய ஜைனமுனி முதல் இன்றைய நாள் வரை ஜாமக்கோள் பிரசன்னம் வளர்ந்தவிதம், அதன் வரலாறு, அதன் பயன் என தகவல்கள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. கல்வி, திருமணம், காணாமல் போன பொருள் எங்கே கிடைக்கும் என்று பல்வேறுபட்ட தலைப்புகளில் […]

Read more

பாரதத்தில் ராஜதர்மம் அன்றும் இன்றும்

பாரதத்தில் ராஜதர்மம் அன்றும் இன்றும், ஆர்.பி.வி.எஸ். மணியன், வர்ஷன் பிரசுரம், சென்னை, பக்கம் 456, விலை 250 ரூ. ஒரு ராஜ்யத்தின் ஏழு அங்கங்களில் உள்ள சுவாமி, அமாத்ய, மித்ர, கோச, ராஷ்ட்ர, துர்க, பல என்பனவற்றை (பக் 113) ஒவ்வொரு அங்கமாக விவரித்து, அன்றைய அரச தர்மம், இன்றைய நிலைக்கு எவ்விதம் பொருந்தி வருகிறது அல்லது முரண்படுகிறது என்பதை 64 கட்டுரைகளில் விவரித்துள்ளார் நூலாசிரியர். காட்சிக்கு எளியனாய் ராமன், சாலை சென்ற பிரஜைகளை அன்பொழுக விசாரிக்க அவர்கள், ‘நீ எங்களுக்கு அரசனாக இருக்கிறபோது என்ன […]

Read more

ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் மனிதனின் நிரந்தரத் தேடல்

மனிதனின் நிரந்தரத் தேடல் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர், மணிவாசகர் பதிப்பகம், சென்னை – 1, விலை 150 ரூ. நான் தியானம் செய்ய ஆரம்பித்த போது அதில் இவ்வளவு ஆனந்தம் காண்பேன் என நான் ஒருபோதும் கற்பனை கூடச் செய்ய முடியவில்லை. ஆனால், காலம் செல்லச் செல்ல எவ்வளவு அதிகமாக நான் தியானித்தேனோ அவ்வளவு எனது அமைதியும், ஆனந்தமும் அதிகரித்தன’ என்கிறார் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர். தினசரி வாழ்க்கையில் இறைவனை உணர்வதைப் பற்றிய சொற்பொழிவுகள், கட்டுரைகளின் தொகுப்பை அண்மையில கொல்கத்தாவிலுள்ள ‘யோகோதா சத்தங்க […]

Read more

திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம்

திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம், தி. பாஷ்ய ராநுசதாசன், யஷ்வந்த் பப்ளிக்கேஷன், பக்கங்கள் 80, விலை 60 ரூ. ஸ்ரீமத் ராமாநுஜர் ஒரு சமயம், ஸ்ரீமதுரகவியாழ்வார் அவதாரம் செய்த திருக்கோளூர் அருகில் வருகிறார். எதிரே, ஒரு பெண்பிள்ளை, மூட்டை முடிச்சுகளோடு ஊரை விட்டு வெளியே வருவதைக் கண்ட ராமாநுஜர், அவளை யாரென்று விசாரிக்க, அவள் திருக்கோளூரிலிருந்து வருவதாகச் சொன்னாள். ‘எல்லாரும் புகும் ஊர் உனக்கு புறப்படும் ஊராயிற்றே’ என்று ராமாநுஜர் கேட்க, அவள்தான் எளியவள் என்று, எண்பத்தோரு விளக்கங்கள் சொல்கிறார். அந்த விளக்கங்களே படிக்கச் […]

Read more

ரமண மஹரிஷி

ஸ்ரீரமண மகரிஷி- பாலகுமாரன்; பக்.344; ரூ.160; விகடன் பிரசுரம், சென்னை-600 002 பெரிய புராணத்தை அகத் தூய்மையோடு படித்து முடிப்போர் “தென்னாடுடைய சிவனே போற்றி’ என்று சிவ பக்தியால் முணுமுணுப்பது உண்டு. அதுபோல் பாலகுமாரன் எழுதியுள்ள ஸ்ரீரமண மகரிஷியைப் படிப்போருக்கு “ரமணா.. ரமணா..’ என்று பக்திப் பெருக்கால் உள்ளம் உருகும். திருவண்ணாமலையை ஒரு மண்டலம் கிரிவலம் வந்த மகிழ்வும் பூரிப்பும் மகிரிஷியின் இந்நூலைப் படித்து முடிக்கும்போது ஏற்படுகிறது. பக்தியோ, நாம சங்கீர்த்தனமோ, மந்திர ஜபமோ, யாக விஷயங்களோ, ஹடயோகமோ.. எதுவாக இருந்தாலும் மனத்தை அழித்து […]

Read more
1 126 127 128